Tamil Bayan Points

Category: ஹஜ் உம்ரா

q113

100. பிறருக்காக ஹஜ் செய்வது கூடுமா? யார் யாருக்கு செய்யலாம்?

பிறருக்காக ஹஜ் செய்வது கூடுமா? யார் யாருக்கு செய்யலாம்? கூடும். நெருங்கிய உறவினருக்கு மட்டும் ஒவ்வொருவரும் தத்தமது செயலுக்குப் பொறுப்பாளியாவார்; ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை. என்றாலும் ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் இன்னொருவருக்காக ஹஜ் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. ஹஸ்அம்கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத முதிய வயதுடையவராக இருக்கும் போது ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை […]

099. ஸம்ஸம் நீரை ஊருக்கு எடுத்துச் செல்வது சரியா?

ஸம்ஸம் நீரை ஊருக்கு எடுத்துச் செல்வது சரியா? சரி தான் மக்காவில் ஸம்ஸம் என்று கூறப்படும் கிணறு ஒன்று உள்ளது. அந்தக் கிணற்று நீர் புனிதமானதாக அமைந்துள்ளது. வயிறு நிரம்ப அதை அருந்துவதும், தத்தமது ஊர்களுக்கு எடுத்துச் செல்வதும் விரும்பத்தக்கதாகும். ஆயிஷா (ரலி) அவர்கள் ஸம்ஸம்நீரை (மதீனாவுக்கு) எடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர். நூல்: திர்மிதீ-963 (886)  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸம்ஸம்) நீர் விநியோகிக்கப்படும் […]

098. கபனிடுவதற்கு ஸம்ஸம் நீரை பயன்படுத்தலாமா?

கபனிடுவதற்கு ஸம்ஸம் நீரை பயன்படுத்தலாமா? தேவையற்ற வேலை ஸம்ஸம் நீர் குறித்த பல தவறான நம்பிக்கைகள் நம் சமுதாயத்தில் நிலவுகிறது. இதில் சில. இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்கக் கூடாது என்பதால் இஹ்ராம் கட்டியவர்கள் தலையை மறைக்காமல் இதை அருந்துவார்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்டவர்களும், தங்கள் சொந்த ஊரில் அருந்துபவர்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்பது கிடையாது. மேலும் இஹ்ராம் ஆடையை ஸம்ஸம் நீரில் கழுவி அதைக் கபனிடுவதற்காகப் பத்திரப்படுத்த வேண்டும் என்பதற்கும், குளிப்பாட்டும் போது ஸம்ஸம் நீரை […]

097. குர்பானி பற்றி விளக்கவும்

குர்பானி கொடுக்க வேண்டும் ஹஜஜுப் பெருநாள் தினத்தில் வசதியுள்ளவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் கொடுக்க வேண்டிய குர்பானி பற்றி மட்டும் இங்கு நாம் விளக்குவோம். கிரான், தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர்கள் பத்தாம் நாளன்று குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் அறிந்துள்ளோம். இத்தகையவர்கள் குர்பானி கொடுக்க வசதியில்லா விட்டால் அதற்குப் பகரமாக வேறு பரிகாரம் செய்து கொள்ளலாம். இயலாவிட்டால் பகரமும் உண்டு அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! […]

095. மக்காவில் 40 ரகஅத்/40 நாட்கள் தொழ வேண்டும் என்று உள்ளதா?

மக்காவில் 40 ரகஅத்/40 நாட்கள் தொழ வேண்டும் என்று உள்ளதா? இல்லை மக்காவில் 40 ரகஅத் தொழ வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவுமில்லை. பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமே உள்ளன. எனினும், மக்காவில்-மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மற்ற இடங்களில் தொழுவதை விடப் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியது. ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிகமதிகம் தொழுகையில் ஈடுபட வேண்டும். ”எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிது நபவியில்) தொழுவது மஸ்ஜிதுல் ஹராம் தவிர ஏனைய […]

094. நஃபில் தவாஃப் எத்தனை முறை செய்யலாம்? எப்படி செய்வது?

நஃபில் தவாஃப் எத்தனை முறை செய்யலாம்? எல்லை எதுவும் இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். 1) மக்காவுக்குச் சென்றவுடன் செய்யும் தவாஃபுல் குதூம் 2) பத்தாம் நாளன்று செய்ய வேண்டிய தவாஃபுல் இஃபாளா அல்லது தவாஃபுஸ் ஸியாரா 3) மக்காவை விட்டும் ஊர் திரும்பும் போது கடைசியாகச் செய்ய வேண்டிய தவாஃபுல் விதாஃ இவை தவிர விரும்பிய நேரமெல்லாம் நபிலான- உபரியான- தவாஃப்கள் செய்யலாம். ”அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் […]

093. தவாஃபின் போது, அந்நிய ஆண்கள் மீது கை பட்டால் உளுச் செய்ய வேண்டுமா?

தவாஃபின் போது, அந்நிய ஆண்கள் மீது கை பட்டால் உளுச் செய்ய வேண்டுமா? இல்லை பெண்களும் ஆண்களுடன் தவாஃப் செய்யலாம். அவர்களுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. ஆயினும், ஆண்களுடன் கலந்து விடாத வண்ணமாக அவர்கள் தவாஃப் செய்ய வேண்டும். அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆயிஷா (ரலி) அவர்கள் ஆண்களை விட்டு விலகி (தூரத்திலிருந்து) தவாஃப் செய்ததாக புகாரியில் (1618) காணப்படுகின்றது. எனவே ஆண்களுடன் இரண்டறக் கலந்து விடாதவாறு ஆண்களுக்குப் பின் வரிசையில் அவர்கள் தவாஃப் […]

092. இயலாவிட்டால் வீல் சேரில் தவாஃப் செய்யலாமா?

நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால், வீல் சேரில் தவாஃப் செய்யலாமா? செய்யலாம். பொதுவாக, பொருளாதாரம் மற்றும் உடல் சக்தியற்றவர்களுக்கு, ஹஜ் கட்டாயக் கடமையல்ல. எனினும் வயதானவர்கள் ஹஜ் செய்வது தடுக்கப்பட்டதும் அல்ல. மிகவும் நெரிசலான பகுதிகளில், அவர்களால் சமாளிக்க இயலாது, என்பதையும் கவனத்தில் கொள்ளவும். ஹஜ்ஜுக்கு வந்த பிறகு, ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால், அவர் வீல் சேரில் தவாஃப் மற்றும் மற்ற கிரியைகளைச் செய்வது குற்றமாகாது. நடந்து தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது […]

091. தவாஃபின் போது தேவைப்பட்டால் பேசலாமா?

தவாஃபின் போது தேவைப்பட்டால் பேசலாமா? அவசியம் என்றால் பேசலாம் தவாஃப் என்பது தொழுகை போன்றதாக இருப்பதால் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதால் தவாஃபுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. ஒரு மனிதர் தனது கையை இன்னொருவருடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டு தவாஃப் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித்தார்கள். இவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்வீராக என்றும் கூறினார்கள். புகாரி 1620, 6703

090. அரஃபாவில் லுஹர் அஸரை, ஜம்வு தக்தீமாக்குவது சரியா?

அரஃபாவில் லுஹர், அஸ்ரை கஸ்ரு – ஜம்உ செய்யும்போது, அதை ஜம்உ தக்தீமாக (லுஹருடைய வக்திலேயே) தொழவேண்டும். இது சரிதானே? பதில் தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை. (நூல்: முஸ்லிம் 2137) ஜம்வு தக்தீமாக, லுஹர் நேரத்தில் லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழ வேண்டும் என்பது சரியானது தான்.

089. தக்பீர் எப்பது கூறுவது?

மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக்கொண்டும், தக்பீர் கூறிக் கொண்டும் செல்லலாம்? இதில் ‘தக்பீர்’ என்பது ‘அல்லாஹு அக்பர்’ என்பது மட்டுமா? மற்றவர்கள் சொல்வதுபோல் கூடுதல் சிறப்பு வார்த்தைகள் எதுவும் ஹதீஸ்களில் உள்ளதா? பதில் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்கüடம் தல்பியாச் சொல்வது குறித்து, “நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?” […]

088. இரவு மினாவில் திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா?

அரஃபாவுக்கு முந்திய அன்று (8ஆம் நாள் முடிந்த) இரவு மினாவில் துஆ, திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா? தூங்கி விடுவது தான் சுன்னத்தா? பதில் மினாவில் துஆ, திக்ரு போன்றவை செய்ததாக எந்த ஹதீசும் இல்லை. எனவே சுன்னத்தான திக்ரு, துஆ போன்றவை இல்லை. எனினும், இந்த நேரத்தில் இன்ன திக்ரு ஓத வேண்டும் என்று நபியவர்கள் காட்டித்தந்த இடங்களைத் தவிர,  ”சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்” போன்ற பொதுவான திக்ருகளை எந்த நேரத்திலும் சொல்லலாம். துஆவும் செய்யலாம். தடையில்லை. 

087. 8க்கு பதிலாக, மினாவிற்கு 7ஆம் நாளே போகலாமா?

எட்டாம் நாள் காலை ஃபஜ்ரு தொழுதுவிட்டு குளித்து இஹ்ராம் அணிந்துக் கொண்டு, லுஹரை மினாவில் தொழுவது போன்ற நேரத்தில் புறப்பட்டால் போதுமா? முற்கூட்டியே செல்லவேண்டுமா? இங்கு சில குழுவினர் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின்னர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு மினாவுக்குப் புறப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் 8ஆம் நாள் லுஹர், அஸர், மஃரிப், இஷா மற்றும் மறுநாள் ஃபஜ்ரு ஆகியவற்றை மினாவில் தொழுகிறார்கள். அப்படியானால் 8ஆம் நாளின் ஃபஜ்ரை மக்காவில்தானே தொழுதிருப்பார்கள்? நாம் அந்தக் குழுவினருடன் […]

086. இமாம் எப்போது குத்பா நிகழ்த்தவேண்டும்?

பிறை 7ல் லுஹருக்குப் பின் இமாம் குத்பா நிகழ்த்தவேண்டுமா? ஏற்கனவே சென்று வந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்ததில் அங்கு அவ்வாறு நடத்தப்படுவதில்லை என்று சொல்கிறார்கள். பதில் பிறை 7ல் இமாம் உரை நிகழ்த்த வேண்டும் என்று இல்லை. பிறை 9ல் அரஃபாவில் இமாம் உரை நிகழ்த்த வேண்டும். சூரியன் உச்சி சாய்ந்ததும் “கஸ்வா’ எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் (“உரனா’) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (நூல்: முஸ்லிம் […]

085. பெண்கள் எவ்வளவு முடியை வெட்டுவது?

பெண்கள் இஹ்ராமை களையும் முன், ஒரு விரல் நுனியளவு மட்டுமே முடியை வெட்ட வேண்டும் என்று அளவு சொல்கிறார்களே, இது சரியா? பதில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே ஹதீஸில் வருகின்றதே தவிர எவ்வளவு குறைக்க வேண்டும் என்று வரவில்லை.

084. முடியை உடனே குறைக்க வேண்டுமா?

ஹரமுக்குள் கத்தரிக்கோல் போன்றவை அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா? உடனே தான் குறைக்க வேண்டுமா? பதில் உடனே குறைத்து விட்டால் இஹ்ராமை விட்டு வெளியே வந்து விடலாம். இல்லையேல் இஹ்ராமிலிருந்து வெளியேறத் தாமதமாகும்.

083. முடியைக் குறைப்பதா? மழிப்பதா?

உம்ராவை முடிக்கும்போது சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் ஆண்களுக்கு தலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் மட்டும் சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளலாமா? தலை முழுதுமே ஏகத்துக்கும் சிறிது குறைக்கவேண்டுமா? பதில் ஹஜ் அல்லாத காலங்களில் உம்ரா செய்பவர்களும், ஹஜ் காலத்தில் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுபவர்களும் மழிப்பது தான் சிறந்தது. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” […]

082. சயீ செய்யும்போது என்ன ஓதுவது?

சயீ செய்யும்போது ஸஃபா, மர்வாவில் ஓதும் திக்ரு, துஆக்கள் அல்லாமல் நடந்துக் கொண்டிருக்கும்போதே ஓதுவதற்கென பிரத்யேகமாக எதுவுமுள்ளதா? பதில் நபி (ஸல்) அவர்கள் ஸயீயின் போது எந்த திக்ரையும் கற்றுத் தரவில்லை. நபிவழி என்றில்லாமல் சாதாரணமாக ஏதேனும் திக்ருகளை ஓதிக் கொண்டு சென்றால் தவறில்லை.

081. உபரி தவாஃபை போன்று உபரி சயீ மட்டும் செய்ய ஆதாரம் உள்ளதா?

உம்ரா மற்றும், ஹஜ் ஆகிய வணக்கங்களில் சயீவும் ஒன்று. எனினும்,  நாம் பார்த்த வரை, உபரியாக சயீ மட்டும் செய்ய எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை. 

080. பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்தில் ஓத வேண்டிய துஆ என்ன?

பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்தில் ஆண்களும், பெண்களும் ‘ரப்பிக்ஃபிர் வர்ஹம், வதாவஜு அம்மா தஃலமு, இன்னக அன்தல் அஅஜ்ஜுல் அக்ரம்’ என்ற துஆ ஓதவேண்டும் என்பது ஆதாரமானதா? பதில் இல்லை.

079. ஸஃபா மர்வாவுக்கிடையில் எப்படி ஓட வேண்டும்?

ஸஃபா மர்வாவுக்கிடையில் உள்ள முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரை ஆண்கள் மட்டும் சிறிது வேகமாக ஓடும்போது தோள்களை லேசாக குலுக்கவேண்டும் என்பது சரியா? சரியென்றால் எவ்வாறு குலுக்கவேண்டும்? பதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள். (நூல்: […]

078. ஸஃபா மர்வாவில் கேட் போடப்பட்டுள்ளதே!

ஸஃபா மர்வா மீது தற்போது ஏறமுடியாத வண்ணம் கேட் போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் அதன் அடிவாரத்திலேயே நின்று (சுன்னத்தாக சொல்லப்பட்டவற்றை) கிப்லாவை முன்னோக்கி ஓதிக் கொள்ளலாமா? 3 முறை ஓதும்போது அவற்றுக்கிடையே நாம் கேட்கும் விருப்ப துஆவை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீட்டித்து கேட்கலாமா? பதில் ஸஃபா மர்வாவின் அடிவாரத்திலேயே நின்று ஓதிக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விருப்ப துஆ கேட்கலாம்.

077. அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி…

ஸஃபா, மர்வாவில் ஸயீ ஆரம்பிக்கும்போது, “இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்” என்ற வசனத்தை ஓதிய பிறகு, “அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்” என்று கூறுவதன் அரபி வாசகத்தைத் தரவும். பதில் அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி

076. ஜம்ஜம் நீர் அருந்தும் போது துஆ செய்வது சுன்னத்தா?

ஜம்ஜம் நீர் அருந்தும் முன்போ அல்லது அருந்தி முடித்த பிறகோ துஆ செய்வது சுன்னத்தா? பிரத்யேக துஆ எதுவும் உள்ளதா? பதில் இதற்கென எந்த பிரத்யேக துஆவும் இல்லை. மேலும் அந்த சமயத்தில் துஆச் செய்ததாகவும் நபிவழியில் ஆதாரம் இல்லை.

075. ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா?

மகாமு இப்ராஹீமில் 2 ரக்அத் தொழுகைக்கு பிறகு ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா? பெண்கள் தலை முக்காட்டுக்கு மேல் சிறிது ஊற்றிக் கொள்ளலாமா? பதில் நேரடியாகவோ, அல்லது முக்காடு வழியாகவோ தலையில் ஊற்றிக் கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகினார்கள். அதைத் தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள். (நூல்: அஹ்மத் 14707)

074. தவாஃபுக்கு பிறகு மகாமு இப்ராஹீமில் தொழுதுவிட்டு துஆ செய்வது சுன்னத்தா?

தவாஃபுக்கு பிறகு “மகாமு இப்ராஹீமி’ல் தொழுதுவிட்டு துஆ செய்வது சுன்னத்தா? அல்லது துஆ செய்யாமல் நேரடியாக ஸயீ செய்ய செல்ல வேண்டுமா? “மகாமு இப்ராஹீமி’ல் எப்போது தொழுதாலும் துஆ செய்யவேண்டுமா? பதில் மகாமு இப்ராஹீமில் நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்ததாக ஹதீஸ் எதுவும் காணப்படவில்லை. முஸ்லிம் (2137) அறிவிப்பவின்படி, அங்கு தொழுதுவிட்டு ஜம்ஜம் நீரைப் பருகுதல், தலைக்கு ஊற்றுதல், ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல் தவிர்த்து வேறெதுவும் வரவில்லை. எனவே இவற்றை முடித்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ […]

073. ஸயீக்கு முன்னர் மீண்டும் ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிடுதல்..?

தவாஃபுக்கு பிறகு மகாமு இப்ராஹீமில் தொழுதுவிட்டு, ஸயீ செய்வதற்கு முன்னர் மீண்டும் வந்து ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிடச் செல்லும் போது அதைத் தொட இயலாவிட்டால், அப்போதும் சைகை செய்து கொள்ளலாமா? பதில் அந்த சமயத்தில் சைகை செய்வது பற்றி ஹதீஸில் கூறப்படவில்லை.  

072. ருக்னுல் யமானிக்கு வரும்போது அதைக் கையால் தொட முடியவில்லை என்றால் சைகை செய்து கொள்ளலாமா?

ருக்னுல் யமானிக்கு வரும்போது அதைக் கையால் தொட முடியவில்லை என்றால் சைகை செய்து கொள்ளலாமா? பதில் ருக்னுல் யமானியை கையால் தொடுவது நபிவழியாகும். சைகை செய்வது தொடர்பாக ஹதீஸ்களில் காண முடியவில்லை.

071. ருக்னுல் யமானியை தொட்டு முத்தமிட வேண்டுமா?

“ருக்னுல் யமானியை முத்தமிடக்கூடாது; கையால் தொட மட்டுமே செய்ய வேண்டும்’ என்பது சரியா? “ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிட வேண்டும் என்பது சரியா? பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் “யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 166, 1609 இந்த ஹதீஸில் முத்தமிட்டதாகக் கூறப்படவில்லை. தொடுவது மட்டும் தான் கூறப்படுகின்றது. ருக்னுல் யமானியை […]

070. ஹஜ்ருல் அஸ்வத் முத்தமிடும் போது தக்பீர் கூற வேண்டுமா?

நேரடியாக முத்தமிட வாய்ப்பு கிடைத்தால் அப்போதும் தக்பீர் சொல்லித் தான் முத்தமிடவேண்டுமா? சைகை செய்வதற்கு மட்டும்தான் தக்பீரா? இடது அல்லது வலது எந்த கையால் வேண்டுமானாலும் சைகை செய்துக் கொள்ளலாமா? பதில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) […]

069. ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி தக்பீருக்குப் பின் துஆ உண்டா?

ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிட முடியாதபட்சத்தில், அதை நோக்கி கையை நீட்டி ‘அல்லாஹு அக்பர்’ என சொல்லும்போது சைகைக்காக நீட்டிய கையை முத்தமிட்டுக் கொள்ளலாமா? ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி கையை நீட்டி தக்பீர் சொல்லிய பிறகு ‘அல்லாஹும்ம ஈமானம் பிக, வ தஸ்தீகம் பிகிதாபிக….’ என்பதுபோல் ஆரம்பிக்கும் துஆக்களுக்கு ஆதாரம் உள்ளதா? பதில் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்!” எனக் கூறினார்கள். […]

068. தவாஃப், ஸயீ பாதியில் நிறுத்தி தொடரலாமா?

தவாஃபின்போது உளூ அவசியமில்லை என்றாலும் அது சுன்னத் என்ற அடிப்படையில் உளூ செய்கிறோம். தவாஃபை முடிப்பதற்குள் உளூ முறிந்து அந்த சுன்னத்தைத் தொடர விரும்பினாலோ, அவசரமான இயற்கைத் தேவைகளினால் பாதியில் சென்றுவிட்டாலோ, ஒரே நேரத்தில் 7 சுற்றுக்களையும் சுற்ற இயலாமல் போனாலோ இடையில் களைப்பாறிவிட்டு பிறகு மீதி சுற்றுகளை அந்த பாதியிலிருந்தே தொடரலாமா? அதுபோல் ஸயீயிலும் பாதியில் நிறுத்தி தொடரலாமா? பதில் எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான். அல்குர்ஆன் 2:286 இந்த வசனத்தின் […]

067. உபரி தவாஃபின் போது, வலது புஜம் தெரியுமாறு இஹ்ராம் ஆடை அணிய வேண்டுமா?

உபரியான தவாஃப்கள் செய்யும் போது ஆண்கள் வலது புஜம் தெரியுமாறு இஹ்ராமின் மேலாடையை அணிந்து கொள்ள வேண்டுமா? பதில் நபி (ஸல்) அவர்கள் வலது தோள் புஜம் தெரியுமாறு இடது தோள் மீது போர்வையைப் போட்டுக் கொண்டு தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர்: யஃலா பின் உமைய்யா நூல்: திர்மிதி 787, அபூதாவூத் 1607 இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் வலது புஜம் தெரியுமாறு ஆடையணிந்தது தவாஃபுல் குதூமில் மட்டும் தான். காரணம், ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் […]

066. (ரமல்) 3 சுற்றுக்களில் வேகமாக சுற்றி தவாஃப் செய்வது பெண்களுக்குமா?

தவாஃபுல் குதூமில் சற்று வேகமாக சுற்றவேண்டிய முதல் 3 சுற்றுக்களிலும் ‘ரமல்’ என்று சொல்லப்படும் புஜத்தை குலுக்கவேண்டும் என்று சொல்வது சரியா? 3 சுற்றுக்களில் வேகமாக சுற்றி தவாஃப் செய்வது பெண்களுக்குமா? பதில் இது ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் பொதுவான சட்டம் தான். பெண்களுக்கு இதில் விதிவிலக்கு இந்திருக்குமானால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் விளக்கியிருப்பார்கள்.

065. பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி தவாஃபை ஆரம்பிக்க வேண்டுமா?

தவாஃபை ஆரம்பிக்கும்போது ‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்’ என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது சரியா? பதில் பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகத் தான் பைஹகீ எனும் நூலில் காணப்படுகின்றது. எனவே இது நபி வழியல்ல. தவாஃபின் போது ஹஜ்ருல் அஸ்வதுக்கு அருகில் வருகின்ற ஒவ்வொரு தடவையும் அதை நோக்கி சைகை செய்து தக்பீரும் சொல்வது தான் நபிவழியாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் […]

064. தவாஃபுக்கு உளூ அவசியமா?

தவாஃபுக்கு உளூ அவசியமா? பதில் ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஅபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால் அது செல்லாது என்று இவர்கள் கூறுகின்றனர். அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் மாறுபட்ட இரு கருத்துக்களையும் கூறியதாக இரண்டு அறிவிப்புகள் உள்ளன. தவாஃப் செய்யும் போது உளூ அவசியம் இல்லை என்று அபூஹனீஃபா […]

063. ஹோட்டல் மக்கா எல்லைக்குள் இருந்தால் எங்கு குளிப்பது?

மக்காவில் நுழைவதற்கு முன்பு குளிப்பது சுன்னத் எனும்போது, நம்முடைய ஹோட்டல் மக்கா எல்லைக்குள் இருந்தால், ஹோட்டலில் குளித்துவிட்டு ஹரமுக்கு வரலாமா? மக்காவுக்கு வெளியில் குளித்துவிட்டு வருவது மட்டும்தான் சுன்னத்தா? பதில் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள். அறிவிப்பவர்: நாஃபிஉ, நூல்: புகாரி 1573 இந்த ஹதீஸ், மக்காவிற்குள் நுழைவதற்கு […]

062. 3 நேரங்களில் தொழக்கூடாது என்ற தடை ஹரம் ஷரீஃபிற்குமா?

தொழுவதற்கு தடை செய்யப்பட்ட 3 நேரங்களில் தொழக்கூடாது என்ற தடை ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு இல்லை என்பது சரியா? மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதற்கும் அந்த விதிவிலக்கு உண்டா? பதில் அப்து மனாஃபின் சந்ததியினரே! இந்த ஆலயத்தில் தவாஃப் செய்யும் எவரையும் தடுக்காதீர்கள். இரவு பகல் எந்த நேரமும் தொழக் கூடிய எவரையும் தடுக்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூற்கள்: திர்மிதி 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875 […]

061. ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு 1 லட்சம் நன்மைகள் என்பது ஒவ்வொரு 2 ரக்அத்திற்குமா?

ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு 1 லட்சம் நன்மைகள் என்பது ஒவ்வொரு 2 ரக்அத்திற்குமா? பதில் மஸ்ஜிதுல் ஹரமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1190 ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹரமில் தொழுவது ஒரு லட்சம் தொழுகைகளை விடச் சிறந்தது என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். […]

060. தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுதுவிட்டு தவாஃபை ஆரம்பிக்கலாமா?

ஹரம் ஷரீஃபில் நுழைந்த பிறகு “தஹிய்யதுல் மஸ்ஜித்’ தொழுதுவிட்டு தவாஃபை ஆரம்பிக்கலாமா? அல்லது முதல் அமலே தவாஃபில் தான் ஆரம்பிக்க வேண்டுமா? பதில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் “ஹஜருல் அஸ்வத்’ உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். நூல்: முஸ்லிம் 2334, 1603 நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்து தவாஃபைத் தான் துவக்கியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் […]

059. பாபு பனீ ஷைபா என்பதும், பாபுஸ்ஸலாம் என்பதும் ஒன்றா?

ஹரமில் “பாபு பனீ ஷைபா’ வழியாக நுழைவது சுன்னத் என்பதை அறிந்திருக்கிறேன். சிலர் “பாபுஸ்ஸலாம்’ வழியாக நுழைவது சுன்னத் என்கிறார்கள். “பாபு பனீ ஷைபா’ என்பதும் “பாபுஸ்ஸலாம்’ என்பதும் ஒன்றா? பதில் இரண்டு வாசல்களும் ஒன்று தான். நபி (ஸல்) அவர்கள் இந்த வாசல் வழியாக நுழைந்திருக்கிறார்கள். இது ஹஜ்ருல் அஸ்வதை நோக்கிச் செல்வதற்கு வசதியான வாசல். காரணம் ஹஜருல் அஸ்வத் அமைந்த கஅபாவின் மூலையில் இருந்து தான் ஒருவர் தனது தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். இந்த […]

058. கஃபதுல்லாஹ்வை பார்த்தவுடன் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? ஹரம் எல்லையை அடைந்ததுமா?

கஃபதுல்லாஹ்வை பார்த்தவுடன் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? பதில் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள். நூல்: புகாரி 1573 இந்த ஹதீஸின் அடிப்படையில் ஹரம் எல்லைக்கு வந்ததும் தக்பீரை நிறுத்த வேண்டும் என்பதே சரி!

057. தல்பியாவை ஒருவர் சொல்லி மற்றவர்கள் அதைத் தொடர்ந்து கூட்டாகச் சொல்லலாமா?

தல்பியாவை ஒருவர் சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் அதைத் தொடர்ந்து கூட்டாகச் சொல்லலாமா? அதேபோல், ஒருவருக்கொருவர் குழம்பாமல் இருப்பதற்காக, தனியாக ஒருவர் சொல்லிக் கொடுக்காமல் ஒரே நேரத்தில் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து சொல்வது நபிவழிக்கு மாற்றமானதா? பதில் அவரவர் தல்பியா சொன்னதாகத் தான் ஹதீஸில் வருகிறதே தவிர ஒருவர் சொல்ல, மற்றவர்கள் சொன்னதாக வரவில்லை. முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்கüடம் தல்பியாச் […]

056. இஹ்ராமில் பனியன் ஜட்டி போன்ற உள்ளாடைகளை அணிந்து கொள்ளலாமா?

ஆண்கள் இஹ்ராமின் போது ஜட்டி போன்ற உள்ளாடைகளை அணிந்து கொள்ளலாமா? பதில் ஜட்டி என்பது தையல் ஆடை என்பதால் அதை இஹ்ராமின் போது அணியக்கூடாது. தையல் இல்லாத வகையில் லங்கோடு போன்ற துணியால் இடுப்பில் கட்டிக் கொள்ளலாம்.

055. இஹ்ராம் ஆடையில் ப்ரெஸ் பட்டன் பயன்படுத்தலாமா?

ஆண்களுக்கான இஹ்ராம் ஆடையில் எந்தத் தையலும் இல்லாமல், ஓரங்களில் ஊக்கு மாட்டிக் கொள்வதற்கு பதிலாக ப்ரெஸ் பட்டன் கொடுத்து கடைகளில் விற்கிறார்கள். அதைப் பயன்படுத்தலாமா? பதில் பயன்படுத்திக் கொள்ளலாம். காரணம் அது தடை செய்யப்பட்டவைகளில் இல்லை.

054. தாயாருக்காக ஹஜ்ஜுக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்ரா செய்யலாமா?

ஹஜ்ஜுக்கு செல்ல மிகுந்த ஆவல் கொன்டிருந்த என் தாயாருக்கு வசதி இருந்தும், மற்றவர்களின் கஷ்டத்திற்குக் கடனுதவியாகக் கொடுத்திருந்தார்கள். கடன் திரும்பி வரும் முன்பே அவர்கள் மரணித்து விட்டதால், நான் என் உம்ராவை முடித்த பிறகு அவர்களுக்காக உம்ரா செய்யலாமா? ஏனெனில், ஒருவேளை ஹஜ்ஜுக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்ரா மட்டுமாவது அவர்கள் செய்யவேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது. பதில் பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் […]

053. ஹஜ்ஜில் மார்க்கத்திற்கு முரணான விஷயங்களை சுட்டிக் காட்டக்கூடாதா?

இஹ்ராமில் இருக்கும்போது தர்க்கம் செய்யக்கூடாது என்பதால், மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பார்த்தாலும் அதை சுட்டிக் காட்டக்கூடாதா? பதில் முப்பது லட்சம் மக்கள் கூடுகின்ற இடத்தில் பல விதமான அசவுகரியங்கள், நெருக்கடிகள், சங்கடங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதனால் தான் வல்ல அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை […]

052. கடுகளவு மூக்குத்தி மற்றும் மோதிரம் இஹ்ராமின்போது அணியலாமா?

வழக்கமாகப் போடும் கடுகளவு மூக்குத்தி மற்றும் மெல்லிய குச்சியளவிலான மோதிரம் போன்றவற்றை இஹ்ராமின்போது அணியலாமா? (மற்ற நேரங்களில் இதுபோன்ற சிறிய அளவுகளில் இருந்தால் இவை வெளியில் தெரியலாமா?) பதில் இஹ்ராமின் போது அணியத் தடை செய்யப்பட்டவைகளில் இவை இடம்பெறவில்லை. ஆனால் பொதுவாக அலங்காரங்களை வெளிப்படுத்தும் வண்ணம் பெண்கள் நகைகளை அணிவது தவிர்க்கப்பட வேண்டும். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை […]

051. மூட்டப்பட்ட வேட்டி அணிந்து குளிக்கலாமா?

ஆண்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும் முன்னர் குளிக்கும் தேவை ஏற்பட்டால், மூட்டப்பட்ட கைலியை (ஈரத்திற்காக) அணிந்துக் கொண்டு குளிக்கலாமா? மூட்டப்படாத வேட்டி அணிந்து குளிப்பதுதான் சிறந்ததா? பதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டாம் என்று சொல்லியிருக்கும் போது அந்த உத்தரவை நம்மால் இயன்ற அளவுக்குப் பின்பற்றுவது தான் சரியான செயலாகும். உடுத்திக் குளிப்பதற்கும், மாற்றுக்காகவும் தையல் இல்லாத துண்டுகளைக் கூடுதலாக வைத்துக் கொள்வது என்பது பெரிய சிரமமான காரியமல்ல. நபிவழியை முடிந்த அளவுக்குக் […]

050. இஹ்ராமின் போது தலை, கால்களை மூடி போர்வை போர்த்தலாமா?

இஹ்ராம் ஆடையில் ஆண்கள் தலை, கால்களை மறைக்கக்கூடாது என்பதால் குளிர் மற்றும் உறங்கும் சமயங்களிலும் தலை, கால்களை மூடும் விதமாக போர்வை போர்த்தலாமா? தலை, கால்களை விட்டுவிட்டு உடம்பில் மட்டும்தான் போர்த்திக் கொள்ள வேண்டுமா? பதில் ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்யும் போது அணிந்திருக்கும் இஹ்ராம் ஆடையில் தான் தலையை மறைக்கக் கூடாது. உறங்கும் போது போர்வை போர்த்துதல் என்பது ஆடையில் சேராது. குளிருக்காக நன்கு மூடப்பட்ட ஓர் அறைக்குள் போய் உறங்குவது எப்படியோ அப்படித் தான் போர்வை […]

Next Page » « Previous Page