Tamil Bayan Points

094. நஃபில் தவாஃப் எத்தனை முறை செய்யலாம்? எப்படி செய்வது?

கேள்வி-பதில்: ஹஜ் உம்ரா

Last Updated on July 7, 2017 by Trichy Farook

நஃபில் தவாஃப் எத்தனை முறை செய்யலாம்?

எல்லை எதுவும் இல்லை.

எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

1) மக்காவுக்குச் சென்றவுடன் செய்யும் தவாஃபுல் குதூம்

2) பத்தாம் நாளன்று செய்ய வேண்டிய தவாஃபுல் இஃபாளா அல்லது தவாஃபுஸ் ஸியாரா

3) மக்காவை விட்டும் ஊர் திரும்பும் போது கடைசியாகச் செய்ய வேண்டிய தவாஃபுல் விதாஃ

இவை தவிர விரும்பிய நேரமெல்லாம் நபிலான- உபரியான- தவாஃப்கள் செய்யலாம்.

”அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி), நூல்கள்: திர்மிதீ 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875

இந்த நபி மொழியிலிருந்து எந்த நேரமும் தவாஃப் செய்யலாம் என்பதை நாம் அறியலாம்.

7 முறை கஅபாவை வலம் வருவது

மேலும், தவாஃப் என்றால் 7 முறை கஅபாவை வலம் வருவது. நபியவர்கள் அப்படித்தான் செய்துள்ளார்கள். எனவே, எப்போது, தவாஃப் செய்தாலும் இந்த வகையில் செய்வது தான் சரியானது. சில சுற்றுகள் சுற்றிய பிறகு, இயலாவிட்டால் பிரச்சனை இல்லை. 

ஏனெனில், ”எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்த மாட்டான்” என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 2:233, 2:236, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7)