Category: 10 நிமிட உரைகள்

b110

இவ்வுலகமும் மறுஉலகமும்

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது உங்களில் ஒருவர் தம் ஆட்காட்டி விரலைக் கடலில் நுழைப்பதைப் போன்றதாகும். பின்னர் (கடலிலிருந்து எடுக்கும் போது) அந்த விரல் எந்த அளவுக்கு (தண்ணீரை) எடுத்துக் கொண்டு வருகிறது என்பதைக் கவனிக்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஸ்தவரித் (ரலி) நூல்கள்: (முஸ்லிம்: 5101) (திர்மிதீ: 2245), (இப்னு மாஜா: 4098) மறுமை வாழ்க்கையின் அளவில்லா சிறப்பை விளங்குவதற்கு இது மிகச் சிறந்த உதாரணமாகும். […]

ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்

மக்கள் நேர்வழியை பெறுவதற்கு திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அழகிய உதாரணங்களை காட்டி மக்களுக்கு விளக்கியுள்ளார்கள். அவர்களின் உதாரணங்களில் படிப்பினைகளும் சிந்தனையைத் தூண்டும் விஷயங்களும் நிறைந்து காணப்படுகின்றன. அல்லாஹ்வும் இதே கருத்தை நமக்கு கூறியிருக்கின்றான். மக்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு அல்லாஹ் உதாரணங்களைக் கூறுகிறான். (அல்குர்ஆன்: 14:25) ➚ மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம். (அல்குர்ஆன்: 59:21) ➚ அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டும் சில உதாரணங்கள் நுட்பம் வாய்ந்தவையாக இருக்கும். அவற்றை […]

இஸ்லாம்-சான்றோர்கள் கூறும் சான்று

இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் கூடிய மார்க்கம் ‎இஸ்லாம் தான். இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து.‎ காந்தியடிகள் இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக ‎இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. ‎மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை ‎கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும் ‎செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான ‎மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். ‎அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.‎ […]

சோதனையின்றி சொர்க்கமில்லை

ஆரம்ப கால கட்டத்தில் ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது அடி, உதை ஊர் நீக்கம், அடக்கத்தலம் தர மறுப்பு எனப் பல்வேறு விதமான சோதனைகளை கொள்கைச் சகோதரர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குக் கீழ்க்கண்ட குர்ஆன் வசனம்தான் ஆறுதலாக எடுத்துச் சொல்லப்பட்டது. “உங்களுக்கு முன்சென்றோருக்கு ஏற்பட்டதைப் போன்று உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என எண்ணிக் கொண்டீர்களா? அவர்களுக்கு வறுமையும் நோயும் ஏற்பட்டது. இறைத்தூதரும் அவருடனிருந்த நம்பிக்கை கொண்டோரும் “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று கூறும் அளவிற்கு உலுக்கப்பட்டார்கள். […]

குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்!

உலகில் மக்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறி சிறப்பான வேதங்கள் என்று பலரும் பல வேதங்களை தங்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு வழிபாடுசெய்கிறார்கள். ஆனால் அந்த வேதங்களில் தவறுகளும், அசிங்கங்களும், ஆபாசங்களும் நிறைந்து காணப்படுவதை பார்ப்பவர்கள் அவதானிக்க முடியும். இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் உற்படுத்தப்படும் ஒரு வேதமாக திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத, இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியையும், வேகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத பலர் இஸ்லாத்திற்கெதிராக தங்கள் விஷமக் கருத்துக்களை […]

இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!

இம்மையில் ஏற்படும் பயன்கள் அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்”     (அல்குர்ஆன் 2:194, 9:36) இறையச்சமுடையவர்களுக்கு திருமறை நேர்வழி காட்டும்! “இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்” (அல்குர்ஆன்: 2:2) ➚ பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் எதிரிகளின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது! “நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக […]

நாத்திகம் தோற்றது ஏகத்துவம் வென்றது

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். தனது அறிவுப்பூர்வமான வாதத்தின் மூலம் அசத்தியக் கோட்டைகளை ஆட்டுவித்த இப்ராஹீம் (அலை) அவர்கள் தன்னந்தனி மனிதராக நின்று அசத்தியபுரியை வென்று காட்டியவர். பதில் இல்லையெனில் அந்தக் கொள்கை அசத்தியம்! பொய்! போலி என்று உலகுக்கு உணர்த்திய பகுத்தறிவுப் பகலவன்! சிலை வணக்கத்தின் சிம்ம சொப்பனம்! அவர் […]

அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாத்துடன் மற்ற மதங்களை ஒப்பிடும் போது எந்த மதத்திலும் இல்லாத பல்வேறு தனிச் சிறப்புகளை இதில் மட்டுமே நம்மால் காண முடியும். அல்லாஹ்வின் மார்க்கம் மனிதர்களின் மறுமை வெற்றிக்கு வழிகாட்டுவதோடு இம்மை வெற்றிக்கும் வழிகாட்டுகிறது. திருக்குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் களையும் ஒருவர் […]

இஸ்லாம் தான் எங்கள் அடையாளம்

“இந்தியா ஓர் இந்து நாடு! இந்துத்துவா தான் நமது நாட்டின் அடையாளம். அதாவது இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரின் அடையாளம் இந்துத்துவம் தான்” என்று மும்பையில் நடந்த வி.ஹெச்.பி. பொன்விழாக் கொண்டாட்டத்தின் போது மோகன் பகவத் பேசியுள்ளார். அனைத்து இந்தியர்களின் கலாச்சார அடையாளம் இந்துத்துவா தான்; தற்போதைய இந்தியாவில் வாழ்பவர்கள் அந்தக் கலாச்சாரத்தின் வழிவந்தவர்கள் தான் என்று அவர் முழங்கியுள்ளார். 21.08.2014 அன்று இந்து ஆங்கில நாளேடு “கட்சியைக் கட்டுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் தீட்டிய தலையங்கத்தில் பின்வருமாறு […]

பெற்றோரை போற்ற சொல்லும் இஸ்லாம்…

“இஸ்லாம்” இறைவனின் மார்க்கம் “திருக்குர்ஆன்” இறைவனின் வேதம் தான் என்பதற்க்கும் திருமறை முழுவதும் நற் சான்றுகள் நிரம்பி உள்ளன. “அல்லாஹ்”வின் இறுதி தூதர் முஹம்மது”நபி(ஸல்..) அவர்கள் வாழ்ந்து காட்டிய உலக வாழ்க்கையின் வரலாற்று தொகுப்புகள்(ஹதீஸ்), மற்றும் திருக்குர்ஆன் முழுவதும், இவர் இறை துாதர் தான் என்று நற் சாட்சியம் பகர்கின்றன. இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கை நன் நெறியாகும். நாம் வாழும் சமூகத்தில் நம் கண் முன் நிகழும் உண்மை நிகழ்வுகள் பல… அதில் பெற்ற தாய், […]

தொழுகை இல்லையேல் தடாகம் இல்லை

மக்கள் விசாரணைக்காக ஒன்று திரட்டப்படும் அந்நாளின் கொடூரத்தைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம். கடும் தாகத்தால் மக்கள் துடிக்கக் கூடிய அந்நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் தாகம் தீர்ப்பதற்குத் தனி ஏற்பாட்டை அல்லாஹ் செய்வான். இதுபற்றி திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம் (அல்குர்ஆன்: 108:1) ➚ “கவ்ஸர் என்றால் என்ன?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அது அல்லாஹ் எனக்கு வழங்கிய நதியாகும்” என விடையளித்தார்கள். […]

தலை போனாலும் விலை போகோம்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைத் தூதர்கள், தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்க ஆரம்பித்த மாத்திரத்திலேயே கொலை முயற்சி, கோரத் தாக்குதல்கள், கொடுமைகள், ஊர் நீக்கங்கள், நாடு கடத்தல்கள், சிறைவாசங்கள், சித்ரவதைகள் என்று உடல்ரீதியான சோதனைகளும், கேலி, கிண்டல்கள், பரிகாசங்கள், அவதூறுகள், கடும் விமர்சனங்கள், பொய்யான குற்றச்சாட்டுக்கள், போலியான கூற்றுக்கள் என உள […]

தடுமாற்றமா? கொள்கை மாற்றமா?

மார்க்க விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்யும் போது மனோ இச்சைகளுக்கு அப்பாற்பட்டு, யார் மீதும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலைச் சிந்னையுடன் ஆய்வு செய்ய வேண்டும். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஆய்வுகள் அமைந்திருக்க வேண்டும். நாம் முன்னால் கூறியது தவறு என்று தெளிவாகும் போது அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் தான் கொள்கை வாதிகள் என்றும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றி வருபவர்கள் என்றும் கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்களின் கொள்கை தற்போது ஆட்டம் காணத் […]

வெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுகள்

வெட்கம் என்பது மனித இனத்துடன் ஒட்டி ஒன்றிணைந்து பிறந்த ஓர் இயற்கை உணர்வாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் வெட்கத்தை மனிதனின் உணர்வுகளில் ஒன்றாகக் கலந்து படைத்ததன் விளைவாகத் தான் முதல் மனிதர்களான ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் பொங்கி எழுந்த நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விளைகின்றனர். அவ்விருவரும் அம் மரத்தைச் சுவைத்த போது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். (அல்குர்ஆன்: […]

ஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்!

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி […]

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்

இது தேர்தல் காலம் என்பதால் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் வெற்று அறிவிப்பு என்று எண்ணிவிட வேண்டாம். இது அல்லாஹ்வின் வேதமும் தூதரும் கற்றுத் தருகின்ற ஓர் அழைப்பாளனின் அடிப்படைத் தகுதியாகும். இது அழைப்புப் பணியின் அடிப்படை விதியாகும். இந்த விதி ஏன்? எதற்கு? ஒருவர், தான் போதிக்கும் கொள்கைக்கு மாற்றமாக நடந்தால் அது அந்தக் கொள்கையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் தடையாகவும் ஆகி விடும் என்பது தான் இதற்கான பதிலாகும். “புகை […]

உறவோடு உறவாடுவோம்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நம்மில் சிலர் உறவினர்கள் விஷயத்தில் பாரபட்சமாகவும், பாராமுகமாகவும் இருப்பதை காண்கிறோம். உறவிலேயே பணக்காரர் என்றால் அவர்களுக்கென்று ஒரு தனி மரியாதை, அதுவே ஏழை என்றால் அப்படியே கண்டும் காணதது போல் விட்டுவிடுவது போன்ற செயல்கள் நடந்து வருவதை பார்க்கிறோம். எனவே உறவைப் பேணுவதின் முக்கியத்துவத்தை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் […]

அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டோம்

அல்லாஹ்வின் கிருபையால் தவ்ஹீத் ஜமாஅத் ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, இஸ்லாத்தின் ஆதாரம் இறைச் செய்தி – வஹீ மட்டுமே என்று ஆணித்தரமாக மக்களிடம் பதிய வைத்தது. அந்தப் பிரச்சாரத்திலிருந்து எள்ளளவு கூட, இம்மியளவு கூட மாறவில்லை. சவூதி சம்பளத்தைப் பின்னணியாகக் கொண்ட மதனிகளுடன் சேர்ந்து அழைப்புப் பணி செய்யும் போதும் சரி! அவர்களை விட்டுப் பிரிந்து பணியாற்றும் போதும் சரி! குர்ஆன், ஹதீஸ் பார்வையில் சரியெனப்பட்டதையே மக்களிடம் எழுத்துரீதியாகவும், பேச்சுரீதியாகவும் பிரச்சாரம் செய்து […]

உரிமைகளை மீட்டெடுப்போம்

இஸ்லாமிய மார்க்கம், ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசும் மதம் அல்ல! இது சத்திய மார்க்கம். மனிதனுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் போதிக்கிற முழுமையான வாழ்க்கை நெறி. இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதனும் சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை, அதாவது அடுத்தவருக்குத் தர வேண்டிய உரிமைகளைப் பற்றியும் இஸ்லாம் எடுத்துரைக்கிறது. அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். […]

பொருளாதாரம் ஆன்மீகத்திற்கு எதிரானதா?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள், பொருளாதாரத்தை ஆன்மீகத்திற்கு எதிராகவே சித்தரித்துக் காட்டுகின்றன. பொருளாதாரமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை; பொருட்செல்வம் உடையவன் ஆன்மீகவாதியாக முடியாது என்ற கருத்தைத் தான் முன்வைக்கின்றன. ஆனால் ஆன்மீகத்திற்குப் பொருட்செல்வம் ஒரு தடைக்கல் அல்ல என்று இஸ்லாம் கூறுகின்றது. பொருளைத் தேடுவதும், அதைச் சேமிப்பதும், நல்வழியில் செலவளிப்பதும் […]

நிச்சயிக்கப்பட்ட மரணம்!

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும். ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! “ஒவ்வோர் ஆத்மாவும் […]

தீய நண்பன்

கெட்ட தோழன் நல்ல நண்பனைத் தேர்வு செய்யாமல் தீய நண்பனை நாம் தேர்வு செய்துவிட்டால் நம்முடைய நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். தீயதை ஏவுதல், பகைமையை ஊட்டுதல், ஒழுக்கங்கெட்ட செயல்பாடுகளுக்கு அழைத்துச்செல்லுதல் இன்னும் மார்க்கத்திற்கு முரணான பிற விஷயங்களில் கொண்டு சென்று அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்றுவிடுவான். அபூமூசா (ர-லி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி […]

அசுத்ததை விட்டு தவிர்ந்து கொள்ளுங்கள்

இன்றைய உலகம் அறிவியல் முன்னேற்றத்திற்கு பஞ்ச மில்லாமலும், அதே நேரத்தில் பலவிதமான நோய்க ளுக்கும் பஞ்சமில்லாமல் மாறிவிட்டது. வருடத்திற்கு ஒரு நோய் பிரபலிமாய் கொண்டே வருகிறது. ஒரு வருடத்தில் சார்ஸ் இன்னொரு வருடத்தில் பறவைக் காய்ச்சல் இப்பொழுது பன்றிக் காய்ச்சல் என்று அச்சுறுத்திவருகிறது. அதிலும் குறிப்பாக உலக அளவில் தூய்மையில் முதலிடத்தை பிடிக் கும் சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்தான் இந்நோ யின் பிறப்பிடமாக உள்ளன. அந்நாடுகளிலிருந்துதான் பிற நாடுகளுக்கு அந்நோய்களும் விமானங்கள் கப்பல்கள் வழியாக […]

வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான்!

நபி (ஸல்) அவர்கள் (அகழ் போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கி புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், ” இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான். ஆகவே அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி!” என்று (பாடிய வண்ணம்) […]

சொர்க்கத்தை கடமையாக்கும் செயல்கள்

இஸ்லாத்தின் முக்கியமான அடிப்படை, மறுமை வாழ்க்கையை நம்புவதாகும். மேலும் அந்த வாழ்க்கையில் சொர்க்கம் என்ற பூஞ்சோலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்து, நரகம் என்ற கொடுமையான வாழ்க்கையிலிருந்து தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை இவ்வுலகத்தில் மேற்கொள்வதாகும். மறுமையில் சொர்க்கத்தில் கிடைக்கும் மாபெரும் பாக்கியத்திற்கு நிகராக இவ்வுலகத்தில் எந்தப் பாக்கியமும் கிடையாது. அங்கு ஓர் அடி இடம் கிடைத்தால் கூட இவ்வுலகத்தின் அனைத்து இன்பத்தை விடவும் மிகப் பெரியதாக இருக்கும். சொர்க்கத்தின் இன்பத்தை விளக்கும் போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: […]

அல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்

எல்லாம் வல்ல கண்ணியமிக்க அல்லாஹ் மனிதனைப் படைத்து, அந்த மனிதன் இந்த உலகில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செல்வம், பெற்றோர், உறவினர், மனைவி, மக்கள் என்ற எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான். இது மட்டுமின்றி அவனுக்கு வரவிருக்கும் மற்றொரு வாழ்க்கையிலும் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நன்மை தரும் பல காரியங்களைத் தனது தூதர் மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம். தனது தேவைக்கு மிஞ்சிய செல்வம் படைத்தவர்கள், தனக்குக் கீழுள்ள கஷ்டப்படும் ஏழைகளுக்குக் […]

தலைவன் ஒருவனே!

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உலகில் தோன்றுகின்ற எந்தக் கொள்கையாக இருந்தாலும், கோட்பாடாக இருந்தாலும், அதை உருவாக்கிய தலைவன் ஒருவன் இருப்பான். அந்தத் தலைவன் உயிரோடும், உணர்வோடும் இருக்கின்ற வரை அந்தக் கொள்கை உயிரோடு இருக்கும். அவன் மரணித்துவிட்டால் அவனோடு சேர்ந்து அவனுடைய கொள்கையும் மரணித்துவிடும். அல்லது அவனுக்குப் பின் மாற்றங்கள் செய்யப்பட்டு அந்தக் […]

நரகத்தைத் தரும் மவ்லிது

தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் மவ்லிது என்னும் அரபிப் பாடல்களைப் புனிதமான வணக்கமாகக் கருதிப் பாடி வருகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவற்றை நிறைவேற்றாதவர்கள் கூட ரபீயுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் இந்த மவ்லிதைத் தவறாமல் நிறைவேற்றி விடுவார்கள். ரமளான் மாத இரவில் நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குபவருக்கு முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அது போன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரம் வந்து விட்டால் […]

ஹதீஸ் குத்ஸீ என்றால் என்ன?

இறைச்செய்திகள் குர்ஆன் என்றும் ஹதீஸ்கள் என்றும் ஹதீஸ் குத்ஸி என்றும் மூன்று வகைகளாக மக்களால் நம்பப்படுகிறது. குர்ஆன், ஹதீஸின் இதன் இலக்கணத்தை நாம் அறிந்து கொண்டால் ஹதீஸ் குத்ஸி என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். குர்ஆன் என்பது லவ்ஹூல் மஹ்பூல் எனும் மூலப்பிரதியில் இருந்து ஜிப்ரீல் எனும் வானவர் வழியாக இறைவன் கொடுத்து அனுப்பியதாகும். இறைவனிடமிருந்து வந்த செய்திகள் அனைத்தும் குர்ஆனாகாது. அது போல் ஜிப்ரீல் மூலம் வந்த அனைத்தும் குர்ஆன் ஆகாது. திருக்குர்ஆனுக்கு அல்லாஹ்விடம் […]

கொதிக்கும் நரகத்திலிருந்து குழந்தைகளைக் காப்போம்

நம்முடைய நெருங்கிய உறவினர்கள் தங்கள் வீடுகளில் ஏதேனும் விஷேசம் வைத்து அழைத்தால், “அங்கு மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும்; அதனால் நான் வர மாட்டேன்” என்று மறுக்கின்றோம். அவர்கள் ஏதேனும் உணவு கொடுத்தாலும், “இது அல்லாஹ் அல்லாதவருக்காகத் தயாரிக்கப்பட்ட உணவாக இருக்குமோ!” என்று கருதி சாப்பிட மறுக்கிறோம். இதுவெல்லாம் எதற்காக? இறைக் கட்டளைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான். ஆனால் திருமணம் என்று வரும் போது மட்டும் இறைக் கட்டளையை மறுத்து, இணை வைக்கும் மாமன் […]

மார்க்கம் கூறும் மணமகள் தேர்வு

ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள் நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது […]

எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம்

அல்லாஹ்வின் மகத்தான கருணையால் இன்று நாம் ஏகத்துவத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் தர்ஹா வழிபாட்டுக் காரர்களாகவும், தரீக்காவாதிகளாகவும் இருந்தோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற பெயரில் ஷியாக்களாக இருந்தோம். நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத் தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன்: […]

உயிரூட்ட வரும் உன்னத ரமலான்

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.(அல்குர்ஆன்: 2:185) ➚ இது அல்லாஹ்வின் வசனம். ஆம்! ரமளானின் சிறப்பை உணர்த்துகின்ற வசனமாகும். உண்மையில் ரமளான் என்பது, திருக்குர்ஆன் இறங்கிய மாதத்திற்கு வல்ல ரஹ்மான் எடுக்கின்ற திருவிழாவாகும். விழா என்றதும் நமக்கு ஒருவிதமான ஒவ்வாமை வந்து விடும். அந்த ஒவ்வாமை வருவதில் ஆச்சரியம் இருக்க […]

இன்ஷா அல்லாஹ் சொல்வதின் முக்கியத்துவம்

அடிப்படைக் கொள்கை : ஒரு முஸ்லிம் எந்த காரியத்தில் ஈடு பட்டாலும் அந்த காரியம் அல்லாஹ் நினைத்தாலே தவிர அது நடைபெறாது என்று உறுதியாக நம்ப வேண்டும்.இதை பல குர்ஆன் வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் நமக்கு தெளிபடுதுகிறது. (நபியே!) நீர் கூறுவீராக (நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.(அல்(அல்குர்ஆன்: 3:26) ➚,27) இந்த ஒரு அடிப்படை கொள்கையை வாயளவில் […]

பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்வோம்

நம்மில் சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவரிடம் உதவி கேட்பதும்,ஒரு தேவை என்றால் மாற்று வழியை யோசிக்காமல் உடனடியாக அடுத்தவரிடம் யாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. முகீரா இப்னு ஷுஅபா(ரலி)யின் எழுத்தர் (வர்ராது) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள்” என முஆவியா(ரலி) முகீரா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு முகீரா(ரலி) ‘நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது). பொருள்களை வீணாக்குவதும் அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்!” […]

இணை வைப்போர் – அன்றும் / இன்றும்

இணை கற்பித்த மக்காவாசிகளுக்கும், நமது நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மக்காவில் வசித்த இணைகற்பித்தவர்கள் அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பினார்கள். அவன் தான் படைத்தவன் என்றும், எல்லா அதிகாரமும் அவனுக்கே உரியது என்றும் நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்பதற்காகவே குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம். ‘வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், […]

நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள்

சுத்தம் “உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்துக்குள் அவர் மூச்சு விட வேண்டாம். கழிப்பிடம் சென்றால் ஆண்குறியைத் தமது வலது கரத்தால் தொடவோ தூய்மைப் படுத்தவோ வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), (புகாரி: 153) “எச்சரிக்கை! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கின்றது. அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும். அது சீர்குலைந்து விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். […]

அல்குர்ஆன் விடுக்கும் அறைகூவல்

இதோ ரமளான் மாதம் வந்து விட்டது. இந்த ரமளான் மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறங்கியது. அந்த மாதத்தில் இறங்கியதால் தன்னை நம்பிய மக்களை இந்தத் திருக்குர்ஆன் நோன்பு நோற்கச் சொல்கிறது. அதிகாலை 4 மணியிலிருந்து அந்தி மாலை 6 மணி வரை உணவு சாப்பிடாமல், தண்ணீர் அருந்தாமல், கணவன் மனைவியர் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருக்கச் செய்கின்றது. இதன் மூலம் அது அவர்களுக்கு உணர்த்துகின்ற பாடம் என்ன? தாகம் ஏற்படுகின்றது; ஆனால் ஒரு முஸ்லிம் தண்ணீர் அருந்துவதில்லை. பசிக்கின்றது; […]

இறைநம்பிக்கை ஏற்படுத்தும் மாற்றங்கள்

சட்டத்தின் கண்கள் சாட்சிகள் எல்லாவற்றையும் சட்டத்தின் மூலம் சாதித்து விடலாம் என்று இஸ்லாம் நம்பவில்லை. ஏனெனில் சட்டத்திற்கென்று சில குறைபாடுகள் உள்ளன. சட்டத்திற்குச் சாட்சிகள் என்ற இரு கண்கள் தேவை! சாட்சிகள் இல்லாமல் சட்டம் செயல்படாது. அதனால் இஸ்லாம் மனிதர்களின் உள்ளத்தைத் தான் முதலில் சரி செய்கின்றது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்கின்றார்கள். உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்து விட்டால் […]

டி.வி.யை மூடுங்கள்! திருக்குர்ஆனைத் திறங்கள்!

ஒரு அன்னியப் பெண்ணை, அவள் அரைகுறை ஆடையுடன் இருக்கும் நிலையில் நேரில் பார்ப்பது எப்படிக் கூடாதோ அதுபோன்று தான் டி.வி.யில் பார்ப்பதும் கூடாது. ஆனால் இன்று தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடக்கும் நமது சமுதாய மக்கள், அதில் வரும் அரை நிர்வாணப் பெண்களை அல்ல! முழு நிர்வாணப் பெண்களைப் பார்த்து ரசிக்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் போல் கண்களால், காதுகளால் விபச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இன உறுப்பு தான் அந்த […]

புடம் போடும் புறக்கணிப்புகள்

மீலாது விழா புறக்கணிப்பு! மவ்லிது விழா புறக்கணிப்பு! திருமண விழா புறக்கணிப்பு! நாற்பதாம் பாத்திஹா புறக்கணிப்பு! பூப்புனித நீராட்டு விழா புறக்கணிப்பு! கத்னா விழா புறக்கணிப்பு! இணை வைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதில் புறக்கணிப்பு! இணை வைத்த பெற்றோராயினும் ஜனாஸாத் தொழுகை புறக்கணிப்பு! இந்நிகழ்ச்சிகள் நடக்கும் சபைகளில் மட்டுமல்ல! அவற்றின் சார்பாக நடக்கும் விருந்துகளிலும் புறக்கணிப்பு! புது வீடு புகும் போது நடைபெறும் விருந்து அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் அங்கு மவ்லிது ஓதப்பட்டிருந்தால் அது இணை வைப்பு என்பதால் […]

கட்டுப்பாடு காத்த கஅப் பின் மாலிக்

அண்மையில் நம்முடைய ஜமாஅத்திலிருந்து நீக்கப்பட்ட சிலர், ஒரு பாட்டைத் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்காகத் தியாகம் செய்த பாக்கரை இப்படி அநியாயமாகத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்பது தான் அந்தப் பாட்டு! இதற்குரிய விளக்கத்தை தியாகமா? துரோகமா? என்ற தலைப்பின் கீழ் பார்க்கலாம். இங்கே நாம் காணப் போவது கஅப் பின் மாலிக் அவர்களின் வரலாறு! இது முழுக்க முழுக்க புகாரியில் இடம்பெறும் ஹதீஸாகும். நபித்துவம் பெற்ற முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் மாபெரும் […]

இவர்கள் முஸ்லிம்களா?

ஹிஜிரி ஆறாம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக ஆயிரத்து நானூறு பேர்களுடன் வருகின்றார்கள். அப்போது வழியில் மக்காவின் இணைவைப்பாளர்களால் அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள். தடுக்கப்பட்ட போது அவர்கள் தங்கிய இடம் ஹுதைபிய்யா ஆகும். இந்த இடத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கும், குறைஷிகளின் தலைவர் ஸுஹைல் பின் அம்ருக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. கையெழுத்தாகவுள்ள அந்த ஒப்பந்தத்தின் இரு நிபந்தனைகள் முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமானவை. 1. இந்த ஆண்டு உம்ரா செய்யக் […]

குருதி கொடுப்போம்

நள்ளிரவில் கதவு தட்டப்படும் சத்தம். திறந்து விசாரிக்கும் போது, “எனது தாயாயர் கார் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றார், எனவே அவருக்கு இரண்டு யூனிட் இரத்தம் தேவை, இரத்தம் தந்து எனது தாயாரைக் காப்பாற்றுங்கள்‘ என்று தனது தாயாருக்காக மகன் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றார். உடனே தன்னார்வ இரத்த தானக் கழகத்தின் பொறுப்பாளர், “உங்கள் தாயாரின் இரத்தப் பிரிவு என்ன?’ என்று கேட்க, அவர் இரத்தப் பிரிவைக் கூறுகின்றார். இரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அமைதியாக, உங்கள் இரத்தப் பிரிவு என்ன என்று கேட்கும் […]

தவ்ஹீத்வாதிகளே!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எங்கு நோக்கிலும் இணைவைப்புக் கொள்கைகள் ஆட்சி செய்த காலகட்டம். ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம் என்று பாடிக்கொண்டே நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சிகளாய் இந்த இஸ்லாமிய சமுதாயம் நரகத்தை நோக்கி இழுத்துச் செல்லும் காரியங்களில் மூழ்கிக் கிடந்தது. இறைவனின் பேரருளால் அல்லாஹ் தன்னுடைய ஏகத்துவ ஒளியை மக்களின் உள்ளங்களில் பாய்ச்சினான். ஐந்தும் பத்துமாய் இருந்தவர்கள் இலட்சக்கணக்கில் கொள்கையை நோக்கி அணிதிரண்டார்கள். தவ்ஹீதை நிலைநாட்ட தவ்ஹீத் சொந்தங்கள் வாரி வழங்கிய அற்பக் […]

ஆட்சி மாற்றம் தந்த ஆஷுரா

“உங்களை ஊரை விட்டும் துரத்தி விடுவோம்; உங்களை நாடு கடத்துவோம்” என்று இறைத் தூதர்களுக்கு எதிராக இறை மறுப்பாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எச்சரித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிராக அல்லாஹ் ஒரு வாக்குறுதியை அளிக்கின்றான். “உங்களை எங்கள் மண்ணிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது எங்கள் மார்க்கத்திற்கு நீங்கள் திரும்ப வேண்டும்” என்று (ஏக இறைவனை) மறுப்போர் தமது தூதர்களிடம் கூறினர். “அநீதி இழைத்தோரை அழிப்போம்; அவர்களுக்குப் பின்னர், உங்களைப் பூமியில் குடியமர்த்துவோம்” என்று அவர்களது இறைவன் அவர்களுக்குச் செய்தி அனுப்பினான். […]

நாத்தனார்களும் நாறும் சண்டைகளும் கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள்

கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்து கொள்ளும் முறைகள் சிலவற்றையும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் பார்த்து வருகிறோம். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் மார்க்கம் காட்டிய வழிமுறைப்படி நடந்தால் குடும்பத்தில் குழப்பம் இல்லாமல் நிம்மதியான வாழ்வைப் பெற முடியும். இல்லையேல் கணவன், மனைவியின் வாழ்க்கையிலும் நிம்மதியில்லாமல் அதனால் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் வாழ்விலும் நிம்மதியில்லாமல் போய்விடும். கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் மிக முக்கிய ஒன்றான மாமியார், மருமகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். மாமியார், […]

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்!

குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம். ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை. ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் […]

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவோம்!

கண்ணியத்திற்கும் மதிப்பிற்குமுரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக, தக்வாவை உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வின் சட்டங்களை பேணி வாழும்படி எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக இந்தக் குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு […]

யார் இந்த முட்டாள்கள்?

உலகலாவிய ரீதியில் பல கொண்டாட்டங்களும் தேசிய, சர்வதேச தினங்களும் பல்வேறு பின்னனிகள், வரலாறுகள் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ளதனையும் கொண்டாடப்பட்டு வருவதனையும் அன்றாட நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் பிரதிபலிக்கின்றன. இவ்வாறு கொண்டாடப்பட்டு வரும் தினங்களில் ஒன்றுதான் ஏப்ரல் 01 ஆம் திகதி கொண்டாடப்பட்டுவரும் உலக முட்டாள்கள் தினமாகும். உலக முட்டாள்கள் தினத்தைப்பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது காரணம் யாரோ ஒருவரால் அத்தினத்தில் முட்டாளாக்கப்பட்டிருப்பர். அல்லது அவ்வாறு நடந்த சம்பவங்களை செவிசாய்த்திருப்பர். இவ்வாறு எல்லலோராலும் ஜனரஞ்சகமாக அறியப்பட்ட […]

Next Page »