
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேலதிகமாக விரும்பிய துறையில் படிக்கும் இடமே கல்லூரியாகும்.இன்றைய காலத்தில் கல்லூரி வாழ்கையை அனைவரும் அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.கல்லூரி என்பது சிந்தனைக்கு மட்டும் சுதந்திரம் தராமல் செயல்களுக்கும் சுதந்திரம் அளிக்கக் கூடிய இடமாக இருக்கிறது.கல்லூரி வாழ்க்கையில் மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதாலும் உணர்ச்சிகள் […]