
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனைவியின் நகைகளையும் சொத்துக்களையும் விற்று, கடன் வாங்கிக் கொடுத்தப் பணத்தை, வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி வாயில் போட்டுக் கொள்ளும் மோசக்காரர்கள் கொஞ்சம் கூட இறைவனின் பயம் இல்லாமல் தலை நிமிர்ந்து இந்த உலகத்தில் நடக்கிறார்கள்.வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏப்பம் விட்டு விட்டு ஓடி ஒளியும் கல் […]