நோன்பாளி இரத்தம் கொடுக்கலாமா? கொடுக்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் காலத்திலும் அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளி யேற்றி வந்தனர். مسند أحمد مخرجا (28/ 342) 17117 – حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ أَبِي […]
Author: Trichy Farook
இஃப்தார் விருந்து கூடுமா?
இஃப்தார் விருந்து கூடுமா? அரசியல்வாதிகள் தங்கள் சகஅரசியல்வாதிகளை மதிப்பதற்காக, நோன்பிற்கு எள்ளவும் சம்பந்தம் இல்லாதவர்களை அழைத்து இஃப்தார் விருந்து கொடுத்தால் அது தவறு. அரசியல்வாதியோ, பொதுவான மக்களோ, மாற்றுமத நண்பர்களோ முஸ்லிம்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்து கொடுத்தால் அதில் எந்த தவறும் இல்லை. எனவே அனுமதிக்கலாம்.
புகைபிடித்தால் நோன்பு முறியுமா?
புகைபிடித்தால் நோன்பு முறியுமா? குதர்க்கமான கேள்வி. புகைபிடித்தல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு வீணாண காரியமாகும். இது உடலுக்கு கேடானது மட்டுமல்லாமல் வீண்விரையமாகும். நம்முடைய உடலுக்கு நாம் தீங்கிழைத்துக் கொள்வதை திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கிறது. وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ ۛۚ உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன்: 2:195) ➚ இறைவன் ஒரு செயலைத் தடை செய்து விட்டால் அதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். திருடுவது கடுமையான குற்றம் என்று திருமறைக் குர்ஆன் […]
நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா?
இளவயதுடையவர் தவிர்க்க வேண்டும். நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தமது மனைவியரை முத்தமிடுவார்கள்; கட்டியணைப்பார்கள். அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: (புகாரி: 1927) سنن أبي داود (2/ 311) 2382 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، […]
பேணுதலுக்காக நோன்பை தாமதமாக திறக்கலாமா?
பேணுதலுக்காக நோன்பை தாமதமாக திறக்கலாமா? கூடாது. நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: (புகாரி: 1957) சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே பேணுதலுக்காக சில நிமிடங்கள் தாமதமாகத் திறப்பது நபிவழிக்கு மாற்றமானதாகும்.
பித்ராவை வேறு ஊரில் விநியோகிக்கலாமா?
வினியோகிக்கலாம். ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள். ((புகாரி: 1395) , 1496 , 4347) “அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்” […]
ஃபித்ரா எப்படி திரட்டுவது?
ஃபித்ரா எப்படி திரட்டுவது? மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: (புகாரி: 1503) , 1509 , இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்கும், பெருநாள் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள். பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து […]
விடி ஸஹர் கூடுமா?
விடி ஸஹர் கூடுமா? கூடாது. தமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது. உறக்கம் மேலிடுவதால் சில நேரங்களில் ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழித்து, அவசரமாக ஒரு குவளைத் தண்ணீர் குடித்து விட்டு (இதைத் தான் விடி ஸஹர் என்கின்றனர்) நோன்பு நோற்பதாக நிய்யத் செய்து கொள்கின்றனர். சுபுஹ் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது என்று கட்டளை உள்ளது. وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ […]
ஸஹருக்கு தனி பாங்கு உண்டா?
ஸஹருக்கு தனி பாங்கு உண்டா? ஆம். உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற்காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: (புகாரி: 621) மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து […]
வித்ர் பிறகு ஸுப்ஹானல் மலிக்குல் உண்டா?
வித்ர் பிறகு ஸுப்ஹானல் மலிக்குல் உண்டா? ஆம். உண்டு. நபியவர்கள் வித்ரு (ஒற்றைப் படை)த் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹ்ஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற 87 வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல்யா அய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், (மூன்றாவது ரக்அத்தில்) குல்ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள். ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று மூன்று முறை சொல்லுவார்கள். அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி), […]
நின்றவாறு சிறுநீர் கழிக்கலாமா?
நின்றவாறு சிறுநீர் கழிக்கலாமா? அமர முடியாத இடத்தில் நின்று கழிக்கலாம். அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத் தருகின்றது. مسند أحمد مخرجا (41/ 495) 25045 – حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: مَنْ حَدَّثَكَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَالَ قَائِمًا فَلَا تُصَدِّقْهُ، «مَا بَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ […]
சுய இன்பம் கூடுமா?
சுய இன்பம் கூடுமா? கூடாது. காம உணர்வு மேலோங்கும் போது சுயமாக விந்தை வெளியேற்றுவது சுய இன்பம் எனப்படுகிறது. பரவலாக இளைஞர்களிடம் இந்த வழக்கம் காணப்படுகிறது. 23:5 وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ 23:5 وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ 23:7 فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.. இதற்கு அப்பால் (வேறு […]
சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா?
வலது கையால் சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா? பதில்: சாப்பிடுவதற்கும் பருகுவதற்கும் வலது கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இக்காரியங்களை இடது கையால் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். صحيح مسلم (3/ 1598) 105 – (2020) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، وَاللَّفْظُ لِابْنِ نُمَيْرٍ،، […]
நிர்வாணமாக குளிப்பது உளூ செய்வது கூடுமா?
கேள்வி கடமையான குளிப்பை நிர்வாணமாக குளிப்பதும் நிர்வாணமாக உளுச் செய்வதும் கூடுமா? பதில்: கூடாது. ஒருவர் மற்றவரின் பார்வை படும்படி குளிக்கும் போது நிர்வாணமாகக் குளிப்பது அறவே தடுக்கப்பட்டதாகும். سنن أبي داود (4/ 40) 4012 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ نُفَيْلٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ الْعَرْزَمِيِّ، عَنْ عَطَاءٍ، عَنْ يَعْلَى، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ […]
வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா?
வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா? படுக்கலாம். குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன. முதல் ஹதீஸ் ஒருமனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை நபியவர்கள் பார்த்தார்கள். இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: (திர்மிதீ: 2768) (2692), (அஹ்மத்: 7862) (7524), 8041 (7698) இந்த அறிவிப்பாளர் வரிசையில் […]
கடனாளி ஹஜ் செய்யலாமா?
கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா? பதில்: கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத் தேவைக்காக இல்லாமல் வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக கடன் வாங்குவது ஒரு வகை. ஒருவர் ஒரு இலட்ச ரூபாய் கடன் வாங்கி வியாபாரம் செய்கின்றார். ஆனால் அவரிடம் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களோ, பொருட்களோ இருக்கின்றது என்றால் இவர் கடனாளி ஆக […]
திருட்டுப் பொருளை அன்பளிப்பாகப் பெறலாமா?
திருட்டுப் பொருளை அன்பளிப்பாகப் பெறலாமா? கூடாது. திருட்டுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை உண்ணலாமா என்றால் அது கூடாது. வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும். திருட்டுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வட்டியின் மூலம் ஒருவன் சம்பாதித்தால் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருந்தாலும் அது அவனுடைய பொருளாகும். இந்தியச் சட்டப்படியும், உலக நாடுகள் அனைத்தின் சட்டப்படியும், இஸ்லாமியச் சட்டப்படியும் இது தான் சட்டமாகும். வட்டி கொடுத்த ஒருவன் வட்டி வாங்கியவனுக்கு எதிராக என்னுடைய […]
வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா?
வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா? வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுக்கும் போது வாங்கலாம் என்றால் நம் இடத்தை அல்லது நம் கடையை வட்டிக் கடைக்கு வாடகைக்குக் கொடுக்கலாமே என்று யாரும் கருதக் கூடாது. இரண்டுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. நமது இடத்தை அல்லது கடையை வட்டிக் கடைக்கு வாடகைக்கு விட்டால் வட்டி எனும் கொடுமைக்கு நாம் துணை நின்றவர்களாக நேரும். ஆகவே இடத்தையோ, அல்லது கடையையோ வட்டிக்கடைக்கு வாடகைக்குக் கொடுப்பது தவறாகும்.
வட்டி வாங்குபவரின் அன்பளிப்பு ஹலாலா?
வட்டி வாங்குபவரின் அன்பளிப்பு ஹலாலா? ஆம். ஹலால் தான். மார்க்கத்தில் ஹராமாக உள்ளவை இரண்டு வகைப்படும். 1 . அடிப்படையில் ஹராம். 2 . புறக் காரணத்தால் ஹராம். பன்றி இறைச்சி, தாமாகச் செத்தவை எப்படி ஹராமாக உள்ளதோ அது போல் பிறரிடமிருந்து முறைகேடாகப் பெற்ற பொருளும் ஹராமாகும். ஆனால் இரண்டுக்கும் மத்தியில் வித்தியாசம் உண்டு பன்றி இறைச்சி எந்த வழியில் நமக்குக் கிடைத்திருந்தாலும் ஹராம் என்ற நிலையில் இருந்து அது மாறப் போவதில்லை. நம்முடைய சொந்தப் […]
அதிகபட்சம் எவ்வளவு ஸதகா செய்யலாம்?
அதிகபட்சம் எவ்வளவு ஸதகா செய்யலாம்? சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “விடைபெறும்’ ஹஜ்ஜின்போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், “(இதோ) தாங்கள் காண்கிறீர்களே இந்த நோய் என்னைப் பீடித்துவிட்டது. நான் ஒரு செல்வந்தன். (நான் இறந்துவிட்டால்) என் ஒரே மகள் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாக மாட்டார்கள். எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானம் […]
ஒரு தடவை தான் ஜகாத் என அறிஞர் கூற்று?
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா? பதில்: தவறான கேள்வி. இந்தக் கேள்விக்குரிய பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் இஸ்லாத்தின் முக்கியமான ஒரு அடிப்படையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கருத்துக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரம் இல்லையென்றால் அது ஒரு போதும் மார்க்க அங்கீகாரத்தைப் பெறாது. உலகில் உள்ள மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவாக அது இருந்தாலும் சரியே. நீ […]
ஜகாத் என்று சொல்லி தான் கொடுக்க வேண்டுமா ?
எவ்வளவு பணம் இருந்தால் ஸகாத் கடமையாகும்? ஸகாத் பணம் என்று சொன்னால் அதை என் உறவினர் வாங்க மாட்டார். எனவே இது ஸகாத் பணம் என்று சொல்லாமல் ஸகாத் கொடுக்கலாமா? பதில்: இல்லை. 11 பவுன் அளவிற்கு நகையோ அல்லது அதற்கு நிகரான பணமோ இருந்தால் ஸகாத் கடமையாகி விடும். நீங்கள் வீட்டை விற்றதன் மூலம் கிடைத்தத் தொகை இந்த அளவிற்கோ இதை விட அதிகமாகவோ இருந்தால் அப்பணத்துக்கு ஸகாத் கொடுக்க வேண்டும். உங்கள் உறவினர் ஏழையாக […]
கடனாளிக்கு ஜகாத் கடமையா?
கடனாளிக்கு ஜகாத் கடமையா? இல்லை. கடன் இருந்து அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ, அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஜகாத் கடமையில்லை. ஏனென்றால் இவர் ஜகாத்தை வாங்கும் நிலையில் இருக்கின்றார். إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَاِبْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை […]
ஜகாத் கொடுத்த பணத்தில் வாங்கும் நகைக்கு, ஜகாத் உண்டா?
நகைக்கு ஜகாத் கொடுத்த பின் அந்த நகையை நான் விற்று விட்ட பின் அந்தப் பணத்திற்கு வேறு பொருள் வாங்குகின்றேன். இப்பொழுது இந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா? பதில் : இல்லை. நமது செல்வங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது. سنن الترمذي ت شاكر (2/ 517) 616 – حَدَّثَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الحُبَابِ قَالَ: أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ […]
ஜகாத் இலாபத்திலா மொத்தத்திலா?
பயிர் விளைச்சலில் நீர் பாய்ச்சி விளைபவற்றில் 5 விழுக்காடும், தானாக விளைபவற்றில் 10 விழுக்காடும் ஜகாத் கொடுக்க வேண்டும். இது நாம் செய்த செலவு போக கிடைக்கும் இலாபத்திலா? அல்லது மொத்த விளைச்சலிலா? பதில்: மொத்த விளைச்சலில் தான். حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ […]
பெண்ணின் நகைக்கு யார் ஜகாத் தருவது?
பெண்ணின் நகைகளுக்கு அப்பெண் ஜகாத் கொடுக்க வேண்டுமா? கணவன் கொடுக்க வேண்டுமா? திருமணத்தின் போது ஒரு பெண்ணின் பெற்றோர் பெற்றோர் அன்பளிப்பாக நகை செய்து போட்டார்கள். அதற்கு ஜகாத் கடமையாகி விட்டது. அதற்குரிய ஜகாத்தை அப்பெண் செலுத்த வேண்டுமா? அல்லது அப்பெண்ணின் கணவர் தனது சம்பாத்தியத்திலிருந்து அந்த ஜகாத்தைக் கொடுக்க வேண்டுமா? மேலும் ஒருவருக்கு ஜகாத் கடமையாகி விட்டது. அவரிடம் ஜகாத்திற்குரிய தொகை இல்லை. எனவே அவர் கடனாகவோ, வட்டிக்கு வாங்கியோ ஜகாத்தைக் கட்டலாமா? பதில்: பெண்ணுக்குத்தான் […]
குழந்தைக்கு ஃபித்ரா ஏன்?
குழந்தைக்கு ஃபித்ரா ஏன்? ரமளானில் ஸதகத்துல் ஃபித்ர் வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றது. மேலும் அதன் பயனாக வசதியற்ற நமது சகோதரர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இறைவன் வழியமைத்துள்ளான். அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்கும் இந்த ஸதகத்துல் ஃபித்ர் கடமையாக்கப் பட்டிருப்பதன் நோக்கம் என்ன? இதில் இறைவன் நன்மையை நாடியிருப்பான் என்றாலும் இதற்கு மேலும் தெளிவு உள்ளதா? விளக்கவும். பதில்: سنن أبي داود (2/ 111) 1609 – […]
ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா?
ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா? என் சகோதரிகளுக்கு சொந்தமாக வீடு உள்ளது. ஆனால் அவர்களுக்கு வருமானம் இல்லை (little income). இந்த நிலையில் என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா? ஆனால் அவர்களிடம் 11 பவுன் நகைக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளது. விளக்கம் கொடுக்கவும். பதில்: செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்குக் கொடுப்பதே ஜகாத் என்பதன் அடிப்படை. இந்த அடிப்படையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். செல்வந்தர்கள் ஏழைகள் என்பது ஒப்பிட்டுப் பார்த்து வகைப்படுத்துவதாகும். […]
செலவை கழித்த பிறகா, ஜகாத்?
விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா? பதில்: இல்லை. இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இதற்காக செலவு செய்ய வேண்டி இருந்தது. இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம். و حَدَّثَنَا ابْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ […]
வரதட்சனை மவ்லிது விருந்து வித்தியாசம் என்ன?
வரதட்சனை மவ்லிது விருந்து வித்தியாசம் என்ன? அன்பிற்க்கினிய சகோதரர் PJ அவர்களுக்கு.. நீங்கள் பேசிய இஸ்லாம் கூறும் பொருளியல் பாகம்-14 ல், திருக்குர்ஆன் சூரா 4:140 வசனம் குறிப்பிட்டு அல்லாஹ்வை கேலி செய்யும் சபையில் நீங்கள் அமராதீர்கள்.அதாவது பித்-அத் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்வது தவறு.ஆனால் அதில் தரும் சாப்பாட்டை நம் வீட்டிற்க்கு அனுப்பி நாம் சாப்பிடுவது ஹராம் இல்லை என்று கூறி உள்ளீர்கள். மெளலீது, ஹத்தம், ஃபாத்திஹா ஓதுவது ஹராம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை […]
கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடலாமா?
எனது குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடலாமா? விளக்கம் தரவும். பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை. இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி […]
புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் விருந்து கூடுமா?
புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் விருந்து கூடுமா? இன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள் செய்துவருகின்றனர். புதுவீட்டுக்கு வந்தவுடன் பால்காச்ச வேண்டும். வீட்டில் ஜமாஅத் தொழுகை நடத்தப்பட வேண்டும். ஃபாத்திஹா ஓதப்பட வேண்டும் என்று பலவிதமான மூடநம்பிக்கைகள் மக்களிடம் காணப்படுகின்றது. இவைகளுக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. புதுவீடு கட்டி மக்களை அழைத்து விருந்துபோடுவதை மட்டுமே இஸ்லாம் அனுமதிக்கின்றது. இதைத் தவிர ஏனைய சடங்கு சம்பரதாயங்களை தடை செய்கின்றது. 7281حَدَّثَنَا مُحَمَّدُ […]
பாவியாக்கும் பராஅத் இரவு
சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும். இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள். மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக […]
ஸலவாதுன்னாரிய்யா ஓதலாமா?
ஸலவாதுன்னாரிய்யா ஓதலாமா? கூடாது. தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது. இந்த ஸலவாத்தின் வாசகங்கள் பெரிதாக உள்ளதால் இதை அனைவரும் மனனம் செய்திருப்பதில்லை. மேலும் 4444 தடவை ஒருவர் இதை ஓதினால் இதற்காகப் பல நாட்களை ஒதுக்க வேண்டிவரும். இதனால் ஆலிம்களை அழைத்து அவர்களுக்கு உரிய(?) கட்டணம் கொடுத்து ஓதச் […]
பெருநாள் வாழ்த்து கூறலாமா? கூடாதா?
பெருநாள் வாழ்த்து கூறலாமா? கூடாதா? வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்ன? நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாகத் தான் அதன் கருத்து அமைந்துள்ளது. நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்று கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும். ஆசி வழங்குவது போல் அமைந்துள்ள வாழ்த்துகிறேன் என்ற சொல்லை ஒரு […]
இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா
இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா கூறக்கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்று பல்வேறு சந்தர்ப்பங்களில் துஆ செய்துள்ளனர். ஆனால் அந்த துஆவைச் செவியுற்ற நபித்தோழர்களை ஆமீன் சொல்லுமாறு கூறவில்லை. நபித்தோழர்கள் ஆமீன் கூறியதாகவும் அதைக் கேட்டு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அங்கீகரித்த்தாகவும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது பித்அத் ஆகும். இது மார்க்கத்தில் உள்ளது என்றால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள இதைக் கற்றுத்தராமல் இருந்திருக்க மாட்டார்கள். […]
குடியேறும் போது ஃபாத்திஹா உண்டா?
குடியேறும் போது ஃபாத்திஹா உண்டா? குடியேறும் போது விருந்து தரலாம். பாத்தியா ஒதுவது பித்அத் ஆகும். இன்றைக்கு கிரகப்பிரவேசம் என்ற பெயரில் ஏராளமான தவறுகளை நம் சமுதாய மக்கள்செய்து வருகின்றனர். புதுவீட்டுக்கு வந்தவுடன் பால் காய்ச்ச வேண்டும். வீட்டில் ஜமாஅத்தொழுகை நடத்த வேண்டும். ஃபாத்திஹா ஓத வேண்டும். கூலிக்கு மாறடிக்கும்ஆலிம்களைக் கூட்டி வந்து வீட்டில் குர்ஆன் முழுவதையும் ஓதச் சொல்ல வேண்டும்என்று பலவிதமான மூடநம்பிக்கைகள் மக்களிடம் காணப்படுகின்றது. இவற்றுக்குமார்க்கத்தில் அனுமதி இல்லை. புதுவீடு கட்டி மக்களை அழைத்து […]
அளவுகோல்கள்
என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஏற்றுக் கொண்டு, உங்கள் தோல்களும், முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணிந்து, அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே. என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுத்து, உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடி,, அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் […]
முக்கிய அடிப்படை ஆதாரங்கள்
முஃமினா? முஸ்லிமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது, அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை விட்டுவிட்டார்கள். ஆகவே நான், அல்லாஹ்வின் தூதரே! அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகின்றேன் என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை முஸ்லிம் என்று சொல் என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து […]
இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமையா?
உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள். سنن الترمذي ت شاكر (1/ 182) 109 – حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ […]
இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா?
இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா? மரணிக்கும் தருவாயில் இருப்பவருக்கு அருகில் யாஸீன் ஓதும் நடைமுறை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் காணப்படுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின் வரும் ஹதீஸ்களைச் சில அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி) நூல்கள் :(அபூதாவூத்: 2814), இப்னுமாஜா 1438 யாஸீன் (அத்தியாயம்) குர்ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி […]
ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா?
ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா? ஒருவர் இறந்து விட்டால் அவ்வீட்டார் சோகமாக இருப்பார்கள். அவர்கள் சமைக்கும் மன நிலையில் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்காக மற்றவர்கள் உணவளிக்க வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம். இந்த அர்த்தத்தில் மய்யித் வீட்டில் அடுப்பெரியக் கூடாது என்று கூறினால் அதில் தவறில்லை. ஜஃபர் (ரலி) அவர்கள் மூத்தா போரில் கொல்லப்பட்ட செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி […]
ஜும்மா உரையில் கலீபாக்களின் பெயர் கூற வேண்டுமா?
ஜும்மா உரையில் அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ஆகிய நபித்தோழர்களின் பெயர்களைக் கூறி துஆச் செய்வது நபிவழியா? அபூபக்ர் (ரலி) உள்ளிட்ட நான்கு கலீபாக்களின் பெயர்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முஸ்லிம் உறவினர்களின் பெயர்களையும் வாசித்து வாரம் தோறும் குத்பாவில் துஆச் செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருக்கவில்லை. இருந்திருக்கவும் முடியாது. மேற்கண்ட தோழர்கள் கலீபாக்களாக நியமிக்கப்பட்ட காலத்திலும் இப்படி ஒரு நடைமுறை அவர்களால் அமுல்படுத்தப்படவில்லை. மிகவும் பிற்காலத்தில் வந்தவர்கள் தான் இப்படி […]
பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்துதல்?
பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்துதல்? ளயீஃபான செய்தி. பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்று தவ்ஹீது மவ்லவிகள் கூறுகின்றார்கள். ஆனால் ருகூவுக்கு முன்பு கூறும் ஒவ்வொரு தக்பீரிலும் நபி (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்துவார்கள் என்று பைஹகீயில் இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளதே! இதன் நிலை என்ன? பதில்: நபி (ஸல்) அவர்கள் தொழத் தயாராகும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள். அவ்விரு கைகளையும் […]
துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா?
துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா? விரும்பினால் வைக்கலாம். துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை நோற்காமல் இருக்க மாட்டார்கள் என்ற கருத்தில் ஒரு செய்தி உள்ளது. سنن النسائي (4/ 220) 2416 – أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي النَّضْرِ، قَالَ: حَدَّثَنِي أَبُو النَّضْرِ، قَالَ: حَدَّثَنَا أَبُو […]
அரபா நாள் எது? நோன்பு உண்டா?
அரபா நாள் எது? நோன்பு உண்டா? ஆம். உண்டு. அரபா நாளை குறித்து அந்த நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றாத மற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும் அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். இங்கு அந்த நாள் என்பது ஹாஜிகள் அரபா மைதானத்தில் கூடியிருக்கும் அந்த நாளை தான் குறிக்கும் என்று கூறப்படுகிறது ஆனால் நீங்கள், நமக்கு எப்பொழுது பிறை ஒன்பது வருகிறதோ அன்று தான் அரபாவுடைய நாள் என்று […]
ஆஷூராவுக்கு பல நிலைபாடுகள்
ஆஷூராவுக்கு பல நிலைபாடுகள் ஆஷூரா பற்றிய ஹதீஸில், ஒரு ஹதீஸ் ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன் நபி(ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததாகவும் , மற்றொரு ஹதீஸில் நான்அடுத்த வருடம் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்றும் கூறியுள்ளீர்கள் ! அப்படியென்றால் நபி (ஸல்) அவர்கள் ஒரு வருடம் தான் ரமலான் நோன்பையும் வைத்துள்ளார்கள் என்று அர்த்தம் வருமே ? ஆனால் ஹிஜ்ரி இரண்டாம்ஆண்டு முதலே ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டு விட்டதே ? விளக்கம் […]
ஷவ்வால் ஆறு நோன்பு எப்படி?
ஷவ்வால் ஆறு நோன்பு எப்படி? حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ، عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، أَنَّهُ حَدَّثَهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «مَنْ […]
மூன்று மாத கருவு பித்ரா உண்டா?
மூன்று மாத கருவு பித்ரா உண்டா? இல்லை. ஃபித்ரா யார் யார் மீது கடமை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ […]
விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?
விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா? ஆம். பொதுவாக ஒரு வணக்கத்தை இறைவன் கடமையாக்கினால் அது அனைவருக்கும் கடமை என்பது தான் பொருள். யாருக்காவது கடமை இல்லை என்று கூறுவதாக இருந்தால் அவ்வாறு கூறுவோர் தான் தெளிவான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ […]