நபிவழி மீறப்படுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை குறித்து மேலே நாம் எடுத்துக் காட்டியவை அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை குறித்து இவ்வளவு தெளிவான சான்றுகள் இருந்தும் ஒவ்வொரு கால கட்டத்திலும் இதற்கு மாற்றமான எண்ணிக்கையில் பலரும் தம் இஷ்டத்திற்குத் தொழுதுள்ளனர். மதிக்கத்தக்க அறிஞர்கள் கூட நபிவழிக்கு மாற்றமாகத் தொழுதிருப்பதும் கருத்துக் கூறியிருப்பதும் நமக்கு வியப்பாகவே உள்ளது. இது குறித்து துஹ்பதுல் அஹ்வதி எனும் நூலில் (பாகம்: 3, […]
Author: Trichy Farook
3) ரக்அத்களின் எண்ணிக்கை
ரக்அத்களின் எண்ணிக்கை ரமளான் மாதத்திலும் மற்ற மாதங்களிலும் தொழ வேண்டிய இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள் என்பதில் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. இந்த அறிவிப்புக்களில் ஆதாரப்பூர்வமான எதையும் நாம் நடைமுறைப்படுத்தலாம். 4+5=9 ரக்அத்கள் எனது சிறிய தாயாரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓரிறவு தங்கினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுது விட்டு தமது இல்லம் வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் உறங்கினார்கள். பின்னர் […]
2) தஹஜ்ஜத், தராவீஹ் வேறுவேறா?
புனித மிக்க ரமலான் மாதத்தில் மக்கள் பேரார்வத்துடன் தராவீஹ் தொழுகை’ என்ற பெயரில் இருபது ரக்அத் தொழுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் தமிழகத்தின் பல ஊர்களில், இத்தொழுகை குறித்த கருத்து வேறுபாடு காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் சண்டைகள் நடந்து, காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவாகும் வேதனையளிக்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இஸ்லாத்தின் உண்மை நிலையை குர்ஆன் மற்றும் நபிவழியில் தக்க ஆதாரங்களுடன் அறிந்து கொண்டால் இந்த வேண்டாத நிகழ்வுகளைத் தவிர்க்க இயலும். தராவீஹ் என்ற […]
1) முன்னுரை
பீ.ஜைனுல் ஆபிதீன் தராவீஹ் தொழுகை என்று ஓர் தொழுகை இல்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானில் இருபது ரக் அத் தொழுததில்லை என்பதை தெளிவான சான்றுகளுடனும், இருபது ரக்அத்தை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விரிவான மறுப்புடனும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் தலைப்புகளில் தராவீஹ் பற்றி முழுமையாக அலசும் நூல். தராவீஹ் என்ற சொல்லே இல்லை தஹஜ்ஜத் வேறு, தராவீஹ் வேறு என்ற வாதம் இரவுத் தொழுகையின் நேரம் ரக்அத்களின் எண்ணிக்கை 4+5=9 ரக்அத்கள் […]
3) பிரார்த்தனை தான் வணக்கம்
பிரார்த்தனை தான் வணக்கம் இவ்வுலகில் வாழும் மனிதர்களில் எவரும் அனைத்து நலன்களையும் பெற்றவர்களாக இல்லை. தான் விரும்பிய, ஆசைப்பட்ட அனைத்தையும் பெற்ற ஒரே ஒரு மனிதரைக் கூட உலகில் காண முடியாது. மிக உயர்ந்த பதவியைப் பெற்றவர் அனைத்து இன்பங்களையும் பெற்று மன நிறைவான வாழ்க்கை வாழ்கிறார் என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கையில் நுழைந்து பார்க்கும் போது அவருக்கு வாரிசு இல்லை என்ற மனக்குறையோ, அல்லது பெயரைக் கெடுப்பவனாக வாரிசு பிறந்து விட்டானே என்ற […]
2) பிரார்த்தனையின் ஒழுங்குகள்
பிரார்த்தனையின் ஒழுங்குகள் இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக் கூடியவர்களும் உள்ளனர். பிரார்த்தனை செய்வதற்குரிய ஒழுங்குகளை அவர்கள் கடைப்பிடிக்காததும்,பிரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அவர்கள் பேணாததும் தான் இதற்குக் காரணம். ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும் 2393 – وَحَدَّثَنِى أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا […]
1) முன்னுரை
பி.ஜைனுல்ஆபிதீன் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம்மைப் படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது,அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். ஏனெனில், பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே பிரார்த்தனை என்ற இந்த வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்து விடக் கூடாது. இயல்பாகவே மனிதன் தேவையுள்ளவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். எந்தத் தேவையுமற்ற இறைவனிடம் நமது […]
சுன்னத்தான நோன்புகள்
சுன்னத்தான நோன்புகள் 2:185 شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன்: 2:185) ➚ என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு ரமளான் […]
17. எல்லா நேரமும் இரட்சகர்!
16. எல்லா நேரமும் இரட்சகர்! انت حقا محيى الدين *انت قطب باليقين كنت غوثا كل حين *فادفعن عنا حينا நிச்சயமாக நீங்கள் இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவராவீர். உறுதியாக நீங்கள் அச்சாணியாகத் திகழ்கிறீர்கள். எல்லா நேரமும் நீங்கள் இரட்சகராக இருக்கிறீர்கள். எனவே நாங்கள் அழிவதை விட்டும் எங்களைக் காப்பாற்றுங்கள். ஏறத்தாழ தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட அப்துல் காதிர் ஜீலானியிடம் பிரார்த்தனை செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா? எல்லா நேரத்திலும் இரட்சிக்கக் கூடியவர் […]
005. குறையுள்ள பிராணியை குர்பானி கொடுக்கலாமா?
குறையுள்ள பிராணியை குர்பானி கொடுக்கலாமா? கூடாது. கொம்பு உடைந்தால் தவறில்லை. குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி), (திர்மிதீ: 1497) (1417), அபூதாவூத் […]
கஸ்ர் எத்தனை நாளைக்கு?
கஸ்ர் எத்தனை நாளைக்கு? வரையறை இல்லை. எனினும்….. ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை. எனவே இத்தனை நாள் தங்கினால் மட்டுமே கஸ்ர் செய்ய வேண்டும்; அதற்கு மேல் தங்கினால் கஸ்ர் செய்யக் கூடாது என்று கூறுவதற்கு மார்க்கத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அந்நாட்களில் கஸ்ர் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது […]
01) காலுறை மஸஹ் சட்ட சுருக்கம்
ஆண்களும், பெண்களும் காலுறை அணிந்தால் மஸஹ் செய்யலாம் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்வது மஸஹ் ஆகும் நிபந்தனை – உளுவுடன், கால் தூய்மையாக உள்ள நிலையில், காலுறை அணிந்திருக்க வேண்டும். பிறகு உளு முறிந்து உளு செய்யும் போது, கால்களை கழுவாமல் மஸஹ் செய்யலாம் மலஜலம் கழித்த பிறகு உளு செய்யும் போதும், கால்களை கழுவாமல் மஸஹ் செய்யலாம் அதிகபட்சம் ஒரு நாள் (24 மணி நேரம்) வரை மஸஹ் செய்யலாம். பிரயாணியாக இருந்தால் 3 நாள் […]
ஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்?
ஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்? 25கிமீ சென்றால் கஸ்ர். ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம். கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ”நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தனர். (முஸ்லிம்: 1230) சுமார் 25 கிலோ மீட்டர் அளவிற்கு […]
லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா?
லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா? நான்கையும் ஒரு ஸலாமில். லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒரே சலாமில் தொழ ஹதீஸ் உள்ளதா? கடமை அல்லாத எல்லா தொழுகைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டாகத் தொழுதார்கள் என்று வந்துள்ளதே? அது இரவுத் தொழுகையைத் தான் குறிக்குமா? ஜூம்ஆவின் முன் சுன்னத் நான்கு ரக்அத்துகளை எப்படித் தொழ வேண்டும்? லுஹருக்கு முன் உள்ள சுன்னத் தொழுகை இரண்டு ரக்அத்கள் எனவும், நான்கு ரக்அத்கள் […]
ஹாஜத் நஃபில் தொழுகை உண்டா?
ஹாஜத் நஃபில் தொழுகை உண்டா? இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஹாஜத்’ தொழுகை என்ற பெயரில் தொழுததாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. ஹாஜத் தொழுகை குறித்து திர்மிதியில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும். “யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் […]
விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளை பின்னர் தொழலாமா?
விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளை பின்னர் தொழலாமா? தொழலாம் கடமையான தொழுகைக்கு முன்னால் நிறைவேற்றப்படுவதே முன் சுன்னத். இதை அதற்குரிய நேரத்தில் தொழத் தவறினால் கடமையான தொழுகையை முடித்த பிறகு நிறைவேற்றலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபித்தோழர் ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்தை ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றிய பின் தொழுதுள்ளார். இதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். ஆனால் […]
பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா?
பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா? உடனே தொழக் கூடாது. நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் : (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடன் ஒருவர் எழுந்து தொழ ஆரம்பித்தார். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அவரிடம் (சென்று) அமர்வீராக. வேதக்காரர்கள் தங்களுடைய தொழுகைகளுக்கு இடையே பிரிவின்றி அவற்றை (சோந்தாற்போல்) நிறைவேற்றியதால் தான் அழிந்து போனார்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் சரியாகச் சொன்னார் […]
வித்ருக்குப் பின் தொழலாமா?
வித்ருக்குப் பின் தொழலாமா? சிறந்தது அல்ல. விதிவிலக்காக தொழலாம். ‘இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 998, 472) எனவே வித்ரை கடைசி தொழுகையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். எனினும், வித்ரு தொழுகைக்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் […]
வித்ர் மூன்றாம் ரக்அத்திற்கு கைகளை உயர்த்த வேண்டுமா?
வித்ர் மூன்றாம் ரக்அத்திற்கு கைகளை உயர்த்த வேண்டுமா? ஆம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது தம் இரு கைகளையும் உயர்த்தியுள்ளதால் வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத் முடித்து, மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போதும் இரு கைகளையும் உயர்த்த வேண்டும். இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள். ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறும் […]
வித்ர் குனூத்தில் கைகளை உயர்த்த வேண்டுமா?
வித்ர் குனூத்தில் கைகளை உயர்த்த வேண்டுமா? இல்லை. குனூத் ஓதும் போது தக்பீர் கூறி கைகளை உயர்த்திக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இரவின் இறுதியில் தொழுவது சிறந்ததா?
இரவின் இறுதியில் தொழுவது சிறந்ததா? ஆம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (1145) […]
மக்காவில் 20 ரக்அத்கள் ஏன்?
மக்காவில் 20 ரக்அத்கள் ஏன்? மக்கா நமது வழிகாட்டி இல்லை. சவூதி அரேபியாவில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் எட்டு அல்லது பத்து ரக்அத்கள் தான் தொழுவிக்கப்படுகின்றன. ஆயினும் மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியிலும் மட்டும் இருபது ரக்அத்கள் தொழுவிக்கப்படுகின்றது. அதை நாம் ஏன் முன்னுதாரணமாக ஆக்கக் கூடாது என்ற கேள்வி தவறாகும். மக்காவையும், மதீனாவையும் வணக்க வழிபாடுகளுக்கு முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை. மாறாக, நான் […]
தஹஜ்ஜத் தொழுகையின் நேரம் எது?
தஹஜ்ஜத் தொழுகையின் நேரம் எது? இஷாக்கு பிறகு பஜர் முன்னர் வரை. வித்ர் பஜ்ருக்கு பிறகும். ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறி விடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) (நஸாயீ: 1588) […]
தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா?
தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? தொழலாம். மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள். 1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை. 2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை. 3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை. அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி) (முஸ்லிம்: 1373) மேற்கண்ட மூன்று நேரங்கள் […]
இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா?
இஷ்ராக் என்று ஒரு தொழுகை உண்டா? இல்லை. இஷ்ராக் என்றால் சூரிய உதயம் என்பது பொருள். சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவது தனிச்சிறப்பு வாய்ந்தது என்றும் அந்தத் தொழுகைக்கு இஷ்ராக் தொழுகை என்றும் சிலர் கருதுகின்றனர். இவ்வாறு தொழுதால் ஹஜ் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுகின்றனர். ஒருவர் ஃபஜர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு பிறகு அமர்ந்து அல்லாஹ்வை நினைவுகூறுகிறார். […]
குளிப்பு கடமையானவர் ஜனாசாவைக் குளிப்பாட்டலாமா?
குளிப்பு கடமையானவர் ஜனாசாவைக் குளிப்பாட்டலாமா? குளிப்பாட்டலாம். குளிப்பு கடமையானவர் என்ன செய்யக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கியுள்ளனர். அவர்கள் ழக்கூடாது; பள்ளிவாசலில் நுழையக்கூடாது; தவாப் செய்யக் கூடாது என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர ஜனாஸாவைக் குளிப்பாட்டக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லவில்லை. குளிப்பு கடமையானவர்களும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், உளூ இல்லாதவர்களும் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் ஜனாஸாவைக் குளிப்பாட்டலாம். தொடலாம். எனினும், அடக்கம் செய்பவர் நேற்றிறவு இல்லறத்தில் ஈடுபடாதவர் இருந்தால், முக்கியத்துவம் […]
ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?
ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? கூடாது. மூன்று காரியங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். ஆனால் மக்கள் அவற்றை விட்டுவிட்டனர். (கடமையான) தொழுகையில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவது அவற்றில் ஒன்றாகும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : குப்ரா பைஹகீ-6989 (6586) கடமையான தொழுகையில் இரண்டு ஸலாம் சொல்லப்படுவது போல் ஜனாஸாத் தொழுகையிலும் இரண்டு ஸலாம் கொடுக்கலாம் என்று மேற்கண்ட செய்தி கூறுகின்றது. நபிகள் நாயகம் […]
பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?
பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா? தொழலாம். அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை. அறிவிப்பவர்: அபூ […]
மீண்டும் அடக்கம் செய்தால் ஜனாஸா தொழுகை உண்டா?
மீண்டும் அடக்கம் செய்தால் ஜனாஸா தொழுகை உண்டா? இல்லை. ஒரு முஸ்லிம் இறந்த பிறகு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அடக்கம் செய்து விட்டனர். பின்னர் இறந்தவர் இயற்கையாக மரணிக்கவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறி மறுபடியும் தோண்டி மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்கு மறுபடியும் ஜனாஸா தொழுகை நடத்தப்பட வேண்டுமா? பதில்: ஜனாஸா தொழுகை என்பது இறந்து விட்ட ஒரு முஸ்லிமுக்காக மற்ற முஸ்லிம்கள் செய்ய வேண்டிய ஒரு பிரார்த்தனையாகும். […]
தொழுகையில் அரயில் தான் துஆ கேட்கனுமா?
தொழுகையில் அரயில் தான் துஆ கேட்கனுமா? இல்லை. நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தொழுகையில் அனைத்தையும் அரபியில் தான் ஓதியுள்ளனர். இது தான் அவர்களின் ஆதாரம். இந்த ஆதாரத்தினடிப்படையில் தொழுகையில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். அவர்களிடம் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டால் பதில் இல்லை. நபியவர்கள் தொழுகையில் மட்டுமின்றி தொழுகை அல்லாத நேரங்களில் செய்த பிரார்த்தனைகளையும் அரபியில் தான் செய்துள்ளனர். அப்படியானால் தொழுகைக்கு வெளியில் கேட்கும் துஆக்களையும் அரபியில் தான் கேட்க […]
சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா?
சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா? துஆ கேட்கலாம். நஃபில் தொழுகை கூடாது. மூன்று நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து உள்ளார்கள். மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள். 1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை, 2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும் வரை. 3. சூரியன் […]
தொழுகைக்கு வெளியே சஜ்தா செய்து துஆ செய்யலாமா?
தொழுகைக்கு வெளியே சஜ்தா செய்து துஆ செய்யலாமா? கூடாது. சஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தனை செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை நன்கு கவனித்தால் தொழுகைக்கு உள்ளே உள்ள சஜ்தாவில் பிரார்த்தனை செய்வதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைத் தெளிவாக அறியலாம். ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் […]
என்னுரை
அன்பிற்குரிய கொள்கை சகோதரர்களே! இஸ்லாமிய அழைப்பாளர்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு இந்த செயலி வெளியிடப்பட்டுள்ளது. பேச்சாளர்கள் எவ்வளவு அனுபவம் உடையவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் வேலைப் பளுவின் காரணமாக குறிப்புகளை எடுக்க இயலாமல் போய் விடும். சில நேரங்களில் நேரம் ஒதுக்கி குறிப்புகள் எடுத்துச் சென்றாலும், இறுதி நேரத்தில் தலைப்புகள் மாற்றப்பட்டு விடும். இன்னும் சில வேளைகளில், திடீரென தலைப்பு தரப்படும், பேசச் சொல்வார்கள். பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில் இருக்கும் போது, எதை பேசுவது என்று […]
பிள்ளை இல்லாவிட்டால், பெற்றோரின் பங்கு
இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில், இறந்தவருக்கு மனைவி இல்லாவிட்டால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (1/3) தரப்பட வேண்டும். தாந்தைக்கு (மீதி, அதாவது) மூன்றில் இரண்டு பாகம் (2/3) தரப்பட வேண்டும். 4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ […]
நோன்பு பெருநாள் உரை – 1
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! ஒருமாத காலம் நோன்பை இறைவனுடைய திருப்தியை நாடி நோற்று, அவனுடைய பரிசை எதிர்பார்த்து நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். இந்த நேரத்தில் நாம் நினைவில் வைக்க வேண்டிய சில செய்திகளை இந்த பெருநாள் உரையிலே நாம் பார்க்க இருக்கிறோம். ஏனென்றால் பண்டிக்கை என்றாலே பலருக்கு புதிய ஆடையை அணியவேண்டும், சுவையான உணவு சாப்பிடவேண்டும், எங்கேயாவது ஊர் சுற்றவேண்டும், இன்னும் சிலர் நண்பர்களோடு சினிமா தியேட்டருக்கு போகவேண்டும், என்று இந்த பெருநாளை கழிப்பதை பார்க்கிறொம். இறையச்சத்தை […]
பிள்ளை இருந்தால், பெற்றோரின் பங்கு
இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் இறந்தவருக்கு மனைவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தாய் ஆறில் ஒரு பாகம் (1/6) தரப்பட வேண்டும். தந்தைக்கு ஆறில் ஒரு பாகம் (1/6) தரப்பட வேண்டும். 4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ […]
02) ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்
1) ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும் நோய்நொடிகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட துஆக்கள் மற்றும் குர்ஆன் வசனங்களை ஓதி மந்திரிக்கும் முறையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை நாம் தெரிந்து பின்பற்றுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு ஹஜ்ரத்தோ அல்லது மோதினாரோ ஓதிப் பார்த்தால் தான் குணமாகும் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட முடியும். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபியவர்கள் ஓதிப் பார்த்த முறைகளைக் காண்போம். வலிக்கு ஓதிப் பார்த்தல் நபியவர்கள் வலியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்முடைய ஆட்காட்டி விரலில் எச்சிலை […]
சொத்துப்பங்கீடு உதாரணம் – 1
தாய், தந்தைக்கு தனித்தனியாக 6ல்1 இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். அவருக்கு(இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அல்குர்ஆன் (4: 11) மனைவிக்கு 8ல்1 இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிமார்களுக்கு எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு. அல்குர்ஆன் (4: 12) […]
திருணம நாள் கொண்டாடலாமா?
திருணம நாள் கொண்டாடலாமா? கூடாது. பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள் என்று பல்வேறு நினைவு நாட்களைக் கொண்டாடுவது இஸ்லாத்தில் இல்லை. இவை அனைத்துமே பிற மதக் கலாச்சாரமாகும். இதுபோன்று நினைவு நாள் கொண்டாடுவதை மதச் சடங்காகக் கருதி மாற்று மதத்தவர்கள் செய்து வருவதால் அதை முஸ்லிம்கள் செய்யக் கூடாது. யார் இன்னொரு சமுதாயத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சார்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் – இப்னு உமர் (ரலி), […]
நபிக்கு பின் யாருக்கும் வஹி வருமா?
நபிக்கு பின் யாருக்கும் வஹி வருமா? வராது. صحيح البخاري (4/ 174) 3469 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّهُ قَدْ كَانَ فِيمَا مَضَى قَبْلَكُمْ مِنَ الأُمَمِ مُحَدَّثُونَ، وَإِنَّهُ إِنْ كَانَ فِي أُمَّتِي هَذِهِ […]
004. ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா?
ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா? செய்யலாம். ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான ஹஜ்ஜை முதலில் செய்ய வேண்டும் என்றும் ஹஜ் கடமையான ஒருவர் உம்ராச் செய்யும் போது அதனால் அடுத்து அவரால் ஹஜ் செய்ய முடியாமல் போகலாம் என்றும் கூறுகின்றனர். ஹதீஸ்களை ஆராய்ந்தால் இந்த வாதங்கள் தவறானைவை என்பதைத் தெளிவாக […]
003. ஹாஜி நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா?
ஹாஜி நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா? இல்லை. ஹஜ் என்ற கடமைக்கும் நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமை நிறைவேற்றி மதீனா செல்லாமல் வந்துவிட்டால் நிச்சயம் அவரின் ஹஜ் நிறைவேறும். الكامل في ضعفاء الرجال» (8/ 248): حَدَّثَنَا على بن إسحاق، حَدَّثَنا مُحَمد بْنُ مُحَمد بْنِ النُّعْمَانِ بْنِ شِبْلٍ، حَدَّثني جَدِّي، حَدَّثني مَالِكٌ عَنْ نَافِعٍ، عنِ […]
002. புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு. . .
புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு. . . டாக்டர் த. முஹம்மது கிஸார் புனித ஹஜ் நம்மை நெருங்கி வருகிறது. நம்மில், சிலருக்கு ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதில் சிலர் ஹஜ்ஜுக்கு தொடங்கி விட்டனர். இன்னும் ஹஜ்ஜுக்கு செல்ல தங்களை மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகி வருகின்றனர். இந்த சமயத்தில், ஹஜ் செல்வோர் தங்கள் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில வழிகாட்டுதலை இங்கு தர விரும்புகிறேன். இதில் நான் 1977 ஆம் ஆண்டு, சவூதி அரசின் மருத்துவராக ஹஜ்ஜின் […]
001. அன்பளிப்பை கொண்டு ஹஜ் செய்யலாமா?
கடனாக அல்லாமல் பிறர் அன்பளிப்பாகத் தந்த செல்வத்தைக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றலாமா? وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும். (அல்குர்ஆன்: 3:97) ➚ இந்த வசனத்தின் அடிப்படையில் ஹஜ் செய்ய சக்தி பெற்றவர்களுக்கு அது கடமையாகும். அன்பளிப்பாகக் கிடைத்த பணமாக இருந்தாலும் அதைக் கொண்டு, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி இருந்தால் தாராளமாக ஹஜ்ஜை […]
பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா?
பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா? இல்லை. பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம் உரை நிகழ்த்துவார். அதில் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா? பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது இடையில் உட்கார்வதற்கோ அல்லது இரண்டு உரைகள் நிகழ்த்துவதற்கோ நபிவழியில் ஆதாரமில்லை. இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் ஷாபி அறிவிப்பதாக […]
பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா?
பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா? ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா? பதில்: இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் ஏற்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது. ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று […]
நாளின் ஆரம்பம் இரவா? பகலா?
நாளின் துவக்கம் இரவு தான் நாளின் ஆரம்பம் இரவா? அல்லது பகலா? என்பதை விரிவாக குர்ஆன், நபிமொழியின் அடிப்படையில் பார்ப்போம். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாளின் துவக்கம் இரவாக இருந்ததா? அல்லது பகலாக இருந்ததா? என்பதைக் காண்போம். صحيح مسلم (3/ 1589) (2004) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى الْبَهْرَانِيِّ، قَالَ: ذَكَرُوا النَّبِيذَ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَقَالَ: ” كَانَ […]
பிறையைக் கணிக்கலாமா?
பிறையைக் கணிக்கலாமா? கூடாது. நோன்பு என்பது ஒரு வணக்கம் ஆகும். வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எந்த அடிப்படையில் காட்டித் தந்தார்களோ அந்த அடிப்டையிலேயே நாம் செயல்படுத்த வேண்டும். இதில் நம்முடைய மனோ இச்சையைப் பின்பற்றுதல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறை ஆகும். இந்த அடிப்படையை முதலில் நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நபியவர்கள் பிறையைக் கண்களால் பார்த்து நோன்பை முடிவு செய்ய வேண்டும் என்றே கூறியுள்ளார்கள். “அதை (பிறையை) நீங்கள் காணும் […]
பல் துலக்கலாமா? நகம் வெட்டலாமா?
பல் துலக்கலாமா? நகம் வெட்டலாமா? துலக்கலாம். வெட்டலாம். நோன்பில் நகம் மற்றும் முடி வெட்டலாமா? குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கி குளிக்கலாமா? பற்பசைகள் பயன்படுத்தலாமா? சோப்பு நறுமணம் உபயோகிக்கலாமா? வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடுமா? என்பன போன்ற கேள்விகள் யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும். உண்ணாமல் பருகாமல் இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பாகும். இவை தவிர உள்ள ஏனைய காரியங்களைச் செய்வது நோன்பில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் நோன்பை முறிக்கும் செயல்கள் […]
நோன்பாளி குளுகோஸ் ஊசி போடலாமா?
நோன்பாளி குளுகோஸ் ஊசி போடலாமா? கூடாது. நோன்பை விடவேண்டும். குளுகோஸ் ஏற்றும் அளவுக்கு ஒருவரது நிலை இருந்தால் அவர் நோன்பை முறித்துவிட சலுகை பெற்றவராக இருக்கிறார். குளுகோஸ் ஏற்றிக் கொண்டு நோன்பை முறித்து முறித்த நோன்பை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளலாம். குளுகோஸ் ஏற்றும் நிலைமை ஏற்படாமல் உடலுக்குத் தெம்பு ஏற்றும் நோக்கத்தில் குளுகோஸ் ஏற்றப்பட்டால் இது உணவுடைய நிலையில் தான் உள்ளது. உணவு உட்கொள்வதற்குப் பதிலாக குளுகோஸ் ஏற்றிக் கொண்டு உணவு உட்கொண்டது போன்ற சக்தியைப் […]