Author: Trichy Farook

நபிக்கு பின் யாருக்கும் வஹி வருமா?

நபிக்கு பின் யாருக்கும் வஹி வருமா? வராது. حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّهُ قَدْ كَانَ فِيمَا مَضَى قَبْلَكُمْ مِنَ الأُمَمِ مُحَدَّثُونَ، وَإِنَّهُ إِنْ كَانَ فِي أُمَّتِي هَذِهِ مِنْهُمْ فَإِنَّهُ عُمَرُ بْنُ الخَطَّابِ “ […]

004. ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா?

ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா? செய்யலாம். ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான ஹஜ்ஜை முதலில் செய்ய வேண்டும் என்றும் ஹஜ் கடமையான ஒருவர் உம்ராச் செய்யும் போது அதனால் அடுத்து அவரால் ஹஜ் செய்ய முடியாமல் போகலாம் என்றும் கூறுகின்றனர். ஹதீஸ்களை ஆராய்ந்தால் இந்த வாதங்கள் தவறானைவை என்பதைத் தெளிவாக […]

003. ஹாஜி நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா?

ஹாஜி நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா? இல்லை. ஹஜ் என்ற கடமைக்கும் நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமை நிறைவேற்றி மதீனா செல்லாமல் வந்துவிட்டால் நிச்சயம் அவரின் ஹஜ் நிறைவேறும். الكامل في ضعفاء الرجال» (8/ 248): حَدَّثَنَا على بن إسحاق، حَدَّثَنا مُحَمد بْنُ مُحَمد بْنِ ‌النُّعْمَانِ ‌بْنِ ‌شِبْلٍ، حَدَّثني جَدِّي، حَدَّثني مَالِكٌ عَنْ نَافِعٍ، عنِ […]

002. புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு. . .

புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு. . . டாக்டர் த. முஹம்மது கிஸார் புனித ஹஜ் நம்மை நெருங்கி வருகிறது. நம்மில், சிலருக்கு ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதில் சிலர் ஹஜ்ஜுக்கு தொடங்கி விட்டனர். இன்னும் ஹஜ்ஜுக்கு செல்ல தங்களை மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகி வருகின்றனர். இந்த சமயத்தில், ஹஜ் செல்வோர் தங்கள் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில வழிகாட்டுதலை இங்கு தர விரும்புகிறேன். இதில் நான் 1977 […]

001. அன்பளிப்பை கொண்டு ஹஜ் செய்யலாமா?

கடனாக அல்லாமல் பிறர் அன்பளிப்பாகத் தந்த செல்வத்தைக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றலாமா? وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும். (அல்குர்ஆன்: 3:97)➚ இந்த வசனத்தின் அடிப்படையில் ஹஜ் செய்ய சக்தி பெற்றவர்களுக்கு அது கடமையாகும். அன்பளிப்பாகக் கிடைத்த பணமாக இருந்தாலும் அதைக் கொண்டு, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி இருந்தால் தாராளமாக ஹஜ்ஜை நிறைவேற்றலாம். […]

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா?

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா? இல்லை. பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம் உரை நிகழ்த்துவார். அதில் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா? பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது இடையில் உட்கார்வதற்கோ அல்லது இரண்டு உரைகள் நிகழ்த்துவதற்கோ நபிவழியில் ஆதாரமில்லை. இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் ஷாபி அறிவிப்பதாக […]

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா?

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா? ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா? பதில்: இரண்டு சாட்சிகள் பிறை பார்த்ததாகக் கூறினால் அதை அப்பகுதியினர் ஏற்க வேண்டும் என்பதற்கு ஹதீஸில் ஆதாரம் உள்ளது. ஆனால் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்ததாகக் கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று […]

பிறையைக் கணிக்கலாமா?

பிறையைக் கணிக்கலாமா? கூடாது. நோன்பு என்பது ஒரு வணக்கம் ஆகும். வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எந்த அடிப்படையில் காட்டித் தந்தார்களோ அந்த அடிப்டையிலேயே நாம் செயல்படுத்த வேண்டும். இதில் நம்முடைய மனோ இச்சையைப் பின்பற்றுதல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறை ஆகும். இந்த அடிப்படையை முதலில் நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நபியவர்கள் பிறையைக் கண்களால் பார்த்து நோன்பை முடிவு செய்ய வேண்டும் என்றே கூறியுள்ளார்கள். “அதை (பிறையை) நீங்கள் […]

பல் துலக்கலாமா? நகம் வெட்டலாமா?

பல் துலக்கலாமா? நகம் வெட்டலாமா? துலக்கலாம். வெட்டலாம். நோன்பில் நகம் மற்றும் முடி வெட்டலாமா? குளிக்கலாமா? ஆற்றில் மூழ்கி குளிக்கலாமா? பற்பசைகள் பயன்படுத்தலாமா? சோப்பு நறுமணம் உபயோகிக்கலாமா? வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடுமா? என்பன போன்ற கேள்விகள் யாவும் நோன்பின் அடிப்படையைப் புரியாததால் ஏற்படும் கேள்விகளாகும். உண்ணாமல் பருகாமல் இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பாகும். இவை தவிர உள்ள ஏனைய காரியங்களைச் செய்வது நோன்பில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் நோன்பை முறிக்கும் செயல்கள் […]

நோன்பாளி குளுகோஸ் ஊசி போடலாமா?

நோன்பாளி குளுகோஸ் ஊசி போடலாமா? கூடாது. நோன்பை விடவேண்டும். குளுகோஸ் ஏற்றும் அளவுக்கு ஒருவரது நிலை இருந்தால் அவர் நோன்பை முறித்துவிட சலுகை பெற்றவராக இருக்கிறார். குளுகோஸ் ஏற்றிக் கொண்டு நோன்பை முறித்து முறித்த நோன்பை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளலாம். குளுகோஸ் ஏற்றும் நிலைமை ஏற்படாமல் உடலுக்குத் தெம்பு ஏற்றும் நோக்கத்தில் குளுகோஸ் ஏற்றப்பட்டால் இது உணவுடைய நிலையில் தான் உள்ளது. உணவு உட்கொள்வதற்குப் பதிலாக குளுகோஸ் ஏற்றிக் கொண்டு உணவு உட்கொண்டது போன்ற சக்தியைப் […]

நோன்பாளி இரத்தம் கொடுக்கலாமா?

நோன்பாளி இரத்தம் கொடுக்கலாமா? கொடுக்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் காலத்திலும் அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளி யேற்றி வந்தனர். مسند أحمد مخرجا (28/ 342) 17117 – حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ أَبِي […]

இஃப்தார் விருந்து கூடுமா?

இஃப்தார் விருந்து கூடுமா? அரசியல்வாதிகள் தங்கள் சகஅரசியல்வாதிகளை மதிப்பதற்காக, நோன்பிற்கு எள்ளவும் சம்பந்தம் இல்லாதவர்களை அழைத்து இஃப்தார் விருந்து கொடுத்தால் அது தவறு. அரசியல்வாதியோ, பொதுவான மக்களோ, மாற்றுமத நண்பர்களோ முஸ்லிம்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்து கொடுத்தால் அதில் எந்த தவறும் இல்லை. எனவே அனுமதிக்கலாம்.

புகைபிடித்தால் நோன்பு முறியுமா?

புகைபிடித்தால் நோன்பு முறியுமா? குதர்க்கமான கேள்வி. புகைபிடித்தல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு வீணாண காரியமாகும். இது உடலுக்கு கேடானது மட்டுமல்லாமல் வீண்விரையமாகும். நம்முடைய உடலுக்கு நாம் தீங்கிழைத்துக் கொள்வதை திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கிறது. وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ  ۛۚ உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன்: 2:195)➚ இறைவன் ஒரு செயலைத் தடை செய்து விட்டால் அதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். திருடுவது கடுமையான குற்றம் என்று திருமறைக் குர்ஆன் […]

நோன்பாளி மனைவியை முத்தமிடலாமா?

இளவயதுடையவர் தவிர்க்க வேண்டும். நோன்பு நோற்பவர் பகல் காலங்களில் உடலுறவு கொள்ளாமல் விலகியிருப்பதுடன் உடலுறவுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளையும் தவிர்த்துக் கொள்வது சிறந்ததாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தமது மனைவியரை முத்தமிடுவார்கள்; கட்டியணைப்பார்கள். அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 1927) ➚ سنن أبي داود حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، وَعَلْقَمَةَ، […]

பேணுதலுக்காக நோன்பை தாமதமாக திறக்கலாமா?

பேணுதலுக்காக நோன்பை தாமதமாக திறக்கலாமா? கூடாது. நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: (புகாரி: 1957) ➚ சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே பேணுதலுக்காக சில நிமிடங்கள் தாமதமாகத் திறப்பது நபிவழிக்கு மாற்றமானதாகும்.

ஃபித்ரா எப்படி திரட்டுவது?

ஃபித்ரா எப்படி திரட்டுவது? மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: (புகாரி: 1503) ➚ , 1509 , இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்கும், பெருநாள் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள். பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் […]

விடி ஸஹர் கூடுமா?

விடி ஸஹர் கூடுமா? கூடாது. தமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது. உறக்கம் மேலிடுவதால் சில நேரங்களில் ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழித்து, அவசரமாக ஒரு குவளைத் தண்ணீர் குடித்து விட்டு (இதைத் தான் விடி ஸஹர் என்கின்றனர்) நோன்பு நோற்பதாக நிய்யத் செய்து கொள்கின்றனர். சுபுஹ் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது என்று கட்டளை உள்ளது. وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ […]

ஸஹருக்கு தனி பாங்கு உண்டா?

ஸஹருக்கு தனி பாங்கு உண்டா? ஆம். உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகவும், உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற்காகவும் தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்து விட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: (புகாரி: 621) ➚ மக்கள் […]

வித்ர் பிறகு ஸுப்ஹானல் மலிக்குல் உண்டா?

வித்ர் பிறகு ஸுப்ஹானல் மலிக்குல் உண்டா? ஆம். உண்டு. நபியவர்கள் வித்ரு (ஒற்றைப் படை)த் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹ்ஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற 87 வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல்யா அய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், (மூன்றாவது ரக்அத்தில்) குல்ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள். ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று மூன்று முறை சொல்லுவார்கள். அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி), […]

நின்றவாறு சிறுநீர் கழிக்கலாமா?

நின்றவாறு சிறுநீர் கழிக்கலாமா? அமர முடியாத இடத்தில் நின்று கழிக்கலாம். அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத் தருகின்றது. مسند أحمد مخرجا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: مَنْ حَدَّثَكَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَالَ قَائِمًا فَلَا تُصَدِّقْهُ، «مَا بَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمًا مُنْذُ أُنْزِلَ عَلَيْهِ […]

சுய இன்பம் கூடுமா?

சுய இன்பம் கூடுமா? கூடாது. காம உணர்வு மேலோங்கும் போது சுயமாக விந்தை வெளியேற்றுவது சுய இன்பம் எனப்படுகிறது. பரவலாக இளைஞர்களிடம் இந்த வழக்கம் காணப்படுகிறது. 23:5➚ وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ 23:5➚ وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ 23:7➚ فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ‌ தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.. இதற்கு அப்பால் (வேறு […]

சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா?

வலது கையால் சாப்பிடும் போது இடது கையால் தண்ணீர் அருந்தலாமா? பதில்: சாப்பிடுவதற்கும் பருகுவதற்கும் வலது கையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இக்காரியங்களை இடது கையால் செய்யக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். صحيح مسلم (3/ 1598) 105 – (2020) حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، وَاللَّفْظُ لِابْنِ نُمَيْرٍ،، […]

நிர்வாணமாக குளிப்பது உளூ செய்வது கூடுமா?

கேள்வி கடமையான குளிப்பை நிர்வாணமாக குளிப்பதும் நிர்வாணமாக உளுச் செய்வதும் கூடுமா? பதில்: கூடாது. ஒருவர் மற்றவரின் பார்வை படும்படி குளிக்கும் போது நிர்வாணமாகக் குளிப்பது அறவே தடுக்கப்பட்டதாகும். سنن أبي داود (4/ 40) 4012 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ نُفَيْلٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ الْعَرْزَمِيِّ، عَنْ عَطَاءٍ، عَنْ يَعْلَى، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ […]

கடனாளி ஹஜ் செய்யலாமா?

கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா? பதில்: கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத் தேவைக்காக இல்லாமல் வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக கடன் வாங்குவது ஒரு வகை. ஒருவர் ஒரு இலட்ச ரூபாய் கடன் வாங்கி வியாபாரம் செய்கின்றார். ஆனால் அவரிடம் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களோ, பொருட்களோ இருக்கின்றது என்றால் இவர் கடனாளி […]

திருட்டுப் பொருளை அன்பளிப்பாகப் பெறலாமா?

திருட்டுப் பொருளை அன்பளிப்பாகப் பெறலாமா? கூடாது. திருட்டுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை உண்ணலாமா என்றால் அது கூடாது. வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும். திருட்டுப் பொருளை அன்பளிப்பாகக் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வட்டியின் மூலம் ஒருவன் சம்பாதித்தால் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருந்தாலும் அது அவனுடைய பொருளாகும். இந்தியச் சட்டப்படியும், உலக நாடுகள் அனைத்தின் சட்டப்படியும், இஸ்லாமியச் சட்டப்படியும் இது தான் சட்டமாகும். வட்டி கொடுத்த ஒருவன் வட்டி வாங்கியவனுக்கு எதிராக என்னுடைய […]

வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா?

வட்டிக் கடைக்கு வாடகைக்கு விடலாமா? வட்டியின் மூலம் சம்பாதித்த பொருளை அன்பளிப்பாகக் கொடுக்கும் போது வாங்கலாம் என்றால் நம் இடத்தை அல்லது நம் கடையை வட்டிக் கடைக்கு வாடகைக்குக் கொடுக்கலாமே என்று யாரும் கருதக் கூடாது. இரண்டுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. நமது இடத்தை அல்லது கடையை வட்டிக் கடைக்கு வாடகைக்கு விட்டால் வட்டி எனும் கொடுமைக்கு நாம் துணை நின்றவர்களாக நேரும். ஆகவே இடத்தையோ, அல்லது கடையையோ வட்டிக்கடைக்கு வாடகைக்குக் கொடுப்பது தவறாகும்.

வட்டி வாங்குபவரின் அன்பளிப்பு ஹலாலா?

வட்டி வாங்குபவரின் அன்பளிப்பு ஹலாலா? ஆம். ஹலால் தான். மார்க்கத்தில் ஹராமாக உள்ளவை இரண்டு வகைப்படும். 1 . அடிப்படையில் ஹராம். 2 . புறக் காரணத்தால் ஹராம். பன்றி இறைச்சி, தாமாகச் செத்தவை எப்படி ஹராமாக உள்ளதோ அது போல் பிறரிடமிருந்து முறைகேடாகப் பெற்ற பொருளும் ஹராமாகும். ஆனால் இரண்டுக்கும் மத்தியில் வித்தியாசம் உண்டு பன்றி இறைச்சி எந்த வழியில் நமக்குக் கிடைத்திருந்தாலும் ஹராம் என்ற நிலையில் இருந்து அது மாறப் போவதில்லை. நம்முடைய சொந்தப் […]

ஒரு தடவை தான் ஜகாத் என அறிஞர் கூற்று?

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா? பதில்: தவறான கேள்வி. இந்தக் கேள்விக்குரிய பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் இஸ்லாத்தின் முக்கியமான ஒரு அடிப்படையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கருத்துக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ ஆதாரம் இல்லையென்றால் அது ஒரு போதும் மார்க்க அங்கீகாரத்தைப் பெறாது. உலகில் உள்ள மார்க்க அறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவாக அது இருந்தாலும் சரியே. நீ […]

ஜகாத் என்று சொல்லி தான் கொடுக்க வேண்டுமா ?

எவ்வளவு பணம் இருந்தால் ஸகாத் கடமையாகும்? ஸகாத் பணம் என்று சொன்னால் அதை என் உறவினர் வாங்க மாட்டார். எனவே இது ஸகாத் பணம் என்று சொல்லாமல் ஸகாத் கொடுக்கலாமா? பதில்: இல்லை. 11 பவுன் அளவிற்கு நகையோ அல்லது அதற்கு நிகரான பணமோ இருந்தால் ஸகாத் கடமையாகி விடும். நீங்கள் வீட்டை விற்றதன் மூலம் கிடைத்தத் தொகை இந்த அளவிற்கோ இதை விட அதிகமாகவோ இருந்தால் அப்பணத்துக்கு ஸகாத் கொடுக்க வேண்டும். உங்கள் உறவினர் ஏழையாக […]

கடனாளிக்கு ஜகாத் கடமையா?

கடனாளிக்கு ஜகாத் கடமையா? இல்லை. கடன் இருந்து அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ, அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஜகாத் கடமையில்லை. ஏனென்றால் இவர் ஜகாத்தை வாங்கும் நிலையில் இருக்கின்றார். إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَاِبْنِ السَّبِيلِ فَرِيضَةً مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை […]

ஜகாத் இலாபத்திலா மொத்தத்திலா?

பயிர் விளைச்சலில் நீர் பாய்ச்சி விளைபவற்றில் 5 விழுக்காடும், தானாக விளைபவற்றில் 10 விழுக்காடும் ஜகாத் கொடுக்க வேண்டும். இது நாம் செய்த செலவு போக கிடைக்கும் இலாபத்திலா? அல்லது மொத்த விளைச்சலிலா? பதில்: மொத்த விளைச்சலில் தான். حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ […]

பெண்ணின் நகைக்கு யார் ஜகாத் தருவது?

பெண்ணின் நகைகளுக்கு அப்பெண் ஜகாத் கொடுக்க வேண்டுமா? கணவன் கொடுக்க வேண்டுமா? திருமணத்தின் போது ஒரு பெண்ணின் பெற்றோர் பெற்றோர் அன்பளிப்பாக நகை செய்து போட்டார்கள். அதற்கு ஜகாத் கடமையாகி விட்டது. அதற்குரிய ஜகாத்தை அப்பெண் செலுத்த வேண்டுமா? அல்லது அப்பெண்ணின் கணவர் தனது சம்பாத்தியத்திலிருந்து அந்த ஜகாத்தைக் கொடுக்க வேண்டுமா? மேலும் ஒருவருக்கு ஜகாத் கடமையாகி விட்டது. அவரிடம் ஜகாத்திற்குரிய தொகை இல்லை. எனவே அவர் கடனாகவோ, வட்டிக்கு வாங்கியோ ஜகாத்தைக் கட்டலாமா? பதில்: பெண்ணுக்குத்தான் […]

குழந்தைக்கு ஃபித்ரா ஏன்?

குழந்தைக்கு ஃபித்ரா ஏன்? ரமளானில் ஸதகத்துல் ஃபித்ர் வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றது. மேலும் அதன் பயனாக வசதியற்ற நமது சகோதரர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இறைவன் வழியமைத்துள்ளான். அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்கும் இந்த ஸதகத்துல் ஃபித்ர் கடமையாக்கப் பட்டிருப்பதன் நோக்கம் என்ன? இதில் இறைவன் நன்மையை நாடியிருப்பான் என்றாலும் இதற்கு மேலும் தெளிவு உள்ளதா? விளக்கவும். பதில்: سنن أبي داود (2/ 111) 1609 – […]

ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா?

ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா? என் சகோதரிகளுக்கு சொந்தமாக வீடு உள்ளது. ஆனால் அவர்களுக்கு வருமானம் இல்லை (little income). இந்த நிலையில் என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா? ஆனால் அவர்களிடம் 11 பவுன் நகைக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளது. விளக்கம் கொடுக்கவும். பதில்: செல்வந்தர்களிடம் பெற்று ஏழைகளுக்குக் கொடுப்பதே ஜகாத் என்பதன் அடிப்படை. இந்த அடிப்படையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். செல்வந்தர்கள் ஏழைகள் என்பது ஒப்பிட்டுப் பார்த்து வகைப்படுத்துவதாகும். […]

வரதட்சனை மவ்லிது விருந்து வித்தியாசம் என்ன?

வரதட்சனை மவ்லிது விருந்து வித்தியாசம் என்ன? அன்பிற்க்கினிய சகோதரர் PJ அவர்களுக்கு.. நீங்கள் பேசிய இஸ்லாம் கூறும் பொருளியல் பாகம்-14 ல், திருக்குர்ஆன் சூரா 4:140➚ வசனம் குறிப்பிட்டு அல்லாஹ்வை கேலி செய்யும் சபையில் நீங்கள் அமராதீர்கள்.அதாவது பித்-அத் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்வது தவறு.ஆனால் அதில் தரும் சாப்பாட்டை நம் வீட்டிற்க்கு அனுப்பி நாம் சாப்பிடுவது ஹராம் இல்லை என்று கூறி உள்ளீர்கள். மெளலீது, ஹத்தம், ஃபாத்திஹா ஓதுவது ஹராம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை […]

பாவியாக்கும் பராஅத் இரவு

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும். இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள். மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக […]

ஸலவாதுன்னாரிய்யா ஓதலாமா?

ஸலவாதுன்னாரிய்யா ஓதலாமா? கூடாது. தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது. இந்த ஸலவாத்தின் வாசகங்கள் பெரிதாக உள்ளதால் இதை அனைவரும் மனனம் செய்திருப்பதில்லை. மேலும் 4444 தடவை ஒருவர் இதை ஓதினால் இதற்காகப் பல நாட்களை ஒதுக்க வேண்டிவரும். இதனால் ஆலிம்களை அழைத்து அவர்களுக்கு உரிய(?) கட்டணம் கொடுத்து ஓதச் […]

பெருநாள் வாழ்த்து கூறலாமா? கூடாதா?

பெருநாள் வாழ்த்து கூறலாமா? கூடாதா? வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்ன? நீங்கள் நலமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாகத் தான் அதன் கருத்து அமைந்துள்ளது. நீங்கள் நலமாக இருக்க அல்லது மகிழ்வுடன் இருக்க அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்று கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும். ஆசி வழங்குவது போல் அமைந்துள்ள வாழ்த்துகிறேன் என்ற சொல்லை ஒரு […]

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா கூறக்கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்று பல்வேறு சந்தர்ப்பங்களில் துஆ செய்துள்ளனர். ஆனால் அந்த துஆவைச் செவியுற்ற நபித்தோழர்களை ஆமீன் சொல்லுமாறு கூறவில்லை. நபித்தோழர்கள் ஆமீன் கூறியதாகவும் அதைக் கேட்டு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அங்கீகரித்த்தாகவும் எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது பித்அத் ஆகும். இது மார்க்கத்தில் உள்ளது என்றால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள இதைக் கற்றுத்தராமல் இருந்திருக்க மாட்டார்கள். […]

அளவுகோல்கள்

என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஏற்றுக் கொண்டு, உங்கள் தோல்களும், முடிகளும் (அதாவது உங்கள் உணர்வுகள்) அச்செய்திக்குப் பணிந்து, அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதற்கு) உங்களை விட நான் மிகத் தகுதி வாய்ந்தவனே. என் பெயரில் (ஏதேனும் ஒரு) செய்தியை நீங்கள் கேள்விப்படும்போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுத்து, உங்களது தோல்களும் முடிகளும் விரண்டு ஓடி,, அச்செய்தி உங்களுக்குத் தூரமாக இருப்பதாக நீங்கள் […]

இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிப்பு கடமையா?

உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள். حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جَاوَزَ الخِتَانُ الخِتَانَ وَجَبَ الغُسْلُ» […]

இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா?

இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா? மரணிக்கும் தருவாயில் இருப்பவருக்கு அருகில் யாஸீன் ஓதும் நடைமுறை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் காணப்படுகிறது. இதற்கு ஆதாரமாகப் பின் வரும் ஹதீஸ்களைச் சில அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர். உங்களில் மரண வேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: மஃகில் பின் யஸார் (ரலி) (அபூதாவூத்: 2814) ➚,(இப்னு மாஜா: 1438) ➚ யாஸீன் (அத்தியாயம்) குர்ஆனின் இதயமாகும். அல்லாஹ்வையும், மறுமையையும் நாடி […]

ஜும்மா உரையில் கலீபாக்களின் பெயர் கூற வேண்டுமா?

ஜும்மா உரையில் அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ஆகிய நபித்தோழர்களின் பெயர்களைக் கூறி துஆச் செய்வது நபிவழியா? அபூபக்ர் (ரலி) உள்ளிட்ட நான்கு கலீபாக்களின் பெயர்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முஸ்லிம் உறவினர்களின் பெயர்களையும் வாசித்து வாரம் தோறும் குத்பாவில் துஆச் செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருக்கவில்லை. இருந்திருக்கவும் முடியாது. மேற்கண்ட தோழர்கள் கலீபாக்களாக நியமிக்கப்பட்ட காலத்திலும் இப்படி ஒரு நடைமுறை அவர்களால் அமுல்படுத்தப்படவில்லை. மிகவும் பிற்காலத்தில் வந்தவர்கள் தான் இப்படி […]

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்துதல்?

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்துதல்? ளயீஃபான செய்தி. பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்று தவ்ஹீது மவ்லவிகள் கூறுகின்றார்கள். ஆனால் ருகூவுக்கு முன்பு கூறும் ஒவ்வொரு தக்பீரிலும் நபி (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்துவார்கள் என்று பைஹகீயில் இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளதே! இதன் நிலை என்ன? பதில்: நபி (ஸல்) அவர்கள் தொழத் தயாராகும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள். அவ்விரு கைகளையும் […]

அரபா நாள் எது? நோன்பு உண்டா?

அரபா நாள் எது? நோன்பு உண்டா? ஆம். உண்டு. அரபா நாளை குறித்து அந்த நாளில் ஹஜ் கடமையை நிறைவேற்றாத மற்றவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும் அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். இங்கு அந்த நாள் என்பது ஹாஜிகள் அரபா மைதானத்தில் கூடியிருக்கும் அந்த நாளை தான் குறிக்கும் என்று கூறப்படுகிறது ஆனால் நீங்கள், நமக்கு எப்பொழுது பிறை ஒன்பது வருகிறதோ அன்று தான் அரபாவுடைய […]

மூன்று மாத கருவு பித்ரா உண்டா?

மூன்று மாத கருவு பித்ரா உண்டா? இல்லை. ஃபித்ரா யார் யார் மீது கடமை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ […]

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா?

விட்ட நோன்பை கர்ப்பிணிகள் நிறைவேற்றுவது அவசியமா? ஆம். பொதுவாக ஒரு வணக்கத்தை இறைவன் கடமையாக்கினால் அது அனைவருக்கும் கடமை என்பது தான் பொருள். யாருக்காவது கடமை இல்லை என்று கூறுவதாக இருந்தால் அவ்வாறு கூறுவோர் தான் தெளிவான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ […]

பாலூட்டும் தாய்க்கு நோன்பு உண்டா?

பாலூட்டும் தாய்க்கு நோன்பு உண்டா? இல்லை. களா செய்யவேண்டும். குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர். பாலூட்டும் சமயத்தில் பெண்களுக்கு போதிய உணவு அவசியம் என்பதால் இவர்கள் நோன்பு நோற்பதில் மார்க்கம் சலுகையளிக்கின்றது. أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ رَجُلٍ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَةٍ فَإِذَا هُوَ يَتَغَدَّى، قَالَ: […]

நோன்பாளி ஆஸ்துமா ஸ்பிரே பயன்படுத்தலாமா?

நோன்பாளி ஆஸ்துமா ஸ்பிரே பயன்படுத்தலாமா? பயன்படுத்தலாம். எனக்கு ஆஸ்துமா இருக்கிறது எனவே நான் அதற்கான ஸ்ப்ரே மருந்தை தினமும் உபயோகிக்கிறேன் . இந்த ஸ்பிரே நேராக நுரையிரலுக்கு செல்வது . நோன்புஇருக்கும் போது இதை நான் உபயோகிக்காலமா ? இதனால் நோன்பு முறிந்து விடாதா? எனக்கு விளக்கவும் பதில்: சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல், பருகாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பு என்பதாகும். ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பயன்படுத்துகின்ற மருந்து நிரப்பப்பட்ட குப்பிகள் அவர்களின் […]

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால்?

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால்? நோன்பு முறிந்துவிடும். நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது என்று நேரடியாக ஹதீஸ்களைக் காண முடியவில்லை. ஆனாலும் பொதுவாக மாதவிடாய் ஏற்பட்டவர்கள் நோன்பு நோற்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையில் இதற்கான விடையும் அடங்கியுள்ளது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மை அடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் […]

Next Page » « Previous Page