Tamil Bayan Points

பாலூட்டும் தாய்க்கு நோன்பு உண்டா?

கேள்வி-பதில்: நோன்பு

Last Updated on September 9, 2020 by

பாலூட்டும் தாய்க்கு நோன்பு உண்டா?

இல்லை. களா செய்யவேண்டும்.

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர். பாலூட்டும் சமயத்தில் பெண்களுக்கு போதிய உணவு அவசியம் என்பதால் இவர்கள் நோன்பு நோற்பதில் மார்க்கம் சலுகையளிக்கின்றது.

سنن النسائي (4/ 181)
2277 – أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ رَجُلٍ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَةٍ فَإِذَا هُوَ يَتَغَدَّى، قَالَ: «هَلُمَّ إِلَى الْغَدَاءِ»، فَقُلْتُ: إِنِّي صَائِمٌ، قَالَ: ” هَلُمَّ أُخْبِرْكَ عَنِ الصَّوْمِ: إِنَّ اللَّهَ وَضَعَ عَنِ الْمُسَافِرِ نِصْفَ الصَّلَاةِ وَالصَّوْمَ، وَرَخَّصَ لِلْحُبْلَى وَالْمُرْضِعِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பயணத்தில் உள்ளவருக்கு நோன்பையும் தொழுகையில் பாதியையும் இறைவன் தளர்த்தியுள்ளான். மேலும் பாலூட்டும் பெண்ணுக்கும் கர்ப்பிணிக்கும் (நோன்பு நோற்காமல் இருக்க சலுகை வழங்கியுள்ளான்.)
நூல் : நஸாயீ (2277)

நோன்பு வைத்துக்கொண்டு குழந்தைக்குப் பாலூட்டினால் தாயும் குழந்தையும் பாதிக்கப்படலாம். எனவே பாலூட்டும் தாய் நோயாளியுடைய நிலையில் இருக்கின்றார். இவர் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது.

நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
அல்குர்ஆன் 2:184

அதே நேரத்தில் நோயாளி நோய் நீங்கிவிட்டால் விடுபட்ட நோன்பை நோற்பது கடமையாகும். எனவே பாலூட்டும் பெண் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.