Author: Trichy Farook

5) தடை செய்யப்பட்ட உயிரினங்கள்

தடை செய்யப்பட்ட உயிரினங்கள் திருக்குர்ஆனில் தடை செய்யப்பட்ட இவற்றைத் தவிர வேறு சில உயிரினங்களை உணவாக உட்கொள்வதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். அந்தத் தடையும் இறைவன் புறத்திலிருந்து வந்த தடை தான். அதையும் விளங்கி நாம் கடைப்பிடிக்க வேண்டும். உயிரினங்களில் எவற்றை உண்ணலாம்? எவற்றை உண்ணலாகாது என்ற பிரச்சனை மிகவும் சிக்கலானதாக மக்கள் மத்தியில் கருதப்படுகிறது. இதை உண்ணலாமா? இதை உண்ணலாமா? என்ற கேள்விகள் முஸ்லிம் பத்திரிகைகளில் அதிகம் இடம் பெறுவதைக் காண்கிறோம். உண்மையில் […]

4) நான்கு மட்டும் தான் ஹராமா?

இவ்வசனத்தில் அடங் கியிருக்கும் மற்றொரு செய்தியை சிலர் தவறாக விளங்கிக் கொண்டு குழம்பிப் போய் இருக்கின்றனர். அந்தச் செய்தியைக் குறித்து தான் விளக்கம் தேவைப்படுகின்றது. குர்ஆன் மட்டும் போதும், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று குர்ஆனுக்கு எதிரான வாதத்தை முன்வைக்கும் அறிவீனர்கள் – குர்ஆனைப் பற்றி சரியான அறிவு இல்லாத காரணத்தால் தாமும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்க எண்ணுகின்றனர். இத்தகையோர் வழிகெடுப்பதற்கு பயன்படுத்தும் வசனங்களில் இந்த வசனங்களும் அடங்கும். எனவே, இது குறித்து நாம் விரிவாக […]

3) நிர்பந்தம் ஏற்படும் போது

நிர்பந்தத்திற்கு ஆளாகும்போது இவ்வசனத்தில் கூறப்படும் விலக்கப்பட்ட உணவுகள் பற்றி விரிவான விளக்கத்தை இதுவரை அறிந்துகொண்டோம். இந்த உணவுகளைக் கண்டிப்பாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றாலும் நிர்பந்தத்திற்கு ஆளானோர் அவற்றை உண்ணலாம் என்று இவ்வசனம் அனுமதியளிக்கின்றது. இதுபற்றி விரிவாக அறிந்து கொள்வோம். நிர்பந்தத்திற்கு ஆளாவது என்றால் என்ன? இதை உண்ணா விட்டால் உன்னைக் கொன்று விடுவேன் என்று பிறரால் மிரட்டப்படுவது தான் நிர்பந்தம் எனச் சிலர் கூறுகின்றனர். இதை உண்ணா விட்டால் இறந்துவிடுவோம் என்ற நிலையை ஒருவர் அடைவது […]

2) விலக்கப்பட்ட உணவுகள்

விலக்கப்பட்ட உணவுகள் தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) உள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன். கருணையுடையவன்.(அல்குர்ஆன்: 2:173)➚ இந்த வசனம் விலக்கப்பட்ட உணவுகள் யாவை. அவை அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் எவை ஆகிய இரண்டு விஷயங்களைக் கூறுகிறது. திருமறைக் குர்ஆனில் சில வசனங்களை அதன் மேலோட்டமான பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. வேறு […]

1) முன்னுரை

நூல் ஆசிரியர் : பீ.ஜெய்னுல் ஆபிதீன் முன்னுரை அசைவ உணவுகளில் உண்பதற்கு தடை செய்யப்பட்டவை எவை? அனுமதிக்கப்பட்டவை எவை? தடை செய்ய்ப்பட்டவைகள் எந்தெந்த சந்தர்ப்பத்தில் அனுமதிக்கப்படும் என்பன போன்ற விபரங்கள் கீழ்க்காணும் தலைப்புகளில் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தாமாகச் செத்தவை இரத்தம் விலக்கப்பட்டதாகும் ஓட்டப்பட்ட இரத்தம் பன்றியின் மாமிசம் அல்லாஹ் அல்லாதவருக்கு அறுக்கப்பட்டவை. நிர்பந்தத்திற்கு ஆளாகும்போது தடை செய்யப்பட்ட உயிரினங்கள் கடல் வாழ் உயிரினங்கள் பறவையினங்கள் விலங்கினங்கள் புழு, பூச்சியினங்கள் கேடு விளைவிப்பவை

5) சிறந்ததை கண்டால் முறிக்கலாம்

சிறந்ததைக் கண்டால் சத்தியத்தை முறிக்கலாம் ஒரு காரியத்தைச் செய்வதாக நீ சத்தியம் செய்த பின் அது அல்லாத காரியத்தைச் சிறந்ததாக நீ கண்டால் உன் சத்தியத்தை முறித்து அதற்கான பரிகாரத்தைச் செய்து விட்டு அந்தச் சிறந்த காரியத்தைச் செய்து விடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் சமூரா (ரலி) (புகாரி: 6622) ➚ நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எங்களுக்கு வாகனம் (ஒட்டகம்) வேண்டும் எனக் கேட்டோம். […]

4) சத்தியம் செய்தல்

சத்தியம் செய்தல் தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நீக்குவதற்காகவோ, தனக்குத் தேவையானதைக் கோருவதற்காகவோ இறைவனிடம் அளிக்கும் வாக்குறுதியே நேர்ச்சை என்பதை அறிந்தோம். எவ்விதக் கோரிக்கையின் அடிப்படையில் இல்லாமல் அல்லாஹ் வைச் சாட்சியாக்கி அளிக்கும் உறுதி மொழியே சத்தியம் எனப்படும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சொல்வது உண்மை! அல்லாஹ்வின் மீது சத்தியமாக வாங்கிய கடனை அடுத்த வாரம் திருப்பித் தருவேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பொருள் மிகவும் தரமானது. என்றெல்லாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் சத்தியம் செய்கிறோம். […]

3) நேர்ச்சையை முறிப்பதன் பரிகாரம்

நேர்ச்சையை முறிப்பதன் பரிகாரம் மார்க்கம் அனுமதிக்கின்ற வகையில் ஒருவர் நேர்ச்சை செய்து அவரால் அதை நிறைவேற்ற இயலாது போனால் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். ‘சத்தியம் செய்து விட்டு அதை நிறைவேற்றத் தவறினால் என்ன பரிகாரம் செய்ய வேண்டுமோ அதுவே நேர்ச்சைக்கும் பரிகாரமாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)(முஸ்லிம்: 3103) ➚ நேர்ச்சையை முறிப்பதற்கான பரிகாரம் சத்தியத்தை முறிப்பதற்கான […]

2) நேர்ச்சையின் சட்டங்கள்

நேர்ச்சையின் சட்டங்கள்! நேர்ச்சை செய்வது, சத்தியம் செய்வது குறித்த சட்டங்கள் பற்றி முஸ்ம் சமுதாயத்தில் அதிக அளவில் அறியாமை நிலவுகின்றது. இஸ்லாத்தில் நேர்ச்சை செய்வதும், சத்தியம் செய்வதும் ஏறக் குறைய ஒரே விதமான சட்டங்களைக் கொண்டுள்ளன. ஆயினும் சில விஷயங்களில் இவ்விரண்டின் சட்டங்களும் வேறுபடுகின்றன. நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது ‘இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இது வரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன்; நோன்பு நோற்கிறேன்; ஏழைகளுக்கு […]

1) முன்னுரை

முன்னுரை முஸ்லிம்கள் தமது அனைத்து வணக்க வழிபாடுகளையும் திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்ளக் கட்டளையிடப்பட்டுள்ளனர். எந்த வணக்கத்தையாவது அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத முறையில் ஒருவர் செய்தால் அந்த வணக்கம் இறைவனால் நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். திருக்குர்ஆனையும் நபிவழியையும் ஆதாரமாகக் கொண்டு செயல்படும் முஸ்லிம்கள் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களை தக்க முறையில் நிறைவேற்றினாலும் நேர்ச்சை, சத்தியம் செய்தல் போன்ற வணக்கங்களைப் பற்றி அறியாமையில் […]

7) முடிவுரை

முடிவுரை இஸ்லாமிய சமூக அமைப்பில் உலகம் முழுவதும் ஒரே ஆட்சி தான் நடக்க வேண்டும். அந்த ஒரே ஆட்சித் தலைவரின் பிரதிநிதிகளாக பல பகுதிகளுக்கும் அமீர்கள் (ஆளுனர்கள்) நியமிக்கப்படுவார்கள். இந்தக் கட்டுக்கோப்பு குலைந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அமீருக்குக் கட்டுப்படுதல் வலியுறுத்தப்பட்டுள்ளது.. அமீர்களும் மனிதர்கள் என்பதால் அவர்கள் தமது பணியில் தவறுகள் செய்யலாம். அதற்காக அவர்களுக்கு எதிராகப் புரட்சியிலும் கிளர்ச்சியிலும் மக்கள் இறங்கினால் இஸ்லாமிய அரசு பலவீனமடையும். முஸ்லிம்கள் சிதறி சின்னாபின்னமாகி விடுவார்கள். இதைத் தடுக்கவே […]

6) ஏமாற்று வாதங்கள்

அமீர் வாதமும் அயோக்கியத்தனமும் இன்று இஸ்லாத்தை விட்டு விட்டு இன்னொரு மார்க்கம் கண்ட காதியானிகள் முதல் தூய இஸ்லாத்தை அனைத்து துறைகளிலும் கடைப்பிடிப்போம் என்று சொல்லக்கூடிய அமைப்புக்களும் சிறு தலைவர்களைக் கொண்ட சின்னஞ் சிறு கூட்டங்களும், குர்ஆன் கூறும் ஜிஹாதை குறுகிய அளவில் விளங்கிக் கொண்டு செயற்படும் குழுக்களும் தத்தமது அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற வாதத்தையே எடுத்து வைக்கின்றன. உண்ணும் போது உன்னை அமீர் கூப்பிட்டாலும் ஓடி வர வேண்டும் உறங்கும் போது உன்னை அமீர் […]

3) தலைமைப் பதவியின் வகைகள்

தலைமைப் பதவியும் அதன் வகைகளும் அமீர் என்றால் தலைவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தலைவரைக் குறிப்பதற்கு அமீரைப் போலவே வேறு சொற்களும் அரபி மொழியில் காணப்படுகின்றன. அவை கலீஃபா, இமாம், அமீருல் முஃமினீன், அமீருல் ஆம்மா, மலிக், சுல்த்தான், ஆமில் ஆகியவையாகும். எனவே இந்தச் சொற்கள் அனைத்தையும் முழுமையாக நாம் ஆய்வு செய்வதின் மூலம் அமீர் என்பதற்கான சரியான இலக்கணத்தை நாம் அறிய முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இந்தச் சமுதாயத்தின் முதல் […]

1) முன்னுரை

பீ.ஜைனுல் ஆபிதீன் அமீருக்குக் கட்டுப்படுவதன் அவசியம் அமீர் என்றால் யார் ஒரு நாட்டில் பல அமீர்கள் இருக்க முடியுமா அதிகாரமில்லாதவர் அமீர் என்று அழைக்கப்படலாமா இந்திய முஸ்லிம்களுக்கு அல்லது தமிழக மூஸ்லிம்களுக்கு அமீர் யார் தலமைப் பதவியின் வகைகள் இயக்கங்களின் தலைவர்கள் அமீர்கள் அல்லர் இந்தியாவில் யாரும் அமீர்கள் அல்லர் என்பன போன்ற விஷயங்கள் தக்க ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளன அறிமுகம் இஸ்லாத்தின் பெயரால் உலகில் ஏராளமான இயக்கங்கள் உள்ளன. இந்த இயக்கங்களில் பெரும்பாலானவை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானவையாக […]

6) பல்வேறு வாதங்கள்

அதிகப்படுத்துவது தவறா? 20 ரக்அத் தொழுகைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் ஏதாவது காரணம் கூறி அதைச் சிலர் நியாயப்படுத்த முயன்று வருகின்றனர். 20 ரக்அத்துக்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் நன்மைகளை அதிகம் செய்வது தவறா? என்பது அந்தக் காரணங்களில் ஒன்றாகும். அதிகமாகச் செய்கிறோமா? குறைவாகச் செய்கிறோமா? என்பது பிரச்சனையில்லை. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த படி செய்கிறோமா? என்பது தான் இஸ்லாத்தில் கவனிக்கப்படும். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாததால் தான் இத்தகைய […]

5) 20 ரக்அத்தும் நபித்தோழர்களும்

20 ரக்அத்தும் நபித்தோழர்களும் 20 ரக்அத்களுக்கு நபிவழியில் ஒரு ஆதாரமும் இல்லை எனும் போது அதை விட்டொழிப்பதற்குப் பதிலாக எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 20 ரக்அத்கள் தொழவில்லை என்பது உண்மையே! ஆனால் நபித்தோழர்கள் குறிப்பாக உமர் (ரலி) அவர்கள் 20 ரக்அத்கள் தொழுதுள்ளனரே!’ என்று வாதிடுகின்றனர். உமர் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் 20 ரக்அத்களை உருவாக்கினார்களா? என்பதைப் பின்னர் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். ஒரு வாதத்துக்காக சில நபித்தோழர்கள் 20 ரக்அத்கள் […]

4) ஆதாரமற்ற எண்ணிக்கைகள்

நபிவழி மீறப்படுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை குறித்து மேலே நாம் எடுத்துக் காட்டியவை அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை குறித்து இவ்வளவு தெளிவான சான்றுகள் இருந்தும் ஒவ்வொரு கால கட்டத்திலும் இதற்கு மாற்றமான எண்ணிக்கையில் பலரும் தம் இஷ்டத்திற்குத் தொழுதுள்ளனர். மதிக்கத்தக்க அறிஞர்கள் கூட நபிவழிக்கு மாற்றமாகத் தொழுதிருப்பதும் கருத்துக் கூறியிருப்பதும் நமக்கு வியப்பாகவே உள்ளது. இது குறித்து துஹ்பதுல் அஹ்வதி எனும் நூலில் (பாகம்: 3, […]

3) ரக்அத்களின் எண்ணிக்கை

ரக்அத்களின் எண்ணிக்கை ரமளான் மாதத்திலும் மற்ற மாதங்களிலும் தொழ வேண்டிய இரவுத் தொழுகை எத்தனை ரக்அத்கள் என்பதில் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. இந்த அறிவிப்புக்களில் ஆதாரப்பூர்வமான எதையும் நாம் நடைமுறைப்படுத்தலாம். 4+5=9 ரக்அத்கள் எனது சிறிய தாயாரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓரிறவு தங்கினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுது விட்டு தமது இல்லம் வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் உறங்கினார்கள். பின்னர் […]

2) தஹஜ்ஜத், தராவீஹ் வேறுவேறா?

புனித மிக்க ரமலான் மாதத்தில் மக்கள் பேரார்வத்துடன் தராவீஹ் தொழுகை’ என்ற பெயரில் இருபது ரக்அத் தொழுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் தமிழகத்தின் பல ஊர்களில், இத்தொழுகை குறித்த கருத்து வேறுபாடு காரணமாக முஸ்லிம்கள் மத்தியில் சண்டைகள் நடந்து, காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவாகும் வேதனையளிக்கும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இஸ்லாத்தின் உண்மை நிலையை குர்ஆன் மற்றும் நபிவழியில் தக்க ஆதாரங்களுடன் அறிந்து கொண்டால் இந்த வேண்டாத நிகழ்வுகளைத் தவிர்க்க இயலும். தராவீஹ் என்ற […]

1) முன்னுரை

பீ.ஜைனுல் ஆபிதீன் தராவீஹ் தொழுகை என்று ஓர் தொழுகை இல்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானில் இருபது ரக் அத் தொழுததில்லை என்பதை தெளிவான சான்றுகளுடனும், இருபது ரக்அத்தை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விரிவான மறுப்புடனும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் தலைப்புகளில் தராவீஹ் பற்றி முழுமையாக அலசும் நூல். தராவீஹ் என்ற சொல்லே இல்லை தஹஜ்ஜத் வேறு, தராவீஹ் வேறு என்ற வாதம் இரவுத் தொழுகையின் நேரம் ரக்அத்களின் எண்ணிக்கை 4+5=9 ரக்அத்கள் […]

3) பிரார்த்தனை தான் வணக்கம்

பிரார்த்தனை தான் வணக்கம் இவ்வுலகில் வாழும் மனிதர்களில் எவரும் அனைத்து நலன்களையும் பெற்றவர்களாக இல்லை. தான் விரும்பிய, ஆசைப்பட்ட அனைத்தையும் பெற்ற ஒரே ஒரு மனிதரைக் கூட உலகில் காண முடியாது. மிக உயர்ந்த பதவியைப் பெற்றவர் அனைத்து இன்பங்களையும் பெற்று மன நிறைவான வாழ்க்கை வாழ்கிறார் என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கையில் நுழைந்து பார்க்கும் போது அவருக்கு வாரிசு இல்லை என்ற மனக்குறையோ, அல்லது பெயரைக் கெடுப்பவனாக வாரிசு பிறந்து விட்டானே என்ற […]

2) பிரார்த்தனையின் ஒழுங்குகள்

பிரார்த்தனையின் ஒழுங்குகள் இறைவன் மிக அருகில் இருந்து, அனைவரின் கோரிக்கைகளையும் அவன் நிறைவேற்றுகிறான் என்றால் நாங்கள் கேட்கும் எத்தனையோ பிரார்த்தனைகளுக்கு எந்தப் பலனும் ஏற்படவில்லையே என்று அரை குறை நம்பிக்கையுள்ளவன் நினைக்கிறான். இதனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக் கூடியவர்களும் உள்ளனர். பிரார்த்தனை செய்வதற்குரிய ஒழுங்குகளை அவர்கள் கடைப்பிடிக்காததும்,பிரார்த்தனை ஏற்கப்படுவதற்குரிய நிபந்தனைகளை அவர்கள் பேணாததும் தான் இதற்குக் காரணம். ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும் وَحَدَّثَنِى أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ […]

1) முன்னுரை

பி.ஜைனுல்ஆபிதீன் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம்மைப் படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது,அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். ஏனெனில், பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே பிரார்த்தனை என்ற இந்த வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்து விடக் கூடாது. இயல்பாகவே மனிதன் தேவையுள்ளவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். எந்தத் தேவையுமற்ற இறைவனிடம் நமது […]

17. எல்லா நேரமும் இரட்சகர்!

16. எல்லா நேரமும் இரட்சகர்! انت حقا محيى الدين *انت قطب باليقين كنت غوثا كل حين *فادفعن عنا حينا நிச்சயமாக நீங்கள் இம்மார்க்கத்தை உயிர்ப்பித்தவராவீர். உறுதியாக நீங்கள் அச்சாணியாகத் திகழ்கிறீர்கள். எல்லா நேரமும் நீங்கள் இரட்சகராக இருக்கிறீர்கள். எனவே நாங்கள் அழிவதை விட்டும் எங்களைக் காப்பாற்றுங்கள். ஏறத்தாழ தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட அப்துல் காதிர் ஜீலானியிடம் பிரார்த்தனை செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா? எல்லா நேரத்திலும் இரட்சிக்கக் கூடியவர் […]

கஸ்ர் எத்தனை நாளைக்கு?

கஸ்ர் எத்தனை நாளைக்கு? வரையறை இல்லை. எனினும்….. ஒருவர் எத்தனை நாட்கள் பயணத்தில் இருந்தால் ஜம்வு, கஸ்ர் செய்யலாம் என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரையறை எதுவும் கூறவில்லை. எனவே இத்தனை நாள் தங்கினால் மட்டுமே கஸ்ர் செய்ய வேண்டும்; அதற்கு மேல் தங்கினால் கஸ்ர் செய்யக் கூடாது என்று கூறுவதற்கு மார்க்கத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அந்நாட்களில் கஸ்ர் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது […]

01) காலுறை மஸஹ் சட்ட சுருக்கம்

ஆண்களும், பெண்களும் காலுறை அணிந்தால் மஸஹ் செய்யலாம் மேற்பகுதியில் ஈரக் கையால் தடவிக் கொள்வது மஸஹ் ஆகும் நிபந்தனை – உளுவுடன், கால் தூய்மையாக உள்ள நிலையில், காலுறை அணிந்திருக்க வேண்டும். பிறகு உளு முறிந்து உளு செய்யும் போது, கால்களை கழுவாமல் மஸஹ் செய்யலாம் மலஜலம் கழித்த பிறகு உளு செய்யும் போதும், கால்களை கழுவாமல் மஸஹ் செய்யலாம் அதிகபட்சம் ஒரு நாள் (24 மணி நேரம்) வரை மஸஹ் செய்யலாம். பிரயாணியாக இருந்தால் 3 […]

ஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்?

ஜம்வு கஸர் எங்கே எப்போது செய்யலாம்? 25கிமீ சென்றால் கஸ்ர். ஒருவர் சுமார் 25 கி.மீ. தொலைவுக்குப் பயணம் செய்தால் அவர் ஜம்வு, கஸ்ர் செய்யலாம். கஸ்ர் தொழுகையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ”நபி (ஸல்) அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் (நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாக (சுருக்கித்) தொழுவார்கள்” என்று பதிலளித்தனர்.(முஸ்லிம்: 1230) ➚ சுமார் 25 கிலோ மீட்டர் அளவிற்கு ஒருவர் […]

லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா?

லுஹர் முன் சுன்னத் நான்கையும் ஒரு ஸலாமில் தொழுவதா? நான்கையும் ஒரு ஸலாமில். லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒரே சலாமில் தொழ ஹதீஸ் உள்ளதா? கடமை அல்லாத எல்லா தொழுகைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டாகத் தொழுதார்கள் என்று வந்துள்ளதே? அது இரவுத் தொழுகையைத் தான் குறிக்குமா? ஜூம்ஆவின் முன் சுன்னத் நான்கு ரக்அத்துகளை எப்படித் தொழ வேண்டும்? லுஹருக்கு முன் உள்ள சுன்னத் தொழுகை இரண்டு ரக்அத்கள் எனவும், நான்கு ரக்அத்கள் […]

ஹாஜத் நஃபில் தொழுகை உண்டா?

ஹாஜத் நஃபில் தொழுகை உண்டா? இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஹாஜத்’ தொழுகை என்ற பெயரில் தொழுததாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. ஹாஜத் தொழுகை குறித்து திர்மிதியில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும். “யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் […]

விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளை பின்னர் தொழலாமா?

ஹாஜத் நஃபில் தொழுகை உண்டா? இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஹாஜத்’ தொழுகை என்ற பெயரில் தொழுததாக ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸையும் காண முடியவில்லை. ஹாஜத் தொழுகை குறித்து திர்மிதியில் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமான ஹதீஸாகும். “யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும். அதை அழகிய முறையில் செய்யட்டும். பின்பு இரண்டு ரக்அத்துகள் தொழட்டும். பின்பு அல்லாஹ்வைப் புகழ்ந்து நபிகள் நாயகம் […]

வித்ருக்குப் பின் தொழலாமா?

வித்ருக்குப் பின் தொழலாமா? சிறந்தது அல்ல. விதிவிலக்காக தொழலாம். ‘இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி: 998, 472) ➚ எனவே வித்ரை கடைசி தொழுகையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். எனினும், வித்ரு தொழுகைக்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகை பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் […]

வித்ர் மூன்றாம் ரக்அத்திற்கு கைகளை உயர்த்த வேண்டுமா?

வித்ர் மூன்றாம் ரக்அத்திற்கு கைகளை உயர்த்த வேண்டுமா? ஆம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது தம் இரு கைகளையும் உயர்த்தியுள்ளதால் வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத் முடித்து, மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போதும் இரு கைகளையும் உயர்த்த வேண்டும். இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள். ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறும் […]

வித்ர் குனூத்தில் கைகளை உயர்த்த வேண்டுமா?

வித்ர் குனூத்தில் கைகளை உயர்த்த வேண்டுமா? இல்லை. குனூத் ஓதும் போது தக்பீர் கூறி கைகளை உயர்த்திக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இரவின் இறுதியில் தொழுவது சிறந்ததா?

இரவின் இறுதியில் தொழுவது சிறந்ததா? ஆம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சுபிட்சமும் உயர்வும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவும் பூமியின் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றிலொரு பகுதி நீடிக்கும் போது, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் அங்கீகரிக்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுகிறான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)(புகாரி: 1145) ➚ எனவே, இரவுத்தொழுகையை […]

மக்காவில் 20 ரக்அத்கள் ஏன்?

மக்காவில் 20 ரக்அத்கள் ஏன்? மக்கா நமது வழிகாட்டி இல்லை. சவூதி அரேபியாவில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும் எட்டு அல்லது பத்து ரக்அத்கள் தான் தொழுவிக்கப்படுகின்றன. ஆயினும் மக்காவின் மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவின் மஸ்ஜிதுன் நபவியிலும் மட்டும் இருபது ரக்அத்கள் தொழுவிக்கப்படுகின்றது. அதை நாம் ஏன் முன்னுதாரணமாக ஆக்கக் கூடாது என்ற கேள்வி தவறாகும். மக்காவையும், மதீனாவையும் வணக்க வழிபாடுகளுக்கு முன்னுதாரணமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளை பிறப்பிக்கவில்லை. மாறாக, […]

தஹஜ்ஜத் தொழுகையின் நேரம் எது?

தஹஜ்ஜத் தொழுகையின் நேரம் எது? இஷாக்கு பிறகு பஜர் முன்னர் வரை. வித்ர் பஜ்ருக்கு பிறகும். ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறி விடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) (நஸாயீ: 1588) […]

தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா?

தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? தொழலாம். மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள். 1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை. 2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை. 3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை. அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி) (முஸ்லிம்: 1373) ➚ மேற்கண்ட மூன்று […]

குளிப்பு கடமையானவர் ஜனாசாவைக் குளிப்பாட்டலாமா?

குளிப்பு கடமையானவர் ஜனாசாவைக் குளிப்பாட்டலாமா? குளிப்பாட்டலாம். குளிப்பு கடமையானவர் என்ன செய்யக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கியுள்ளனர். அவர்கள் ழக்கூடாது; பள்ளிவாசலில் நுழையக்கூடாது; தவாப் செய்யக் கூடாது என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர ஜனாஸாவைக் குளிப்பாட்டக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லவில்லை. குளிப்பு கடமையானவர்களும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், உளூ இல்லாதவர்களும் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் ஜனாஸாவைக் குளிப்பாட்டலாம். தொடலாம். எனினும், அடக்கம் செய்பவர் நேற்றிறவு இல்லறத்தில் ஈடுபடாதவர் இருந்தால், முக்கியத்துவம் […]

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? கூடாது. மூன்று காரியங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். ஆனால் மக்கள் அவற்றை விட்டுவிட்டனர். (கடமையான) தொழுகையில் ஸலாம் கூறுவது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கூறுவது அவற்றில் ஒன்றாகும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : குப்ரா பைஹகீ-6989, 6586 கடமையான தொழுகையில் இரண்டு ஸலாம் சொல்லப்படுவது போல் ஜனாஸாத் தொழுகையிலும் இரண்டு ஸலாம் கொடுக்கலாம் என்று மேற்கண்ட செய்தி கூறுகின்றது. நபிகள் […]

பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா? தொழலாம். அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை. அறிவிப்பவர்: அபூ […]

மீண்டும் அடக்கம் செய்தால் ஜனாஸா தொழுகை உண்டா?

மீண்டும் அடக்கம் செய்தால் ஜனாஸா தொழுகை உண்டா? இல்லை. ஒரு முஸ்லிம் இறந்த பிறகு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அடக்கம் செய்து விட்டனர். பின்னர் இறந்தவர் இயற்கையாக மரணிக்கவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறி மறுபடியும் தோண்டி மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்கு மறுபடியும் ஜனாஸா தொழுகை நடத்தப்பட வேண்டுமா? பதில்: ஜனாஸா தொழுகை என்பது இறந்து விட்ட ஒரு முஸ்லிமுக்காக மற்ற முஸ்லிம்கள் செய்ய வேண்டிய ஒரு பிரார்த்தனையாகும். […]

தொழுகையில் அரயில் தான் துஆ கேட்கனுமா?

தொழுகையில் அரயில் தான் துஆ கேட்கனுமா? இல்லை. நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் தொழுகையில் அனைத்தையும் அரபியில் தான் ஓதியுள்ளனர். இது தான் அவர்களின் ஆதாரம். இந்த ஆதாரத்தினடிப்படையில் தொழுகையில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். அவர்களிடம் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டால் பதில் இல்லை. நபியவர்கள் தொழுகையில் மட்டுமின்றி தொழுகை அல்லாத நேரங்களில் செய்த பிரார்த்தனைகளையும் அரபியில் தான் செய்துள்ளனர். அப்படியானால் தொழுகைக்கு வெளியில் கேட்கும் துஆக்களையும் அரபியில் தான் கேட்க […]

சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா?

சூரியன் மறையும் போது தொழுது துஆ செய்யலாமா? துஆ கேட்கலாம். நஃபில் தொழுகை கூடாது. மூன்று நேரங்களில் தொழக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து உள்ளார்கள். மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள். 1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை, 2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும் வரை. 3. சூரியன் […]

தொழுகைக்கு வெளியே சஜ்தா செய்து துஆ செய்யலாமா?

தொழுகைக்கு வெளியே சஜ்தா செய்து துஆ செய்யலாமா? கூடாது. சஜ்தாவில் அதிகமாகப் பிரார்த்தனை செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்களை நன்கு கவனித்தால் தொழுகைக்கு உள்ளே உள்ள சஜ்தாவில் பிரார்த்தனை செய்வதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைத் தெளிவாக அறியலாம். ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் […]

என்னுரை

அன்பிற்குரிய கொள்கை சகோதரர்களே! இஸ்லாமிய அழைப்பாளர்களின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு இந்த செயலி வெளியிடப்பட்டுள்ளது. பேச்சாளர்கள் எவ்வளவு அனுபவம் உடையவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் வேலைப் பளுவின் காரணமாக குறிப்புகளை எடுக்க இயலாமல் போய் விடும். சில நேரங்களில் நேரம் ஒதுக்கி குறிப்புகள் எடுத்துச் சென்றாலும், இறுதி நேரத்தில் தலைப்புகள் மாற்றப்பட்டு விடும். இன்னும் சில வேளைகளில், திடீரென தலைப்பு தரப்படும், பேசச் சொல்வார்கள். பல்வேறு சிந்தனைகளுக்கு மத்தியில் இருக்கும் போது, எதை பேசுவது என்று […]

பிள்ளை இல்லாவிட்டால், பெற்றோரின் பங்கு

இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில், இறந்தவருக்கு மனைவி இல்லாவிட்டால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (1/3) தரப்பட வேண்டும். தாந்தைக்கு (மீதி, அதாவது) மூன்றில் இரண்டு பாகம் (2/3) தரப்பட வேண்டும். يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ‌ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ‌ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ‌ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا […]

நோன்பு பெருநாள் உரை – 1

அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! ஒருமாத காலம் நோன்பை இறைவனுடைய திருப்தியை நாடி நோற்று, அவனுடைய பரிசை எதிர்பார்த்து நாமெல்லாம் இங்கே அமர்ந்திருக்கிறோம். இந்த நேரத்தில் நாம் நினைவில் வைக்க வேண்டிய சில செய்திகளை இந்த பெருநாள் உரையிலே நாம் பார்க்க இருக்கிறோம். ஏனென்றால் பண்டிக்கை என்றாலே பலருக்கு புதிய ஆடையை அணியவேண்டும், சுவையான உணவு சாப்பிடவேண்டும், எங்கேயாவது ஊர் சுற்றவேண்டும், இன்னும் சிலர் நண்பர்களோடு சினிமா தியேட்டருக்கு போகவேண்டும், என்று இந்த பெருநாளை கழிப்பதை பார்க்கிறொம். இறையச்சத்தை […]

பிள்ளை இருந்தால், பெற்றோரின் பங்கு

இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் இறந்தவருக்கு மனைவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தாய் ஆறில் ஒரு பாகம் (1/6) தரப்பட வேண்டும். தந்தைக்கு ஆறில் ஒரு பாகம் (1/6) தரப்பட வேண்டும். يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ‌ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ‌ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ‌ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ […]

02) ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்

1) ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும் நோய்நொடிகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட துஆக்கள் மற்றும் குர்ஆன் வசனங்களை ஓதி மந்திரிக்கும் முறையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை நாம் தெரிந்து பின்பற்றுவதன் மூலம் குறிப்பிட்ட ஒரு ஹஜ்ரத்தோ அல்லது மோதினாரோ ஓதிப் பார்த்தால் தான் குணமாகும் என்ற மூடநம்பிக்கையிலிருந்து விடுபட முடியும். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபியவர்கள் ஓதிப் பார்த்த முறைகளைக் காண்போம். வலிக்கு ஓதிப் பார்த்தல் நபியவர்கள் வலியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தம்முடைய ஆட்காட்டி விரலில் […]

திருணம நாள் கொண்டாடலாமா?

திருணம நாள் கொண்டாடலாமா? கூடாது. பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள் என்று பல்வேறு நினைவு நாட்களைக் கொண்டாடுவது இஸ்லாத்தில் இல்லை. இவை அனைத்துமே பிற மதக் கலாச்சாரமாகும். இதுபோன்று நினைவு நாள் கொண்டாடுவதை மதச் சடங்காகக் கருதி மாற்று மதத்தவர்கள் செய்து வருவதால் அதை முஸ்லிம்கள் செய்யக் கூடாது. யார் இன்னொரு சமுதாயத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சார்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் – இப்னு உமர் (ரலி), […]

Next Page » « Previous Page