
அதிகரிக்கும் குற்றங்கள் ! தடுக்கும் வழியென்ன ? தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் வன்முறை, திருட்டு, கொலை, விபச்சாரம், கடத்தல் எனப் பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றைத் தடுக்க இயலாமல் காவல் துறையும், அரசாங்கமும் தடுமாறி வருகின்றன. குற்றங்கள் அதிகரிக்கும் போக்கைச் சென்றவாரம் நடைபெற்ற சில குற்றச் செயல்களைப் பட்டியலிடுவதின் மூலம் அறியலாம். செல்போனால் நடந்த கொலை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே வேப்பங்கல் […]