முன்னுரை நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தது முதல் அங்கு நடந்த பல்வேறு நிகழ்வுகளையும், வரலாற்று குறிப்பிடுகளையும் காண்போம். உறவினர்களுக்கு தகவல் கொடுத்தல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குபாவில் பதினான்கு நாட்கள் தங்கிய பிறகு மதீனாவிலிருந்த தனது உறவினர்களான பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வாட்களை தொங்கவிட்டபடி வந்து நபி (ஸல்) அவர்களிடமும், அபூபக்கர் (ரலி) அவர்களிடமும் ஸலாம் கூறினார்கள். பிறகு நீங்கள் இருவரும் அச்சம் தீர்ந்தவர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் பயணம் […]