Tamil Bayan Points

பாலியல் விவகாரங்களில் சட்டம் கடுமையாக வேண்டும்

பயான் குறிப்புகள்: வரலாற்று ஆவணங்கள்

Last Updated on April 2, 2019 by

பாலியல் விவகாரங்களில் சட்டம் கடுமையாக வேண்டும்

தற்போது உலகம் சந்தித்துவரக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை,எய்ட்ஸ் என்னும் பாலியல் நோய்ப் பரவல் ஆகும். எய்ட்ஸ் நோயாளிகள்அதிகம் வாழும் நாடுகளில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. அதற்கு அடுத்தஇடத்தை நைஜீரியா பிடித்துள்ளது.உலக அளவில் எய்ட்ஸ்நோயாளிகள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. எய்ட்ஸ் நோயாளிகள் வாழும் நூறு நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைப்பார்த்த ஆய்வாளர்களுக்கு ஒருஆச்சரியம் காத்திருந்தது.எய்ட்ஸ் நோய் பாதித்த மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் இஸ்லாமிய சட்டத்தை சரியாக கடைபிடிக்க்கும் நாடுகள் முதல் நூறு இடங்களில் இல்லை. இஸ்லாமிய சட்டத்தைமுறையாக கடைபிடிக்கும் நாடுகளில் விபச்சாரத்தின் விகிதம் குறைந்து போய் விடுகின்றது. விபச்சாரத்தினை கட்டுக்குள் கொண்டு வர இந்தஇஸ்லாமிய நாடுகள் எடுத்த நடவடிக்கைகள் மூலமே எய்ட்ஸ் பரவல் இஸ்லாமிய நாடுகளில் அதிகம் இல்லை என தெரிய வந்தது.பாலியல் நோய்களுக்கு விபச்சாரமும் தவறான பாலியல்தொடர்புகளுமே முக்கியகாரணங்களாக கருதப்படுகின்றது.

விபச்சாரத்தையும் முறையற்ற பாலியல் தொடர்புகளையும் இஸ்லாம் அடியோடு ஒழிக்கின்றது.விபச்சாரம் செய்யாதீர்கள் என்றுஇஸ்லாம் சொல்லவில்லை, மாறாகவிபச்சாரத்தின் அருகில் கூட நெருங்கிவிடாதீர்கள் என்று தெளிவுபடத் தெரிவிக்கின்றது.விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் எந்த காரியத்தின் அருகிலும் நெருங்கி விடாதீர்கள் என்று மனித சமுதாயத்திற்கு இறைவன் கட்டளையிடுகின்றான். விபச்சாரம் குறித்தான காரியத்தை விட்டும் விலகிக் கொள்ளுமாறும் இறைவன் எச்சரிக்கை விடுக்கின்றான்.பாலியல் நோய்களுக்கு விருத்தசேதனம் ஒரு வகையில் தீர்வாக இருந்தாலும் கூட இஸ்லாம்கூறும் ஒழுக்க மான்புகளை பின்பற்றுவதுதான் பாலியல் நோயைவிட்டு முற்றிலும் நீங்குவதற்கு உண்டான செயல்பாடாக இருக்கும்.இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு எதையெல்லாம் தீங்கு என்று கடிவாளம் போட்டிருக்கின்றதோ அது தொடர்பானவிடயங்களை கடைபிடிக்காதவர்கள் அழிவின் பாதையில் செல்வதை காண முடிகின்றது.

விபச்சாரத்தை அங்கீகாரமாக்கிய தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது. அதுபோலஇந்தியாவும் சில மாநிலங்களுக்கு விபச்சாரம் செய்து கொள்ளும் உரிமையை அளித்துள்ளது.கள்ளத்தொடர்பு குற்றமில்லை என சமீபத்தில் உச்ச நீதிமன்றமே தீர்ப்பு கூறியுள்ளது. இது தொடர்ந்தால் மிக விரைவில் எய்ட்ஸ் நோயாளிகள்அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில்இந்தியா முதல் இடத்தினை அடைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.தற்போது எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியாமூன்றாவது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரத் தகவல் கிடைக்கின்றது.இனியும் பாலியல் தொடர்பான சட்டத்தை கடுமையாக்காவிட்டால் இந்தியா மிக விரைவில் முதல் இடைத்தை பிடித்து விடும் அபாயம் இருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது.எனவே பாலியல் தொடர்பான நோய்களை விட்டு மக்களைக் காக்க வேண்டுமானால் இஸ்லாம் கூறும் சட்டத்தினை அமுல்படுத்தினால் மட்டும்தான் பாலியல் நோய்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். அதுபோல விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்ற சட்டம் நிறைவேற்றப்படும் போதுநாட்டில் குற்றச்செயல்களும் தானாகவே குறைந்து விடும் என்பதிலும் ஐயமில்லை.