
கேள்வி : வருடத்திற்கு எத்தனை மாதங்கள்? அவற்றில் புனித மாதங்கள் எத்தனை? அது எந்தெந்த மாதம்? புனிதம் என்றால் என்ன? பதில் : வருடத்திற்கு பன்னிரண்டு மாதங்கள் . அவற்றில் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப், ஆகிய நன்கு மாதங்கள் புனிதமானவையாகும். அம்மாதத்தில் போரிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆதாரம் : வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. […]