ஷியாக்கள் ஓர் ஆய்வு-1
“ஈரானில் இமாம் குமைனியின் இஸ்லாமியப் புரட்சி’, “ஈரான் இஸ்லாமிய வீராங்கனைகளின் ஆயுதப் பயிற்சி’ என்ற புகழார வசனங்கள் தமிழக இஸ்லாமிய ஏடுகளில் மாறி மாறி எழுதப்பட்டன. தற்போது அவை நூல் வடிவில் மாறி உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வெளியிடும் இயக்கங்கள் ஈரானை இமயத்தில் கொண்டு போய் நிறுத்தின.
அப்போதே அந்த இயக்கங்களின் ஆபத்துக்களை உணர்ந்து ஈரானை ஆளும் ஷியாக் கொள்கையானது குர்ஆன், ஹதீசுக்கு எதிரான கொள்கை என புரிந்து கொள்ள முடிந்தது.
இன்றளவும் ஈரானை இஸ்லாமிய நாடு என்றும் ஷியாக்களின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்றும் பறை சாற்றுபவர்கள் தமிழகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். தவ்ஹீது கொள்கைக்கு எதிரான பரேலவிஸ ஆலிம்களுடன் இவர்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டு தங்கள் குருட்டுத் தனத்தில் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அரபகத்தில் யூதர்களுக்கும், ஷியாக்களுக்கும் எதிராகத் துணிச்சலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டவரும், இஸ்லாத்தின் இந்த இரண்டு எதிரிகளுக்கு எதிராக அரபகத்தை ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டவருமான இராக் அதிபர் சதாம் ஹுசைனை படுகொலை செய்ய ஏகாதிபத்திய அமெரிக்கா எண்ணிய போது அந்தக் காரியத்தை ஷியாக்கள் ஏற்று கச்சிதமாகச் செய்து முடித்தனர்.
இந்தக் கோழைத்தனமான கொடுஞ்செயலை உலகம் முழுவதும் ஒன்று திரண்டு எதிர்த்த போது இராக்கில் உள்ள ஷியாக்கள் மட்டுமல்ல! உலகெங்கிலும் உள்ள ஷியாக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
இந்தியாவிலும் “சதாம் ஹுசைன் தூக்குத் தண்டனைக்குத் தகுதியானவர் தான்” என்று அனைத்திந்திய ஷியா சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் கல்பி சித்தீக் என்பவர் தெரிவித்தார்.
இதன் மூலம் சுன்னத் வல் ஜமாஅத் (தமிழகத்தில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் அல்ல) முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் உள்ள பகையை ஷியாக்கள் முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டனர்.
இங்கு ஷியாக்கள் தங்களை யார் என்று அப்பட்டமாக அடையாளப் படுத்திக் கொண்டனர். தங்கள் குரோதத்தையும், கோர முகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டனர். குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவோர் மீது இந்த ஷியாக்கள் கொண்டிருக்கும் பகைமையை, அதன் ஆழத்தை இன்னும் தெளிவாக வரலாற்று ரீதியாக இந்தச் சந்தர்ப்பத்தில் விளக்கி, ஈரானிய மற்றும் ஏனைய ஷியாக்கள் இஸ்லாமியர்களா? அல்லது யூதர்களா? என்பதைப் படம் பிடித்துக் காட்டுவது நமது கடமையாகும்.
இதன் மூலம் ஈரான் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்று வர்ணித்து மக்களை நரகப் பாதைக்கு வளைத்துப் போடும் அநியாயத்திலிருந்து காக்க முடியும். அத்துடன் இங்குள்ள சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் எப்படி ஷியாக்களின் மறு பதிப்பாக உள்ளனர் என்பதையும் அடையாளம் காட்ட வேண்டியது அவசியமாகின்றது. அதற்காகவே இந்தக் கட்டுரை!
ஏகத்துவத்தின் இந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள இந்த ஆய்வாக்கங்கள், ஆதார வளங்கள் அனைத்தும் ஷியாக்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அறிஞர் இஹ்ஸான் இலாஹி லஹீரியின் “ஷியாவும் சுன்னத்தும்” என்ற நூலிலிருந்து பெறப்பட்டவையாகும்.
ஈரானில் ஏனிந்த வேர் பிடிப்பு ஷியாயிஸத்தின் பிறப்பிடமாக மட்டுமில்லாமல் வளர்ப்பிடமாகவும் ஈரான் இருப்பதற்குக் காரணம் என்ன? ஈரான் என்ற பாரசீகப் பேரரசின் சாம்ராஜ்யம் தாக்கப்பட்டதும், தகர்க்கப்பட்டதும் அன்றைய இஸ்லாமியப் பேரரசின் இரண்டாவது ஆட்சித் தலைவராக இருந்த உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வீரமிக்க கைகளால் தான்.
இதனால் பாரசீக சக்திகள், பாசி படிந்த உயர் சாதியினர் உமர் (ரலி) அவர்களைப் பழி வாங்கத் துடித்தனர். பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்து வந்த பாரசீகர்கள் பதவிப் பித்தை விட்டு வெளியேறுவது சாதாரண விஷயமல்ல! அதனால் அவர்கள் பழி வாங்கத் துடிப்பது இயல்பு தான்.
எனவே இவர்களுக்கு சிந்தனையிலும் செயல்பாட்டிலும் ஒத்த சித்தாந்தத்தைக் கொண்டிருந்த யூதர்கள் இவர்களை அடையாளம் கண்டு இவர்களுடன் கை கோர்த்தனர். அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களுக்கு எதிராக இவ்விரு தீய சக்திகளும் ஒன்று சேர்ந்து களம் அமைத்தனர்.
கைதியான அரசிக்குக் கணவரான ஹுசைன் (ரலி) இப்படி இவர்கள் சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த வேளையில் பாரசீகத்திலிருந்து கைதியாக வந்த ஷஹ்ர் பானு என்ற பெண்ணை ஹுசைன் (ரலி) அவர்கள் மணமுடிக்கின்றார்கள். இந்தப் பெண் பாரசீக மன்னர் யஸ்தஜ்ரித் என்பவரின் மகளாவார். இந்நிகழ்வு யதார்த்தமாக நடந்த நிகழ்வாகும்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு, யூதர்களின் முழு ஒத்துழைப்புடன் பாரசீகர்கள் இஸ்லாமிய அரசுக்குள் குழப்பம் விளைவிப்பதற்கு விரிவான முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.
உமர் (ரலி) அவர்கள் மரணித்த பின் இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் அலீ (ரலி) அவர்களுக்குப் புனிதமேற்றும் பூர்வாங்கப் பணியில் இறங்கினர். அலீ (ரலி) அவர்களுக்கு விலாயத் இருப்பதாக வாதிட்டனர். அலீ (ரலி) அவர்களின் கவனத்திற்கு வராமலேயே இந்தச் சதி வலையைப் பின்னினர்.
பாரசீகர்கள் ஏற்கனவே தங்களை தெய்வீக வழித் தோன்றல்கள் என்றும் தங்களின் நரம்பு நாளங்களில் தெய்வீக ரத்தம் ஓடுவதாகவும் நம்பியவர்கள்.
சாசானியர்களான அவர்களிலிருந்து ஷஹ்ர் பானு என்ற பெண் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு சம்சாரமாகி விட்ட பின்னர், அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்குத் தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதற்குரிய வழி மிகவும் எளிதானது; இலகுவானது.
பாரசீகர்களைச் சேர்ந்த இந்த மனைவியின் மூலமாக ஹுசைன் (ரலி) அவர்களுக்குப் பிறந்தவர் தான் ஜைனுல் ஆபிதீன் என்ற சின்ன அலீ ஆவார். இவருடைய பூத உடலில் ஓடுவது சாதாரண மனித இரத்தமல்ல! புனித இரத்தம் என்று ஒரு புனித வரலாற்றை உருவாக்கினர்.
இதனால் தான் ஈரானில் பெரும்பான்மையானவர்கள் ஷியாயிஸத்தில் நுழைந்தனர். இது தான் ஈரான் ஷியாக்களின் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும் இருப்பதற்குக் காரணமாகும்.
இப்போது ஷியாயிஸம் உருவான வரலாற்றைப் பார்ப்போம்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தி என்ற துல்லியமான வெளிச்சம் பூமியெங்கும் பரவத் தொடங்கியதும் புதிய வரலாற்றுப் பக்கங்களை எழுதத் தொடங்கியதும் இறை மறுப்பாளர்கள், இணை வைப்பாளர்கள், குறிப்பாக அரபிய தீபகற்பத்தில் இருந்த யூதர்கள், ஈரானில் உள்ள நெருப்பு வணங்கிகள் ஆகியோரின் உள்ளங்கள் கரியத் தொடங்கின.
இதனால் இஸ்லாத்திற்கு எதிரான சதிகளில் அவர்கள் இறங்கினர்; சூழ்ச்சிகளைச் சுற்றிலும் பின்னினர். ஆனால் அல்லாஹ்வின் ஒளி இத்தனையையும் தாண்டி, சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இதையே அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான்.
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.
அப்துல்லாஹ் பின் ஸபா இஸ்லாம் உதயமானதும் முதன் முதலில் இஸ்லாமிய மார்க்கத்தில் இஸ்லாத்தின் பெயராலேயே யூதக் கருத்தைப் புகுத்தியவன் அப்துல்லாஹ் பின் ஸபா என்பவன் தான்.
இவன் ஒரு யூதன்! இவனுடைய மூதாதையர்களான பனூ குரைளா, பனூ நுளைர், பனூ கயன்காஃ ஆகிய கோத்திரத்தார் இஸ்லாத்தை, அதன் இறைத் தூதரை எதிர்த்துப் படை நடத்தினர்.
இவர்கள் நடத்திய போர்கள் அனைத்திலும் அடுக்கடுக்காகத் தோல்வியைத் தான் சந்தித்தனர். இதனால் முஸ்லிம்களை அவர்கள் நேருக்கு நேர் களத்தில் சந்திக்கும் காரியத்தைக் கைவிட்டனர்.
ஆனால் திரை மறைவில், முதுகுக்குப் பின்னால் நின்று குரல் வளையை அறுக்கும் கலையைக் கையில் எடுத்தனர்.
இதன்படி யமன் நாட்டைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் ஸபாவும் அவனது சதிகார சகாக்களும் ஒரு திட்டம் தீட்டினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு மகள்களை மணமுடித்தவரும் இஸ்லாமிய ஆட்சித் தலைவர்களில் மூன்றாவது கலீபாவுமான உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் தலைநகர் மதீனாவிற்குள் அந்தத் திட்டத்தை அரங்கேற்றினர்.
தங்கள் காரியத்தை அரங்கேற்றுவதற்கு அலீ (ரலி) அவர்களைக் கவசமாக்கிக் கொண்டு மதீனாவில் குளறுபடிகளையும், குழப்பத்தையும் தோற்றுவித்தனர். மக்களின் மனங்களில் விஷக் கருத்துக்களைத் தூவினார்கள்.
தபூக் போர் நடந்த காலம் மிகவும் கஷ்டமான காலமாகும். “இந்த இக்கட்டான காலத்தில் உதவுபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது உஸ்மான் (ரலி) அவர்கள் ஆயிரம் தீனார்களைக் கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களிடம் அர்ப்பணித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நாளுக்குப் பின்னர் (உஸ்மான்) இப்னு அஃப்பான் செய்யும் (பாவமான) காரியம் அவரைப் பாதிக்கச் செய்யாது” என்று பல தடவை கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸமுரா(ரலி)
(அஹ்மத்: 19713) ➚,(திர்மிதீ: 3632) ➚
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களைப் பாராட்டியது மட்டுமில்லாமல் அவர்களுக்குச் சுவனத்தையும், வீர மரணத்தையும் கொண்டு சுபச் செய்தி கூறினார்கள்.
இப்படிப்பட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் மீது முஸ்லிம்களைத் தூண்டி விட்டவர்கள் அப்துல்லாஹ் பின் ஸபாவும், அவனது யூத சகாக்களும் தான்.
இவர்கள் தான் இஸ்லாத்தின் அடிப்படை ஏகத்துவக் கொள்கைக்கு எதிரான, இஸ்லாத்திற்குக் கடுகளவும் சம்பந்தமில்லாத கொள்கைகளை முஸ்லிம்களிடம் பரப்பினர். தூய இஸ்லாத்திற்குத் துரோகம் இழைத்த இந்தக் கூட்டம் தங்களுக்குச் சூட்டிக் கொண்ட பெயர் தான் ஷியா ஆகும். அலீ (ரலி) அவர்களுக்கு ஆதரவானவர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டனர்.
(ஆனால் அலீ (ரலி) அவர்கள் இதில் சம்பந்தப்படவில்லை) ஷியா என்றால் சமுதாயத்தினர், சாரார் என்று பொருள். இவர்கள் தான் முஸ்லிம்களை ஒருவரை மற்றொருவருக்கு எதிராக மூட்டி விட்டனர்; ஒருவரை மற்றவருடன் மோத விட்டனர். இந்த வகையில் யூதம் வெற்றி கண்டு விட்டது. பாரசீகம் முஸ்லிம்களைத் தோற்கடித்து விட்டது. யூதர்கள் தயாரித்து அனுப்பிய அப்துல்லாஹ் பின் ஸபா அரிய பலனைக் கொடுத்தான்.
யூதர்களிடத்தில் உயர் மரியாதையையும் உரிய இடத்தையும் பெற்றிருந்த அவன், ஷியாக்களிடமும் உயர் மரியாதையையும் உரிய இடத்தையும் பெற்று விடுகின்றான். இந்த அடிப்படையில் தான் ஷியாவின் வேர்கள் யூத மதத்தில் ஆழப் பதிந்தவை என்று கூறுகின்றோம்.
“குர்ஆன் ஒன்பது பாகங்களில் ஒரு பாகமாகும். அதன் ஞானம் அலீயிடம் உள்ளது என்று இவன் நம்பிக்கை கொண்டிருந்தான். இதை அலீ (ரலி) உறுதியாக மறுத்து விட்டார்கள்” என்று இமாம் ஜவ்ஸஜானி கூறுகின்றார்.
“இவனது ஊர் யமன் ஆகும். இவன் யூதனாக இருந்து பின்னர் தன்னை முஸ்லிம் என்று பிரகடனம் செய்து கொண்டான். தலைவர்களுக்கு முஸ்லிம்கள் கட்டுப்படாமல் தடுப்பதற்காக அவர்கள் வாழும் ஊர்களைச் சுற்றி வந்து அவர்களிடம் இந்தத் தீமைகளைப் புகுத்தினான். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தத் தீய நோக்கத்தில் திமிஷ்க் என்ற ஊருக்குள் நுழைந்தான்” என்று இப்னு அஸாகிர் தமது தாரீக் எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்.
“அப்துல்லாஹ் பின் ஸபாவின் விவகாரங்கள் வரலாற்று நூல்களில் பிரபலமானவையே! அவன் எந்த ஹதீஸையும் இதுவரை அறிவிக்கவில்லை. இதற்குரிய புகழ் அல்லாஹ்வுக்கே! ஸபாயிய்யா என்று அழைக்கப்படும் இவனது ஆதரவாளர்கள் அலீ (ரலி) அவர்களைக் கடவுளாகக் கருதினார்கள். இவர்களை அலீ (ரலி) அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நெருப்பினால் கொளுத்தினார்கள்” இவ்வாறு ஹாபிழ் இப்னு ஹஜர் தன்னுடைய லிஸானுல் மீஸானில் தெரிவிக்கின்றார்கள்.
இந்த மேற்கோள்கள் அனைத்தும் சுன்னத் வல் ஜமாஅத்தின் இமாம்கள், ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்துக்களாகும். இது லிஸானுல் மீஸான் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
“அப்துல்லாஹ் பின் ஸபா யூதத்திலும், இஸ்லாத்திலும் விலாயத் என்ற கொள்கையை கொண்டிருந்தான்; அலீயை கடவுளாகக் கொண்டிருந்தான்” என்ற கருத்தை இந்த அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.
அப்துல்லாஹ் பின் ஸபா இந்தக் கொள்கையை உடையவன் தான் என்பதை ஷியா இமாம்களும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அவனது கொள்கையைச் சரி காண்கின்றனர்.
இவனைப் பற்றி ஷியா இமாம் கஷிய்யி என்பவர் கூறுவதைப் பாருங்கள்.
“அப்துல்லாஹ் பின் ஸபா யூதனாக இருந்து இஸ்லாத்தைத் தழுவினான். அலீயை வலியாக எடுத்துக் கொண்டான். அவன் யூதத்தில் இருக்கும் போது, மூஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் தோன்றிய யூஷஃ பின் நூனுக்கு இதே விலாயத்தைக் கற்பித்தான். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு இதே விலாயத்தைக் கற்பித்தான்” என்று அறிஞர்களில் ஒருவர் கூறுகின்றார்.
இவ்வாறு ஷியா இமாம் கஷிய்யி தனது “பிரசித்தி பெற்ற வாழ்க்கைக் குறிப்புகள்” என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
ஷியா இமாம்களில் ஒருவரான நவ்பக்ஸியும் இதே கருத்தைக் குறிப்பிடுகின்றார்.
(ஷியா வசுன்னத், பக்கம்: 17)
இந்தக் கொள்கையைத் தான் ஷியாக்கள் கொண்டிருக்கின்றார்கள். இதிலிருந்து ஷியாயிஸத்தின் ஆணி வேர் யூத மதம் தான் என்பது நன்கு தெளிவாகின்றது. அந்த யூத மதம், ஏகத்துவக் கொள்கையை, அந்தக் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் நபித்தோழர்களை ஒரு போதும் சகித்துக் கொள்ளாது.
ஏகத்துவத்திற்கு எதிரான கருத்துக்களை, ஏகத்துவத்தைப் பின்பற்றிய நபித்தோழர்களுக்கு எதிரான கருத்துக்களை யூதத்தின் கள்ளப் பிள்ளையான ஷியாயிஸம் தனது தாய் மதத்திலிருந்து தன்னகத்தே வடித்து வைத்திருக்கிறது.
- ஷியாக்களின் கடவுள் கொள்கை
அப்துல்லாஹ் பின் ஸபா என்ற யூதனால் உருவாக்கப்பட்ட ஷியா மதம் பரப்பி வரும் படு பயங்கர விஷச் சிந்தனைகளில் ஒன்று, அல்லாஹ்வுக்கு பதாஃ ஏற்படும் என்ற கருத்தாகும். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் ஏற்படும் என்ற நச்சுக் கருத்தாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)
இவர்கள் இட்டுக்கட்டிக் கூறுகின்ற இந்த அபத்தமான, அபாண்டமான சிந்தனையை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன்.
கலீனீ என்பவர் ஷியாக்களின் அறிஞர்களில் ஒருவராவார். அவர் தனது அல் காஃபி என்ற நூலில் அல் பதாஃ என்று தலைப்பிட்டு தனிப் பாடமே அமைத்திருக்கிறார். இந்தப் பாடத்தில் தன்னுடைய கருத்தையும், தன்னுடைய பாதுகாக்கப் பட்ட (?) இமாம்களிடமிருந்து கிடைத்த பல தரப்பட்ட அறிவிப்புகளையும் அறிவிக்கின்றார்.
“மதுவைத் தடை செய்வதற் காகவும், அல்லாஹ்வுக்கு மறதியும் அறியாமையும் உண்டு என்று உறுதிப்படுத்துவதற்காகவுமே தவிர அல்லாஹ் எந்தவொரு நபியையும் அனுப்பவில்லை” என்று ரிளா (ஷியாக்களின் எட்டாவது இமாம்) கூற நான் செவியுற்றேன் என ரய்யான் பின் ஸலித் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு அல் காஃபி ஃபில் உசூல் என்ற நூலில் பதாஃ என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு மேற்கொண்டு ஒரு விரிவுரையும் எழுதப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம்.
அபுல் ஹஸனின் மகன் அபூ ஜஃபர் இறந்த பின்பு அவர்களிடம் இருந்து கொண்டிருந்தேன். “அபூஜஃபர், (அவரது சகோதரர்) அபூமுஹம்மது ஆகிய இருவரும் இந்நேரத்தில் அபுல் ஹஸன் மூஸாவையும், இஸ்மாயீலையும் போல் இருக்கிறார்கள். இவ்விருவரின் சம்பவம் அவ்விருவரின் சம்பவத்தைப் போன்று இருக்கிறது. (அபுல் ஹஸன் மூஸா, இஸ்மாயீல் ஆகிய இருவரில் முதலில் இஸ்மாயீல் இறந்து விடுகின்றார். மூஸா வாழ்ந்து கொண்டிருந்தார்.
அது போலவே) அபூ ஜஃபர் இறந்த பின்னர் அபூ முஹம்மது வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்று எண்ணி எனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் (என்னுடைய மனதில் உள்ளதை அறிந்து கொண்ட) அபுல் ஹஸன், “அபூ ஹாஷிமே! மூஸா எப்படிப்பட்டவர் என்ற விபரம் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது.
இஸ்மாயீல் உயிருடன் இருக்கும் போது, அதாவது அவர் இறக்கும் வரை அவரைப் பற்றிய விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இது போன்று தான் (என் மகன்) அபூ முஹம்மது எப்படிப்பட்டவர் என்ற விபரம் அபூஜஃபர் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது.
அபூஜஃபர் உயிருடன் இருக்கும் வரை, அதாவது அவர் மரணிக்கும் வரை அவர் எப்படிப்பட்டவர் என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இந்த வீணர்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் சரியே! இதைத் தான் நீங்கள் உங்கள் உள்ளத்தில் எண்ணி சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள்.
எனது மகன் அபூமுஹம்மது எனது ஸ்தானத்தை அடைகின்ற எனது வழித்தோன்றல் ஆவார். அவருக்குத் தேவையான ஞானம் அவரிடமே உள்ளது. அவரிடம் இமாமத் என்ற ஆயுதம் இருக்கின்றது” என்று அபுல் ஹஸன் கூறினார் என அபூஹாஷிம் அல்ஜஃபரி தெரிவிக்கிறார்.
இது ஷியாக்களின் “அல்ஹுஜ்ஜத்’ என்ற நூலில் பக்கம் 328ல் பதிவாகி உள்ளது.
தனது மகன் இஸ்மாயீல் என்பவர் இமாமாக ஆவார் என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் என்ற இமாம் முன்னறிவிப்புச் செய்தார். அதாவது தான் இறக்கின்ற வரை தனது மகன் உயிருடன் வாழ்ந்து இமாமாக ஆவார் என்று குறிப்பிட்டார். ஆனால் (அவரது முன்னறிவிப்புக்கு மாற்றமாக) தந்தை உயிருடன் இருக்கும் போதே மகன் இஸ்மாயீல் இறந்து விடுகிறார்.
“என் மகன் இஸ்மாயீல் விஷயத்தில் (அவன் இறந்த பின்பு) அல்லாஹ்வுக்குத் தெரிகின்ற விபரத்தைப் போன்று வேறு எதிலும் விபரம் தெரியாமல் இருந்ததில்லை” என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் கூறினார்.
(அதாவது அவரது மகன் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அவர் யார்? எப்படிப்பட்ட சிறப்புள்ளவர்? என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்ததாம். இந்தத் தீய சிந்தனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)
இவ்வாறு நவ்பக்தீ குறிப்பிடுகின்றார். இது பிரகுஷ் ஷியா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
நாம் இதுவரை கண்ட இந்த அறிவிப்புக்களிலிருந்து நமக்கு உறுதிப்படும் விஷயம் இது தான்.
“இதற்கு முன்பு அல்லாஹ்வுக்குத் தெரியாத ஒரு விபரத்தை இப்போது அவன் தெரிந்து கொள்கிறான்”
இது தான் ஷியாக்களின் கடவுள் கொள்கையாகும்.
ஆனால் அல்லாஹ் தன் ஞானத்தைப் பற்றி அறிவாற்றலைப் பற்றி தனது தூதர் மூஸா நபியின் வாயிலாக பின்வருமாறு தெரிவிக்கிறான்.
“என் இறைவன் தவறிட மாட்டான்; மறக்கவும் மாட்டான்” என்று அவர் கூறினார்.
அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்து விட்டான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.
இந்த வசனங்கள் அல்லாஹ்வின் ஞானத்தைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றான. ஆனால் ஷியாக்களோ அல்லாஹ் மறதியாளன் என்று பறை சாற்றுகின்றனர்.இதன் மூலம் ஷியாக்களின் முழுத் தோற்றத்தையும் அப்படியே நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது.
ஷியாக்களின் இமாம் ஜஃபர் பின் முஹம்மது பாகிர் தனது மகனைப் பற்றி ஒரு முன்னறிவிப்புச் செய்கிறார். இமாமாக ஆவார் என்ற அந்த முன்னறிவிப்பு நிறைவேறாமல் தன் மகனின் மரணத்தின் மூலம் தகர்ந்து நொறுங்குகின்றது.
இதனால் அல்லாஹ்வுக்குத் தன் மகனைப் பற்றி விபரம் தெரியவில்லை என்று விபரங்கெட்டு இந்த ஷியா இமாம் உளறுகிறார். அதாவது அல்லாஹ்வுக்கே அறியாமையைப் பறைசாற்றுகிறார்; மறதியைச் சமர்ப்பிக்கிறார்.
இது எவ்வளவு பெரிய இறை மறுப்பு! இப்படிப்பட்ட இந்த ஷியாக்களை எப்படி முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொள்ள முடியும்? இவர்களை ஷியா முஸ்லிம்கள் என்று அழைப்பது எந்த வகையில் நியாயமாகும்? அல்லாஹ்வுடைய பண்புகளில் விளையாடுவது யாருடைய வேலை? தெளிவாக யூதர்களின் வேலை தான்.
“அல்லாஹ் தேவையுள்ளவன்; நாங்களோ தேவையற்றோர்” என்று கூறியோரின் கூற்றை அல்லாஹ் செவியுற்று விட்டான். அவர்கள் கூறியதையும் நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவு செய்வோம். “சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! இது நீங்கள் செய்த வினை. அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்” எனவும் கூறுவோம்.
அல்லாஹ் வறுமையில் உள்ளவன் என்று திமிர்த்தனமான தீய சொற்களைக் கூறுபவர்கள் யூதர்கள் தான்.
“அல்லாஹ்வின் கை கட்டப் பட்டுள்ளது” என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.
அல்லாஹ்வின் கைகளுக்கு விலங்கு மாட்டுபவர்களும் யூத விலங்குகள் தான். இப்படிப்பட்ட திமிர்த்தனத்தை இந்த ஷியா விஷமிகளும் வாந்தி எடுக்கின்றனர். அல்லாஹ் கூறும் இந்தத் தன்மைகளை வைத்துப் பார்க்கும் போது ஷியாக்கள் யூதர்களைப் போன்றவர்கள் அல்ல! யூதர்கள் தான் என்பது தெளிவாகிறது.
அப்துல் முத்தலிபை அல்லாஹ் தனியொரு சமுதாயமாக எழுப்புவான். அப்போது அரசர்களின் மகிமையும், இறைத்தூதர்களின் அடையாளமும் அவரிடம் இருக்கும். காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவராவார்.
(நூல்: மஸ்அலத்துல் பதாஃ பக்கம் 53, 54, 55)
பாருங்கள்! அப்துல் முத்தலிப் யார்? இஸ்லாத்தின் பார்வையில் இறை நிராகரிப்பாளர்! அவரை தனியொரு சமுதாயம் என்று போற்றுகின்றார்கள் இந்த ஷியாக்கள்.
இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப் பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.
ஏகத்துவத்தின் அணையாத ஜோதியாகத் திகழ்ந்த இப்ராஹீம் நபி அவர்களுக்கு அல்லாஹ் அளித்த பட்டத்தை இந்தப் பாவிகள் அப்துல் முத்தலிபுக்குச் சூட்டி மகிழ்கிறார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் பட்டத்தை அப்துல் முத்தலிபுக்குக் கொடுத்ததோடு நிறுத்தவில்லை. இப்ராஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் அளிக்கப் போகும் மாபெரும் மரியாதையையும் இவர்கள் அப்துல்முத்தலிப்புக்கு அளிக்கிறார்கள்.
மறுமையில் அனைவரும் நிர்வாணமாக எழுப்பப்படும் போது முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தத் தகுதியை, இதை விட அதிகமான தகுதியை இருட்டில் மறைந்த அப்துல் முத்தலிபுக்குத் தாரை வார்க்கிறார்கள். இதற்குக் காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியவராம். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் உள்ளது என்று கூறியவராம். (இதை எங்கு போய் கண்டுபிடித்தார்கள் என்பது தனி விஷயம்) அதனால் தான் இந்த மரியாதை!
இப்படி அல்லாஹ்வுக்கும் ஏகத்துவத்திற்கும் எதிராகக் களமிறங்கி நிற்கும் இந்த யூத வாரிசுகளை இஸ்லாமியப் புரட்சியாளர்கள் என்று எப்படி மெச்ச முடியும்?
- மகான்களும் மறைவான ஞானமும்
அல்லாஹ்வுடைய பண்புகளில் யூதர்கள் விளையாடுகிறார்கள். அது போன்று அவர்களது வாரிசுகளான ஷியாக்களும் விளையாடுகின்றனர். இதன் விளைவாக அல்லாஹ்வுக்கு அறியாமையும் மறதியும் உள்ளதாக இவர்கள் நம்புகிறார்கள்.
இது போன்ற விளையாட்டை இன்று நம்மை உக்கிரமாக எதிர்க்கின்ற சுன்னத் வல்ஜமாஅத் எனப்படுவோரும் செய்கின்றனர். பெயர் தான் சுன்னத் வல்ஜமாஅத் என்று வைத்துள்ளனர். ஆனால் இவர்களது செயல்பாடுகள் அனைத்தும் ஷியாயிஸத்தை அடிப்படையாகக் கொண்டது தான்.
இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினரிடம், “நீங்கள் ஏன் அவ்லியாக்களிடம் கேட்கிறீர்கள்? அல்லாஹ்விடம் கேட்கக் கூடாதா?’ என்று நாம் கேட்டால் அதற்கு அவர்கள் ஓர் உதாரணத்தைக் கூறுகிறார்கள்.
அல்லாஹ் நீதிபதியைப் போன்றவன். இந்த அவ்லியாக்கள் வக்கீல்களைப் போன்றவர்கள். அதாவது நீதிபதியாகிய அல்லாஹ்விடம் வக்கீல்களாகிய அவ்லியாக்கள் நம்முடைய கோரிக்கையை எடுத்துக் கூறி அவனிடம் உத்தரவு பெற்றுத் தருவார்கள்.
இது தான் இவர்கள் கூறும் உதாரணமாகும்.
இந்த உதாரணத்தில் இவர்கள் கொண்டிருக்கும் கடவுள் கொள்கை அப்படியே பளிச்சிட்டுத் தெரிந்து பல்லிளிக்கின்றது.
நீதிபதிக்கு வழக்கில் சம்பந்தப்பட்டவரைப் பற்றிய விபரம் தெரியாது. அதனால் அவரைப் பற்றி, அவரது தரப்பை எடுத்துச் சொல்ல ஒரு வக்கீல் – வழக்கறிஞர் தேவை. ஒருவர் குற்றமே செய்திருந்தாலும் வழக்கறிஞர் தன்னுடைய வாதத் திறமையினால் நீதிபதியிடம் தனது கட்சிக்காரரை நல்லவராகச் சித்தரித்து விடுதலை வாங்கிக் கொடுத்து விடுவார். நீதிபதியும் உண்மை தெரியாததால் குற்றவாளிக்கு விடுதலை அளித்து விடுவார்.
இந்த நீதிபதியின் ஸ்தானத்தில் அல்லாஹ்வை வைத்துப் பார்க்கிறார்கள் என்றால் இதற்கு என்ன பொருள்? அல்லாஹ்வுக்கு தன்னுடைய அடியார்களைப் பற்றிய விளக்கம் தெரியாது. அவனுக்கு அறியாமை உள்ளது என்பது தானே இதன் பொருள்!
இவர்கள் இப்படி விளங்கி இருப்பதால் தான் அவ்லியாக்கள் பக்தியிலிருந்து விடுபடவில்லை; விலகவில்லை. அதில் அழுத்தமான பிடிப்புடன் இருக்கிறார்கள். இவ்வாறு அல்லாஹ்வின் பண்புகளில் – ஆற்றல்களில் விளையாடுபவர்கள் ஷியாக்கள். அந்த ஷியாக்களின் விளையாட்டைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் கையில் எடுத்திருக்கின்றனர்.
ஆனால் அல்லாஹ்வின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் அவனது பண்புகளில் கடுகளவு கூட குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வார்கள். அப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் “உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்” என்று அவர்கள் (தம்மில்) ஒருவரையொருவர் அழைக்கின்றனர்.
பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களை தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களுடைய இறைவன், “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று கேட்கின்றான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவன் ஆவான்.
“அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும். உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்” என்று வானவர்கள் கூறுகின்றனர்….. (சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இந்த ஹதீஸில் அல்லாஹ் மலக்குகளிடம் விசாரிப்பதை வைத்து அல்லாஹ்வுக்கு அறியாமை இருக்கிறது என்று யாரும் விளங்கி விடக் கூடாது என்பதற்காக, அல்லாஹ்வின் மீது “அறியாமை’ என்ற சாயல் கூட வந்து விடாமல் நபி (ஸல்) அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் தான், வஹுவ அஃலமு – அவன் அடியார்களைப் பற்றி நன்கறிந்தவன் என்ற விளக்கத்தையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.
அல்லாஹ்வின் பண்புகளில் அவனது அறிவுக்கு, ஆற்றலுக்குக் கடுகளவு கூட பாதகம் வராத அளவுக்குப் பார்க்கின்ற இந்த மார்க்கத்தில் தான் அல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பிக்கும் அபத்தமான உதாரணங்களை சுன்னத் வல்ஜமாஅத் எனப்படுவோர் சேர்த்து அழகு பார்க்கின்றனர் என்றால் இவர்கள் கடவுள் கொள்கை விஷயத்தில் ஷியா விஷத்தையே பக்காவாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது இங்கு உறுதியாகின்றது.
இதன் மூலம் இவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற போர்வையில் இருக்கும் ஷியாக்கள் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இனி ஷியாக்கள் பற்றிய ஆய்வுக்கு வருவோம்.
கடவுள் கொள்கையில் ஷியாக்கள் விளையாடும் அடுத்த விளையாட்டு மறைவானஞானம் சம்பந்தப்பட்டதாகும். மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அவனிடமே அனைத்துக் காரியமும் திருப்பப்படும். எனவே அவனையே வணங்குவீராக! அவனையே சார்ந்திருப்பீராக! நீங்கள் செய்பவற்றை உமது இறைவன் கவனிக்காதவனாக இல்லை.
வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
“அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்கள் மற்றும் பூமியில் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன். அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்” என்று கூறுவீராக!
இந்த வசனங்களிலும், இன்னும் இது போன்ற ஏராளமான வசனங்களிலும் மறைவான ஞானம் தனக்கே உரியது என்று ஏக இறைவன் உரிமை கொண்டாடுகின்றான். அதாவது இந்தத் தன்மை கடவுளாகிய தனக்கு மட்டுமே உண்டு; இந்தத் தன்மையை தன்னிடமிருந்து யாரும் தட்டிப் பறிக்க முடியாது; யாருக்கும் இந்தத் தன்மையை வழங்கி அவர்களைக் கடவுளாக ஆக்கவும் மாட்டேன் என்று ஆணித்தரமாகக் கூறுகின்றான்.
ஆனால் இந்த ஷியாக்களோ தங்களது இமாம்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறி அவர்களை மனிதர்கள், இறைத் தூதர்கள், மலக்குகளை விட உயர்த்துகின்றனர்.
“தாங்கள் அறிய வேண்டும் என்று நினைத்தால் (எல்லாவற்றையும்) இமாம்கள் அறிந்து கொள்வார்கள்’ என்றொரு தலைப்பிட்டு ஷியா இமாம் கலீனி என்பவர் தன்னுடைய நூலான அல்காஃபி என்ற நூலில் குறிப்பிடுவதாவது:
அறிய வேண்டும் என்று நினைக்கும் போது இமாம் கண்டிப்பாக அறிந்து கொள்கிறார். இமாம்கள் தாங்கள் எப்போது மரணமாகப் போகின்றோம் என்பதை அறிவார்கள்.
அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம் 258
“தங்களின் சுய விருப்பத்தின் படியே இமாம்கள் மரணிக்கிறார்கள்’ என்ற தலைப்பின் கீழ் கலீனி தெரிவிப்பதாவது:
மறைவானவற்றையும், தனக்கு இனி என்ன நேரப் போகிறது என்பதை அறியாத இமாம் அல்லாஹ்வின் படைப்பில் ஓர் ஆதாரமிக்கவர் அல்லர்.
அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம் 196, 258
ஷியாக்கள் அல்லாஹ்வுடைய பண்பை எப்படித் தங்கள் இமாம்களுக்குத் தாரை வார்க்கிறார்கள் என்று பாருங்கள். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மறைவான ஞானத்தில் அவர்கள் செய்கின்ற விளையாட்டைப் பாருங்கள். அதிலும் குறிப்பாக ஷியா இமாம், தாம் எப்போது மரணிக்கப் போகிறோம் என்பதை அறிந்து கொள்வாராம்.
அற்புத ஆட்சியாளர் சுலைமான் நபி
சுலைமான் நபியவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா அளித்த ஆட்சியைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவதைக் கொஞ்சம் கேளுங்கள்.
தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். “நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று அவ்விருவரும் கூறினர். தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். “மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட் கொடையாகும்” என்று அவர் கூறினார்.
ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர். அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது “எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது” என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார்.
“என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!” என்றார்.
பறவைகளை அவர் ஆய்வு செய்தார். “ஹுத்ஹுத்’ பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார். “அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேடும்” (என்றும் கூறினார்). (அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. “உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறியது.
பறவைகளின் பேச்சு, எறும்புகளின் பேச்சு ஆகியவற்றை அறியும் ஆற்றல், மனிதர்கள், ஜின்கள் ஆகியோர் அவர்களுக்கு வசப்பட்டிருந்தது என சுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் சொரிந்த அருள் மழைகளை, அற்புத நிலைகளை சூரத்துந் நம்ல் என்ற அத்தியாயம் அள்ளித் தெளிக்கின்றது.
உங்கள் போரின் போது உங்களைக் காக்கும் உங்களுக்குரிய கவச ஆடை செய்வதை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நீங்கள் நன்றி செலுத்துவோராக இருக்கிறீர்களா? வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.
இந்த வசனங்களில் சுலைமான் நபிக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்ததைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான். இவ்வளவு மேன்மையைப் பெற்ற சுலைமான் நபியவர்களுக்கு ஹுத்ஹுத் என்ற பறவை எங்கு சென்றது என்ற விபரம் தெரியவில்லை. அவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் அதைப் பற்றி விசாரித்திருக்க மாட்டார்கள்.
மேலும் அந்தப் பறவை திரும்பி வந்து, “உங்களுக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறுகின்றது. தனது கட்டுப்பாட்டில் உள்ள பறவைக்குத் தெரிந்த ஒரு விஷயம் சுலைமான் நபிக்குத் தெரியவில்லை. ஆனால் ஷியாக்களின் இமாம் மறைவான செய்திகள் அனைத்தையும் அறிவார்கள் என்று ஷியாக்கள் நம்புகின்றனர்.
சுலைமான் நபியவர்களின் மரணத்தைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.
ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.
அவர் விரும்பிய போர்க் கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. “தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்” என்று கூறினோம்.
அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் “நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே” என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.
பறவைகளின் பேச்சு, எறும்புகளின் பேச்சு, காற்றின் கட்டுப்பாடு, ஜின்கள் மீது ஆட்சி என்று பேராட்சி செய்த பேரரசர் சுலைமான் (அலை) அவர்கள் தாம் விரும்பியபடி மரணிக்கவில்லை. ஆனால் ஷியாக்களின் இமாம்கள் நினைப்பதை அறிவார்களாம்; விரும்பியபடி மரணிப்பார்களாம். இப்படிக் கதை அளந்துள்ளார்கள் ஷியாக்கள்.
மறைவானவற்றை அறியாத ஒருவர் இமாமே கிடையாதாம்! என்ன நெஞ்சழுத்தம்? உண்மையில் இது யூதர்களின் நெஞ்சழுத்தமாகும். அந்த நெஞ்சழுத்தத்தை இவர்கள் அனந்தரமாகப் பெற்றிருப்பதால் அவற்றை இவர்கள் அப்படியே பிரதிபலிக்கின்றனர்.
கலீனியின் கைச்சரக்கை இன்னும் பாருங்கள்:
தனக்கு ஷியாக்களின் 8வது இமாம் அலீ பின் மூஸா எழுதினார் என அப்துல்லாஹ் பின் ஜுன்துப் அறிவிப்பதாவது: நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். நம்மிடம் (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.
ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர்களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்களாவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.
அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223
இது கலீனி கக்கிய விஷக் கருத்தாகும்.
யூதர்களைப் போன்று தங்கள் ஜாதியை உயர்த்திப் பேசுகின்ற இன வாதம் இந்த வார்த்தைகளில் அப்படியே பிரதிபலிக்கின்றன என்பதை இதைப் பார்த்தவுடனேயே விளங்கிக் கொள்ளலாம்.
இன வாதம் பேசினால் பேசி விட்டுப் போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் இந்த ஷியாக்கள் இறை வாதம் பேசுகின்றார்கள்.
அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
அல்லாஹ்வின் கைவசத்தில் உள்ள இந்த ஞானத்தைத் தங்கள் இமாம்களுக்கு இருப்பதாகப் பறை சாற்றுகின்றார்கள்.
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
மனிதனுக்கு ஏற்படும் சோதனைகள் அனைத்தும் தன்னுடைய பதிவேட்டில் பதிந்து இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் ஷியாக்களோ அவற்றைத் தங்களது இமாம்கள் பார்த்து விட்டதாகக் கதையடிக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் படித்ததும் கடவுள் கொள்கையில் ஷியாக்கள் இவ்வளவு பெரிய விளையாட்டை விளையாடுகிறார்களா? என்ற அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படலாம். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற விதத்தில் சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்வோர் ஓதும் மவ்லிது கிதாபுகளில், குறிப்பாக முஹய்யித்தீன் மவ்லிது என்ற பாடலில் புதைத்து வைத்திருக்கின்றனர். அதையும் கொஞ்சம் தோண்டிப் பார்ப்போம்.