
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அவர்களுடைய தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை தனிமையிலும், மக்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் கடைபிடிக்குமாறு எனக்கும் உங்களுக்கும் முதலாவதாக அறிவுரை கூறுகின்றேன். கண்ணியத்திற்குரியவர்களே! எந்த ஒரு பேச்சு நமக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துமோ, எந்த ஒன்றை பற்றி சிந்திப்பது நமது ஈமானை அதிகப்படுத்துமோ, எந்த ஒன்றைப் பற்றி சிந்திப்பது நமது […]