Tamil Bayan Points

Category: திருக்குர்ஆன் ஒளியில் கேள்வி பதில்

u463

117) லூத் நபிக்கு வானவர்கள் செய்த உபதேசம் என்ன?

கேள்வி : லூத் நபிக்கு வானவர்கள் செய்த உபதேசம் என்ன? எதற்காக உபதேசம் செய்தார்கள்? லூத் நபியின் குடும்பத்தாருக்கு வேதனை வந்ததா?  பதில் :  “லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படுவது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?” என்று தூதர்கள் […]

116) ஸாலிஹ் நபியின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை?

கேள்வி : ஸாலிஹ் நபியின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை என்ன? பதில் :  67. அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். அல்குர்ஆன் : 11 – 67

115) ஸாலிஹ் நபியின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் என்ன கூறினான்?

கேள்வி : ஒட்டகத்தை அறுத்த பின் ஸாலிஹ் நபியின் சமுதாய மக்களுக்கு எத்த்னை நாட்களில் வேதனை வருவதாக அல்லாஹ் கூறினான்? பதில் :  65. அதை அவர்கள் அறுத்துக் கொன்றனர். “உங்கள் வீடுகளில் மூன்று நாட்கள் அனுபவியுங்கள்! இது பொய்யாகாத எச்சரிக்கை” என்று அவர் கூறினார். அல்குர்ஆன் : 11 – 65

114) ஸாலிஹ் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் என்ன?

கேள்வி : ஸாலிஹ் நபியின் சமுதாயத்திற்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் என்ன? பதில் :  64. “என் சமுதாயமே! உங்களுக்குச் சான்றாக இதோ அல்லாஹ்வின் ஒட்டகம். அல்லாஹ்வின் பூமியில் மேயுமாறு இதை விட்டு விடுங்கள்! இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) சீக்கிரத்தில் உங்களுக்கு வேதனை ஏற்படும்” (என்றார்). அல்குர்ஆன் : 11 – 64

113) நூஹ் நபியை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு நூஹ் நபி கொடுத்த மறுப்பு என்ன?

கேள்வி : நூஹ் நபியை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு நூஹ் நபி கொடுத்த மறுப்பு என்ன? பதில் :  28. “என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்களுக்கு நாங்கள் அதை வற்புறுத்த முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” என்று (நூஹ்) கேட்டார்.  29. “என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி […]

112) நூஹ் நபியை பின்பற்றாமைக்கு என்ன காரணம்?

கேள்வி : நூஹ் நபியை பின்பற்றமடோம் என்று கூறக்கூடியவர்கள் பின்பற்றாமைக்கு என்ன காரண கூறினார்கள்.  பதில் : “எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்” என்று அவரது சமுதாயத்தில் (ஏகஇறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர். அல்குர்ஆன் : 11 – 27 

111) கடைசி நேரத்தில் இறைவன் காப்பாற்றிய சமுதாயம் எது?

கேள்வி : கடைசி நேரத்தில் இறைவன் காப்பாற்றிய சமுதாயம் எது? பதில் :  98. (கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்டபோது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம். அல்குர்ஆன் : 10 – 98  

110) ஃபிர்அவ்னை கடலில் மூழ்கடித்த பின் அல்லாஹ் என்ன கூறினான்?

கேள்வி : ஃபிர்அவ்னை கடலில் மூழ்கடித்த பின் அவனைப் அல்லாஹ் என்ன கூறினான்? பதில் :  92. உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன்னை உன் உடலுடன் இன்று காப்பாற்றுவோம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். ஆல்குர்ஆன் : 10 – 92

109) ஃபிர்அவ்னுக்கு எதிராக மூஸா நபி செய்த பிரார்த்தனை என்ன?

கேள்வி : ஃபிர்அவ்னுக்கும் அவனது கூட்டத்தாருக்கும்  எதிராக மூஸா நபி செய்த பிரார்த்தனை என்ன? பதில் :  88. “எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையை விட்டும் அவர்களை வழிகெடுக்கவே (இது பயன்படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்று மூஸா கூறினார். அல்குர்ஆன் : 10 […]

108) துன்பம் ஏற்படும் போது மனிதனின் நிலை என்ன?

கேள்வி : துன்பம் ஏற்படும் போதும், துன்பம் அவனை விட்டும் அகற்றப்படும் போதும் மனிதனின் நிலை என்ன? பதில் :  12. மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும்போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன. அல்குர்ஆன் : 10 – 12 

107) சுவர்க்கவாசிகளின் வாழ்த்தும், பிரார்த்தனையும் என்ன?

கேள்வி : சுவர்க்கவாசிகளின் வாழ்த்தும், பிரார்த்தனையும் என்ன? பதில் :  10. “அல்லாஹ்வே! நீ தூயவன்”. என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனையாகும். ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்தாகும். “அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும். அல்குர்ஆன் : 10 – 10 

106)இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதி என்ன?

கேள்வி : இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதி என்ன? பதில் :  நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ் பகுதியில் ஆறுகள் ஓடும்.  ஆதாரம் :  72. நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. அல்குர்ஆன் : […]

105)இறைநம்பிக்கையாளர்களின் நிலை என்ன?

கேள்வி : இறைநம்பிக்கையாளர்களின் நிலை என்ன? பதில் :  நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். அல்குர்ஆன் : 9 – 71 

104) ஜகாத் பெற தகுதியானவர்கள் யார்?

கேள்வி : ஜகாத் பெற தகுதியானவர்கள் யார்? பதில் :  யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். அல்குர்ஆன் :  9 – 60 

103) புனித மாதங்கள் எத்தனை?

கேள்வி : வருடத்திற்கு எத்தனை மாதங்கள்? அவற்றில் புனித மாதங்கள் எத்தனை? அது எந்தெந்த மாதம்? புனிதம் என்றால் என்ன?  பதில் : வருடத்திற்கு பன்னிரண்டு மாதங்கள் . அவற்றில் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப், ஆகிய நன்கு மாதங்கள் புனிதமானவையாகும்.  அம்மாதத்தில் போரிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.  ஆதாரம் :  வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. […]

102) அல்லாஹ்வின் இல்லங்களை நிர்வகிப்பதற்கு தகுதியானவர்கள் யார்?

கேள்வி : அல்லாஹ்வின் இல்லங்களை நிர்வகிப்பதற்கு தகுதியானவர்கள் யார்? பதில் :  அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். அல்குர்ஆன் : 9 – 18 

101) இறையச்சத்திற்கு கிடைக்கும் நன்மை என்ன?

கேள்வி : இறையச்சத்திற்கு கிடைக்கும் நன்மை என்ன? பதில் :  29. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்குத் தெளிவை அவன் வழங்குவான். உங்கள் தீமைகளை உங்களை விட்டு நீக்கி உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். அல்குர்ஆன் : 8 – 29 

100) சோதனை எல்லோரையும் வந்தடையுமா?

கேள்வி :  சோதனையான காலக்கட்டம் பாவிகளை மட்டும் வந்தடையுமா? அல்லது எல்லோரையும் வந்தடையுமா?  பதில் :  ஒரு சோதனையை அஞ்சுங்கள்! அது உங்களில் அநீதி இழைத்தவர்களை மட்டுமே பிடிக்கும் என்பதல்ல. அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! அல்குர்ஆன் : 8 – 25 

99) படைப்பினங்களில் அல்லாஹ்விடம் மிகக் கெட்டவர்கள் யார்?

கேள்வி : படைப்பினங்களில் அல்லாஹ்விடம் மிகக் கெட்டவர்கள் யார்? பதில் :  (உண்மையை) விளங்காத செவிடர்களும், ஊமைகளுமே அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினமாவர். அல்குர்ஆன் : 8 – 22

98) குர்ஆன் ஊதப்படும் போது என்ன செய்ய வேண்டும்?

கேள்வி : குர்ஆன் ஊதப்படும் போது என்ன செய்ய வேண்டும்?’ பதில் :  குர்ஆன் ஓதப்படும்போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்! அல்குர்ஆன் : 7 : 204 

97) ஷைத்தானின் ஊசலாட்டம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

கேள்வி : ஷைத்தானின் ஊசலாட்டம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?  பதில் :  ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள். அல்குர்ஆன் : 7 – 200 , 201 

96) யாருக்காக நரகத்தை அல்லாஹ் தயாரித்துள்ளான்?

கேள்வி : யாருக்காக நரகத்தை அல்லாஹ் தயாரித்துள்ளான்? பதில் :  ஜின்களிலும், மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விட வழிகெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள். அல்குர்ஆன் : 7 – 179  

95) நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்களா?

கேள்வி :  நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்களா? பதில் :  188. “அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்குர்ஆன் : 7 – 188  

94)சனிக்கிழமைவாசிகளின் வரலாறு நிகழ்ச்சி என்ன?

கேள்வி : சனிக்கிழமைவாசிகளின் வரலாறு நிகழ்ச்சி என்ன? பதில் :  163. கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம். 164. “அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு […]

93) மூஸாவின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் செய்த அருள் என்ன?

கேள்வி : மூஸாவின் சமுதாய மக்களுக்கு அல்லாஹ் செய்த அருள் என்ன? பதில் :  160. அவர்களைப் பன்னிரண்டு கிளைகளைக் கொண்ட சமுதாயங்களாகப் பிரித்தோம். மூஸாவின் சமுதாயத்தினர் அவரிடம் தண்ணீர் கேட்டபோது “உமது கைத்தடியால் இப்பாறையில் அடிப்பீராக!’ என்று அவருக்கு அறிவித்தோம். உடனே அதில் பன்னிரண்டு நீரூற்றுக்கள் ஏற்பட்டன. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம். “உங்களுக்கு நாம் வழங்கிய […]

92) நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவன் எல்லா மக்களுக்குமா?

கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவன் எல்லா மக்களுக்குமா? பதில் :  158. “மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராவேன். அவனுக்கே வானங்கள்  மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர்வழி பெறுவீர்கள். அல்குர்ஆன் : 7 […]

91) மூஸாவின் சமுதாயம் தவறு செய்ததற்காக வருந்தினார்களா?

கேள்வி : மூஸாவின் சமுதாயம் தவறு செய்ததற்காக வருந்தினார்களா? பதில் :  149. தாங்கள் வழிதவறி விட்டதை உணர்ந்து அவர்கள் கைசேதப்பட்டபோது “எங்கள் இறைவன் எங்களுக்கு அருள் புரிந்து, எங்களை மன்னிக்காவிட்டால் நட்டமடைந்தோராவோம்” என்றனர். அல்குர்ஆன் : 7 – 149 

90) மூஸா இறைவனுடன் உரையாட சென்ற பின் அந்த மக்கள் எதை வணங்கினார்க

கேள்வி : மூஸா இறைவனுடன் உரையாட சென்ற பின் அந்த மக்கள் எதை வணங்கினார்கள்? பதில் :  148. மூஸாவுடைய சமூகத்தார் அவருக்குப் பின் அவர்களது நகைகளால் காளைக் கன்றின் வடிவத்தை (கடவுளாக) கற்பனை செய்து கொண்டனர். அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. “அது அவர்களிடம் பேசாது என்பதையும், அவர்களுக்கு எந்த வழியையும் காட்டாது என்பதையும் அவர்கள் அறிய வேண்டாமா? அவர்கள் இதைக் கற்பனை செய்து அநீதி இழைத்தோரானார்கள். அல்குர்ஆன் : 7 – 148 

89) மூஸாவிற்கு அல்லாஹ் தன்னுடன் பேசுவதற்கு எந்தனை நாளை வாக்களித்தான்?

கேள்வி : மூஸாவிற்கு அல்லாஹ் தன்னுடன் பேசுவதற்கு எந்தனை நாளை வாக்களித்தான்? பதில் :  142. மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். அதை (மேலும்) பத்து (இரவுகள்) மூலம் முழுமையாக்கினோம். எனவே அவரது இறைவன் நிர்ணயித்த காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது.18 “என் சமுதாயத்திற்கு நீர் எனக்குப் பகரமாக46 இருந்து சீர்திருத்துவீராக! குழப்பவாதிகளின் பாதையைப் பின்பற்றிவிடாதீர்!” என்று தம் சகோதரர் ஹாரூனிடம் மூஸா (ஏற்கனவே) கூறியிருந்தார். அல்குர்ஆன் : 7 – 142 

88) மத்யன் சமுதாயம் எப்படி அழிந்தார்கள்?

கேள்வி : மத்யன் சமுதாயம் எப்படி அழிந்தார்கள்? பதில் :  91. உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். அல்குர்ஆன் : 7 – 91 

87) மத்யன் சமுதாயத்தின் நபி யார்?

கேள்வி : மத்யன் சமுதாயதின் நபி யார்? அவர்கள் செய்த தவறு என்ன?  பதில் :  85. மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் தக்க சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” […]

86) லூத் நபியின் குடும்பத்தினர் அழிந்து போனார்களா?

கேள்வி : லூத் நபியின் குடும்பத்தினர் எல்லோரும் அழிந்து போனார்களா? பதில் :  83. எனவே அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தாரையும், அவரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக இருந்தாள். அல்குர்ஆன் : 7 – 83  

85) லூத் சமுதாயத்தை எவ்வாறு அழிக்கப்பட்டார்கள்?

கேள்வி : லூத் சமுதாயத்தை எவ்வாறு அழிக்கப்பட்டார்கள்? பதில் :  84. அவர்களுக்கு பெருமழையைப் பொழிவித்தோம். “குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு இருந்தது?” என்பதைக் கவனிப்பீராக! அல்குர்ஆன் : 7 : 84 

84) லூத் சமுதாயம் செய்து வந்த மோசமான செயல் என்ன?

கேள்வி : லூத் சமுதாயம் செய்து வந்த மோசமான செயல் என்ன? பதில் :  80. லூத்தையும் (தூதராக அனுப்பினோம்). “உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக்கேடான காரியத்தையா செய்கிறீர்கள்?” என்று தமது சமுதாயத்திடம் கேட்டார். 81. “நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்” (என்றும் கூறினார்.) அல்குர்ஆன் : 7 : 80,81

83) ஸமூது சமுதாயம் எப்படி அழிந்தார்கள்?

கேள்வி : ஸமூது சமுதாயம் எப்படி அழிந்தார்கள்? அதற்கான காரணம் என்ன?  பதில் :   பின்னர் அந்த ஒட்டகத்தை அறுத்தனர். அவர்களின் இறைவனது கட்டளையை மீறினர். “ஸாலிஹே நீர் தூதராக இருந்தால் எங்களுக்கு எச்சரித்ததை எங்களிடம் கொண்டு வாரும்” எனவும் கூறினர். உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். அல்குர்ஆன் : 7 : 77,78 

82) ஸமூது சமுதாயத்தின் நபி யார்?

கேள்வி : ஸமூது சமுதாயத்தின் நபி யார்? அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதம் என்ன? பதில் :  ஸமூது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பி வைத்தோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சி வந்துள்ளது. அது உங்களுக்குச் சான்றாக உள்ள அல்லாஹ்வின் ஒட்டகம். அல்லாஹ்வின் பூமியில் அதை மேயவிட்டு விடுங்கள்! அதற்குத் தீங்கிழைக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) உங்களுக்குத் துன்புறுத்தும் வேதனை ஏற்படும்” என்று அவர் கூறினார். அல்குர்ஆன் […]

81) ஆத் சமுதாயத்தின் நபி யார்?

கேள்வி : ஆத் சமுதாயத்தின் நபி யார்? பதில் :  ஆது சமுதாயத்திடம் அவர்களின் சகோதரர் ஹூதை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் யாருமில்லை (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று அவர் கேட்டார். அல்குர்ஆன் : 7 – 65

80) நூஹ் நபியின் சமுதாய மக்கள் எவ்வாறு அழிந்தார்கள்?

கேள்வி : நூஹ் நபியின் சமுதாய மக்கள் எவ்வாறு அழிந்தார்கள்? பதில் :  ஆயினும் அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரை மூழ்கடித்தோம். அவர்கள் குருட்டுக் கூட்டமாகவே இருந்தனர். அல்குர்ஆன் : 7 – 64  

79) நரகவாசிகளுக்கு ஹராமாக்கப்பட்டது என்ன?

கேள்வி : நரகவாசிகளுக்கு ஹராமாக்கப்பட்டது என்ன? பதில் :  நரகவாசிகள், சொர்க்கவாசிகளை அழைத்து “எங்கள் மீது சிறிது தண்ணீரை அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதை ஊற்றுங்கள்!” எனக் கேட்பார்கள். ”(தன்னை) மறுப்போருக்கு அவ்விரண்டையும் அல்லாஹ் தடை செய்து விட்டான்” என்று (சொர்க்கவாசிகள்) கூறுவார்கள். அல்குர்ஆன் : 7 – 51 

78) மனிதர்களுக்கு அல்லாஹ் ஹராமாக்கியது என்ன?

கேள்வி : மனிதர்களுக்கு அல்லாஹ் ஹராமாக்கியது என்ன? பதில் :  “வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்தச் சான்றையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்” எனக் கூறுவீராக! அல்குர்ஆன் : 7 – 33

77)ஷைத்தானிடமிருந்து தவிர்ந்து கொள்வதற்கு என்ன வழி?

கேள்வி : ஷைத்தானிடமிருந்து தவிர்ந்து கொள்வதற்கு ஆதமுடைய பிள்ளைகளுக்கு இறைவன் செய்யும் உபதேசம் என்ன?  பதில் :  ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.  அல்குர்ஆன் : […]

76) மனிதனை ஷைத்தான் எப்படியெல்லாம் வழிகெடுப்பான்?

கேள்வி : மனிதனை ஷைத்தான் எப்படியெல்லாம் வழிகெடுப்பான்? பதில் :  “நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்” என்று அவன் கூறினான். “பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்” (என்றும் கூறினான்). அல்குர்ஆன் :  7 – 16,17 

75) பொதுவாக மக்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்டவை என்ன?

கேள்வி : பொதுவாக மக்கள் அனைவருக்கும் தடை செய்யப்பட்டவை என்ன? பதில் :  151. “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது” என்பதே. பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் […]

74) முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்ட விளங்கினங்கள் என்ன?

கேள்வி : முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்ட பறவைகள் விளங்கினங்கள் என்ன? பதில் :  “தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை” என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.  அல்குர்ஆன் : 6 – 145 

73) 18 நபிமார்கள் பெயர்கள் கூறப்பட்ட வசனம் எது?

கேள்வி : 18 நபிமார்கள் பெயர்கள் கூறப்பட்ட வசனம் எது? பதில் :  83. இது நமது சான்றாகும். இப்ராஹீமின் சமுதாயத்திற்கு எதிராக இதை அவருக்கு வழங்கினோம். நாம் நாடியவருக்குத் தகுதிகளை உயர்த்துவோம். உமது இறைவன் ஞானமிக்கவன்; அறிந்தவன். 84, 85, 86. அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். அனைவருக்கும் நேர்வழி காட்டினோம். அதற்கு முன் நூஹுக்கும், அவரது வழித்தோன்றல்களில் தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸஃ, […]

72) மறைவானவற்றின் திறவுகோல் என்றால் என்ன?

கேள்வி : மறைவானவற்றின் திறவுகோல் என்றால் என்ன? பதில் :  மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. அல்குர்ஆன் : 6 – 59

71) மறுமையில் மனிதர்களை போல் விளங்கினங்களும் ஒன்று திரட்டப்படும்?

கேள்வி : மறுமையில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவது போல் விலங்கினங்களும் ஒன்றுதிரட்டப்படுமா?   பதில் :  பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் நாம் விட்டுவிடவில்லை. பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள். அல்குர்ஆன் : 6 – 38

70) மறுமையில் தங்களது முதுகில் பாவச் சுமையை எதனால் சுமப்பார்கள்?

கேள்வி : மறுமையில் தங்களது முதுகில் பாவச் சுமையை எதனால் சுமப்பார்கள்? பதில் :  அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யெனக் கருதியோர் நட்டமடைந்து விட்டனர். திடீரென யுகமுடிவு நேரம் அவர்களிடம் வரும்போது “உலகில் வரம்பு மீறி நடந்து கொண்டதால் எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே” என்று கூறுவார்கள். தமது முதுகுகளில் அவர்கள் பாவங்களைச் சுமப்பார்கள். கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டது. அல்குர்ஆன் : 6 – 31

69) முந்தைய சமுதாயம் அழித்ததற்குரிய காரணம் என்ன?

கேள்வி : முந்தைய சமுதாயம் அழிந்ததற்குரிய காரணம் என்ன வென்று இறைவன் கூறுகிறான்? பதில் :  இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் அறியவில்லையா? உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்குப் பூமியில் செய்து கொடுத்திருந்தோம். வானத்தை அவர்கள் மீது தொடர்ந்து மழைபொழியச் செய்தோம். அவர்களுக்குக் கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்கினோம். அல்குர்ஆன் : 6 – 06 

68) மறுமையில் இறைவனுக்கும் ஈஸாவுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் என்ன?

கேள்வி : மறுமையில் இறைவனுக்கும் ஈஸாவுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் என்ன? பதில் :  116. மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும், என் தாயாரையும் கடவுள்களாக்கிக் கொள்ளுங்கள்! என நீர் மக்களுக்குக் கூறினீரா?” என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும்போது, “நீ தூயவன். எனக்குத் தகுதியில்லாத வார்த்தையை நான் கூற உரிமையில்லாதவன். நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிவாய். எனக்குள் உள்ளதை நீ அறிவாய்! உனக்குள் உள்ளதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை அறிபவன்” […]

Next Page » « Previous Page