
12) ஆமீன் இந்த அத்தியாயத்தை தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஓதும் போது முடிந்ததும் ஆமீன் என்று கூறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் ஆமீன் என்பது இந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி என சிலர் தவறாக எண்ணுகின்றனர். ஆமீன் என்பது இந்த அத்தியாயத்தின் ஒரு பகுதி அல்ல. திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாற்றைத் துவக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ளோம். குர்ஆனில் இல்லாத எதுவும் குர்ஆனுடன் கலந்து விடாமலும், குர்ஆனில் உள்ளது எதுவும் விடுபட்டுப் போகாமலும் மிகுந்த சிரத்தையுடன் குர்ஆன் தொகுக்கப்பட்டது […]