
முன்னுரை ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன்: 51:56) ➚ அல்லாஹ் மனித சமுதாயத்தை படைத்த நோக்கமே நாம் அவனை மட்டும் வணங்கி வழிபடுவதற்காக மட்டும்தான் என்பதை மேற்கண்ட இறைவசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். ஒரு நாளில் ஐந்து நேரத் தொழுகைகளையே இஸ்லாமியர்கள் பலர் முறையாக நிறைவேற்றுவதில்லை. அவ்வாறு இருக்கையில் நாம் எல்லா நேரமும் இறைவனை எப்படி வணங்கி கொண்டே இருக்க முடியும்? என்ற எண்ணம் பலருடைய உள்ளங்களில் ஏழலாம். […]