Tamil Bayan Points

13) விளையாட்டு

நூல்கள்: இஸ்லாமிய ஒழுக்கங்கள்

Last Updated on October 28, 2023 by

விளையாட்டு

மனித உணர்வுகளை மதிக்க தெரிந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. ஏனென்றால் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களையும் அகில உலகத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம். இறைவனுக்கு தான் படைத்த மனிதனின் உணர்வுகள் பற்றி தெரியும்.

இஸ்லாம் விளையாட்டுகளை பொறுத்த வரையில் அதிலேயே மூழ்கி கிடந்து அடிமையாகாமலும் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காத வகையிலும் மோசடி சூதாட்டம் இல்லாமலும் உடல் ஆரோக்கியத்தையும் சிந்தனையையும் சீர்படுத்த கூடிய விளையாட்டுகளை அனுமதிக்கவும் செய்து அதை தூண்டவும் செய்கிறது. இன்னும் இஸ்லாதில் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பேணுவதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

உடல் உறுப்புகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள்  

قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன, உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன. 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி), நூல் : புகாரி-1975 

பெருநாள் தினத்தில் விளையாடுவது ஆர்வமூட்டப்பட்டுள்ளது

(13622) 13657- حَدَّثَنَا عَفَّانُ ، حَدَّثَنَا حَمَّادٌ ، أَخْبَرَنَا حُمَيْدٌ ، قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ، قَالَ :
قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا هَذَانِ الْيَوْمَانِ ؟ قَالُوا : كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ ، قَالَ : إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا : يَوْمَ الْفِطْرِ ، وَيَوْمَ النَّحْرِ.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் மதீனாவாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே விளையாடுபவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இது என்ன நாட்கள் என்று கேட்டார்கள். அறியாமைக் காலத்திலிருந்து இந்த இரண்டு நாட்களில்தான் விளையாடிகொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதற்கு பதிலாக நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் என்ற இரண்டு நாட்களை (விளையாடுவதற்காக) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), நூல் : அஹ்மத்-13622 (13131)

அந்நிய ஆண்களின் வீர விளையாட்டை 

பெண்கள் ஆடை ஒழுங்குகளுடன் பார்க்கலாம் 

5236- حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ عَنْ عِيسَى ، عَنِ الأَوْزَاعِيِّ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ
رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتُرُنِي بِرِدَائِهِ وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ حَتَّى أَكُونَ أَنَا الَّذِي أَسْأَمُ فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ الْحَرِيصَةِ عَلَى اللَّهْوِ

பள்ளிவாயிலில் கருப்பு நிற வீரர்கள் விளையாடிக் கொண்டிருந் தார்கள். நபி(ஸல்) அவர்களோ என்னை அவர்களுடைய மேலாடை யால் மறைத்திருந்தார்கள். நான் சலிப்படையும் அளவுக்கு அவர்களின் விளையாட்டை பார்த்தேன். ஒரு பருவ வயதை அடைந்த சிறுமி விளையாட்டை பார்ப்பதற்கு எந்த அளவு ஆர்வமாக இருப்பாளோ அந்த அளவு (நான் பார்த்ததை) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

அறி : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி-5236 

வீர விளையாட்டுக்களை விளையாட ஆர்வமூட்டுதல் 

வீர விளையாட்டுக்களான கபடி, அம்பெய்தல், குண்டு எறிதல், கால்பந்து போன்ற உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் விதமான விளையாட்டுக்களை விளையாடுவதற்கு இஸ்லாம் தூண்டுகிறது. அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தான காளை மாட்டை அடக்கும்  விளையாட்டுக்களை விளையாட அனுமதியில்லை. இன்னும் இதில் கால்நடைகள் துன்புறுத்தப் படுகின்றன.  

2899- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ قَالَ : سَمِعْتُ سَلَمَةَ بْنَ الأَكْوَعِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى نَفَرٍ مِنْ أَسْلَمَ يَنْتَضِلُونَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا ارْمُوا وَأَنَا مَعَ بَنِي فُلاَنٍ قَالَ فَأَمْسَكَ أَحَدُ الْفَرِيقَيْنِ بِأَيْدِيهِمْ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا لَكُمْ لاَ تَرْمُونَ قَالُوا كَيْفَ نَرْمِي وَأَنْتَ مَعَهُمْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ارْمُوا فَأَنَا مَعَكُمْ كُلِّكُمْ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெறிந்து விளையாடக் கூடிய சிலரை கடந்து சென்றார்கள். “இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெறி யுங்கள்! ஏனென்றால் உங்கள் தந்தை அம்பெறிபவராகத்தான் இருந் தார். நீங்களும் எரியுங்கள் நான் இன்ன கூட்டதாருடன் சேர்ந்து கொள்கிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அந்த இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தினர் அம்பெறியாமல் நின்ற னர். நீங்கள் ஏன் அம்பெறியவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கேட் டார்கள். நீங்கள் அவர்களணியில் இருக்கும் போது நாங்கள் எப்படி அம்பெறிய முடியும் என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அம்பெறியுங்கள் நான் உங்கள் இருவரின் அணியுடனும் இருக்கிறேன் என்றார்கள்.

அறி: ஸலமா இப்னு அல் அக்வஃ (ரலி), நூல்: புகாரி-2899 

வீர விளையாட்டினால் கூட எந்த உயிரினத்துக்கும் 

தீங்கு விளைவிக்கக் கூடாது  

போர்களத்தில் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே இந்த வில்வித்தையை பயன்படுத்த அனுபதியளித்துள்ளார்கள். அதுவல்லாமல் எந்த உயிரினத்துக்கும் இந்த விளையாட்டால் தீங்கு செய்வதை தடுத்துள்ளார்கள்.   

5171 – وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَدِىٍّ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ
« لاَ تَتَّخِذُوا شَيْئًا فِيهِ الرُّوحُ غَرَضًا ».

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“உயிருள்ள பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத் துக் கொள்ளாதீர்கள்”.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம்-3956 (3617)

தற்காப்புக் கலையை படித்துவிட்டு மறந்துவிடுவது கூடாது

5058 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ أَخْبَرَنَا اللَّيْثُ عَنِ الْحَارِثِ بْنِ يَعْقُوبَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شَمَاسَةَ أَنَّ فُقَيْمًا اللَّخْمِىَّ قَالَ لِعُقْبَةَ بْنِ عَامِرٍ تَخْتَلِفُ بَيْنَ هَذَيْنِ الْغَرَضَيْنِ وَأَنْتَ كَبِيرٌ يَشُقُّ عَلَيْكَ. قَالَ عُقْبَةُ لَوْلاَ كَلاَمٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- لَمْ أُعَانِهِ. قَالَ الْحَارِثُ فَقُلْتُ لاِبْنِ شُمَاسَةَ وَمَا ذَاكَ قَالَ إِنَّهُ قَالَ
« مَنْ عَلِمَ الرَّمْىَ ثُمَّ تَرَكَهُ فَلَيْسَ مِنَّا أَوْ قَدْ عَصَى ».

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதைக் கைவிட்டுவிடுகிறாரோ அவர் “நம்மைச் சேர்ந்தவர் அல்லர்” அல்லது “(நமக்கு) மாறுசெய்துவிட்டார்” என்று கூறினார்கள்” 

அறிவிப்பவர் : உக்பா (ரலி), நூல்: முஸ்லிம்-3882 (3543)

ஓட்டப் பந்தயம் 

(26277) 26807- حَدَّثَنَا عُمَرُ أَبُو حَفْصٍ الْمُعَيْطِيُّ ، قَالَ : حَدَّثَنَا هِشَامٌ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ :
خَرَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ وَأَنَا جَارِيَةٌ لَمْ أَحْمِلِ اللَّحْمَ وَلَمْ أَبْدُنْ ، فَقَالَ لِلنَّاسِ : تَقَدَّمُوا فَتَقَدَّمُوا ، ثُمَّ قَالَ لِي : تَعَالَيْ حَتَّى أُسَابِقَكِ فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ ، فَسَكَتَ عَنِّي ، حَتَّى إِذَا حَمَلْتُ اللَّحْمَ وَبَدُنْتُ وَنَسِيتُ ، خَرَجْتُ مَعَهُ فِي بَعْضِ أَسْفَارِهِ ، فَقَالَ لِلنَّاسِ : تَقَدَّمُوا فَتَقَدَّمُوا ، ثُمَّ قَالَ : تَعَالَيْ حَتَّى أُسَابِقَكِ فَسَابَقْتُهُ ، فَسَبَقَنِي ، فَجَعَلَ يَضْحَكُ ، وَهُوَ يَقُولُ : هَذِهِ بِتِلْكَ.

“நான் நபி(ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக்கிறேன். அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள். பிறகு என்னிடத் தில் என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா! என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர் களை முந்தினேன்.

அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது. நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப் பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென் றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தயத்திற்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலாக இது என்றார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : அஹ்மத்-26277 (25075) 

குதிரை பந்தயம்

420- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ : أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ نَافِعٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم سَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي أُضْمِرَتْ مِنَ الْحَفْيَاءِ وَأَمَدُهَا ثَنِيَّةُ الْوَدَاعِ وَسَابَقَ بَيْنَ الْخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ ، وَأَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ كَانَ فِيمَنْ سَابَقَ بِهَا.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலிரியவைக்கப்பட்ட (பயிற்சிய ளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே “ஹஃப்யா’ எனும் இடத் திலிருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (பந்தய) எல்லை “சனிய் யத்துல் வதா’ எனும் மலைக் குன்றாகும். மேலும் அவர்கள் மெலியவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் அந்த சனிய்ய(த்துல்வதா)விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்ளிவாசல் வரை பந்தயம் வைத்தார்கள்.

நூல் : புகாரி-420 

ஒட்டகப் போட்டி 

நபி (ஸல்) அவர்கள் குதிரை ஏற்றம் அம்பெறிதல் இவற்றில் மட்டும் வீரராக சிறந்து விளங்கவில்லை. ஒட்டக பந்தயத்திலும் தன திறமையை காட்டினார்கள். 

6501- حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا زُهَيْرٌ ، حَدَّثَنَا حُمَيْدٌ ، عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم نَاقَةٌ قَالَ : وَحَدَّثَنِي مُحَمَّدٌ ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ ، وَأَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ ، عَنْ أَنَسٍ قَالَ
كَانَتْ نَاقَةٌ لِرَسُولِ اللهِ صلى الله عليه وسلم تُسَمَّى الْعَضْبَاءَ وَكَانَتْ لاَ تُسْبَقُ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى قَعُودٍ لَهُ فَسَبَقَهَا فَاشْتَدَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ وَقَالُوا سُبِقَتِ الْعَضْبَاءُ ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ حَقًّا عَلَى اللهِ أَنْ لاَ يَرْفَعَ شَيْئًا مِنَ الدُّنْيَا إِلاَّ وَضَعَهُ.

நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது. அதன் பெயர் அழ்பா. அதை யாரும் போட்டியில் தோற்கடிக்க முடியாது. சேனம் பூட் டப்பட்ட ஒட்டகத்தில் அமர்ந்தவாறு ஒரு கிராமவாசி வந்தார்.

நபி(ஸல்) அவர்களை அவர் போட்டியில் முந்திவிட்டார். இது முஸ்லிம்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அழ்பா தோற்றுவிட்டதே என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கென்றுள்ள உரிமை அவன் உயர்த்திய எந்த பொருளையும் தாழ்த்துவதாகும். என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி), நூல்: புகாரி-6501

நபி(ஸல்) அவர்களுடைய ஒட்டகமான அழ்பாவை தோற்கடிக்க முடியாது என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதிலிருந்து பலதடவைகள் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகப்பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளதாக அறியமுடிகிறது.

சில விளையாட்டுப் போட்டிகளுக்கு குறிப்பிட்டு 

அனுபதியும் உண்டு 

“வெற்றி பரிசு என்பது ஒட்டகப்பந்தயம், குதிரை பந்தயம், அம்பெறிவது இவைகளுக்கு தான் தகுதியானது”.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்: அஹ்மத்-10138 (9754)

குழந்தைகளின் விளையாட்டுக்கள் 

இது போன்று பெரியவர்கள் மட்டும் தான் விளையாட்டை விளையாட வேண்டும் என்றல்ல. குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான விளையாட்டு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது.

ஊஞ்சல் ஆடுதல்  

3894- حَدَّثَنِي فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ هِشَامٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ
تَزَوَّجَنِيالنَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا بِنْتُ سِتِّ سِنِينَ فَقَدِمْنَا الْمَدِينَةَ فَنَزَلْنَا فِي بَنِي الْحَارِثِ بْنِ خَزْرَجٍ فَوُعِكْتُ فَتَمَرَّقَ شَعَرِي فَوَفَى جُمَيْمَةً فَأَتَتْنِي أُمِّي أُمُّ رُومَانَ وَإِنِّي لَفِي أُرْجُوحَةٍ وَمَعِي صَوَاحِبُ لِي فَصَرَخَتْ بِي فَأَتَيْتُهَا لاَ أَدْرِي مَا تُرِيدُ بِي فَأَخَذَتْ بِيَدِي حَتَّى أَوْقَفَتْنِي عَلَى بَابِ الدَّارِ وَإِنِّي لأَنْهَجُ حَتَّى سَكَنَ بَعْضُ نَفَسِي ثُمَّ أَخَذَتْ شَيْئًا مِنْ مَاءٍ فَمَسَحَتْ بِهِ وَجْهِي وَرَأْسِي ثُمَّ أَدْخَلَتْنِي الدَّارَ فَإِذَا نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فِي الْبَيْتِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ ، وَعَلَى خَيْرِ طَائِرٍ فَأَسْلَمَتْنِي إِلَيْهِنَّ فَأَصْلَحْنَ مِنْ شَأْنِي فَلَمْ يَرُعْنِي إِلاَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ضُحًى فَأَسْلَمَتْنِي إِلَيْهِ وَأَنَا يَوْمَئِذٍ بِنْتُ تِسْعِ سِنِينَ.

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்குக் காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடி வளர்ந்து அதிகமாகி விட்டது.

நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர் கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.

அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்தி விட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள்.

அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள், “நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்” என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி) விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப் பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.

அறி: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி-3894 

பொம்மைகளை வைத்து விளையாடுதல்

இஸ்லாத்தில் உருவப்படத்திற்கு தடையிருந்தாலும் குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு அனுமதியுள்ளது.

4934 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِى مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ قَالَ حَدَّثَنِى عُمَارَةُ بْنُ غَزِيَّةَ أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ حَدَّثَهُ عَنْ أَبِى سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ رضى الله عنها قَالَتْ
قَدِمَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِى سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ « مَا هَذَا يَا عَائِشَةُ ». قَالَتْ بَنَاتِى. وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ « مَا هَذَا الَّذِى أَرَى وَسْطَهُنَّ ». قَالَتْ فَرَسٌ. قَالَ « وَمَا هَذَا الَّذِى عَلَيْهِ ». قَالَتْ جَنَاحَانِ. قَالَ « فَرَسٌ لَهُ جَنَاحَانِ ». قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلاً لَهَا أَجْنِحَةٌ قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ.

நபி(ஸல்) அவர்கள் கன்தக் போரிலிருந்தோ அல்லது கைபர் போரி லிருந்தோ திரும்ப வந்தார்கள். விளையாட்டு பொருட்கள் உள்ள பெட்டி ஒரு திரையால் மூடப்பட்டிருந்து. காற்றடித்து மூடியிருந்த என்னுடைய விளையாட்டு பொருட்களை மூடியிருந்த திரை விலகியது. இது என்ன? ஆயிஷா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது என் விளையாட்டு பொருட்கள் என்று கூறினேன்.

அவைகளில் தோலாலான இரண்டு இறக்கைகளையுடைய குதிரையை பார்த்தார்கள். இவைகளின் நடுவில் நான் பார்க்கும் இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு குதிரை என்று நான் பதிலளித்தேன். குதி ரைகளுக்கு இறக்கைகளும் இருக்குமோ? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். சுலைமான் (அலை) அவர்களின் குதிரைகளுக்கு இறக்கைகள் இருப்பதை நீங்கள் கேள்விபட்டதில் லையா? என்று நான் சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தன் கடவாய் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்: அபூதாவூத்-4932 (4305)

كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي، «فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ، فَيُسَرِّبُهُنَّ إِلَيَّ فَيَلْعَبْنَ مَعِي

நான் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடுபவளாக இருந்தேன். என்னுடைய தோழிகள் (விளையாடுவதற்காக) என்னிடத்தில் வருவார்கள். நபி (ஸல்) அவர்களை கண்டு அவர்கள் வெட்கப்பட்டு பயந்து ஒழிந்து கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடத்தில் அவர்களை அனுப்பி வைப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி-6130முஸ்லிம்-4827

விருப்பத்திற்குரியவரிடம் மனது புண்படாதபடி விளையாடலாம் 

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ
إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُخَالِطُنَا، حَتَّى يَقُولَ لِأَخٍ لِي صَغِيرٍ: «يَا أَبَا عُمَيْرٍ، مَا فَعَلَ النُّغَيْرُ»

நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் ‘அபூ உமைரே! பாடும் உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?’ என்று கூடக் கேட்பார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல் : புகாரி-6129 

தடைசெய்யப்பட்ட விளையாட்டுக்கள் 

இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட விளையாட்டுகள் என்ன என்பதை சுருக்கமாக சொல்லிவிடலாம். விளையாடுபவர்களுக்கும், விளையாடும் கால்நடைகளுக்கும் உயிர் உறுப்புகள் சேதம் ஏற்படுத்தக்கூடிய, மோசடி, சூதாட்டம் இவைகளையே குறிக்கோளாகக் கொண்டவிளையாட்டுகள் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன.

சூதாட்ட விளையாட்டுகள்

பொதுவாக விளையாட்டுகளில் சூதாட்டத்தை மையமாக கொண்டவையாக இருந்தால் அது மார்க்கத்தில் மிகவும் தண்டணைக்குரிய காரியமாகும்.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

“நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தா னின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங் கள்! வெற்றி பெறுவீர்கள்”.

(அல்குர்ஆன் 5:90)

தாயம் 

6033 – حَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ عَنْ سُفْيَانَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ
« مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِى لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ ».

நபி (ஸல் அவர்கள் கூறினார்கள் :  “யார் தாய விளையாட்டை விளையாடுகிறார்களோ பன்றியின் இறைச்சியையும் அதன் இரத்தத்தையும் சாப்பிடுவதற்கு தன் கையில் தயாராக வைத்திருப்பதை போன்றாவார்”.

அறி: புரைதா (ரலி), நூல்: முஸ்லிம்-4549 (4194)

கல் மற்றும் ஆயுதங்களை எறிந்து விளையாடுவதற்கு தடை  

6220- حَدَّثَنَا آدَمُ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ قَالَ : سَمِعْتُ عُقْبَةَ بْنَ صُهْبَانَ الأَزْدِيَّ يُحَدِّثُ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ قَالَ
نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم ، عَنِ الْخَذْفِ وَقَالَ إِنَّهُ لاَ يَقْتُلُ الصَّيْدَ ، وَلاَ يَنْكَأُ الْعَدُوَّ وَإِنَّهُ يَفْقَأُ الْعَيْنَ وَيَكْسِرُ السِّنَّ.

நபி (ஸல்) அவர்கள் வீணாக கற்களை சுண்டி விளையாடுவதை தடைசெய்தார்கள். ஏனென்றால் அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. கண்ணை பதம்பார்க்கவும், பல்லை உடைக் கவும்தான் செய்யும் என்றார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி), நூல்: புகாரி-6220

கால்நடைகளைத் துன்புறுத்தும் விளையாட்டுக்குத் தடை 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَعْقُوبَ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّهُ دَخَلَ عَلَى يَحْيَى بْنِ سَعِيدٍ، وَغُلاَمٌ مِنْ بَنِي يَحْيَى رَابِطٌ دَجَاجَةً يَرْمِيهَا، فَمَشَى إِلَيْهَا ابْنُ عُمَرَ حَتَّى حَلَّهَا، ثُمَّ أَقْبَلَ بِهَا وَبِالْغُلاَمِ مَعَهُ فَقَالَ: ازْجُرُوا غُلاَمَكُمْ عَنْ أَنْ يَصْبِرَ هَذَا الطَّيْرَ لِلْقَتْلِ، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ تُصْبَرَ بَهِيمَةٌ أَوْ غَيْرُهَا لِلْقَتْلِ»

இப்னு உமர்(ரலி) (என் தந்தையின் சகோதரர்) யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்களிடம் வந்தார்கள். அங்கு யஹ்யாவின் மக்களில் ஒரு சிறுவன் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தான். இப்னு உமர்(ரலி) அந்தக் கோழியை நோக்கிச் சென்று அதை அவிழ்த்துவிட்டார்கள்.

பிறகு அந்தக் கோழியையும் அந்தச் சிறுவனையும் தம்முடன் அழைத்துக்கொண்டு (யஹ்யா இப்னு ஸயீத் அவர்களிடம்) சென்று, ‘இந்தப் பறவையை அம்பெய்து கொல்வதற்காகக் கட்டிவைக்க வேண்டாமென்று உங்கள் சிறுவனைக் கண்டித்து வையுங்கள். ஏனெனில், ஒரு விலங்கையோ (பறவை போன்ற) வேறெதையுமோ கொல்வதற்காகக் கட்டி வைக்க வேண்டாமென்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்ததை கேட்டுள்ளேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி-5514