
அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம். அந்த மார்க்கம் இன்றளவு எவ்வாறு வளர்ந்து கொண்டு இருக்கிறது. எவ்வாறு உயர்ந்தும் இருக்கிறது. என்பதைப் பற்றி இந்த உரையில் காண்போம்.. உயர்ந்து நிற்கும் இஸ்லாம் இவ்வுலகில் மனிதன் பிறந்து வளர்ந்த போது மனிதனுடன் சேர்ந்து பல்வேறு மார்க்கங்களும் வளர்ந்து விட்டன. மனிதனும் தன் சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப சமயங்களையும் சமணங்களையும் ஏற்படுத்திக் கொண்டான். இதன் விளைவாகத் தான் இன்றைய தினம் எண்ணிலடங்கா மதங்கள் உருவாகியுள்ளன. ஆனாலும் இத்தனை மார்க்கங்களும் தன் […]