
நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத், தப்ரானி ஆகிய நூல்களில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அலீ பின் யஸீத் அல் ஹானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவராவார். இது போல் மற்றொரு ஹதீஸ் இப்னு ஹிப்பான் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் ஹிஷாம் […]