
மகாமு இப்ராஹீம் என்பது என்ன? (அல்குர்ஆன்: 2:125, 3:97) ➚ ஆகிய வசனங்களில் மகாமு இப்ராஹீம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன்: 2:125) ➚ வசனத்தில் “மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறப்படுகின்றது. மகாமு இப்ராஹீம் என்றால் என்ன என்பதில் அதிகமான மக்கள் அறியாமையில் உள்ளனர். கஅபாவின் கிழக்குத் திசையில் சுமார் 10 மீட்டர் தொலைவில் ஒரு கல் நாட்டப்பட்டுள்ளதைக் காணலாம். அந்தக் கல் மகாமு இப்ராஹீம் என்று மக்களால் குறிப்பிடப்படுகின்றது. […]