நரைத்துப் போன வெள்ளை முடிக்கு கலர் சாயம் பூசுவதை மார்க்கம் ஆர்வமூட்டுகிறது. அதே வேளை கருப்புக் சாயம் பூசக்கூடாது என்று வலியுறுத்துகிறது. நரை முடிக்கு கருப்புச் சாயம் (Pure Black) பூசுவது தடுக்கப்பட்டுள்ளது என்பதையும், கருப்பு அல்லாத மற்ற சாதாரணமான அல்லது இருண்ட (Dark) மற்றும் பிரகாசமான (Bright) எந்த நிறமும் பூசிக் கொள்ளலாம் என்றும் பின்வரும் நபிமொழிகளிலிருந்து விளங்கலாம். مسند أحمد بن حنبل (3/ 160) 12656 – حدثنا عبد الله حدثني […]
Category: முக்கிய ஆய்வுகள்
a105
பூனையை விற்பனை செய்யலாமா?
முன்னுரை மனிதர்களைச் சார்ந்து வாழ்கின்ற பல செல்லப் பிராணிகள் இன்று வீடுகளில் வைத்து வளர்க்கப்படுகின்ற அடிப்படையில் பூனைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றது. பூனையால் வீட்டில் இருக்கும் எலி போன்ற தீங்கு தருகின்றவற்றைக் கொல்வது போன்ற சில பலன்களும் ஏற்படுகிறது. பொதுவாக நாட்டு ரகப் பூனைகளை வளர்ப்பது மட்டுமல்லாமல் பல வகை ஃபேன்சி ரகப் பூனைகளும் இன்று மக்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றது. பூனையை வளர்ப்பது தடையில்லை மார்க்க அடிப்படையில் பூனைகளை வளர்ப்பது தடையில்லை. என்றாலும், அவற்றை வளர்க்கும்போது கொடுமைப்படுத்தாமல், சரியான […]
அல்லாஹ்வின் கட்டளை என்ன?
அல்லாஹ்வின் கட்டளை என்ன? 33:33 وَقَرْنَ فِىْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَـرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْاُوْلٰى وَاَقِمْنَ الصَّلٰوةَ وَاٰتِيْنَ الزَّكٰوةَ وَاَطِعْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! … (அல்குர்ஆன்: 33:33) ➚ இந்த வசனத்தில் பெண்கள் வீடுகளில் மட்டுமே தொழ வேண்டும் என்ற கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லப்படவில்லை. ஆனால் போலி சுன்னத் வல்ஜமாத்தினர் தாங்கள் […]
நபியின் சிறுநீரை நபித்தோழியர் குடித்தார்களா?
நபியின் சிறுநீரை நபித்தோழியர் குடித்தார்களா? குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இஸ்லாத்தின் அடிப்படை மூல ஆதாரங்களாகும். குர்ஆனைப் பொறுத்தவரை இன்றைக்கு எது குர்ஆன் என்பதை நாம் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை. நமது ஆய்வுக்கு அப்பாற்பட்ட வகையில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டிருந்தாலும் குர்ஆனைப் போன்று ஆய்வுக்கு அப்பாற்பட்ட வகையில் பாதுகாக்கப்படவில்லை. எந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம்? எந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதை இன்றைக்கும் ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. முறையான ஆய்வுக்குப் […]
நபி (ஸல்) அவர்களின் சளியை நபித்தோழர்கள் உடம்பில் பூசிக் கொண்டார்கள்?
கேள்வி: நபி (ஸல்) அவர்களின் சளியை நபித்தோழர்கள் தங்கள் உடம்பில் பூசிக் கொண்டார்கள் என்று கூறும் பின்வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? “அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டால் அவரின் கட்டளையை நிறைவேற்ற அவர்கள் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு முன்வருகிறார்கள். அவர் உளூச் செய்தால் அவர் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் […]
மழைத் தொழுகை ஓர் ஆய்வு
மழைத் தொழுகை ஓர் ஆய்வு விண்ணிலிருந்து மழை பொழிந்தலே மண்ணில் உயிர்கள் வாழ முடியும். உயிரினங்களுக்கு ஜீவாதாரமாக அமைந்துள்ள இந்த மழை பெய்யாவிட்டால், பருவ மழைகள் பொய்த்து விட்டால், மழை பெய்ய வேண்டும் என்பதற்காக மக்கள் பலவகையான மூடநம்பிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இணைவைப்புக் காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழுகை என்ற அழகான வழிமுறையை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டியெடுக்கும் நிலையில் போதிய மழை நீர் இல்லாமல் […]
உம்மு ஹராம் சம்பவம்
உம்மு ஹராம் சம்பவம் உண்மை நிலையும் உளறல்களுக்கு விளக்கமும் அன்சாரி குலத்தைச் சார்ந்த உம்மு ஹராம் (ரலி) என்ற நபித்தோழியரின் வீட்டுக்கு நபி (ஸல்) அவர்கள் சென்று வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழியருக்கு அருகில் உறங்கினார்கள். அந்த நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் தலையில் பேன் பார்ப்பார்கள்; உணவளிப்பார்கள் என்று ஒரு செய்தி புகாரி, முஸ்லிம் இன்னும் பல ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இது(புகாரி: 2789, 2800, 2895, 2924, 6282, 7002)ஆகிய எண்களில் […]
இரண்டாவது ஜமாஅத் நடத்தக்கூடாதா?
இரண்டாவது ஜமாஅத் நடத்தக்கூடாதா? நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் பள்ளிவாசலில் இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்கு அனுமதியுள்ளது என்பது மட்டுமின்றி, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியும் உள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்?” என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார். அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி) […]
இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா?
இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா? நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன்: 6:118) ➚ அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன். (அல்குர்ஆன்: 6:119) ➚ அல்லாஹ்வின் […]
நபித்தோழர்கள் இறைத்தூதர்கள் அல்லர்!
நபித்தோழர்கள் இறைத்தூதர்கள் அல்லர்! இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மட்டுமே! குர்ஆன் ஹதீஸ் மட்டுமில்லாமல் நபித்தோழர்களின் சொல், செயல் மற்றும் அவர்களின் கருத்துக்களும் இஸ்லாத்தின் அடிப்படை என்று சிலர் கூறித்திரிகின்றனர். அல்லாஹ்வின் வார்த்தையான குர்ஆனும் நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் எதனைக் கூறுகின்றனவோ அதற்கே இஸ்லாமிய சமுதாயம் கட்டுப்பட வேண்டும். திருமறை குர்ஆனின் பல இடங்களிலும் அல்லாஹ் தனக்கும் தன் தூதரான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்படவேண்டும் என்றும், நபி […]
கப்ருகளின் மேல் கட்டப்பட்டுள்ளதா கஃபா ஆலயம்?
கப்ருகளின் மேல் கட்டப்பட்டுள்ளதா கஃபா ஆலயம்? கப்ரு வணங்கிகளின் கயமைத்தனம் தர்கா வழிபாட்டை ஆதரிக்கும் வழிகெட்ட கூட்டத்தினருக்குக் குர்ஆன் என்றாலே ஆகாது. ஹதீஸ் என்றால் என்னவென்றே தெரியாது. இவர்களின் சன்மார்க்க (?) பிரச்சார ஏடுகளில் குர்ஆனையோ, ஹதீஸ் களையோ அதிகம் குறிப்பிட மாட்டார்கள். தங்களது மனோ இச்சையை நியாயப்படுத்தும் படி யாரேனும் சில கருத்துக்களைக் கூறியிருந்தால் அதைத் தேடி எடுத்து பக்கங்களை நிரப்பி விடுவார்கள். இக்குறைமதியாளர்கள் எதை ஹதீஸ் என்று கருதுகிறார்களோ அதை நபியின் பெயரால் எடுத்தெழுதி […]
போரில் நபிகளார் பொய் சொல்வார்களா?
போரில் நபிகளார் பொய் சொல்வார்களா? குழப்பவாதிகளுக்குப் பதில் புகாரியில் இடம்பெறும் ஹதீஸ்: கஅப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள். “தபூக் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தான் பின்தங்கி விட்ட கால கட்டத்தைக் குறித்து என் தந்தை கஅப் இப்னு மாலிக் (ரலி) விவரித்தபோது இதை அவர்கள் கூற கேட்டேன்” என்று கஅப் (ரலி) […]
நாளைய ஞானம் நபிக்கு உண்டா?
நாளைய ஞானம் நபிக்கு உண்டா? வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! அவனுடைய அதிகாரம், ஆற்றல், பண்பு, ஆகிய எந்த ஒன்றிலும் அணுவளவும் கூட்டு இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை சங்கநாத முழக்கமாகும். இந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்காகத்தான் அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை நியமித்தான். நமக்கு இறைவனால் நியமனம் செய்யப்பட்ட தூதர் முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள். ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்னால் நபி (ஸல்) அவர்கள் எந்த மக்களைச் சீர் செய்ய வந்தார்களோ, எந்தக் கடவுள் […]
மார்க்கச் சட்டங்களில் தவறிழைத்த நபித்தோழர்கள்
மார்க்கச் சட்டங்களில் தவறிழைத்த நபித்தோழர்கள் நபித்தோழர்களில் பலருக்குக் குர்ஆன் மற்றும் ஹதீஸ் விஷயங்களில் பல செய்திகள் தெரியாமல் இருப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. ஏனெனில் வியாபார ரீதியில் பொருளாதாரத்தைக் கவனிப்பதில் ஈடுபட்டதும், பலர் ஆரம்ப காலத்திலேயே இறந்ததும், பலர் பிற்காலத்தில் தான் இஸ்லாத்தை ஏற்றதும், மக்காவில் வைத்து நடந்த சம்பவங்கள் மதீனாவில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் போனதும், சம்பவ இடத்தில் நபித்தோழர்கள் இல்லாமல் போவதும், செய்தியின் சாராம்சத்தை விளங்காமல் வேறொரு அர்த்தத்தில் புரிவதும், அவர்களின் வீடு மஸ்ஜிதுன் நபவியை விட்டும் தூரமாக […]
உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா?
உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைக்கு நரகமா? அறியாமைக் காலம் தொடங்கி திருக்குர்ஆன் அருளப்படும் காலகட்டம் வரை பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்கும் வழக்கம் இஸ்லாத்தை ஏற்காத அரபிய மக்களிடையே இருந்து வந்தது. வறுமைக்குப் பயந்தும், பெண் குழந்தையை இழிவு எனக் கருதியும் குழந்தைகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதை இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துத் திருத்தியது. وَلَا تَقْتُلُوْۤا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍؕ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْؕ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْاً كَبِيْرًا வறுமைக்கு அஞ்சி […]
மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?
மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா? கனவுகளில் இறந்தவர் வருவது ஆதாரமாகுமா? மரணித்து விட்ட இந்தப் பெரியார் என் கனவில் வந்தார்; அதனால் அவர் உயிரோடு உள்ளார் என்பதையும் சமாதி வழிபாடு செய்பவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள். ஒருவர் நமது கனவில் வருகிறார் என்றால் அவரே நமது கனவில் வந்தார் என்று புரிந்து கொள்ளக் கூடாது. அவர் நம்முடன் எதையாவது பேசினால் அவரே நம்மோடு பேசுகிறார் என்றும் நாம் புரிந்து கொள்ளக் கூடாது. அதுபோன்ற காட்சிகளை இறைவன் நமக்கு எடுத்துக் காட்டுகிறான் […]
இமாம்களின் துணையின்றி இஸ்லாத்தை அறிய முடியாதா?
இமாம்களின் துணையின்றி இஸ்லாத்தை அறிய முடியாதா? சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று தங்களைக் கூறிக் கொள்வோர், மத்ஹபுகளின் மூலமாகவே இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்றும், மத்ஹபு இமாம்களின் துணையின்றி குர்ஆன் ஹதீஸிலிருந்து நேரடியாக நாம் ஆய்வு செய்து பின்பற்றக் கூடாது என்றும் கூறுகின்றனர். மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது என்று நாம் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் போது சில எதிர்வாதங்களை மத்ஹபின் காவலர்கள் எடுத்து வைப்பது வழக்கம். அதில் ஒன்று தான், குர்ஆன், ஹதீஸை நாம் நேரடியாக […]
உலகம் எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது?
உலகம் எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது? பிரமிப்பூட்டும் இந்த உலகத்தை இறைவன் எப்படிப் படைத்தான்? எத்தனை நாட்களில் படைத்தான் என்பதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன்: 21:30) ➚.) வானம் பூமி இரண்டும் இணைந்திருந்து பின்னர் அவற்றை இறைவன் பிரித்தெடுத்துள்ளான். அதன் பின்னர் புகை மண்டலம் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து வானம் மற்றும் […]
குர்ஆனை தூய்மையின்றி தெடாலாமா? ஓதலாமா?
குர்ஆனை தூய்மையின்றி தெடாலாமா? ஓதலாமா? உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்ட வந்த உலகப் பொதுமறை திருக்குர்ஆன் என்று இறைவன் அக்குர்ஆனிலேயே பல இடங்களில் தெளிவு படுத்தியுள்ளான். மறுமை வெற்றி திருக்குர்ஆன் வழியில் நடந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை அறிவுள்ள எவரும் அறிவர். இந்த உண்மையை முஸ்லிம் சமுதாயத்தினரும் உணர்ந்துள்ளனர். திருக்குர்ஆனைப் பற்றிப் பேசும் போது இந்த உண்மையை வெளிப்படுத்துவர். ஆனால் மார்க்கச் சட்டங்கள் என்ற பெயரில் திருக்குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்படுத்தும் பல மார்க்கத்திற்கு முரணான சட்டங்களை உருவாக்கி வைத்துள்ளனர். […]
முடிச்சுகளில் ஊதுபவர்கள் யார்?
முடிச்சுகளில் ஊதுபவர்கள் யார்? அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 113:1-5) ➚ சூரத்துல் ஃபலக் என்னும் திருமறைக்குர்ஆனின் 113வது அத்தியாயத்தில் சில விஷயங்களைக் குறிப்பிட்டு, அவற்றின் தீங்கிலிருந்து நாம் இறைவனிடம் பாதுகாப்புத் தேட வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டுள்ளான். அவற்றில் ஒரு விஷயமாக ‘‘முடிச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாப்புத் […]
வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை
பின் தொடர்ந்தவர்களா? பின்பற்றியவர்களா? வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படை ‘வஹீ’ எனும் இறைச் செய்தி மட்டும்தான். வஹீ அல்லாத எந்த ஒன்றும் இஸ்லாத்தின் அடிப்படையாக ஆகாது. இதனை திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் மிகத் தெளிவாக, கடுகளவும் சந்தேகத்திற்கிடமின்றி எடுத்துரைக்கின்றன. உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள். (அல்குர்ஆன்: 7:3) (முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் […]
ஒரு பரேலவிச இதழின் புளுகு மூட்டைகள்
ஒரு பரேலவிச இதழின் புளுகு மூட்டைகள் இஸ்லாத்திற்கு எதிரான சமாதி வழிபாட்டை ஆதரிக்கும் கொள்கையே பரேலவிசக் கொள்கை எனப்படும். இக்கொள்கைக்கு அடிப்படை பொய், புரட்டு, புளுகு மூட்டைகள் தாம். இவையே பரேலவிசக் கொள்கையின் அஸ்திவாரங்கள் ஆகும். அத்தகைய பரேலவிசம் எனும் விஷத்தைத் தாங்கிய இதழ் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. (அவ்விதழின் பெயரை அலட்சியம் செய்து விட்டு, அதனுள் பொதிந்திருந்த விஷமக் கருத்திற்கான விளக்கத்தை இக்கட்டுரையில் தருகிறோம்.) நபிகளாரின் தாயார் ஆமினா அவர்கள் முஸ்லிம் என்பது தான் […]
மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும்
மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும் இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் ஒன்று திருமறை குர்ஆனும், மற்றொன்று ஆதாரப்பூர்வமான நபிவழியும் தான் என்பதில் துளிகூட நமக்கு ஐயம் இல்லை. இதைத்தவிர மார்க்கத்தின் பெயரால் சொல்லப்படும் அனைத்தும் வழிகேடு என்பதைப் பல வருடங்களாக உலகெங்கும் நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். அதில் முக்கியமான ஒன்றாக, திருக்குர்ஆனுக்கு முரண்படக்கூடிய செய்திகளை ஏற்று கொள்ளக் கூடாது என்றும் அதன் முரண்பாடுகள் நீங்கும் வரை (ஹதீஸ் கலையின் விதிபடி) அதைச் செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டும் […]
எலிக்கறி சாப்பிடலாமா?
எலிக்கறி சாப்பிடலாமா? எலிக்கறி சாப்பிடலாமா? கூடாதா? என்பது தொடர்பாக தற்போது கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது எலிக்கு வேட்டையாடும் நகங்களோ, கோரைப் பற்களோ கிடையாது எனவே அதனைச் சாப்பிடுவதால் குற்றமில்லை என்பதே எலிக்கறி சாப்பிடலாம் என்பவர்கள் முன்வைக்கும் ஆதாரமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குளில் கோரைப் பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் வேட்டையாடும் நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (3914) ஒன்றை […]
எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா?
எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா? {وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ (27) لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ (28) ثُمَّ لْيَقْضُوا تَفَثَهُمْ وَلْيُوفُوا نُذُورَهُمْ وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ (29)} [الحج: 27 – 29] “மக்களுக்கு ஹஜ்ஜைப் […]
பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா?
பெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா? அறிவீனமான வாதங்களுக்குத் தக்க பதில் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். 971 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: «كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ العِيدِ حَتَّى نُخْرِجَ […]
ஆஷூராவுக்குப் பல நிலைபாடுகள்!
ஆஷூராவுக்குப் பல நிலைபாடுகள்! ஆஷூரா பற்றிய ஹதீஸ்கள் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. மற்றொரு ஹதீஸில் நான் அடுத்த வருடம் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்று கூறியுள்ளர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வருடம் தான் ரமலான் நோன்பையும் வைத்துள்ளார்கள் என்று அர்த்தம் வருமே? ஆனால் ஹிஜ்ரி இரண்டாம் […]
மாவுபிசைவது போல் கைகளை ஊன்றி எழுவது நபிவழியா?
மாவுபிசைவது போல் கைகளை ஊன்றி எழுவது நபிவழியா? இது குறித்து ஒரு ஹதீஸ் இருக்கிறது. ஆனால் அது ஆதாரப்பூர்வமானது அல்ல என்று கடந்த கால அறிஞர்கள் முடிவு செய்து இவ்வாறு செய்யக் கூடாது என்று உறுதி செய்தனர். ஆனால் சமகால அறிஞரான அல்பானி அவர்கள் இது பலவீனமான ஹதீஸ் அல்ல. ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான் என்று வாதிட்டதுடன் முந்தைய அறிஞர்கள் அனைவரும் பலவீனமான ஹதீஸ் என்று முடிவு செய்ததில் தவறு செய்து விட்டனர் என்று எழுதினார். இதன் பிறகு தான் […]
இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா?
இடது கையை தரையில் ஊன்றி உட்காரலாமா? பொதுவாக நாம் தரையில் அமரும் போது கையை ஊன்றி அமர்வது வழக்கம். இவ்வாறு அமரும் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்கு ஹதீஸ்களில் தடை உள்ளது எனச் சிலர் கூறுகின்றனர். தொழுகையின் போது இடது கையைத் தரையில் ஊன்றி அமர்வதற்குத் தடை உள்ளதாக ஹதீஸ்களில் காணப்படுகின்றது. ஆனால் தொழுகைக்கு வெளியே இவ்வாறு ஊன்றி உட்கார்வதை தடை செய்தது தொடர்பாக வரும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகவே உள்ளன. இது தொடர்பான […]
குப்புறப்படுத்து தூங்கலாமா.?
குப்புறப்படுத்து தூங்கலாமா.? குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன. இந்த அறிவிப்பாளர் தொடர் குறித்த விமர்சனம் நுணுக்கமானதாக இருந்தாலும் இதை சரியான ஹதீஸ் என்று சிலர் வாதிடுவதால் விரிவாகவே இதை விளக்குகிறோம். முதல் ஹதீஸ் 2692 حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ وَعَبْدُ الرَّحِيمِ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ […]
பெண் தனியே பயணம் செய்யலாமா?
பெண் தனியே பயணம் செய்யலாமா? கணவன். அல்லது மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் செய்யலாமா? செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எதுவும் உள்ளதா என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் நீண்ட காலாமாகா கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். பரவலாகா கோரிக்கை வந்ததன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் குழு சென்னையில் கூடி 15.022011 மற்றும் 16.02.2011 ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு குறிதது விளக்குவதற்காக […]
மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?
மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா? ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா? என்பதில் அறிஞர்களிடையே இரண்டு கருத்து நிலவுகின்றது. எனவே இது பற்றி நாம் விரிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (அஹ்மத்: 9229, 9727, 9485) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக ஸாலிஹ் என்பார் அறிவிக்கின்றார். தவ்அமா என்பவரால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான இவர் பலவீனமானவர் […]
நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?
நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபி (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் அறிவிப்பாளர் தொடர் ரீதியிலும் மிகவும் பலவீனமான செய்தி என்பதை ஏகத்துவ இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம். இதே போன்று நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் கேவலப்படுத்தக்கூடிய இன்னொரு பொய்யான செய்தியும் ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. நபியவர்கள் வெளியேற்றிய இரத்தத்தை நபித்தோழர்கள் குடித்தார்கள் என்பதே அந்தப் […]
கஅபாவை விட ரவ்ளா சிறந்ததா?
கஅபாவை விட ரவ்ளா சிறந்ததா? யூதக் கொள்கையைப் போதிக்கும் மனாருல் ஹுதா! கே.எம். அப்துல் நாஸர், எம்.ஐ.எஸ்.சி. கப்ருகளின் மீது கட்டடம் கட்டுவதையும், கப்ருகளை பூசுவ தையும், அதன் மீது எழுதுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். மேலும் உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருகளை இடித்துத் தரை மட்டமாக்குமாறும் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இவை ஆதாரப்பூர்வமான ஹதீஸ் களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நபிவழியின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களுடைய […]
இறைத்தூதர் இறக்கவில்லையா?
இறைத்தூதர் இறக்கவில்லையா? அப்துல்லாஹ் ஜமாலி என்பவர் ஒரு பரேலவியாவார். மக்கள் பரேலவிசத்திலிருந்து படிப்படியாக விலகி வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சரியான பாதைக்கு, சத்திய வழிக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை சமாதி வழிபாட்டிலும் அசத்திய வழிகேட்டிலும் கொண்டு போய் தள்ளி விடுவதற்கு சகலவிதமான தகிடுதத்தங்களை, தப்பர்த்தங்களைச் செய்து கொண்டிருப்பவர் தான் இந்த அப்துல்லாஹ் ஜமாலி. அவர் அண்மையில் பரேலவிச பரிவாரத்தின் பல கடவுள் கொள்கை கொண்ட ஒரு பத்திரிகையில், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை; உயிருடன் தான் […]
சிக்கன திருமணமே பரக்கத்தான திருமணம்
சிக்கனமான திருமணமே பரக்கத்தான திருமணம் என்ற ஹதீஸ் வரதட்சணைக்கு எதிராக நாம் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்ட போது திருமணம் மிகவும் சிக்கனமாக, குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தோம். இன்று வரை அவ்வாறு வலியுறுத்தி வருகின்றோம். “குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரகத் (இறைவனின் மறைமுகமான பேரருள்) நிறைந்தது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியையும் அடிக்கடி மேற்கோள் காட்டி வந்தோம். தவ்ஹீத் சகோதரர்களின் திருமண மேடைகளில் தவறாமல் எடுத்துக் […]
சுப்ஹ் குனூத் ஓர் ஆய்வு
சுப்ஹ் குனூத் ஓர் ஆய்வு நாம் செய்யக்கூடிய வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் அவை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக இருந்தால் அந்த வணக்கம் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப் படாது. இன்றைக்கு நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தில் பல்வேறு வணக்க வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்களின் தெளிவான சுன்னத்துகள் புறக்கணிக்கப்பட்டு பல பித்அத்தான காரியங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் சுபுஹ் தொழுகையில் ருகூவிற்குப் பிறகு அல்லாஹ‚ம் மஹ்தினி […]
பிற மேடைகளில் பிரச்சாரம்
பிற மேடைகளில் பிரச்சாரம் – தவ்ஹீத் ஜமாஆத் நிலைப்பாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கெதிராக வைக்கப்படும் குற்றசாட்டுக்களில் பிரதான குற்றசாட்டாகப் பேசப்படுவது, இந்த அமைப்பினர் பிற இயக்கத்தின் மேடைகளில் ஒற்றுமையுடன் பிரச்சாரம் செய்வதில்லை என்பதாகும். இதற்கான விளக்கத்தை ஒவ்வொரு ஏகத்துவவாதியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில் ஷைத்தான் மனிதனை ஒரே வடிவத்தில் தான் வழிகெடுப்பான் என நினைக்கக்கூடாது. மாறாக ஒருவனை வழிகெடுக்க ஷைத்தான் எத்தகைய யுக்தியையும் செய்யத் தயங்க மாட்டான். உதாரணத்திற்கு, வரதட்சணை வாங்கக்கூடாது என்பதில் நாம் உறுதியோடு […]
வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா?
வஸீலா ஆளை வைத்தா? அமலை வைத்தா? அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி கேட்க வேண்டும் என்பது அல்குர்ஆனின் ஆணித்தரமான கட்டளையாகும். தவ்ஹீத் ஜமாஅத் இதைத் தான் பிரச்சாரம் செய்து வருகின்றது. பரேலவிகள் அல்குர்ஆனின் இந்த நிலைப்பாட்டிற்கு எதிரான, பல தெய்வக் கொள்கையைக் கொண்டவர்கள். இறந்து விட்ட மகான்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பது அவர்களின் குருட்டு நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்பதற்குச் சில ஆதாரங்களைத் தங்களுடைய இதழில் எழுதியிருந்தனர். அதற்கு ஏகத்துவம் […]
இறைச்செய்திகள் இப்போதும் வருமா?
இறைச்செய்திகள் இப்போதும் வருமா? மனிதன் சீர் பெற்று சிறப்பாக வாழ்வதற்குக் கடவுள் நம்பிக்கை முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள எவரும் இந்த உண்மையை மறுக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு எல்லா பித்தலாட்டங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் கடவுள் நம்பிக்கை தான் காரணம் என்று பலர் தவறாக நினைக்கும் அளவுக்கு கடவுளின் பெயரால் போலி ஆன்மீகவாதிகள் பல பித்தலாட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இஸ்லாம் இறைவனுடைய மார்க்கம் என்பதால் கடவுளை நம்பச் சொல்வதுடன் கடவுள் பெயரால் மற்றவர் எவரும் […]
மாதவிடாய் உறவின் பரிகாரம் என்ன?
மாதவிடாய் உறவின் பரிகாரம் என்ன? மனைவி மாதவிடாய் நிலையில் இருக்கும்போது கணவன் அவளுடன் உடலுறவு கொள்வதை அல்லாஹ் தடைசெய்துள்ளான். மாதவிடாய் ஏற்பட்டுள்ள காலத்தில் மனைவியுடன் கணவன் உறவுகொண்டுவிட்டால் இந்தப் பாவத்திற்கு பரிகாரமாக ஒரு தீனார் அல்லது அரை தீனாரை தர்மம் செய்ய வேண்டும் என்று பின்வரும் ஹதீஸ் கூறுகின்றது. 287أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ شُعْبَةَ عَنْ الْحَكَمِ عَنْ عَبْدِ الْحَمِيدِ عَنْ مُقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ […]
முதஷாபிஹாத் ஓர் ஆய்வு
முதஷாபிஹாத் ஓர் ஆய்வு பி. ஜைனுல் ஆபிதீன் திருக்குர்ஆன் வசனங்கள் முதஷாபிஹ் எனவும் முஹ்கம் எனவும் இரு வகைகளாக உள்ளன. இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஹ்கம் என்றால் என்ன? முதஷாபிஹ் என்றால் என்ன என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. தவறான கருத்துக்கு வளைக்க முடியாமல் அமைந்தவை முஹ்கம் ஆகும். நல்லவர்கள் சரியான முறையில் புரிந்து கொண்டாலும் வழிகேடர்கள் தவறாக வளைக்கும் வகையில் அமைந்தவை முதஷாபிஹ் என்பது ஒரு சாராரின் கருத்து. நம்முடைய கருத்தும் இது […]
விரலசைத்தல் ஓர் ஆய்வு
தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நாம் இதைக் கூறி வருகிறோம். இது, தமிழக முஸ்லிம்களுக்கு முன்னர் கேள்விப்படாத ஒரு நடைமுறையாக இருந்ததால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். விரல் அசைப்பதால் மற்றவர்களின் தொழுகை பாதிக்கப்படுகின்றது என்பது போன்ற காரணங்களைக் […]
நெஞ்சில் கை கட்டுதல் ஆய்வு
நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் பி. ஜைனுல் ஆபிதீன் தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம். இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டி தொழுது வருகின்றனர். இது தவறானது என்றும் இந்தக் கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக உள்ளன என்றும் நாம் கூறி வருகிறோம். அல்லாஹ்வின் பேரருளால் தவ்ஹீத் […]
பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?
பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையைச் சேர்ந்த சிலர் அர்த்தமற்ற வாதங்களைச் செய்து வருவது நம் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவர்களின் ஆய்வு முற்றிலும் அபத்தமாகவும் உளறலாகவும் அமைந்திருந்ததால் மக்களுக்கு உண்மையை விளக்குவதற்காக இரண்டு மறுப்புத் தொடர்கள் வெளியிட்டோம். அந்த மறுப்புகளுக்கு எதிராக நவ்பர் என்பவர் அபத்தமான மறுப்புக் கட்டுரையை மூன்று தொடர்களாக வெளியிட்டிருந்தார். அவரது மறுப்பு அவரது ஆய்வைப் போலவே அபத்தமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் அந்த மூன்று தொடர்களுக்கும் தக்க […]
வெள்ளிக்கிழமை கஹ்பு ஓதுவது சிறப்பா? ஆய்வு
வெள்ளிக்கிழமை கஹ்பு ஓதுவது சிறப்பானதா? கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்பு குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் வெள்ளிக் கிழமை தோறும் கஹ்பு அத்தியாயம் ஓத வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும். கியாமத் நாளில் ஒளி? யார் கஹ்ஃப் அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்குக் கியாம நாளில் அவருடைய இடத்திலிருந்து மக்கா வரை ஒளி உண்டாகும். யார் அதனுடைய இறுதி பத்து வசனங்களை ஓதிய பின்னர் தஜ்ஜால் வந்தால் அவர் மீது சாட்டப்பட்டாது. (அதாவது தஜ்ஜாலின் […]
மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா?
மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா? 450 و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاوِلِينِي الْخُمْرَةَ مِنْ الْمَسْجِدِ قَالَتْ فَقُلْتُ إِنِّي حَائِضٌ فَقَالَ […]
ஜனநாயகம் நவீன இணை வைத்தலா?
ஜனநாயகம் நவீன இணை வைத்தலா? பி. ஜைனுல் ஆபிதீன் இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது. மன்னராட்சி முறையில் மன்னர்கள் இறந்த பின் அவர்களது வாரிசுகள் மன்னராகத் தேர்வு செய்யப்படுவார்கள். மன்னராட்சித் தத்துவத்தில் தங்கள் ஆட்சியாளரைத் தேர்வு செய்வதில் குடிமக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் ஜனநாயகம் என்றழைக்கப்படும் மக்களாட்சித் தத்துவத்தில் முழுக்க முழுக்க […]
தாடியின் நீளம் ஓர் ஆய்வு
தாடி – ஓர் ஆய்வு தாடி வைப்பது நபிவழி என்று மக்கள் பரவலாக அறிந்திருக்கிறார்கள். ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), (புகாரி: 5892) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கி)களுக்கு மாறு […]
இரண்டாம் ஜமாஅத் ஓர் ஆய்வு
இரண்டாம் ஜமாஅத் ஓரு விளக்கம் ஹதீஸ்களில் இல்லாத கருத்தை ஹதீஸ்களில் உள்ளது போல் காட்டுவதில் கைதேர்ந்தவரான, இலங்கையைச் சேர்ந்த நவ்பர் என்பார், ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது என்று வாதிட்டு வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக்குப் பதில் சொல்ல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஞானம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதால் முன்னுரிமை கொடுத்து இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம். இது குறித்து மவ்வலி கே.எம். அப்துந்நாஸிர் ஆய்வு செய்து வைத்திருந்தார். அதை […]