Author: Mukthiyaar Basha

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஒளியில் அமல்களின் சிறப்புகள்

அமல்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் 2000 ஆண்டுவாக்கில் அல்முபீன் என்ற மாத இதழில் தொடர் வெளியானது. இந்தத் தொடர் அப்போது எழுதப்பட்டதற்கு அடிப்படையான சில காரணங்கள் இருந்தன.   1. தப்லீக் ஜமாஅத்திலிருந்து அமல்களின் சிறப்புகள் என்ற நூல் பல பாகங்களாக வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் அவை அனைத்தும் பலவீனமான ஹதீஸ்களின் கிடங்காக அமைந்திருந்தன. அது மட்டுமல்லாமல் இஸ்லாம் கூறும் ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கின்ற, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு உலை வைக்கின்ற பெரியார்களின் கதைகள், கற்பனைகள் அந்த […]

நபித்தோழர்களின் கேள்விகளும் நபிகள் நாயகத்தின் பதில்களும்

முன்னுரை  கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! கியாமத் நாள் வரை தோன்றக் கூடிய மனிதத் தலைமுறைகளிலேயே சிறந்த தலைமுறை நபி (ஸல்) அவர்களின் தலைமுறையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைநம்பிக்கை கொண்ட சமுதாயத்திற்கு மிகச் சிறந்த வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்களும் அதனை உண்மையாக நம்பி பின்பற்றினார்கள். இதன் காரணமாகத்தான் அந்தத் தலைமுறை மிகச் சிறந்த தலைமுறையாக ஆனார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் வாழ்ந்த அருமை ஸஹாபாக்கள் மறுமையில் வெற்றி […]

வலைதளங்களில் பரவும் பொய்யான ஹதீஸ்கள்

வலைதளங்களில் பரப்பப்படும் பலவீனமான செய்திகளில் ஒன்றுதான் பின்வரும் செய்தியாகும். “லா இலாஹ இல்லல்லாஹுல் மலிகுல் ஹக்குல் முபீன்” என்பதை ஒரு நாளைக்கு மூன்று தடவை ஓதுங்கள். அவ்வாறு ஓதினால், 1. வறுமை வராது, 2. கப்ரின் கேள்வி கணக்கு எளிதாக இருக்கும், 3. குடும்பத்தில் பிரச்சனை வராது, 4. சொர்க்கம் கடமையாகிறது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இச்செய்தியை பரப்பி வருகிறார்கள். இந்தச் செய்தி மேற்குறிப்பிடப்பட்டதைப் போன்று எங்கும் கிடைக்கப் பெறவில்லை. அதே சமயம், மூன்று […]

மனிதகுலத்தின் முன்னோடி நபிகள் நாயகம்

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பார்கள். குழந்தை, இளமை, முதுமை என்ற மூன்று பருவத்தைச் சந்திக்கின்ற மனிதன் தன்னைச் சுற்றி பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என மற்றவர்களின் உதவியோடும் ஒத்துழைப்போடும் தனது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டும் நிலையில் இருக்கிறான். அதன் காரணமாக மனிதன் அனைவரிடமும் அனுசரணையாக கண்ணியமான முறையில் வாழ வேண்டிய நிலை அவனுக்கு இருக்கிறது. பெற்றோருக்குச் சிறந்த பிள்ளையாகவும் மனைவிக்குச் சிறந்த கணவனாகவும் பிள்ளைகளை நல்வழியில் நடத்தும் தந்தையாகவும் ஒரு சமூகத்தில் மக்களை […]

இணைவைப்பிற்கு மன்னிப்பு உண்டா? – ஆய்வுக் கட்டுரை

இணைவைப்பிற்கு மன்னிப்பு உண்டா? அல்லாஹ்வுக்கு இணைவைப்பது மாபெரும் குற்றம் என்பதிலும் இணைவைத்த நிலையில் மரணித்தோருக்கு அவர்கள் தவ்பா செய்யாமல் அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதிலும் முஸ்லிம்கள் மத்தியில் எந்த வித கருத்து வேறுபாடுமில்லை. தர்கா வழிபாடு செய்பவர்கள் கூட இதில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்கின்ற காரியங்கள் இணைவைப்பு என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்களே தவிர இணைவைப்பிற்கு மன்னிப்பில்லை என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டே உள்ளார்கள். ஆனால் ஒருசிலர் இணைவைப்பையும் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் என்கிறார்கள். […]

முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-7

முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-7 இன்னா செய்தவருக்கும் இரக்கம் தாயிப் நகர தலைவர்களிடமும் மக்களிடமும் இஸ்லாத்தை நபியவர்கள் எடுத்து சொன்னார்கள். தாயிப் நகர தலைவன் நபியவர்களை அவமானப்படுத்தி விரட்டியடித்தான். நபியவர்கள் மனமுடைந்து போனார்கள். உண்மையை ஏற்பது  உலகத்திற்கு கசப்பாகத்தானே இருக்கிறது ! அதை பற்றி நபியவர்கள் சொல்வதை கேளுங்கள்: “…ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ எனுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் […]

மார்க்கக் கல்வி மதிப்பிழந்தது ஏன்?

(அல்லாஹ்) தான் நாடியோருக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன்: 2:269) ➚ இந்த வசனம் கல்வியின் மதிப்பை மிகச் சிறப்பாகத் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இந்தக் கருத்தைப் பிரதிபலிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். நான் விநியோகிப்பவன் தான். அல்லாஹ்வே வழங்குகிறான். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் […]

நபி மீது பொய்! நரகமே பரிசு!

நபி மீது பொய்! நரகமே பரிசு! இது மவ்லிது மாதம்! இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள்! சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் சோறு, கறிச் சாப்பாடு! பள்ளிவாசல்களிலும், பஜார் திடல்களிலும் பன்னிரெண்டு நாட்கள் தொடர் பயான்கள்! மீலாது மேடைகள்; ஊர்வலங்கள். ஊர்வலத்தில் செல்வோர் “ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்; அல்லாஹ் இஸ் சூப்பர் ஸ்டார்’ என்று கோஷங்கள் எழுப்புவர். அருகில் உள்ள பள்ளியில் பாங்கொலி எழுப்பப்படும். ஆனால் ஊர்வலத்தில் செல்வோர் தொழ மாட்டார்கள். […]

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று

ஊறு விளைவிக்கும் ஊர்ப்பற்று இறைச்செய்தி மட்டுமே இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரம். அதன் இரு பகுதிகளாக இருக்கும் குர்ஆனையும் நபிமொழி களையும் முறையாக முழுமையாகப் பின்பற்றும் போதுதான், ஈருலகிலும் வெற்றி பெற முடியும். இதன்படி நாம் வாழும்போது, நமக்கு பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகள் வரும். இதை ஏற்றுக் கொள்ளாத நபர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும். நம்மை எதிர்த்து நிற்பவர்களின் பட்டியலில் பெற்றோர், நண்பர்கள், சொந்தபந்தங்கள், அண்டை வீட்டார் என்பதற்கும் மேலாக, சில நேரங்களில் ஒட்டுமொத்த ஊரே […]

படைத்தவன் ஏற்படுத்தும் பாதிப்பும் படைப்பினங்களால் ஏற்படும் பாதிப்பும்

படைத்தவன் ஏற்படுத்தும் பாதிப்பும் படைப்பினங்களால் ஏற்படும் பாதிப்பும் அல்லாஹ் ஒருவன்தான் உண்மை யான கடவுள். அல்லாஹ்வைத் தவிர உண்மையான கடவுள் வேறு யாரும் கிடையாது என்பதற்குத் திருமறைக் குர்ஆன் எடுத்து வைக்கும் முதன்மையான ஆதாரங்களில் ஒன்று “அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் கற்பனைக் கடவுள்களால் நன்மையும் செய்ய முடியாது, தீமையும் செய்ய முடியாது” என்பதாகும். இதனை திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் எடுத்துரைக்கிறது. “அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?” என்று கேட் பீராக! அல்லாஹ்வே செவியுறுபவன்; அறிந்தவன் (அல்குர்ஆன்: […]

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம்

இணை வைப்பின் வாசலை அடைத்த இஸ்லாம் இறைவனால் மன்னிப்பு வழங்கப் படாத குற்றம் உலகில் உண்டென்றால் அது இணைவைப்பாகும். அல்லாஹ்வுடைய இடத்தில் வேறு யாரைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அதை அல்லாஹ் அறவே வெறுக்கின்றான். மனிதர்கள் இறைவனுக்குச் சமமாக யாரையும் கருதுவதை அல்லாஹ் விரும்பவில்லை. மாறாகக் கடும் கோபம் கொள்கின்றான். ஆகையால் தான் இணை வைப்பிலேயே மரணித்தவர்களுக்கு இறைவன் நிரந்தர நரகைப் பரிசாக அளிக்கின்றான். இணைவைப்பை இல்லாதாக்கு வோம் என முழக்கத்துடன் தனது பயணத்தைத் துவக்கிய ஏகத்துவம் […]

தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்

அறிந்து கொள்வதன் அவசியம் இன்றைக்கு இஸ்லாமியர்கள் பல அமைப்பினராகவும், பல்வேறு கொள்கையினராகவும் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு அமைப்பினரும், கொள்கையினரும் தாங்கள் செல்லும் வழியே மேலானது எனவும் போதிக்கின்றனர். ஆனால் குர்ஆனும், நபி வழியும் எதனை மேலானது என்றும், எது இம்மையிலும், மறுமையிலும் நமக்குப் பலன் தரக்கூடியது என்றும் வலியுறுத்துகிறதோ அதற்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் எதனை முதன் முதலாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் மூலம் நாம் காண்போம். இதோ அல்லாஹ் கூறுகிறான். […]

இணைவைப்பே தீமைகளின் தாய்!

இணைவைப்பே தீமைகளின் தாய்! ஒரே ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான். அவன் எந்தவொரு தேவையும் அற்றவன்; எந்தப் பலவீனமும் இல்லாதவன். அவனே அனைத்து ஆற்றலும் அதிகாரமும் கொண்டவன். அவனுக்கு ஒப்பாகவோ, இணையாகவோ எதுவுமில்லை; எவருமில்லை. இவை கடவுளுக்குரிய முக்கிய இலக்கணமாக இஸ்லாம் கூறுகிறது. இத்தகைய ஏக இறைவனிடமிருந்து மனிதகுலத்திற்கு வழங்கப்பட்டதே இஸ்லாம் மார்க்கம். இதன் கொள்கை கோட்பாடுகளும், சட்ட திட்டங்களுமே மனித சமுதாயத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உகந்தவை. இதற்கு மாறாக, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக நம்பும் […]

13) பெண்களின் ஆடை அணிகலன்கள்

வண்ண ஆடைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நிறங்களிலும் ஆடை அணிந்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்துள்ளதாக(புகாரி: 166)வது ஹதீஸில் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்துள்ளதாக(புகாரி: 376)வது ஹதீஸில் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்பு நிற  ஆடை அணிந்துள்ளதாக(புகாரி: 5823, 5824)வது ஹதீஸ்களில் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பச்சை நிற  ஆடை அணிந்துள்ளதாக(புகாரி: 5825)வது ஹதீஸில் உள்ளது. […]

12) ஸ்கலிதம் ஏற்பட்டால் குளிப்பு கடமை

12) ஸ்கலிதம் ஏற்பட்டால் குளிப்பு கடமை கனவு காண்பதன் மூலம் உறக்கத்தில் விந்து வெளிப்படுவதற்கு ஸ்கலிதம் என்று சொல்வார்கள். இது ஆண்களுக்கு அதிகம் ஏற்படும். அரிதாக பெண்களுக்கும் ஏற்படும். இது வெளிப்பட்டால் குளிப்பது கடமையாகி விடும். عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: جَاءَتْ أَمُّ سُلَيْمٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنَّ اللهِ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ، فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا […]

11) தொடர் உதிரப்போக்கு

11) தொடர் உதிரப்போக்கு மாதவிடாய் மாதாமாதம் குறிப்பிட்ட நாட்கள் இரத்தம் வெளிப்பட்டு நின்று விடும். பின்னர் அடுத்தடுத்த மாதங்களிலும் இப்படி ஏற்படும். அதாவது மாதத்தில் சில நாட்கள் இரத்தப் போக்கும் பல நாட்கள் இரத்தப் போக்கு இல்லாமலும் இருக்கும். இது தான் மாதவிடாயில் சேரும். சில பெண்களுக்கு மாதம் முழுவதும் இரத்தப் போக்கு நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். தூய்மையாகுதல் என்பதே இவர்களுக்கு ஏற்படாது. இது மாதவிடாயில் சேராது. உதிரப் போக்கு எனும் நோயாகும். இது லட்சங்களில் […]

10) உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையாகும்

உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையாகி விடும். விந்து வெளிப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்குறியும், பெண்குறியும் சந்தித்துவிட்டாலே இருவரும் குளிப்பது கடமை. عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ، ثُمَّ جَهَدَهَا فَقَدْ وَجَبَ الغَسْلُ நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்துவிட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகிவிடுகிறது. (விந்து வெளியாகாவிட்டாலும் […]

9) மாதவிடாய்ச் சட்டங்கள்

9) மாதவிடாய்ச் சட்டங்கள் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அவர்கள் செய்யத்தக்க காரியங்களும், செய்யக் கூடாத காரியங்களும் இஸ்லாமில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.   மாதவிடாயின் போது தொழக் கூடாது நோன்பு நோற்கக் கூடாது    فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي மாதவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டு விடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுது கொள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். […]

8) பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

8) பெண்களுக்கு ஜனாஸா தொழுகை உண்டா? المستدرك على الصحيحين للحاكم   – ، أَنَّ أَبَا طَلْحَةَ دَعَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عُمَيْرِ بْنِ أَبِي طَلْحَةَ حِينَ تُوُفِّيَ، فَأَتَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى عَلَيْهِ فِي مَنْزِلِهِمْ، فَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو طَلْحَةَ وَرَاءَهُ وَأُمُّ سُلَيْمٍ وَرَاءَ أَبِي طَلْحَةَ، […]

7) பெண்களுக்கு தனி பயான் செய்யலாமா?

பெண்களுக்கு மட்டும் தனியாக மார்க்க உரை நிகழ்ச்சி நடத்தலாம்.  قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَشْهَدُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَصَلَّى قَبْلَ الخُطْبَةِ، فَرَأَى أَنَّهُ لَمْ يُسْمِعِ النِّسَاءَ، فَأَتَاهُنَّ وَمَعَهُ بِلاَلٌ نَاشِرَ ثَوْبِهِ، فَوَعَظَهُنَّ، وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ பெருநாள் உரை பெண்களுக்கு கேட்கவில்லை என்பதை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு ஓர் உரை நிகழ்த்தினார்கள். (புகாரி: […]

6) ஆண்களுடன் பெண்கள் பேசலாமா?

மஹ்ரமாக இல்லாத ஆண்களுடன் பெண்கள் பேசக் கூடாது. பெண்களின் குரலை ஆண்கள் கேட்கக் கூடாது என்ற நம்பிக்கை சில முஸ்லிம்களிடம் உள்ளது. இந்த நம்பிக்கை முற்றிலும் தவறாகும். ஆணாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஏராளமான பெண்கள் கேள்வி கேட்டுள்ளனர். பெண்கள் கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருக்கும் காலம் இத்தா காலமாகும். இந்தக் கால கட்டத்தில் பெண்களுடன் பேசலாம் என்று ஆண்களுக்கு அல்லாஹ் அனுமதிக்கிறான். (காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடையாக மணம் பேசுவதோ […]

5) ஆண்களுக்கு சலாம் கூறலாமா

ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் கூறலாம். ஆண்கள் பெண்களுக்கு ஸலாம் கூறுவதற்கும் பெண்கள் ஆண்களுக்கு ஸலாம் கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. பெண்களின் குரலை ஆண்கள் கேட்கக் கூடாது என்று சிலர் கூறுவது ஆதாரமற்ற கூற்றாகும். 938 – عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا، فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ، فَتَجْعَلُهُ فِي […]

4) ஆண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

கணவனை மனைவி தொட்டாலும், மனைவியை கணவன் தொட்டாலும் அல்லது வேறு ஆண்களைப் பெண்கள் தொட்டாலும், வேறு பெண்களை ஆண்கள் தொட்டாலும் உளூ நீங்கி விடும் என்று ஷாபி மத்ஹபில் சொல்லப்பட்டுள்ளது. ஹஜ்ஜுக்குச் செல்லும் போது, தவாப் செய்யும் போது ஆண்கள் மீது பெண்களின் கைகள் படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு உளூ நீங்கி விடும். எனவே ஹஜ்ஜுக்கு போகும் போது ஹனபியாக மாறிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஹஜ் நிறைவேறாமல் போகும் என்றெல்லாம் பத்வாக்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு அடிப்படையாக […]

3) பெண்கள் கப்ரு ஜியாரத் செய்யலாமா?

பெண்கள் கப்ரு ஜியாரத் செய்யலாமா? மண்ணறைகளுக்குச் சென்று வரும் பெண்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி), மற்றும் ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) ஆகிய மூவர் வழியாக இந்தக் கருத்தில் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்படும் அறிவிப்பு பலவீனமானதாக உள்ளது. ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்களின் வழியாக வரும் […]

2) பெண்களுக்கான தொழுகைச் சட்டங்கள்

பெண்களுக்கான தொழுகைச் சட்டங்கள் தொழுகையின் பெரும்பாலான சட்டங்கள், தொழும் முறை ஆகியவை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவையாகும்.  وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு நீங்களும் தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (புகாரி: 631) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படித் தொழுதார்களோ அப்படித்தான் ஆண்களும் பெண்களும் தொழ வேண்டும். எனது மனைவிமார்கள் தொழுவது போல் பெண்கள் தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனி வழியைக் […]

1) முன்னுரை

இஸ்லாம் மார்க்கத்தின் பெரும்பாலான சட்டங்கள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானவை என்றாலும் பெண்களுக்கு மட்டும் தனியான சட்டங்களும் உள்ளன. அந்தச் சட்டங்களை திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் அடிப்படையில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக இந்நூல் வெளியிடப்படுகிறது. தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் பெண்களுக்கான சட்டங்கள் இல்லற வாழ்க்கை குறித்த பெண்களுக்கான சட்டங்கள் பெண்களின் ஆடைகள் அலங்காரங்கள் ஆபரணங்கள் குறித்த சட்டங்கள் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள் ஆகிய நான்கு தலைப்புகளுக்குள் பெண்களுக்கான அனைத்துச் சட்டங்களையும் இந்நூலில் தொகுத்தளித்துள்ளோம்.

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-8

ஆலோசனை (மஷ்ஷூரா) இன்று பல நிர்வாகங்களில் உள்ள பிரச்சனை என்னவென்றால், “என்னவெல்லாமோ நடக்கிறது; எனக்கு ஒன்றும் தெரியாது, எனக்கு ஒன்றும் சொல்லப்படவில்லை” என சக நிர்வாகிகளைக் குறை கூறுவது மலிந்து கிடக்கும். ஒரு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் நிர்வாகிகள் அனைவரும் அமர்ந்து ஆலோசனை செய்து செயல்படுத்த வேண்டிய காரியங்கள் எவை? அவசரத் தேவைகளைக் கருதி, தலைவர் தானாக எதை எதை எல்லாம் முடிவு செய்து கொள்ளலாம்? ஆகிய இரு விஷயங்கள் பற்றிய தெளிவு இல்லாமை தான் இதற்குக் காரணம். இவை […]

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-7

கட்டளையிடும் திறன் ஒரு நிர்வாகத்தில் ஒரு தலைவரை விட அல்லது வேறொரு முன்னிலை நிர்வாகியை விட செல்வத்தில், பலத்தில், அறிவில், அனுபவத்தில் சிறந்தவர்கள் இருப்பார்கள். இவர்களது சிந்தனை ஓட்டமும் நடவடிக்கைகளும் அவர்களது சிறப்புத் தகுதிகளை, சிறப்பு அம்சங்களைப் பிரதிபலிக்கும். இது நிர்வாகத்தில் ஒரு சாராரை உயர்வு மனப்பான்மையுடனும் இத்தகுதிகள் இல்லாதவர்களை தாழ்வு மனப்பான்மையுடனும் செயல்பட வைக்கும். இது நிர்வாகத்தின் அங்கத்தினர்களிடமும் மற்ற உறுப்பினர்களிடமும் ஒரு பிளவை ஏற்படுத்தி, நாளடைவில் பிரிவினை எற்படவும் வழிவகுக்கும். ஆகையால் ஒரு தலைவர், […]

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-6

குழுப்பணியின் அவசியம் ஒருவர் மிகச் சிறந்த திறமைசாலியாக இருப்பார். தனியாக அவரது பணிகளைச் சிறப்பாகச் செய்வார். அதே பணியை விரைந்து முடிப்பதற்காக அல்லது அதிகப்படுத்துவதற்காக அந்தத் துறை சார்ந்த ஐந்து பேருடன் சேர்ந்து அதே வேலையைச் செய்யச் சொன்னால் மற்றவர்கள் மீது புகார் கூறுவார். இது நமக்கு ஒத்து வராது என்பார். இப்படித் தான் இன்று நம்மில் பெரும்பாலோர் அவதிப்படுகிறார்கள். குழு உணர்வு நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. நாம் சார்ந்திருக்கும் ஒரு நிறுவனத்தை, இயக்கத்தை, குடும்பத்தை மற்றவர்கள் […]

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-5

தொடர்புத் திறன் ஒரு நிர்வாகம் வெற்றிகரமாக இயங்குவதற்கு அந்நிர்வாகத்தின் அங்கங்களான நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய ஆளுமைப் பண்புகள் பற்றிப் பார்த்தோம். எப்படி ஒரு தனி மனிதர் தன்னளவில் சிறந்த பண்பாளராக, ஒழுக்கம் உடையவராக, திறமைகள் நிறைந்தவராகத் திகழ வேண்டுமோ அது போல் அவர் பிறரிடம் உள்ள தொடர்புகளிலும் சிறந்து விளங்க வேண்டும். அந்த அடிப்படையில் தற்கால நிர்வாகவியல் கல்வியின் இன்னொரு பகுதியான தொடர்புத் திறன் பற்றி இனி பார்ப்போம். ஒரு நிர்வாகத்தின் வெற்றி என்பதை, அந்நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் […]

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-4

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-4 முதிர்ச்சி எதையும் சிந்திக்காமல் பேசுவது, சின்னச் சின்ன விஷயங்களில் மிகுந்த அக்கரை காட்டுவது, சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றவர்களின் தூண்டுதலால் செயலில் இறங்குவது, தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அவசரப்படுவது போன்றவை முதிர்ச்சி இல்லாதவர்களின் வெளிப்படையான அடையாளங்கள். ஒரு மனிதனின் உடல் முதிர்ச்சியடைந்து, அறிவு முதிர்ச்சியடையவில்லையானால் மற்றவர்களின் உதவியுடன் தான் வாழ முடியும். அறிவு முதிர்ச்சி என்பது நடத்தையில் முதிர்ச்சி; சிந்திப்பதில் முதிர்ச்சி; மனோநிலை முதிர்ச்சி. அ) நடத்தையில் முதிர்ச்சி எதை […]

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-3

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-3 அன்றாட நடவடிக்கைகளின் ஒழுங்கு சிலரை பார்த்தால் அவர்கள் குடியிருக்கும் வீடு அழுக்கடைந்து போய், எந்தப் பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. ஒரு பொருளை வைத்தால் தேவைக்குக் கிடைக்காது. கண்ட இடமெல்லாம் பொருட்கள். ஒரு நாளைக்கு மேசை மேல் இருக்கும்; ஒரு நாளைக்கு அலமாரியில் இருக்கும். காலையில் ஒரு நாள் 7 மணிக்கு எழுவார். ஒரு நாள் 5 மணிக்கு! ஒரு நாள் 6 மணிக்கு! உறங்கச் செல்வதும் இப்படித் தான். […]

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-2

இஸ்லாமிய நிர்வாகம் முன்மாதிரி  நிர்வாகி கைஸான் எனும் ஜப்பானிய நிர்வாகவியல் தான் உலகில் முறைப்படுத்தப்பட்ட கல்வியாக முதன்முதலில் வரையறுக்கப்பட்டது என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இஸ்லாம், நிர்வாகவியலை தனித் துறையாக, கல்வி முறையாக அதை முறைப்படுத்தி உலகிற்குத் தரவில்லை என்றாலும் 1450 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்கள் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிய நிர்வாக அமைப்புகள் இன்று வரை உலகில் நடைமுறையில் இருப்பதைக் காண முடிகின்றது. ஒரு நாட்டை நிர்வாகம் […]

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-1

நிர்வாகவியல் ஓர் இஸ்லாமியப் பார்வை-1 உலகத்திலேயே மிக நீளமான ஆறு ஓடும் கண்டம் எது? உலகத்திலேயே மிக அடர்ந்த காடுகள் நிறைந்த கண்டம் எது? அதிகமான தங்கச் சுரங்கங்கள் நிறைந்த கண்டம் எது? மண்ணைச் சலித்தாலும் தங்கம் கிடைக்கும் கண்டம் எது? பதில் எல்லோருக்கும் தெரியும். ஆப்ரிக்கா. ஆனால் உலகத்திலேயே அதிக வறுமை நிறைந்த கண்டம் எது? அதுவும் ஆப்ரிக்கா தான். உலகத்திலேயே அதிகம் சுனாமி வரும் நாடு எது? அதிகம் நில நடுக்கம் ஏற்படும் நாடு […]

யாஸீன் அத்தியாயத்தின் சிறப்புகள்

அல்லாஹ் தஆலா இந்தச் சமுதாயத்திற்கு வழங்கியிருக்கும் அருட் கொடைகளில் மிகப்பெரிய அருட் கொடையாக திருக்குர்ஆன் திகழ்கிறது. அந்தக் குர்ஆனை ஓதுபவர்களுக்கு பல சிறப்புகளையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “யார் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு சொல்லை ஓதுவாரோ அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போல் பத்து மடங்கு வரை உண்டு. “அலிஃப் லாம் மீம்’ என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிப் […]

சிறிய செய்திகள் மனனம் செய்வோம்-1

சிறார்கள் மனனம் செய்ய வேண்டிய சிறிய செய்திகள் உங்களில் சிறந்தவர் யார்?  خَيْرُكُمْ  مَنْ  تَعَلَّمَ  الْقُرْآنَ  وَعَلَّمَهُ குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர். ஆதாரம்:(புகாரி: 5027) 2) தொழுகை  اَلصَّلاَةُ  نُوْرٌ தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும் ஆதாரம்:(முஸ்லிம்: 381) 3) நோன்பு சிறப்பு  اَلصِّيَامُ جُنَّةٌ நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். ஆதாரம்:(புகாரி: 1894) 4) செய்திகளில் சிறந்தது எது?  إِنَّ خَيْرَ  الْحَدِيْثِ  كِتَابُ  أللّٰهِ செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். ஆதாரம்:(முஸ்லிம்: 1573) 5) […]

முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-6

முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-6 வழி பிறந்தது நபியவர்கள் தன் தோழர்களுக்காக கவலைப்பட்டார்கள். மக்காவாசிகளின் இந்த அராஜகங்கள் தொடர்வது நபியவர்களுக்கு கவலையளித்தது. தன் தோழர்களின் காயங்களுக்கு நபியவர்கள் ஆறுதலளித்தார்கள். இந்த குரைஷிகளை எவ்வாறு தான் நிறுத்துவது.?தன்னை தாக்குவதை நபியவர்கள் சகித்தார்கள். ஒரு முறை கஃபா பகுதியில் இறைவனை வணங்கும் போது நபியின் கழுத்தில் ஒட்டகத்தின் மலக்குடலை கொண்டு வந்து போட்டான் உக்பா என்ற அறிவிலி. தன் மகள் பாத்திமா (ரலி ) வந்து அதை  அப்புறப்படுத்தும் வரை […]

முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-5

முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-5 பதறவைத்த பிரச்சாரம் குரைஷிகள் கடும் ஆத்திரம் கொண்டனர். முஹம்மதின் பிரச்சாரம்  இவர்களை என்ன செய்துவிடப்போகிறது? அப்படியென்ன அடிநாதத்தை பெயர்த்தெடுக்கிற பிரச்சாரத்தை செய்துவிட்டார்? ஒரு தெய்வ வழிபாட்டால் குரைஷிகளுக்கு என்ன நஷ்டம்? இதை தெரிந்து கொண்டால் தான் அவர்களுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் வந்தது என்று புரியும். கஃபாவிலும் அதைச்சுற்றிலும் ஏராளமான சிலைகள் வழிபடப்பட்டு வந்தன என்பதை நாம் கடந்த தொடரில் கண்டோம்.. அந்த சிலைகள் தான் இவர்களது மூலதனம். சிலைகள் இருந்தால் […]

முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-4

முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-4 குன்றின் மீது ஒரு குரல்  இறைவன் பணித்த தூதுப்பணியை நபியவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். முதன் முதலில் இஸ்லாத்தை தழுவும் பாக்கியம் கதீஜா(ரலி) அவர்களுக்கு தான் கிட்டியது. பிறகு நபியவர்களின் நெருங்கிய தோழர் அபுபக்கர்(ரலி) ..பிறகு ஒரு சில நெருங்கிய நண்பர்கள் முஸ்லிமாயினர். நபியவர்களின் குணம் தெரிந்த அவர்களால் அவரை நிராகரிக்க முடியவில்லை,  ஏற்றுக்கொண்டார்கள். ‘முஸ்லிம்’ என்றால் இறைவனுக்கு கட்டுபட்டவர் என்று பொருள். விஷயம் பரவியது,பிரமுகர்கள் பலரும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். முஹம்மதுக்கு இறைவனிடமிருந்து […]

முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-3

முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-3 இறைவனின் தூதரா? திடீரென்று வந்து ஒருவர் “படி ” என்றதும் நபியவர்கள் குழப்பமடைந்தார்கள். நான் படிக்கத்தெரிந்தவன் இல்லை என்றார்கள். மீண்டும் அவர் படி என கூற நபியவர்கள் மீண்டும் அதே பதிலை கூறினார்கள். வந்தவர் நபியவர்களை இறுக்க அணைத்து திருமறையின் 96வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வரிகளை கற்று தருகிறார். அதாவது…” اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌‏ (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக. خَلَقَ […]

முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-2

முஹம்மது(ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-2   பிறந்ததும் , வளர்ந்ததும் குழந்தை பிறந்ததும் அனைவரும் கொண்டாடினர். பாட்டனாருக்கு பெரும் சந்தோஷம், பெரியப்பா சித்தப்பாக்களுக்கு அதை விட சந்தோஷம் தந்தை இல்லா குறையை போக்கும் விதமாக நன்றாகவே பார்த்துக்கொண்டனர். முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஆறுவயதானபோது அவரது தாயார் ஆமினாவும் மரணித்து விட்டார். அநாதையான அந்த குழந்தை பாட்டனாரிடம் வளர்ந்தது, ரொம்ப செல்லமாக வளர்ததார் தாத்தா அப்துல் முத்தலிப். குழந்தையை வளர்ப்பது அவருக்கு இன்பமாகவே இருந்தது. சிறுது காலம் கடந்தது ..தாத்தாவும் […]

முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-1

முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு-1   மாநகரம் மக்கா  அரேபிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் மக்கா என்னும் வணிக நகரம். பாலைவனமாய் இருந்தாலும், இடையில் ஒரு பாரம்பரிய கட்டிடத்தை(கஅபாவை) தாங்கிநிற்கும் ஒரு பண்டைய கால நகரம் அது.. அந்த கட்டிடம் முழுவதையும் ஏறக்குறைய முன்னூற்றைம்பது சிலைகள் ஆக்கிரமித்திருந்தன.. தினம் தினம் வழிபாடு செய்யப்பட்டு திருவிழா கொண்டாட ஆண்டு முழுவதும் அந்நகரம் திருவிழா கோலம் தான். ஒரு நாள் திருவிழா என்றாலே நம்மூர் களைகட்டும்..அங்கு சொல்ல வேண்டியதே […]

முல்க் அத்தியாயத்தின் சிறப்புகள்

திருக்குர்ஆன் பல சிறப்புகளை உள்ளடக்கிய இறைவேதமாகும். அதில் இடம் பெற்றிருக்கும் கருத்துக்கள் மிகச் சிறந்தவை; ஆழமான கருத்துக்களைக் கொண்டவை. அவற்றில் சில அத்தியாயங்களை ஓதுபவருக்குப் பல சிறப்பு நன்மைகள் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் இருந்தாலும் பல அத்தியாயங்களை சிறப்பித்து வரும் பெரும்பாலான செய்திகள் ஆதாரம் அற்றவையாகவே உள்ளன. இந்த ஆதாரமற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பலர் அமல் செய்து வருகின்றனர். இவர்களுக்கும் புதிதாக இந்தச் செய்திகளைக் காண்பவர்களுக்கும் […]

கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள்

திருக்குர்ஆனின் 18வது அத்தியாயமான கஹ்ஃப் அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக இந்தத் தொடரில் காண இருக்கிறோம். இந்த அத்தியாயம் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திகளும் பலவீனமான செய்திகளும் இடம் பெற்றுள்ளன. எனினும் ஆதாரமற்ற செய்திகளே அதிகம். அவற்றின் முழு விவரத்தைக் காண்போம். வானவர்கள் விரும்பும் அத்தியாயம் பராவு (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்கஹ்ஃபு  எனும் (18 வது) அத்தியாயத்தைத் தமது இல்லத்தில் அமர்ந்து ஓதிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை […]

துகான் அத்தியாயத்தின் சிறப்புகள்

பாவமன்னிப்பு கிடைக்கும் அத்தியாயம் “யார் (வெள்ளிக் கிழமை) இரவில் ஹாமீம் துகானை ஓதுகிறாரோ அவருக்காக எழுபதாயிரம் வானவர்கள் பாவ மன்னிப்புத் தேடுவார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்:திர்மிதி-2813 இந்த செய்தியில் இடம் பெறும் நான்காவது மற்றும் ஆறாவது அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள் ஆவார்கள். இச்செய்தியின் நான்காவது அறிவிப்பாளர் உமர் பின் அபீகஸ்அம் என்பவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள், இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். அபூஸுர்ஆ அவர்களும் இவரை […]

வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள்

வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் வாகிஆ அத்தியாயத்தின் சிறப்புகள் தொடர்பாக வரும் ஹதீஸ்களின் தரத்தைப் பற்றிப் பார்ப்போம். முழுமையான கல்வி நிறைந்த அத்தியாயம் “ஆரம்பமானவர்களின் கல்வியையும், இறுதியானவர்களின் கல்வியையும் இவ்வுலக, மறு உலகக் கல்வியையும் அறிவது யாருக்கு மகிழ்ச்சி தருமோ அவர்கள் வாகிஆ அத்தியாயத்தை ஓதட்டும்” என்று மஸ்ரூக் என்பவர் கூறினார். நூல்: முஸன்னப் இப்னு அபீ ஸைபா (பாகம்: 7 பக்கம்: 148) ஹில்யத்துல் அவ்லியா, பாகம்: 2, பக்கம்: 95) இந்த ஹதீஸை மஸ்ரூக் என்பவர் […]

ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புகள்

ஃபாத்திஹா அத்தியாயத்தின் சிறப்புகள் திருக்குர்ஆனில் யாஸின், வாகிஆ, முல்க் போன்ற அத்தியாயங்களின் சிறப்புகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்களில் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் இருப்பதைப் போன்று இந்த அத்தியாயம் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. எனினும் இந்த அத்தியாயம் தொடர்பாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை முதலில் பார்த்து விட்டு பலவீனமான செய்திகளைப் பின்னர் பார்க்கலாம்.   தேள் கடிக்கு மருந்து நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள்.  ஆனால் அந்தக் கூட்டத்தினர் […]

ஆயத்துல் குர்ஸீ சிறப்புகள்

ஆயத்துல் குர்ஸீ சிறப்புகள் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 255 வசனமாக இடம் பெறும் ஆயத்துல் குர்ஸி தொடர்பாக வந்துள்ள ஆதாரமற்ற செய்திகளை பாப்போம். வசனங்களின் தலையானது ஒவ்வொரு பொருளுக்கு ஒரு தலைமை உள்ளது. திருக்குர்ஆனின் தலைமையான அத்தியாயம் பகரா ஆகும். மேலும் இந்த அத்தியாயத்தில் திருக்குர்ஆனின் வசனங்களின் தலைமை வசனம் உள்ளது. அதுதான் ஆயத்துல் குர்ஸியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி-2803 இந்த செய்தி ஹாகிம் (பாகம் 2 பக்கம் 285 286) […]

அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு

அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பு திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களுக்கு சில குறிப்பிட்ட சிறப்புகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான “பகரா’ ஆகும். இந்த அத்தியாயம் தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான செய்திகளை முதலில் காண்போம். விரண்டோடும் ஷைத்தான்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை ஓதல் நடைபெறாத)சவக் குழிகளாக ஆக்கி விடாதீர்கள்! அல்பகரா எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான். அறிவிப்பாளர்: அபூஹரைரா(ரலி) […]

« Previous Page