Author: Mukthiyaar Basha

28) அனைவருக்கும் நிகழும் அற்புதங்கள்

இறைநேசர்கள் குறிப்பாக நபிமார்கள் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கின்ற காரணத்தினால், அவர்களுக்கு சுயமாகவே அற்புதம் செய்யக்கூடிய ஆற்றல், சக்தி இருக்கின்றது என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது என்பதையும் அதற்கான காரணங்களையும், ஆதாரங்களையும் இதுவரை நாம் பார்த்தோம். அற்புதங்களைப் பொறுத்தவரை, நபிமார்கள் பல அற்புதங்களைச் செய்தது போல நபிமார்களாக இல்லாத நல்லவர்கள் அற்புதங்கள் செய்ய முடியுமா? நபிமார்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்கள். அப்படியானால் நபிமார்களால் மட்டும்தான் அற்புதங்கள் செய்ய முடியுமா? நபிமார்கள் அல்லாதவர்களுக்கும் அற்புதங்கள் ஏற்படுமா? என்பது இரண்டாவதாக […]

27) அற்புதங்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியே!

நபிமார்கள் செய்த அற்புதங்களில் சிலவற்றை நாம் பார்த்தோம். அவற்றை நபிமார்கள் செய்தார்கள் என்பதில் நமக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த அற்புதத்தை நபிமார்கள் எப்படிச் செய்தார்கள்? யார் மூலமாகச் செய்தார்கள் என்பதற்கான விடையும் அந்தந்த சம்பவங்களிலேயே கிடைக்கின்றது. அவற்றை நாம் பார்ப்போம். பொதுவாக அல்லாஹ் நமக்கு அற்புதங்கள் சம்பந்தமாக ஒரு விதியை சொல்லித் தருகின்றான். உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி […]

26) நபிமார்களின் அற்புதங்கள்

மூஸா நபிக்கு இறைவன் பல அற்புதங்களை வழங்கியிருந்தான். மூஸா நபியவர்கள் காலத்தில் உள்ள இஸ்ரவேலர்கள் 12 கோத்திரங்களாக இருந்தனர். மூஸா நபி அந்தக் கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கும் போது தாகம் ஏற்படுகின்றது. உடனே அவர்கள், நீங்கள் தான் அல்லாஹ்வுடைய தூதராயிற்றே! எங்களுக்குத் தண்ணீர் தாகம் ஏற்படுகிறது! நீங்கள் தண்ணீருக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று கோரினர். உடனே மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் தண்ணீர் வேண்டி கோரினார்கள். உடனே இறைவன் உன்னுடைய கையில் இருக்கும் […]

25) இஸ்லாத்தின் பார்வையில் அற்புதங்கள்

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுவான் என்பதற்கு வழிகேடர்கள் சில வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். அவற்றின் விளக்கங்களைப் பார்த்து வருகிறோம். இதுபோன்ற வசனங்களையும், ஹதீஸ்களையும் அவர்கள் காட்டும் போது, அதன் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் காட்டிவிட்டு, மற்றொரு பகுதியை மறைத்து விடுகின்றனர். ஆனால் இவர்கள் காட்டும் ஆதாரங்களை நன்றாகக் கவனித்துப் பார்த்தால் அது இவர்களுக்கு எதிரான ஆதாரங்களாகவே அமைந்துள்ளதை விளங்க முடியும். (போரை முடித்து) அவர்களிடம் நீங்கள் […]

24) மாநபி அறிவித்த மறைவான செய்திகள்

நபியவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த மறைவான விஷயங்கள் எல்லாமே அவர்கள் மட்டும் தெரிந்து கொள்வதற்காக அல்ல. நாமும் அதைத் தெரிந்து கொள்வதற்காத் தான். உதாரணமாக, சொர்க்கம் இருக்கிறது என்று நாம் நம்புகின்றோம். இது மறைவானது. இதை நமக்கு வழங்கப்பட்ட ஐம்புலன்களைக் கொண்டு பார்க்க முடியாது. ஆறவாது அறிவைக் கொண்டு சிந்தித்தாலும் கூட சொர்க்கத்தை அறிய முடியாது. அப்படியானால் நாம் எவ்வாறு சொர்க்கத்தை நம்புகின்றோம்? சொர்க்கம் இருக்கிறது, அதை நம்ப வேண்டும் என்று படைத்தவன் சொல்லிவிட்டான் என்பதற்காக நம்புகிறோம். அவன் […]

23) மறைவான ஞானமும் இறைவனின் செய்திகளும்

இறைநேசர்கள் யார் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்பதையும், இறைவனும், இறைத்தூதரும் யாரை இறைநேசர் என்று அறிவித்துக் கொடுத்தார்களோ அவர்களைத் தவிர வேறு யாரையும் இறைநேசர்கள் என்று சொல்லக்கூடாது என்பதையும், அப்படியே அவர்கள் இறைநேசர்களாக இருந்தாலும் கூட அவர்கள் எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் அடிமைகளாக -அடியார்களாகத் தான் இருந்தார்களே தவிர அல்லாஹ்வுடைய அதிகாரத்தை ஒரு சிறிதளவும் பெற்றவர்களாக இருக்கவில்லை என்பதையும் நாம் பார்த்து வருகிறோம். குறைந்த பட்சம் தங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாகவாவது […]

22) நபிமார்களை அறியாத நபிகள் நாயகம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிஃராஜ் பயணத்தின் போது ஒவ்வொரு வானத்திற்கும் இறைவன் அழைத்துச் சென்று நபிமார்களைக் காட்டுகின்றான். மேலும் அங்கு பல காட்சிகளைக் காணச் செய்கின்றான். ஒவ்வொரு வானத்திலும் ஒவ்வொரு நபியைக் காணும் போதும் இவர் யார்? இவர் யார்? என்று வானவர் ஜிப்ரீலிடம் நபிகள் நாயகம் (ஸல்) கேட்கின்றார்கள். பல நபிமார்களை அல்லாஹ் காட்டுகின்றான். ஆனால் அவர்கள் யார் என்று நபியவர்களுக்குத் தெரியவில்லை. ஜிப்ரீலிடம் கேட்டுத் தான் எல்லா நபிமார்களையும் அறிந்து கொண்டார்கள். என்னுடன் […]

21) மாநபியும் மனிதரே!-2

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம். நபிகள் நாயகத்தின் பிரியத்திற்குரிய மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்ட சம்பவத்தைக் கடந்த இதழில் கண்டோம். நபியவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியாது என்பதை விளக்க இதைவிடப் பெரிய ஆதாரம் தேவையில்லை எனும் அளவுக்கு இந்த அவதூறு சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. நபிகளாருக்கு மறைவான ஞானம் தெரியாது என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. நான் ஆயிஷா (ரலி) […]

20) அன்னையார் மீது அவதூறு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்நாளில் பல சந்தர்ப்பங்களை உண்டாக்கி, மறைவான விஷயம் எதுவும் நபியவர்களுக்குத் தெரியாது என்பதை அல்லாஹ் நிருபிக்கிறான். அதில் மிக முக்கியமான ஒரு சம்பவம் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது சொல்லப்பட்ட அவதூறு சம்பவமாகும். நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் அறவே கிடையாது என்பதற்கு மிகப் பெரிய சான்றாக அமைந்துள்ள அந்தச் சம்பவத்தை இப்போது காண்போம், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட […]

19) மறைவான ஞானம்-2

எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் எல்லா வகையிலும் மனிதர்களாகத் தான் இருந்தார்களே தவிர இறைவனுடைய தன்மையை, அதிகாரத்தை, ஆற்றலைப் பெற்றவர்களாக ஒருபோதும் இருக்கவில்லை. ஒரு மனிதன் அடுத்த மனிதனைப் பற்றி வெளிப்படையான விஷயங்களை மட்டுமே அறிந்து வைத்திருக்க முடியும். ஒரு மனிதனுடைய மறைவானதை இன்னொரு மனிதன் அறிய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. நபிமார்களுடைய நிலைமையும், நபிகள் நாயகத்தின் நிலையும் இவ்வாறு தான் இருந்தது என்பதற்குத் திருக்குர்ஆன் பல சான்றுகளை நமக்கு முன் […]

18) மறைவான ஞானம்-1

ஒரு மனிதனால் ஒன்றைச் செய்வதற்கு ஆற்றல் இருக்கிறதா இல்லையா என்பது இரண்டாவது விஷயம். ஒரு மனிதருடைய அறிவு என்ன? மகானுக்கெல்லாம் மிகப்பெரிய மகானாக இருக்கட்டும். அவருடைய அறியும் திறன் என்ன? நான் ஒரு அறையில் இருந்து என்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் அந்தச் சமயத்தில் என்னால் எதையெல்லாம் பார்க்க முடியும்? நண்பர்கள் எனக்கு முன்னால் இருப்பதால் நான் அவர்களைப் பார்ப்பேன். நான் அவர்களுக்கு முன்னால் இருப்பதால் அவர்கள் என்னைப் பார்ப்பார்கள். இவ்வளவு தான். இது அல்லாமல் […]

17) மாநபியும் மனிதரே!-1

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடத்தில் பிரச்சாரம் செய்யும் போது, தம்மை ஒரு மனிதன் என்ற அடிப்படையில் தான் அறிமுகம் செய்தார்கள். நானும் உங்களைப் போன்று ஒரு மனிதன் தான். உங்களுக்கு என்ன ஆற்றல், சக்தி, வல்லமை இருக்கிறதோ அதே போன்று தான் எனக்கும் இருக்கிறது. உங்களுக்கு இருக்கின்ற தேவைகள் அனைத்தும் எனக்கும் இருக்கிறது. பசி, நோய், தூக்கம், போன்ற அனைத்து பலவீனங்களும் எனக்கும் உண்டு. உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் எனக்கு இறைச் செய்தி வருகின்றது; உங்களுக்கு […]

16) உள்ளத்தை ஒருமுகப்படுத்தல்

இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயல்களைச் செய்வதற்கு எந்த ஒரு நியாயமும், முகாந்திரமும் இல்லை என்பதை நபிமார்களுடைய வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வரலாற்றை அடிப்படையாக வைத்தும் பார்த்து வருகிறோம். இறைநேசர்களுக்கெல்லாம் பெரிய இறைநேசராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் தம்மை ஒரு மனிதராகவே காட்டியிருக்கிறார்கள் என்ற தலைப்பில் பல சம்பவங்களையும் நாம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது உள்ளத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார்களா? […]

15) அற்புதங்களும் அல்லாஹ்வின் தூதரும்

நபியவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பிறகு ஒரு கூட்டம் நபியவர்களிடத்தில் வந்து, நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் நீங்கள் சில அதிசயங்களை, அற்புதங்களை எங்களுக்குச் செய்து காட்ட வேண்டும். நாங்கள் ஒரு பட்டியல் வைத்திருக்கிறோம். அவற்றில் எல்லாவற்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். ஏதாவது ஒன்றைச் செய்து காட்டினால் போதும் என்று கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக இதைக் கேட்கவில்லை. விதாண்டாவாதத்திற்காகத் தான் இதைக் கேட்கிறார்கள். இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் […]

14) நபிகளாரின் பிரார்த்தனைகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாளைக்கு எழுபது தடவைக்கு மேலாக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள் என்ற செய்தியைப் பார்த்தோம். அதே போன்று ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் ஒரு துஆவை அதிகமதிகம் ஓதுபவர்களாக இருந்தார்கள். அந்த துஆவை நாம் பார்த்தால் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதனை ஓதத் தேவையே இல்லை என்று நாம் நினைக்கின்ற அளவுக்கு இறையச்சத்துடன் கூடிய ஒரு துஆவாக […]

13) அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!

நபிமார்களிலேயே அல்லாஹ் அதிகமாகப் புகழ்ந்து சொல்கின்ற ஒரு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தான். ஒட்டுமொத்த மக்களிலேயே அவர்களை தான் அல்லாஹ் மிக உயர்ந்த இடத்தில் வைத்து தன்னுடைய நண்பர் எனவும் புகழ்ந்து கூறுகின்றான். தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான். (அல்குர்ஆன். 4:125➚) இத்தகைய சிறப்புகளைப் பெற்ற இப்ராஹீம் நபியவர்கள் […]

12) இறைநேசரின் பிரார்த்தனையும் இறைவனின் மறுப்பும்

திருக்குர்ஆனில் கூறப்படும் வரலாறுகளில் யூனுஸ் நபியின் வரலாறு மிக முக்கியமானதாகும். அவ்லியாக்களுக்கெல்லாம் அவ்லியாக்களில் யூனுஸ் நபியும் ஒருவர். யூனுஸ் நபியவர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அனுப்பப்பட்ட நபியாவார். இவரைத் தவிர வேறு எந்த நபியையும் அதிகமான மக்களுக்கு அனுப்பியதாக இறைவன் சொல்லவில்லை. இதைப் பற்றி இறைவன் கூறுகிறான்: யூனுஸ் தூதர்களில் ஒருவர். (அல்குர்ஆன்: 38:139)➚ அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம். (அல்குர்ஆன்: 38:147)➚ இவர்களும் மற்ற நபிமார்களைப் போல் பிரச்சாரத்தை […]

11) உங்களைப் போன்ற மனிதனே!

இறைவனுடைய நேசர்களிலேயே மிகச் சிறந்த நேசர்களாகத் திகழ்ந்த நபிமார்கள், தங்களுடைய சமுதாய மக்கள் மத்தியில் சாதாரண மனிதர்களாகத் தான் இருந்தார்களே தவிர மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்களாகவோ, இறைவனுடைய சில அம்சங்களைப் பெற்றவர்களாகவோ, அவர்களைப் பார்த்து மக்களெல்லாம் அரண்டு, பயந்து ஓடுகிற வகையிலோ அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கவில்லை என்பதை நாம் சென்ற இதழில் பார்த்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட நபிமார்களும் மக்களிடத்தில் சத்தியத்தை எடுத்துச் சொல்லும் போது எல்லா சமுதாய மக்களுமே, “நீர் […]

10) அடி வாங்கிய அவ்லியாக்கள்

நபி (ஸல்) அவர்கள், ஸஹாபாக்கள் அல்லாமல் வேறு யாரையாவது சொர்க்கத்திற்குரியவர் என்று நற்சான்று அளித்திருக்கிறார்களா? என்று பார்த்தால் இருவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசிகள் என்று நற்சான்று அளித்திருக்கிறார்கள். அதில் ஒருவர் உவைஸ் அல்கர்னி என்பவர். இவர் தாபியீன்களில் ஒருவராவார். அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள், “எனக்குப் பின்னால் தாபியீன்களில் ஒருவர் வருவார். அவருடைய பெயர் உவைஸ் அல்கர்னி. அவரை நீங்கள் பார்த்தீர்களேயானால் உங்களுக்காக வேண்டி அவரை அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடச் சொல்லுங்கள்” […]

09) அடையாளம் காட்டப்பட்ட அவ்லியாக்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையெல்லாம் அவ்லியாக்கள், மகான்கள், சொர்க்கவாசிகள் என்று அடையாளப்படுத்திக் காட்டினார்கள் என்பதற்குச் சில ஆதாரங்களைப் பார்த்தோம். அதே போல் நபியவர்களுடைய மகன் இப்ராஹீம் சிறு வயதிலேயே, அதாவது பால்குடிப் பருவத்திலேயே இறந்து விடுகிறார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்காக மிகவும் கவலைப்பட்டார்கள். அதைப் பற்றி பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபியவர்களின் மகன்) இப்ராஹீம் இறந்த போது நபி (ஸல்) அவர்கள், “இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு” எனக் […]

08) அடையாளம் காட்டப்பட்ட அவ்லியாக்கள்

நாம் யாரையாவது இறைநேசர் என்று சொல்வதாக இருந்தால், அது அல்லாஹ்வின் மூலமாக நமக்கு சொல்லித் தரப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் ஒருவரை இறைநேசர் என்று சொல்லிவிட்டால் அதை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது. முந்திச் சென்ற சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் இறைவனால் அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களும் இறைநேசர்கள், அவ்லியாக்கள் என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்காது. இறைவன் அந்தந்த சமுதாயத்தில் வாழக்கூடிய மக்களிலேயே ஒரு மனிதரை மட்டும் தேர்ந்தெடுத்து அவருக்குத் தன்னுடைய பொறுப்புகளைச் சுமத்துகிறான் என்றால் கண்டிப்பாக […]

07) இறைநேசர்களை மக்கள் தீர்மானிக்க முடியுமா?

மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை நபிமார்களாலும் அறியமுடியாது என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்தோம். யூசுப் (அலை) அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் இதற்கு ஆதாரமாகக் கூறலாம். யஃகூப் (அலை) அவர்களுக்கு யூசுப் நபியைச் சேர்த்து மொத்தம் 12 பிள்ளைகள். இதில் 11 பேரும் திட்டம் போட்டு, தங்களுடைய தந்தையை ஏமாற்றி, “யூசுப் நபியை எங்களுடன் அனுப்பி வையுங்கள்; நாங்கள் பத்திரமாகத் திரும்ப அழைத்து வருகின்றோம்” என்று கூறி அழைத்துச் சென்று அவரைக் கிணற்றில் தள்ளி விடுகின்றார்கள். இந்த விஷயம் அவர்களின் […]

06) இறைநேசர்களை இறைத்தூதரால் அறிய முடியுமா?

ஒருவரை நல்லடியார், மகான் என்று நபித்தோழர்களால் கூடக் கண்டுபிடிக்க முடியாது என்பதற்கு ஏராளமான ஆதாரங்களைக் கடந்த இதழில் பார்த்தோம். அதுபோல் நபி (ஸல்) அவர்களால் கூட, அல்லாஹ் அவர்களுக்கு இவர் நல்லவர், இவன் கெட்டவன், இவன் முனாஃபிக் (நயவஞ்சகன்) என்று வஹீ அறிவித்துக் கொடுத்தாலே தவிர ஒருவரை நல்லடியார் என்றும் மகான் இறைநேசர் என்றும் கண்டுபிடிக்க முடியாது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அதை ஒவ்வொன்றாக நாம் பார்க்கவிருக்கின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் […]

05) இறைநேசர்களை நாம் தீர்மானிக்க முடியுமா?

இவ்வுலகில் நாம் யாரையும் இறைநேசர்கள் என்று தீர்மானிக்க முடியாது. இறைவனால் மட்டுமே தீர்மானிக்க முடியும். நம் கண் முன்னால் நல்லவராக வாழ்ந்து, அவரிடம் ஒரு தவறையும் காணாமல் இருந்த போதும் கூட அவரை அல்லாஹ்விடத்தில் நல்லவர் என்று சொல்லலாமா என்றால் சொல்லக்கூடாது. இவர்களுக்கே இந்த நிலை என்றால் நாம் பார்க்காத, யார் என்றே தெரியாத மனிதர்களை எப்படி இறைநேசர் என்று சொல்ல முடியும்? அவர்களுக்கு அவ்லியா, இறைநேசர், மகான் என்று எப்படிப் பட்டம் கொடுக்க முடியும்? இதை […]

04) இறைநேசர்களை நாமே தீர்மானிக்கலாமா?

இவ்வுலகில் நாம் யாரையும் இறைநேசர் என்று சொல்ல முடியாது. அல்லாஹ்வால் மட்டுமே அதைத் தீர்மானிக்க முடியும். ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்கüடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், “அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, “உங்கüல் எவர் தன் சகோதரரைப் புகழ்ந்து தான் ஆகவேண்டும் என்றிருக்கிறாரோ அவர், “இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். […]

03) இறைநேசர்களின் இலக்கணம்

நாம் உயிர் மூச்சாக கருதக்கூடிய தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கை. இதில் என்னென்ன தவறான வாதங்களை வைக்கிறார்கள்? நமது மார்க்கத்தில் மிகப்பெரும் குற்றமாகக் கருதக்கூடிய பாவம் இணை வைப்பு. இந்த இணை வைத்தலை நியாயப்படுத்துவதற்காக, தவ்ஹீதைத் தவறு என்று காட்டுவதற்காக, ஷிர்க்கை அவர்கள் தவ்ஹீத் என்று எவ்வாறெல்லாம் நியாயப்படுத்திப் பேசுகிறார்கள்? என்று நாம் விளங்கிக் கொண்டால் நமக்கு பாரதூரமான, நிரந்தர நரகத்தில் தள்ளக்கூடிய அந்த விஷயத்திலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதிலும் ஷிர்க்கைப் பொறுத்தவரை […]

02) பிரிவினைகள் ஏன்?

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அவர்களுடன் அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் வழங்கப்பட்டவர்களே அதற்கு முரண்பட்டனர். அவர்களுக்கிடையே இருந்த பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான். (அல்குர்ஆன்: 2:213)➚ […]

01) முன்னுரை

பிரிவினை ஏன்? முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு இறைவனை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம், ஒரே இறைத்தூதரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம், ஒரே ஒரு புத்தகத்தை நம்முடைய இறைவேதமாக ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய நாம் கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும், வணக்க வழிபாடுகளிலும் பலவாறாகப் பிரிந்து கிடக்கிறோம். நமது இறைவன் ஒருவனாக இருந்தாலும் நமக்குள் ஒரே மாதிரியாக அவனைப் புரிந்து வைத்திருப்பவர்களாக இல்லை. நம் எல்லாருடைய வேதம் திருக்குர்ஆனாக இருந்தாலும், எல்லாரும் அதை ஒரே மாதிரியாகப் புரிந்து நடக்கக்கூடியவர்களாக இல்லை என்பதை நாம் […]

அடையாளம் காணப்பட்ட அசத்தியவாதிகள்

கொள்கை வேடமிட்டுக் கொண்டு கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய இயக்கங்கள் பல உண்டு. அத்தகைய நிலையில் தான் இன்றைய ஜாக் அமைப்பின் செயல்பாடுகள் உள்ளன. ஒரு காலத்தில் கொள்கைப் பிரச்சாரத்திற்காக சத்தியப் பிரச்சாரகர்களெல்லாம் ஒன்று சேர்ந்து பாடுபட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் தான் இன்று சறுகல் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஜாக் என்ற அமைப்பு! இந்த இயக்க நிர்வாகிகளால் சத்தியப் பிரச்சாரத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! வெளியில் நல்லவர்களைப் போன்றும் அப்பாவிகளைப் போன்றும் காட்சி தரும் இவர்களின் பின்புற […]

இரண்டு முறை இறந்த அதிசயப் பெரியார்

எப்போதும், என்றென்றும் உயிருடன் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே! அவனையன்றி யாரையும் உதவிக்கு அழைக்கக் கூடாது; இறந்து விட்ட பெரியார்களை அழைத்து உதவி தேடக் கூடாது என்பதற்கு குர்ஆன், ஹதீஸிலிருந்து ஏராளமான ஆதாரங்களைக் காண்கிறோம். அவற்றை மக்களுக்கு அயராது எடுத்து வைத்துக் கொண்டும் இருக்கிறோம். இறந்து விட்ட பெரியார்களை அழைத்து உதவி தேடுவதற்குக் காரணமாகவும், கருவாகவும் அமைந்திருப்பது, “அந்தப் பெரியார்கள் சமாதிகளில் உயிருடன் இருக்கிறார்கள்; தங்கள் சமாதிகளுக்கு முன்னால் பக்திப் பரவசத்துடன் நின்று கெஞ்சிக் கேட்கும் பக்த கோடிகளின் […]

நரகத்தைத் தரும் மவ்லிது

தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் மவ்லிது என்னும் அரபிப் பாடல்களைப் புனிதமான வணக்கமாகக் கருதிப் பாடி வருகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவற்றை நிறைவேற்றாதவர்கள் கூட ரபீயுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் இந்த மவ்லிதைத் தவறாமல் நிறைவேற்றி விடுவார்கள். ரமளான் மாத இரவில் நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குபவருக்கு முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அது போன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரம் வந்து விட்டால் […]

பரேலவிகளுக்குப் பயன்தராத பல்வேறு கடவுளர்கள்

பரேலவிகள் இன்று பல கடவுள்களை வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்; அல்லாஹ் அல்லாதவர்களை, அவனது அடியார்களை அழைத்துத் தங்கள் தேவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாகுல் ஹமீது, ஏர்வாடி இப்ராஹீம் ஷா, தக்கலை பீரப்பா, திருவனந்தபுரம் பீமா, ஆத்தங்கரை செய்யதலி பாத்திமா என வகை வகையாக ஆண், பெண்களை கடவுளாக எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தக் கடவுளர்கள் (இவர்களது பாஷையில் அவ்லியாக்கள் அல்லது மகான்கள்) மறுமையில் வந்து கை கொடுப்பார்கள்; காப்பாற்றிக் கரை சேர்ப்பார்கள் என்று […]

38) முற்றுகையை முறியடிக்க காலிதுக்கு அழைப்பு

அன்பார், அய்னுத்தமர் போர் முடிந்ததும் அதில் கிடைத்த வெற்றிப் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கு போர்ச் செல்வங்களை ஆட்சித் தலைவருக்கு காலித் அனுப்பி வைக்கின்றார். இந்தப் பொறுப்புக்காக நியமிக்கப்பட்ட வலீத் பின் உக்பா இந்தச் செல்வங்களை ஆட்சித் தலைவரிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார். கூடவே அவர், காலிதின் மன வேதனையையும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கொண்டு வந்து சேர்க்கின்றார். “ஆட்சித் தலைவர் அபூபக்ர் அவர்கள் எனக்கு இப்படி ஒரு கட்டளை இட்டிருக்கக் கூடாது. இதன் காரணத்தால் ஓராண்டு […]

37) காலித் கண்ட அன்பார் வெற்றி

ஓராண்டு காலமாக வீரத் தளபதி காலித், ஹீராவில் முடங்கிக் கிடந்தாலும் முற்றிலுமாக முன்னேற்றம் ஒன்றுமில்லை என்று சொல்வதற்கில்லை. யானைப் பசிக்கு சோளப் பொறி என்பது போல், வெற்றித் தளபதி காலிதின் வீரப் பசிக்கு அன்பார், அய்னுத் தமர் போன்ற நகரங்கள் வெற்றியாகக் கிடைத்தன. தூமத்துல் ஜன்தலை முற்றுகையிட்டிருக்கும் மற்றொரு படைத் தளபதி இயாள் வராத வரை மதாயினுக்குச் செல்லக் கூடாது என்பது ஆட்சித் தலைவர் அபூபக்ரின் கட்டளை! அதன்படி, இயாள் வருகைக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் தான் அன்பார், […]

36) முழுமையடைந்த முன்னறிவிப்பு

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது” என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் […]

35) சரணாகதி அடைந்த ஹீரா

இஸ்லாம் அல்லது ஜிஸ்யா வரி அல்லது போர் என்ற மூன்று தான் உங்கள் முன் உள்ளன. இவற்றில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள்” என்று சரணடைய மறுத்தவர்களிடம் தளபதி காலித் தெரிவித்தார். இதற்காக ஒரு நாள் அவர்களுக்கு அவகாசம் அளித்தார். இம்மூன்றில் அவர்கள் போர் புரிவதையே தேர்வு செய்தனர். உலக ஆசையில் ஊறிப் போன இவர்களே போரைத் தேர்வு செய்திருக்கிறார்கள் எனும் போது மறுமை வாழ்வில் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் இதற்குச் சளைத்து விடவா போகிறார்கள்? […]

34) வீரர் வீழ்த்திய வெள்ளை மாளிகை

உல்லைஸில் கிடைத்த இந்த உன்னத வெற்றிக்குப் பிறகு உம்கீஷியா என்ற இடத்திற்கு காலித் செல்கின்றார். இது ஹீராவைப் போன்ற ஒரு நகரம். பாதிக்லி என்ற சிற்றாறு பிரியும் இடத்தில் புராத் நதி முடிவடைகின்றது. அங்கு தான் இந்த ஊர் அமைந்துள்ளது. இது உல்லைசுக்கு அருகில் உள்ளதென்பதால் இங்குள்ள மக்கள் உல்லைஸ் போரில் முஸ்லிம்களுக்கு எதிரான படையில் பங்கெடுத்தனர். இவ்வூருக்குள் படையெடுத்து வந்த காலித் படையினர் கொஞ்ச நேரத்திற்கு உள்ளாகவே அதைக் கைப்பற்றி முடித்து விட்டனர். இங்குள்ள மக்கள் […]

33) பந்திக்கு முந்திய பாரசீகப் படையினர்

காலிதின் கர்ஜனைக்குப் பெரும் புள்ளிகள் யாரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் காலிதின் குரலுக்குச் செவிமடுக்கவில்லை. ஆனால் மாலிக் பின் கைஸ் என்பவன் மட்டும் காலிதுக்கு நேராக வந்து நின்றான். தனக்கு நிகரில்லாத ஒருவன் தன்னை எதிர்க்க வந்ததைக் காலிதால் சகித்துக் கொள்ள முடியவில்லை. “இழிவான ஈனப் பிறவியே! உனக்கு என்ன இத்தனை துணிச்சல் வேண்டிக் கிடக்கிறது? நீ என்ன எனக்கு நிகரா?” என்று கூறி வாளில் ஒரே உரசல் தான். அவனது தலை கீழே விழுகின்றது. பந்தியில் இருந்தவர்களுக்குக் […]

32) வலஜாவில் ஒரு வாட்போர்

இராக்கில் பாரசீக சக்திகளை வேரறுத்து விட்டதாக காலித் கருதவில்லை. பாரசீகத்தின் கிஸ்ரா எனும் பாம்பு இன்னும் தன் படத்தைக் கீழே போடவில்லை என்பதை காலித் அறிந்திருந்தார். பாரசீகப் பேரரசின் அடுத்தக்கட்ட வேலை, முள்ளை முள்ளால் எடுப்பது போன்று, (முஸ்லிமான) அரபியரை, (முஸ்லிம் அல்லாத) அரபியர்களைக் கொண்டு களையெடுக்க வேண்டும் என்பது பாரசீகத்தின் திட்டம் என்று காலித் கணக்குப் போட்டு வைத்திருந்தார். அவரது கணக்கு சரியானது; கணிப்பு நிஜமானது. இராக்கின் புராத், திஜ்லா என்ற இரு நதிகளுக்கு இடையே […]

31) ஆற்றங்கரையில் ஓர் அபார போர்

சங்கிலிப் போரில் தோற்றோடிய பாரசீகர்களை முஸ்லிம்கள் பெரும் பாலம் வரை துரத்தியடித்தனர். அந்தப் பாலம் இன்றைய பஸராவில் ஃபுராத் நதியில் அமைந்துள்ளது. தளபதி காலித் பின் வலீத் அத்துடன் பாரசீகர்களை விட்டு விடவில்லை. அதற்கப்பாலும் முஸன்னா பின் ஹாரிஸா தலைமையில் ஒரு படையை அனுப்பி பாரசீகர்களைப் பின்தொடரச் செய்தார். காலிதின் அடுத்த இலக்கு மதாயின் நகரம்! அந்த மதாயினை அடைவதற்கு முன்னால் பாரசீகர்களைத் தப்ப விட்டு விடக் கூடாது என்பது காலிதின் நோக்கம். மதாயின் நகரத்தை அடைவதற்கு […]

30) சங்கிலிப் போரில் சரிந்த பாரசீகம்

தனக்கு ஒரு அந்தஸ்து கூடும் போதெல்லாம் தனது தொப்பியில் விலை உயர்ந்த அணிகலன்களை அதிகரித்துக் கொண்டு ஆட்டம் போட்ட அநியாயக்கார ஆளுநர் ஹுர்முஸுக்கு, இஸ்லாமிய போர்ப் படையின் தளபதி காலித் ஒரு கடிதம் அனுப்புகின்றார். அமைதி மார்க்கம் இஸ்லாத்தில் இணைக! அமைதி பெறுவாய்! அல்லது நீயும், உனது குடி மக்களும் வரி செலுத்த வேண்டும். வரி செலுத்தும் இழிவுக்காக நீ யாரையும் பழித்துக் கொள்ளாதே! உன்னையே நீ பழித்துக் கொள்! இதற்கு இணங்க மறுப்பின் நான் ஒரு […]

29) இராக்கை நோக்கி இஸ்லாமியப் படை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் கிறித்தவ சாம்ராஜ்யத்தை எதிர்த்துநடைபெற்ற முஃத்தா மற்றும் தபூக் யுத்தங்களைப் பற்றிக் கடந்த இதழில் கண்டோம். இதன் பின்னர் முஃத்தா போரில் ஜைத் பின் ஹாரிஸா (ரலி), ஜாஃபர் பின் அபீதாலிப் (ரலி),அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட இடமான சிரியாவில் உள்ளபல்கா என்ற இடத்திற்கு உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) […]

28) ரோமானிய பாரசீக பேரரசுகளுடன் போர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது, அவர்கள் இறக்கவில்லை,உயிருடன் தான் இருக்கிறார்கள் என்ற விவகாரம் கிளம்பியது. அபூபக்ர் (ரலி) அவர்கள்அதை வேருடன் கெல்லி எறிந்தார்கள். அடுத்து அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும்ஜகாத்தைத் தர மறுத்தல், மதம் மாற்றம் போன்ற பிரச்சனைகள் எழுந்தன. அவற்றையும்இறையருளால் வெற்றிகரமாக முறியடித்தார்கள். அதன் பின்னர், இறுதித் தூதுத்துவத்திற்கு எதிராக போலித் தூதர் விவகாரங்கள் பொட்டுச்செடிகளாக அல்ல; பூகம்பங்களாக, பூதாகரமாக வெடித்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் மரணம் அடைந்ததிலிருந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பொய் […]

27) கைஸின் ஆட்சிக் கனவு

போலி நபியான அஸ்வத் அல்அன்ஸீ என்ற அந்த நாகப் பாம்பின் புற்றாகவும் புதராகவும்இருந்த யமன் தேசம், இப்போது அவனது அழிவின் மூலம் தூய்மையாகி விட்டது;துப்புரவாகி விட்டது. இந்த அரும் பணியை ஆற்றியவர்கள் மூவர்! கைஸ் பின் மக்ஷூஹ், பைரோஸ்அத்தைலமீ, தாதவைஹ் ஆகிய மூவர் கொண்ட இக்குழுவினர் இந்த அரும்பணியைமுடித்து விட்டு, நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள்ளாக அடுத்த விவகாரம்உருவெடுக்கின்றது. இந்த விவகாரம் வெளியிலிருந்து வரவில்லை. உள்ளிருந்தேவெடிக்கிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த செய்தி யமனை அடைந்ததும் ஒருசிலர் […]

26) மரணத்தைத் தழுவிய மகாப் பொய்யன்

தன்னைக் கொல்வதற்கு பைரோஸ் சதித் திட்டம் தீட்டினார் என்பதைக் கேள்விப்பட்டபொய் நபி அஸ்வத் அல்அன்ஸீ, பைரோஸைக் கொல்வதற்காக கத்தியை எடுத்தவுடன்,பைரோஸ் அவனைப் புகழ ஆரம்பிக்கின்றார். “(எங்கள் குடும்பத்தில் பெண் எடுத்ததன் மூலம்) எங்களை நீங்கள் சம்பந்தவழியாக்கினீர்கள். மற்ற பாரசீக மக்களை விட எங்களை நீங்கள்மகிமைப்படுத்தியிருக்கின்றீர்கள். நீங்கள் மட்டும் நபி இல்லையெனில் எதற்கு ஈடாகவும்எங்களது ஆட்சிப் பீடத்தை உங்களுக்கு விட்டுக் கொடுத்திருக்க மாட்டோம். உங்களிடம்தான் எங்களுக்குரிய இம்மை, மறுமையின் விவகாரம் ஒருங்கே இணையப்பெற்றிருக்கின்றது. அப்படி இருக்கையில் எங்களால் எப்படி […]

25) அஸ்வதுக்கு எதிராக அணி திரளும் சக்திகள்

அஸ்வத் அல்அன்ஸீ தன்னை மட்டரகமாக நடத்திக் கொண்டிருக் கின்றான். எனவேஅவனைக் கொன்று விட வேண்டும் என்று கைஸ் ஏற்கனவே தெளிவான திட்டம்தீட்டியிருந்தான். இதை இக்குழுவினர் அவனைச் சந்தித்த போது தெரிந்து கொண்டனர். அஸ்வத் அல்அன்ஸியால் அவமானத்திற்கும் அடிமைத் தனத்திற்கும் உள்ளானபைரோஸும் அன்ஸீயைத் தீர்த்துக் கட்டுவதில் தீர்மானமாக இருந்தார். தாதவைஹும் இதே குறியில் வெறியாக இருந்தார். இதற்கிடையே அன்ஸீ விவகாரமாகவபர் பின் யுஹ்னஸ் மதீனாவிலிருந்து வந்திருந்தார். (நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து வபர் பின் யுஹ்னஸை அனுப்பி வைத்திருந்தார்கள் […]

24) வெற்றி கொள்ளப்பட்ட உமான்

மூன்று தளபதிகளை உள்ளடக்கிய முக்கூட்டுப் படை வருகின்றது என்ற தகவல் போலிநபி “லகீத்’துக்குக் கிடைத்தது தான் தாமதம்! அவன் தன் படை பரிவாரங்களுடன் தபாஎன்ற இடத்தில் முகாமிட்டான். தபா என்பது யமனைச் சுற்றியுள்ள ஊர்களின்பட்டணமும், வணிகச் சந்தையுமாகும். லகீத் (கடந்த தொடரில் லகீத் என்பதற்குப் பதிலாக வகீத் என்று தவறுதலாக இடம் பெற்றுவிட்டது) முஸைலமாவின் பாணியில் மக்களின் சொந்தங்களையும், சொத்துக்களையும்தனக்குப் பின்னால் கொண்டு வந்து நிறுத்திக் கொண்டான். அப்போது தான் போரில்புறமுதுகு காட்டும் பெட்டைத் தனம் தலை […]

23) ஓமனில் தோன்றிய ஒரு பொய்த் தூதன்

ஜுவாஸாவில் முற்றுகையிடப்பட்ட முஸ்லிம்களைக் காப்பதற்காக அபூபக்ர் (ரலி) அவர்கள்அனுப்பி வைத்த படையினருக்கு ஏற்பட்ட சோதனை, படைத்தவனிடம் கையேந்திக் கேட்டதும்நீங்கியது. அவர்களது பிரார்த்தனை உடனே அங்கீகரிக்கப் பட்டது. இது அவர்களது உள்ளத்தில்ஒரு புதியதொரு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுத்தது. படைத் தளபதி அலா பின் ஹள்ரமி மக்களைப் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.எதிரிகளின் களத்தை நெருங்கிய போது அவர்களது எண்ணிக்கை முஸ்லிம்களின் புருவத்தைச்சற்று உயர்த்தியது. அங்கு பெருங் கூட்டமே பெருக்கெடுத்து வந்திருந்தது. அது இரவு வேளை! மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகில் […]

யூசுப் நபியின் அழகிய வரலாறும் குற்றமற்றவர் என்பதற்கான ஆதாரங்களும்

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மக்களிடம் தங்கள் குற்றத்தை மறக்கடிக்க மார்க்க விஷயங்களில் விளையாடி வருகின்றனர். மார்க்க விஷயத்தில் தவறான கருத்துக்களை கூறினால் மக்கள் அதைப் பற்றி தேடத் துவங்கி, தனது குற்றத்தை மறந்துவிடுவார்கள் என்பதற்காக இதை ஓர் ஆயுதமாக எடுத்திருக்கிறார்கள். மேலும், தனது குற்றத்தை மறக்கடிப்பதற்காக […]

22) பாதை திரும்பிய பஹ்ரைன் மக்கள்

இதயங்களிலிருந்து வாய்களின் வழியாக ஓசையாக மட்டும் பிரகாசித்துக் கொண்டிருந்ததிருக்குர்ஆன் யமாமாப் போரின் தாக்கத்தால் எழுத்துக்கள் வடிவில் ஏடுகளில் பதிவாகின.இவ்வாறு ஏடுகளில் திருக்குர்ஆன் பதிவாகி பாதுகாக்கப்படும் இந்தப் புனிதப் பணிக்கு மட்டும்யமாமா போர் காரணமாக இருக்கவில்லை; இஸ்லாத்தை விட்டு, ஈமானை விட்டு வெளியேபோன மக்கள் உளப்பூர்வமாக உள்ளே வருவதற்கு ஒரு தோரண வாயிலாகவும் அமைந்துவிட்டது. “ஆட்சித் தலைவர் அபூபக்ர் (ரலி) அவர்கள் கொண்டிருக்கும் கொள்கை தான் உண்மையானகொள்கை; நாம் இடையே கண்ட கொள்கை போலியானது, பொய்யானது” என்ற விஷயம் […]

Next Page » « Previous Page