
“ஜிஹாத்’ என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல் என்ற பொருளும், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற பொருளும் உள்ளது என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களை சென்ற இதழில் கண்டோம். மேலும் பல அர்த்தங்களை உள்ளடக்கிய வசனங்களைக் காண்போம். உறுதி ஜிஹாத் என்பதற்கு உறுதி என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. அது சம்பந்தமான வசனங்களைக் காண்போம். “நாங்களும் உங்களைச் சேர்ந்தோரே’ என அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தோர் இவர்கள் தாமா? என்று நம்பிக்கை கொண்டோர் […]