Author: Mukthiyaar Basha

08) மனிதன் சுமந்த அமானிதம்?

வானம், பூமி, மலை ஆகியவற்றுக்கு ஓர் அமானிதத்தைச் சுமக்குமாறு இறைவன் முன் வைத்திருக்கின்றான். ஆனால் அவைகள், இறைவன் முன்வைத்த அந்த அமானிதத்தைச் சுமக்க மறுத்து விட்டன. பிறகு மனிதன் அதைச் சுமந்து கொண்டான் என்று இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான்.   (அல்குர்ஆன்: 33:72)➚ இறைவன் வானம், […]

07) தாவூத் நபியின் தவறு?

அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. அல்லாஹ் மிகைத்தவன்; மன்னிப்பவன். (அல்குர்ஆன்: 35:28)➚ மார்க்க அறிஞர்களிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சத்தை இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். இறையச்சம் உள்ளவர்களே உண்மையான அறிஞர்கள் என்பதைக் கூறி அறிஞர்கள் என்றாலே இறைவனின் அச்சம் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்று எடுத்துரைக்கின்றான். அவ்வாறான அறிஞர்கள் தாங்கள் ஆற்றுகின்ற மார்க்கப் பணியில் மனத் தூய்மையைக் கடைப்பிடிப்பார்கள். மக்களுக்கு மத்தியில் சத்தியத்தை தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பார்கள். எப்போதும் இறை பயத்தை நினைவில் நிறுத்தி […]

06) “வன்ஹர்‘ என்பதன் பொருள்

ஒரு அரபு சொல்லுக்குப் பொருள் செய்வதாக இருந்தால் அரபு அகராதியின் படி பொருள் செய்ய வேண்டும். குறிப்பாக, குர்ஆனில் உள்ள ஒரு வார்த்தைக்குப் பொருள் செய்யும் போது இதே வார்த்தை குர்ஆனின் ஏனைய இடங்களில் எந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது? ஹதீஸ்களில் எப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதைக் கவனித்து பொருள் செய்ய வேண்டும். இந்த அணுகுமுறை இறைவனுடைய வார்த்தையை சரியான முறையில் புரிய, அவ்வார்த்தைக்குப் பிழையில்லாத பொருள் செய்ய ஏதுவாக இருக்கும். இந்த வழிமுறையை மீறும் பட்சத்தில் மொழியாக்கம் என்ற […]

05) முட்டையிடும் ஷைத்தான்?

மார்க்க அறிஞர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு எல்லையே இல்லை போலும். ஒரு விஷயத்தை முழுமையாக, சரியாகத் தெரிந்து கொள்ள அவற்றை ஆய்வு செய்வது அவசியமே. எனினும் நாம் செய்யும் ஆய்வு இறைவன் விதித்த வரம்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் பொருளைப் பற்றி நமது மார்க்கம் என்ன சொல்கிறதோ அதைப் பொறுத்து நமது ஆய்வு அமைவது அவசியம். உதாரணமாக ஒருவர் விதியைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப் போகிறார் எனில் அது தொடர்பாக மார்க்கம் கூறுகிற ஒழுங்கை […]

04) அழுது புலம்பிய ஆதம் நபி (?)

விளக்கவுரை என்பது இறை வார்த்தையையும், இறைத்தூதர்களின் வாழ்க்கையையும் சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு உதவி புரிவதாய் இருக்க வேண்டும். அதை விடுத்து அவ்விரண்டையும் கேலிப் பொருளாக்கும் விதத்தில் இருக்கக் கூடாது. குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு விளக்கவுரை அளிக்கும் சிலர் இந்த இலக்கணத்தைத் தெளிவாக மீறியுள்ளார்கள் என்பதைப் பல விளக்கவுரைகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஒரு புறம் குர்ஆன், ஹதீஸ்களுக்கு எதிரான, முரணான விளக்கங்கள் என்றால் மறுபுறம் குர்ஆன் வசனங்கள், இறைத்தூதர் அவர்களின் போதனைகள் ஆகியவற்றைக் கேலி செய்யும் […]

03) விஷமத்தனமான விரிவுரை

இஸ்லாத்தை அழிக்க எண்ணும் எதிரிகள், அதன் பிரச்சாரம் மக்களைச் சென்றடையாமலிருக்க விஷமத்தனமான பிரச்சாரங்களைக் கையிலெடுப்பார்கள். இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றது; இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டுகிறது என்பது கயவர்கள் கையிலெடுக்கும் விஷமப் பிரச்சாரங்களில் சில! இது போன்ற வகையில் சில விஷமத்தனமான விளக்கங்கள் இமாம்களின் பெயரில் தஃப்ஸீர் நூல்களிலும் காணக் கிடைக்கின்றது. இஸ்லாத்தின் எதிரிகள் செய்யும் பிரச்சாரத்தை விட இதுவே மிகவும் அபாயகரமானது. இது இமாம்களோடு தொடர்பாவதால் உண்மை என எளிதில் மக்கள் நம்பி விடுகின்றனர். அது போன்ற […]

02) ஆகுக என்றால் ஆகாது (?)

இறைவன் என்பவன் எதையும் செய்து முடிக்கும் வல்லவன், மகா ஆற்றலுடையவன் என்று அனைத்து முஸ்லிம்களும் அவனது வல்லமையை, சக்தியை சரியாக புரிந்து வைத்துள்ளனர். இறைவனுக்கு இணை கற்பிக்கும் பலரின் செயல்பாடுகள் இந்த நம்பிக்கைக்கு மாற்றமாய் அமைந்திருந்தாலும் இறைவன் எதற்கும் வல்லமையுள்ளவன் என்ற நம்பிக்கையில் யாரும் குறை வைப்பதில்லை. அவனுடைய ஆற்றலை யாரும் குறைத்து மதிப்பிடுவதில்லை. இறைவன் தனது ஆற்றலைப் பற்றி பின்வருமாறு கூறுகிறான். அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் […]

01) முன்னுரை

இறைவன் மனித குலத்திற்கு வழிகாட்டியாக திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் அருளினான். அப்பழுக்கற்ற இறைவேதத்தின் விளக்கத்தை மனித சமுதாயத்திற்கு விளக்கிட முஹம்மத் (ஸல்) அவர்களை தன் தூதராக நியமித்தான். திருக்குர்ஆன் என்பது கருத்து மோதல்களற்ற, முரண்பாடுகளில்லாத ஒரு பரிசுத்த வேதம். தூய இறைவனின் தூது வார்த்தைகள். இறைவனே இதற்கு ஆசிரியர் என்பதால் திருக்குர்ஆனில் தவறு என்றே பேச்சுக்கே இடமில்லை. உலகம் முழுவதிலும் தவறே இல்லாத ஒரு புத்தகம், வேதம் இருக்கும் எனில் அது திருக்குர்ஆன் […]

32) இயற்கை வேதத்தின் இனிய பொருளாதாரம்

நாம் வாழ்கின்ற பூமியில் மேடு பள்ளங்கள் இருப்பது போலவே மனித வாழ்க்கையிலும் மேடு பள்ளங்கள் இருக்கின்றன. ஆம்! ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. இந்த ஏற்றத்தாழ்வு இயற்கையானது. மனித இனத்தின் செயல்பாட்டுக்காக இறைவன் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறான். இதை எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாகக் கூறுகின்றான். உமது இறைவனின் அருட்கொடையை அவர்கள் தான் பங்கிடுகிறார்களா? இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் வாழ்க்கையை நாமே பங்கிடுகிறோம். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பணியாளராக ஆக்குவதற்காகச் சிலரை விட […]

31) யாசிக்கக் கூடாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன்; வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் பரகத் எனும் அருள் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் பரகத் ஏற்படுத்தப்படாது. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவர் போலாவார். உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது என்று […]

30) ஜன் சேவா எனும் வட்டிக் கடை

தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் ஜன் சேவா எனும் பெயரில் வட்டியில்லா வங்கி நடைபெற்று வருவதாகவும், அவர்கள் சட்டதிட்டங்கள் உண்மையில் மார்க்க அடிப்படையில் சரியானது தானா? அந்த வங்கியில் பங்குதாரராக இணையலாமா? அதில் கடன் பெறுவது கூடுமா? எனப் பலர் நம்மைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டு வருகின்றனர். இவர்கள் வட்டி இல்லா வங்கி முறையை எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்காக அந்தச் சகோதரர்கள் நமக்கு அனுப்பித் தந்த வங்கியின் சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரங்களை […]

29) கிரெடிட் கார்டு – கடன் அட்டை

தற்போது கிரடிட் கார்டு எனும் கடன் அட்டை பயன்பாடு அதிகரித்து வருகின்றது. வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த அட்டை மூலம் நமக்குத் தேவையான பொருட்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். கடைக்காரர்கள் வங்கியில் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கடன் அட்டை வைத்திருப்பவர் 45 நாட்கள் (அல்லது குறிப்பிட்ட நாட்கள்) முடிவதற்குள் வங்கியில் பணத்தைச் செலுத்தினால் அதற்கு வட்டி இல்லாமல் செலுத்தலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் வட்டியுடன் அதைச் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனைச் […]

28) நாணயம் பேணல்

நம்பி ஒப்படைக்கப்படும் அமானிதங்களை அப்படியே திரும்ப ஒப்படைப்பது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமதிகம் வலியுறுத்தியுள்ளனர். அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்குமாறும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும்போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன்: 4.58) நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி […]

27) முதலாளிகளின் கவனத்திற்கு

கடந்த மே 1ஆம் தேதி உழைப்பாளிகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசு விடுமுறையும் மக்களுக்கு வழங்கப்பட்டது. சில முதலாளிகள் தங்களது தொழிலாளிகளுக்கு ஆடைகள் வழங்கி அந்நாளை சிறப்புப்படுத்தினர். இத்தினத்தை தொழிலாளர்களோடு கொண்டாடி, இத்தினத்தில் மட்டும் தொழிலாளர்களை சந்தோஷப்படுத்தும் முதலாளிகள் வருடம் முழுவதும் அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்களது கண்ணியத்தை சீர்குலைக்காமல், அவர்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை, அவர்களது குடும்ப சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வேலைகளில் சலுகைகளும், தங்களால் முடிந்த அளவு பொருளாதார உதவியையும் செய்யலாம். […]

27) சங்கிலித் தொடர் வியாபாரம்

நபி (ஸல்) அவர்கள் காலத்திலுள்ள வியாபாரத்தின் வகைகளையும், நபி (ஸல்) அவர்கள் தடை செய்த வியாபாரங்களையும் பார்த்தோம். ஒரு பொருளை விற்பதாக இருந்தால் விற்கக் கூடியவன் அந்தப் பொருளைக் காட்டவேண்டும். அப்படி பொருளைக் காட்டவில்லை என்றால் விற்பவனுக்கும் ஹராம்; அதை வாங்குபவனுக்கும் ஹராம். இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி வியாபாரம் செய்வதை நபி (ஸல்) தடுத்துள்ளார்கள் என்பதைப் பார்த்தோம். ஒரு பொருள் எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையில் தான் அதை விற்கவேண்டும். அதற்கு அடுத்த நிலையில் […]

25) ஏமாற்று வியாபாரம்

பொதுவாகவே இஸ்லாமியப் பொருளாதாரம் என்பது எவரையும் ஏமாற்றாமல் இருப்பதாகும். பிறரை ஏமாற்றிச் சம்பாதிப்பது ஒரு முஸ்லிமிற்கு ஹராமாகும். வியாபாரத்திலும் விற்பவனும் வாங்குபவனும் ஏமாற்றம் அடையக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சையும் திராட்சையும் இருந்தது. இதை மரத்தில் பிஞ்சாக இருக்கும் போதே, “கனியான உடன் வாங்கிக் கொள்கிறேன்” என்று கூறி விலை பேசுவார்கள். இந்த வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ஆனால் பிஞ்சை விற்பதையோ, விலை பேசுவதையோ நபி (ஸல்) தடுக்கவில்லை. மரத்தில் உள்ள […]

24) வியாபாரத்தில் தடுக்கப்பட்டவை

வணிகப் பேரத்தில் பொய் சத்தியம் ஒரு மனிதர் அவருடைய பொருளில் இல்லாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விற்றார். இதை அல்லாஹ் கண்டித்து ஒரு வசனத்தை இறக்கி வைத்தான். அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.  (அல்குர்ஆன்: 3:77)➚ ஒரு மனிதர் கடைவீதியில் […]

23) வியாபாரம்

நாம் இதுவரை பிறருடைய பொருள் ஹராம் என்பதைத் தெளிவாகப் பார்த்தோம். இனி வியாபாரத்தில் அனுமதிக்கப்பட்ட வியாபாரம் எது? தடுக்கப்பட்ட வியாபாரம் எது? என்பதைப் பார்க்கவிருக்கிறோம். ஏமாற்று வியாபாரம் ஏமாறுவதும், ஏமாற்றுவதும் கூடாது. அளவு நிறுவையில் மோசடி செய்வது கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்று வந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! […]

22) அடைமானமும் அமானிதமும்

அடைமானம் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் அவர்கள் ஒரு யூத மனிதனிடம் அடைமானப் பொருள் கொடுத்து கொஞ்சம் கோதுமை வாங்கினார்கள். அதைத் திருப்பி வாங்காமலேயே மரணித்தார்கள் என்ற ஹதீஸை பார்க்கிறோம். அது வட்டிக்கு இல்லை. அடைமானப் பொருளுக்கும் வட்டிக்கும் வித்தியாசம் இருக்கிறது. அடைமானப் பொருள் ஒரு பொருளை வாங்கும் போது அதற்குப் பதிலாக ஒரு பொருளை கொடுப்பதே அடைமானமாகும் எனவே அடைமானம் வைத்து பொருளை வாங்கலாம் அல்லது அடைமானத்துக்கு பொருட்களை கொடுக்கலாம் என்பதை பின்வரக் கூடிய ஹதிஸ்கள் […]

21) கடனை தள்ளுபடி செய்வதன் சிறப்பு

அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூகத்தாதா (ரலி) அவர்கள், தமக்குக் கடன் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், “நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்” என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?” என்று கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்” என்றார். அபூகத்தாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற […]

20) கடன் தள்ளுபடி

கடன் கொடுத்தவர் ஒரு பாக்கியசாலி ஆவார். ஏனென்றால் கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் மரணித்தால் கடன் கொடுத்தவருக்கு அல்லாஹ் அதற்கான கூலியைக் கொடுக்கின்றான். ஆனால் அதே சமயம், கடனைத் தள்ளுபடி செய்து விட்டால் அல்லாஹ் நம்முடைய பாவத்தைத் தள்ளுபடி செய்கின்றான். “கடனை மன்னிக்க மாட்டேன்; மறுமையில் வந்து பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டால் மறுமையில் கிடைக்கும். அது குறைவாகத் தான் கிடைக்கும். ஆனால் கடனை மன்னித்துவிட்டால் அதைவிடப் பெரிய நன்மையை எதிர்பார்க்க முடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) […]

19) கடன் வாங்கியவர் கவனிக்க வேண்டியவை

இன்று சிலர் கடன் வாங்குகின்றார்கள். ஆனால் கொடுக்கின்ற தவணை வரும் போது கொடுக்க முடியாமல் பல பொய்கள் சொல்லியும் ஏமாற்றியும் விடுகின்றார்கள். இதற்கு நபி (ஸல்) அவர்கள் பல எளிதான வழிமுறைகளைச் சொல்லிக் காட்டுகிறார்கள். நாம் கடனை வாங்கும் போது, “நான் இந்தக் கடனை நிறைவேற்றுவேன்’ என்ற எண்ணம் முதலில் வேண்டும். பின்னால் அல்லாஹ் எனக்கு உதவி செய்வான் என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் அல்லாஹ் அதனை நிறைவேற்றுவான். […]

18) கடன் பற்றிய சட்டங்கள்

கடன் விஷயத்தில் கடினப் போக்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒருவர் மரணம் அடைந்தால் நபியவர்கள் ஜனாஸா தொழுவிப்பது தான் வழக்கம். அப்படித் தொழ வைக்கும் போது முதலில் “இந்த ஜனாஸா ஏதாவது கடன்பட்டு உள்ளதா?’ என்று கேட்பார்கள். ஆம் என்று சொன்னால் அந்தக் கடனை அடைப்பதற்கு ஏதாவது விட்டுச் சென்று இருக்கிறாரா? என்று கேட்பார்கள். அதற்குத் தோழர்கள் ஆம் என்று சொன்னால் மட்டுமே அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழ வைப்பார்கள். இல்லையென்று சொன்னால் தமது […]

17) அடுத்தவர் பொருளில் நமக்குள்ள உரிமை

யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு உள்ளது (அல்(அல்குர்ஆன்: 51:19)➚ பொதுவாக நாம் வீதியில் செல்லும் போது ஒரு தோட்டத்தைப் பார்க்கின்றோம். அதிலிருந்து நாம் உண்ணலாம். எந்த வகையில் என்றால் அதில் ஒரு பங்கு வழிப்போக்கர்களுக்கு உரிமை இருக்கின்றது. மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில், இவ்வாறு மக்கள் எடுப்பதை அந்த நிலத்தின் உரிமையாளர் பொருட்படுத்தக்கூடாது பொதுவான மரத்தின் கிளையில் காய்த்துத் தொங்கும் கனிகளை எடுத்து உண்பதும் கூடும். அம்ர் பின் சுஹைப் (ரலி) அறிவிக்கிறார்கள்: தொங்கவிடப்பட்டிருக்கும் பேரிச்சை பழத்தை […]

16) அடுத்தவர் பொருள் பற்றிய சட்டங்கள்

ஹராம், ஹலால் என்றால் என்ன? ஒரு பொருளைத் திரட்டுவதாக இருந்தால் ஹராமான வழியில் திரட்டக்கூடாது. பொருளைத் திரட்டுவது ஹலாலான அடிப்படையில் இருக்க வேண்டும். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அனுமதித்த காரியம் ஹலால் ஆகும். ஒருவரின் பொருளை அவரது அனுமதியுடன் பெற்றுக் கொள்வதும் ஹலாலாகும். மற்றவரின் பொருள் நமக்கு ஹராம் ஆகும். அந்தப் பொருள் பணமாகவோ, பொருளாகவோ, நகையாகவோ, எதுவாக இருந்தாலும் சரியே. அது நமக்கு ஹலால் ஆகாது. பிறருடைய பொருள் நமக்கு எந்த அளவிற்கு ஹராம்? நபி […]

15) ஹலாலை ஹராமாக்கும் வீண் சந்தேகங்கள்

சந்தேகமானதை விட்டு விலக வேண்டிய அதே நேரத்தில் அல்லாஹ் ஹலாலாக்கியதை நாமாக ஹராமாக்கக் கூடாது. அவ்வாறு செய்வது குற்றம். நாம் ஒரு விஷயத்தை சந்தேகம் கொண்டால், சந்தேகம் கொள்வதற்குரிய முகாந்திரம் இருக்க வேண்டும். வீணாண சந்தேகத்தால் ஹலாலான விஷயங்களை ஹராமாக்கிவிடக் கூடாது “தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?” என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியது” எனக் கூறுவீராக! அறிகிற […]

14) சந்தேகமானதை விட்டு விலகுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப் பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிட மானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் […]

13) பொருள் திரட்டும் வழிமுறை

நபிமார்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் நபிமார்கள் அல்லாஹ் தந்த அருட்கொடைகளைப் பெற்று அதற்கு நன்றி செலுத்தினார்கள். உலகிலேயே நாம் குறைவான அமல் செய்து ஒருவனை திருப்திப்படுத்த முடியும் என்றால் அது அல்லாஹ்வை மட்டும் தான். உதாரணத்திற்கு நாம் வயிறு நிறைய உண்ண வேண்டும் என்றால் நாம் அதற்காகக் கடுமையாக ஒருவனிடம் உழைக்க வேண்டும். ஆனால் அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவன் குறைந்த அமலிலேயே அவன் திருப்தி அடைகிறான் நாம் வயிறு நிறைய உண்டு விட்டு […]

12) நல்லவர்கள் கஷ்டப்படுவதும் தீயவர்கள் சுகமாக வாழ்வதும்

உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம். உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் என்று சொன்னால் இந்த உலகத்திலேயே நாம் பார்க்கலாம்; நல்லவர்கள் எல்லாம் கஷ்டப்படுவார்கள். தீயவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு நிலையைப் பார்க்கிறோம். நேர்மையாக, சரியான அடிப்பûயில் இருக்கக் கூடியவன் ஏழ்மையில் வாடுவான். லஞ்சம் வாங்கி மோசடி செய்து ஹராமான அடிப்படையில் வியாபாரம் செய்பவன் செல்வச் செழிப்பில் இருப்பதைப் பார்க்கிறோம். பெரும்பாலும் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள். நேர்மையாக நடப்பவர்களும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். […]

11) செல்வமும் விதியும்

அல்லாஹ்வின் தூதர் அவர்கள், சிறுவனாக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள்: உனக்கு நான் சில சொற்களை கற்றுத் தருகிறேன். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணிக்கையாக இரு! அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணிக்கையாக இரு! அல்லாஹ்வை கண் முன்னே பார்ப்பாய்! நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் நீ கேள்! மேலும் நீ உதவி தேடுவதாக இருந்தால் நீ அல்லாஹ்விடத்தில் உதவி தேடு! அறிந்து கொள்! சமுதாயம் ஒட்டுமொத்தமாக சேர்ந்து உனக்கு ஒரு நன்மை […]

07) போதுமென்ற மனம்

நம்மிடத்தில் செல்வங்கள் இருக்கும் போது அதை வைத்து நமது வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்துக் கொள்ளலாம். ஆனால் பிறரைப் பார்த்து அவனை விட நாம் செல்வந்தராக இருக்க வேண்டும் என்பதற்காக பிறரிடம் யாசகம் கேட்கிறோம். இப்படி யாசகம் கேட்பதன் தீமைகளைக் கடந்த இதழில் கண்டோம். எனவே யாரிடமும் கையேந்தாமல் இருக்கின்ற செல்வத்தை வைத்து நமது உள்ளம் திருப்தி கொள்ள வேண்டும். நம்மிடம் போதுமென்ற மனம் இருக்க வேண்டும். “யாரிடமும் எதையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் யார் […]

05) நபியவர்களின் வறுமை

பொருளாதாரம், இறை நினைவை விட்டும் திசை திருப்பக் கூடியதாக ஆகி விடக் கூடாது என்பதைக்  கண்டோம். இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வறுமையான நிலையிலேயே தமது வாழ்நாளைக் கழித்துள்ளார்கள். நபிகள் நாயகத்துக்கு ஏற்பட்ட வறுமையைப் போன்று இன்று வரைக்கும் எவருக்கும் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில் பல ஆண்டுகள் வாழந்தார்கள். நபிகள் நாயகம் சிறு வயதில் தாய் தந்தையை இழந்த அனாதையாக இருந்தார்கள். அப்போது ஆடு மேய்த்து வாழ்க்கையை ஓட்டினார்கள். நபியாக ஆனதற்குப் பின் அவர்களை […]

04) செல்வந்தர்கள் கவனத்திற்கு…

இறை நினைவை திசை திருப்பக்கூடாது செல்வம் இருப்பதால் அல்லாஹ்வை நினைவு கூர்வதை மறந்துவிடக் கூடாது. இன்று எத்தனையோ நபர்கள் பணம் வருவதற்கு முன் வணக்க வழிபாட்டில் ஈடுபாட்டுடன் இருந்தவர்கள், பணம் வந்தவுடன் அல்லாஹ்வை நினைவு கூர்வதை மறந்துவிடுகிறார்கள். இந்த நிலை வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் இறை நினைவை விட்டும் திருப்பி விடாது என்று உறுதியாக நம்பினால் மட்டுமே காசு பணத்தை வைத்துக் கொள்ளலாம். நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும் அல்லாஹ்வின் […]

03) பொருளாதாரம் ஒரு சோதனை

பொருளாதாரம் மனிதனுக்கு அவசியம் என்பதை இதுவரை நாம் பார்த்தோம். இதன் காரணமாக, சம்பாதிக்க வேணடும்; சொத்து செல்வங்களைச் சேர்க்க வேணடும் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் வந்திருக்கும். இதை மட்டும் வைத்து கொண்டு பொருளாதாரத்தைத் திரட்டுதுவது தான் வாழ்க்கை என்று எண்ணிவிடக் கூடாது. பொருளாதாரம் பயங்கரமானது; அதைக் கையாள வேண்டிய விதத்தில் கையாள வேண்டும். இல்லாவிட்டால் இது சுவர்க்கத்துக்குப் பதிலாக நரகப் படுகுழிக்குக் கொண்டு செல்லும் என்பதைப் பற்றி எச்சரித்து, குர்ஆன் மற்றும் ஹதீஸில் அல்லாஹ்வும் அவனுடைய […]

02) பொருளாதாரம் ஆன்மீகத்திற்கு எதிரானதா?

உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள், பொருளாதாரத்தை ஆன்மீகத்திற்கு எதிராகவே சித்தரித்துக் காட்டுகின்றன. பொருளாதாரமும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை; பொருட்செல்வம் உடையவன் ஆன்மீகவாதியாக முடியாது என்ற கருத்தைத் தான் முன்வைக்கின்றன. ஆனால் ஆன்மீகத்திற்குப் பொருட்செல்வம் ஒரு தடைக்கல் அல்ல என்று இஸ்லாம் கூறுகின்றது. பொருளைத் தேடுவதும், அதைச் சேமிப்பதும், நல்வழியில் செலவளிப்பதும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை விட வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறலாம். வியாபாரத்தைத் தூண்டும் திருக்குர்ஆன் வசனங்கள் திருக்குர்ஆன் ஆன்மீகத்தைச் சொல்லித் தரக் கூடியது. இதில் அதிகமான இடங்களில் சம்பாதிக்கத் தூண்டக்கூடிய […]

01) முன்னுரை

பொருளியல் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் இது வியாபாரிகளுக்குரியது, வணிகர்களுக்குரியது, பணக்காரர்களுக்குரியது என்று யாரும் எண்ணிவிடக் கூடாது. இது ஏழைகள், கூலித் தொழிலாளிகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் பொருளாதார ரீதியாக என்ன முடிவெடுக்க வேண்டும் என்று விளக்குவது தான் இந்தத் தலைப்பின் நோக்கம். உலகத்தில் பொருளாதாரத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, சிலர் செல்வங்களைத் திரட்டுவதால், வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வதால் ஆன்மீக நிலையில் உயர்ந்த நிலையை அடைய முடியாதென்று நினைக்கின்றார்கள். இறைவனுடைய திருப்தியையும் அன்பையும் பெற […]

மாமியார் vs மருமகள்

முன்னுரை ஒரு குடும்பம் உருக்குலைந்து விடாமல் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றால் அந்தக் குடும்பத்தின் முக்கிய அங்கமாக இருக்கக் கூடிய பெண்கள், குறிப்பாக மாமியார் மருமகள் இருவருமே இணக்கமாக, ஒற்றுமையாக, பரஸ்பர உறவுடன் வாழ வேண்டும். இல்லையேல் அக்குடும்பம் சீரழிந்துவிடும். மாமியார், மருமகள் ஆகிய இருவருக்குமிடைய கருத்து வேறுபாடு, பிணக்கு, சரியான புரிந்துணர்வு இல்லாமை, நீயா நானா என்ற போட்டி, ஈகோ போன்ற காரணங்கள் இறுதியில் கொலை செய்யும் அளவுக்குத் தள்ளிவிடுகின்றது. மாமியார் – மருமகள் […]

இஸ்லாத்தின் பார்வையில் என்கவுண்டர்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முன்னுரை மக்களை நெறிப்படுத்துவதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும் உலக நாடுகளில் பல வகையான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாக, பல லட்சம் குற்றவாளிகளைத் தண்டித்த இந்தச் சட்டங்கள், அவ்வப்போது காலாவதி ஆவதும், திருத்தப்படுவதும் தொடர் கதையாய் நீண்டு கொண்டே போகிறது. பெரும்பாலான தண்டனைகள் மக்களின் கூட்டு மனசாட்சியை மையப்படுத்தியே […]

அவள் ஒரு நற்செய்தி!

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒரு பெண் இளம் பருவத்தை அடைகிற போது இனக்கவர்ச்சியினாலும் இளமைப்பருவத்தினாலும் பலராலும் விரும்பப்படுகிற நபராகிறாள். அதிலும் பொலிவான முகத்தோற்றம் அமைந்து விட்டால் ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு திருமணத்திற்காகப் பெண் கேட்பர். ஆனால் அந்தப் பெண், குழந்தையாகப் பிறந்த பொழுது இதே அளவில் அவள் […]

சோதனைகளை சகித்துக் கொள்வோம்

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாமிய மார்க்கத்தைத் தன்னளவில் கடைப்பிடிப்பதற்குக் கூட இயலாத கால சூழலை நபிகள் பெருமகனாரும் அவர்களது தோழர்களும் மக்காவில் எதிர்கொண்டனர். உயிர் வாழவே இயலாத சூழல் உருவானது. எதை இழந்தாலும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் இழந்து விடக் கூடாது எனும் உயரிய போதனையை தம் தோழர்களுக்கு செய்து வந்த நபி (ஸல்) அவர்கள், எத்தகைய சோதனைகளின் போதும் பொறுமையை இழந்து விடாமலும், அதே நேரம் அந்தத் துன்பங்களை ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வதில் […]

உரிமைகளை மீட்டெடுப்போம்

இஸ்லாமிய மார்க்கம், ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசும் மதம் அல்ல! இது சத்திய மார்க்கம். மனிதனுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் போதிக்கிற முழுமையான வாழ்க்கை நெறி. இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதனும் சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை, அதாவது அடுத்தவருக்குத் தர வேண்டிய உரிமைகளைப் பற்றியும் இஸ்லாம் எடுத்துரைக்கிறது. அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். […]

11) ஜிஹாதின் பெயரால் ஐயாயிரம் முஸ்லிம்கள் படுகொலை

ஆயிஷா (ரலி) படைக்குள் சதிகாரர்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப் பழி தீர்ப்பதாகக் கூறி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையில் 900 குதிரைப் படையுடன் மக்காவிலிருந்து புறப்பட்ட படை, பஸரா செல்லும் வழியில் கூஃபா உள்ளிட்ட பல பகுதிகளிலும் மேலும் படையைத் திரட்டிக் கொண்டு, கணிசமான வலிமையுடன் பஸராவை நோக்கிச் செல்கிறது. இந்நிலையில், “மர்ருழ் ழஹ்ரான்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஃபாத்திமா பள்ளத்தாக்கை அடைந்ததும், ஆயிஷா நாயகியின் படையில் சேர்ந்து கொண்டு வந்த சயீத் இப்னுல் […]

10) அன்னையாரின் சபதம்

அலீ (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நான்காவது கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. அவர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. பெருமானாரின் மனைவிமார்களான உம்முல் முஃமினீன்களிடமிருந்தும், பல மூத்த நபித்தோழர்களிடமிருந்தும் எதிர்ப்புகளையும் கண்டனக் கனைகளையும் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவை அனைத்திற்கும் காரணம் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை தான். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிரான கிளர்ச்சியும் அவர்களின் படுகொலையும் எப்படி ஜிஹாத் என்ற பெயரில் நடத்தப்பட்டதோ, அதே […]

09) அலீ (ரலி) சந்தித்த சவால்கள்

முஸ்லிம்கள் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் நபி (ஸல்) அவர்கள் எந்தளவுக்கு எச்சரிக்கை செய்தார்கள் என்பதையும், அந்த எச்சரிக்கைக்கு மாற்றமாக முஸ்லிம் உம்மத் ஜிஹாதைத் தவறாக விளங்கி செயல்பட்டதால் உஸ்மான்(ரலி) அவர்கள் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் விரிவாக சென்ற இதழில் பார்த்தோம். ஜிஹாதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இஸ்லாமிய வரலாறு சந்தித்த இரத்தக் கறை படிந்த அத்தியாயங்களின் தொடரில் அலீ (ரலி) அவர்களின் ஆட்சியின் போது நடந்த துயர நிகழ்வுகளும் அமைந்துள்ளன. அலீ […]

08) ஜிஹாதின் பெயரால் நடந்த உஸ்மான் (ரலி) கொலை! அதிர்ச்சி வரலாறு

“ஜிஹாத்’ என்ற சொல்லின் விளக்கத்தையும், ஜிஹாத் (கிதால்) உட்பட இறைவன் நமக்கு விதியாக்கிய எந்தக் கடமையையும் நாம் விரும்பியவாறு செய்ய முடியாது; அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் வகுத்துத் தந்த விதிமுறைகளின் படியே நிறைவேற்ற வேண்டும் என்பதையும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் இது வரை பார்த்தோம். ஜிஹாத் (கிதால் – ஆயுதப் போர்) பற்றி முழுமையான ஆய்வு செய்யாமல் முஸ்லிம்களுக்குள் மோதிக் கொண்டதால் இஸ்லாமிய வரலாற்றில் பதியப்பட்டுள்ள துயரச் சம்பவங்கள் பற்றியும், அதிலிருந்து […]

07) ஜிஹாதின் அடிப்படை

“ஜிஹாத்” என்றால் என்ன? என்னென்ன நற்செயல்கள் எல்லாம் “ஜிஹாத்’ என்ற வட்டத்திற்குள் வருகிறது என்பதையும் நடைமுறையில் ஜிஹாத் என்றாலே ஆயுதந்தாங்கிப் போரிடுவது மட்டும் தான் என்று விளங்கி வைத்திருப்பது தவறு என்பதையும் இதுவரை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பார்த்தோம். ஜிஹாதின் முக்கிய ஓர் அங்கமான “கிதால்’ (ஆயுதம் ஏந்திப் போரிடுதல்) பற்றி இனி விரிவாக நாம் பார்ப்போம். முஸ்லிம்கள் ஆயுதமேந்திப் போரிடுவதை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் திருமறைக் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்கு சென்ற தொடரில் நாம் […]

06) ஜிஹாதும் கிதாலும்

“ஜிஹாத்’ என்றாலே முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்-ம்கள் அழிப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தை என்ற தவறான கருத்து இன்று உலகம் முழுவதும் நிலவி வருகின்றது. இன்னும் சொல்லப் போனால் தங்களை முஸ்-ம்கள் என்று சொல்-க் கொள்வோர் சிலர் கூட இந்தக் கருத்தைத் தான் கொண்டிருக்கின்றனர். இத்தகைய தவறான கருத்து நிலவுவதற்கு மிக முக்கிய காரணம் மேற்கத்திய ஏதேச்சதிகார சக்திகளின் ஊதுகுழலாய் விளங்கக் கூடிய தகவல் தொடர்பு சாதனங்களும், முஸ்-ம்களிடம் ஜிஹாதைப் பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமையும் தான். இந்தத் தவறான […]

05) செல்வத்தால் போரிடுதல்

இறைவனால் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவது, மனோ இச்சையைக் கட்டுப்படுத்துவது, நீதிக்காக (நாவினால்) குரல் கொடுப்பது ஆகிய நற்செயல்கள் அனைத்தும் “ஜிஹாத்’ என்பதை ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களின் மூலம் சென்ற தலைப்பில் நாம் பார்த்தோம். இவை அல்லாமல் நேரடியாகக் களப் போரில் இறங்கி, உயிரைப் பணயம் வைத்து அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வதும், அந்த யுத்தத்திற்குத் தேவையான தளவாடங்களுக்காக தங்களிடமுள்ள செல்வங்களைச் செலவிடுவதும் “ஜிஹாத்’ (அறப்போர்) தான் என்பதை விளக்கும் ஒரு சில வசனங்களை […]

04) நீதிக்குக் குரல் கொடுப்போம்

“ஜிஹாத்’ என்பதற்கு உழைத்தல் – பாடுபடுதல், வற்புறுத்துதல் – கட்டாயப்படுத்துதல், உறுதி மற்றும் சத்தியத்தின் பக்கம் மக்களை அழைக்கும் பணி ஆகிய அர்த்தங்கள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் சான்றுகளுடன் இதுவரை பார்த்தோம். மேலும் என்னென்ன நற்செயல்களுக்கு “ஜிஹாத்’ என்ற வார்த்தை பொருந்தும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். ஹஜ் செய்வதும் ஜிஹாத் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சிறந்த, அழகிய ஜிஹாத் […]

03) ஜிஹாத் பொருள் விளக்கம்

“ஜிஹாத்’ என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்பது மட்டும் பொருளல்ல! அது பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தை என்பதைப் பார்த்து வருகின்றோம். ஜிஹாத் என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல், உறுதி, அழைப்புப் பணி ஆகிய பொருள்கள் உள்ளன என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களைக்  கண்டோம். அழைப்புப் பணி செய்வதும் “ஜிஹாத்’ தான் என்பதை வ-யுறுத்தும் மேலும் பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. நபியே! (ஏக இறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக! அவர்களிடம் கடினமாக நடப்பீராக! […]

Next Page » « Previous Page