
சகீபா பனூ சாயிதாவில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்யமாலிருந்த ஒரே நபித்தோழர் ஸஅத் பின் உப்பாதா (ரலி) தான். வேறு சிலர் பைஅத் செய்யாமல் தாமதித்தனர். அவர்கள் அலீ (ரலி) மற்றும் ஜுபைர் (ரலி) ஆகியோர் ஆவர். ஆனால் அவர்கள் சகீபா பனூ சாயிதா சம்பவத்தன்று பைஅத் செய்தார்கள் என்ற செய்தியை பைஹகீயில் பார்க்கிறோம். அபூபக்ர் (ரலி) யின் கையைப் பிடித்து உமர் (ரலி), இதோ உங்கள் தோழர் என்று கூறி அவரிடம் வாக்களித்தனர். […]