Author: Kamila

நஜ்த் பகுதி சபிக்கப்பட்ட பகுதியா?

பதில்: நீங்கள் குறிப்பிடும் செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْحَسَنِ قَالَ حَدَّثَنَا ابْنُ عَوْنٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ هُنَاكَ الزَّلَازِلُ وَالْفِتَنُ […]

சுனாமியும் சோதிடமும்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒரு நல்ல நேரம் பார்த்துத் திருமணம் நடத்த வேண்டும்; நல்ல நேரம் பார்த்துத் தாலி கட்ட வேண்டும்; நல்ல நேரம் பார்த்து வீடு குடிபுக வேண்டும்; நல்ல நேரம் பார்த்து வியாபாரம் தொடங்க வேண்டும். இப்படி நேரம் பார்ப்பது எல்லா சமுதாய மக்களையும் ஆட்டிப் படைக்கும் அறியாமையாகும். இதில் தூய முஸ்லிம்கள் மட்டும் விதிவிலக்கு பெறுகின்றனர். […]

பெண்களுக்குத் தேவை ஆளும் உரிமையா? வாழும் உரிமையா?

பெண்களுக்குத் தேவை ஆளும் உரிமையா? வாழும் உரிமையா? மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டியும், உலக மகளிர் இயக்கம் துவங்கி 150 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டியும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தது. கடுமையான, காரசாரமான விவாதத்திற்குப் பிறகு அதற்கு ஆதரவாக 186 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பெற்று ராஜ்யசபையில் இந்த மசோதா, கடந்த மார்ச் 9 அன்று நிறைவேறியது. ஆனால் இது நாடாளுமன்றத்தில் […]

செலவிடும் போது பெருமை ஏற்பட்டால்..?

நல்வழியில் செலவிடும் போது பெருமைக்காகச் செய்கிறோனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது ஷைத்தானின் வேலையா? பதில்: பொருளாதாரத்தைச் செலவிடும் போது இரகசியமாகவும் செலவிடலாம். பகிரங்கமாகவும் செலவிடலாம். إِن تُبْدُوا۟ ٱلصَّدَقَـٰتِ فَنِعِمَّا هِىَ ۖ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا ٱلْفُقَرَآءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ ۚ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّـَٔاتِكُمْ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு […]

ஞாபக மறதி நோய்க்கு இஸ்லாமிய வழிபாட்டு முறையே தீர்வு

நிரூபித்த அமெரிக்க, இஸ்ரேல் ஆய்வு முடிவுகள்! மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு மன அழுத்தத்தின் காரணமாக ஞாபக மறதி நோய் அதிகரித்து வருவதை நாம் கண்டு வருகின்றோம். இந்த நோய் ஐவேளைத் தொழுகைகளைக் குறித்த நேரத்தில் தொழும் முஸ்லிம்களைத் தாக்குவதில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்காலக் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க – இஸ்ரேலிய விஞ்ஞானிகள் […]

சொர்க்கம் பூமியில் தான் உருவாக்கப்படுமா?

சொர்க்கம் வானத்தில் இல்லையா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் போதும், இன்ன பிற சந்தர்ப்பங்களிலும் சொர்க்கத்தைப் பார்த்துள்ளதாக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களில் இருந்து சொர்க்கம் ஏற்கனவே படைக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. அது வானத்தில் உள்ளது என்பதும் தெரிகிறது என்ற காரணத்தினால் நமது கூற்றை சிலர் மறுக்கின்றனர். உயிர் தியாகிகள் உடனே சொர்க்கம் செல்வார்கள் என்று குர்ஆன் கூறுவதாலும், பச்சை நிற பறவைக் கூட்டுக்குள் சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று ஹதீஸ்கள் கூறுவதாலும் சொர்க்கம் […]

09) அனைத்தும் இறைவன் செயல் என்றால் தீயவனைத் தண்டிப்பது ஏன்?

கேள்வி: அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது தீமை செய்பவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?’ விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் […]

8) விதியை வெல்ல முடியுமா?

பின்வரும் கருத்தில் ஹதீஸ் உள்ளதா? அப்படி இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதா? ஒரு மனிதரைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனிதர் திரும்பி வர மாட்டார்; அதாவது மரணித்து விடுவார் என்று சொல்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்குப் பின் அந்த வழியாக மீண்டும் அந்த மனிதர் செல்கிறார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து நீங்கள் சில தினங்களுக்கு முன் ஏதாவது செய்தீர்களா என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் சில ஏழைப் […]

நபியவர்களின் எச்சரிக்கைகளை மறுக்கும் பரேலவிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் தம்மைக் கடவுள் நிலைக்கு யாரும் உயர்த்தி விடக் கூடாது என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கின்றார்கள். سَمِعَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ عَلَى المِنْبَرِ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «لاَ تُطْرُونِي، كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ، وَرَسُولُهُ» “கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் […]

மாசுபடும் ஆறுகள் மனம் மாறும் சாதுக்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் அண்மையில் இந்தியாவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் அல்லாஹ் 15:2➚ இந்த வசனத்தில் சொல்வதைப் போன்று பிற மதத்தவர்களை நினைக்கத் தூண்டுகின்றன. رُبَمَا يَوَدُّ الَّذِيۡنَ كَفَرُوۡا لَوۡ كَانُوۡا مُسۡلِمِيۡنَ “தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமே” என்று சில நேரங்களில் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புவார்கள். (அல்குர்ஆன்: 15:2)➚ டெல்லி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும் ஒரு பெருங்கூட்டம், கற்பழிப்புக் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறுகின்ற மரண தண்டனை வேண்டும் என்று கோரினர். முஸ்லிம்களைப் […]

பூமி நிலையாக நிற்கிறதா?

இஸ்லாமிய அறிஞரின் அறியாமை சூரியனை மையமாகக் கொண்டு அனைத்துக் கோள்களும் சுற்றுகின்றன என்ற சூரிய மையக் கோட்பாட்டை விஞ்ஞான ரீதியில் உலகிற்கு முதலில் கூறியவர் கலிலியோ என்ற அறிஞர் ஆவார். இவர் இத்தாலியில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ல் பிறந்தார். அதே பிப்ரவரி 15, 2015 ஆம் நாளில் துபாய் சார்ஜாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சவூதி அரேபிய அறிஞர் “பன்தர் அல்ஹைபரி” அவர்களிடம் பூமி சுற்றுகிறதா? அல்லது நிலையாக நிற்கிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. […]

பணக்காரக் கடவுள்களின் பயன்படாத பொருளாதாரம்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! மும்பையில் 200 ஆண்டு காலப் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோயில் உள்ளது. யானைமுகக் கடவுளான கணேஷன் கோயில், வளைத்து வளைத்து மாட்டப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 65 காவல் அதிகாரிகள் 24 மணி நேரமும் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்தக் கண்காணிப்புக் கேமராக்கள்? காவல் காக்கும் அதிகாரிகள்? இந்தியாவில் உள்ள பணக்காரக் கோயில்களில் இதுவும் ஒன்று! 67 மில்லியன் டாலர் மதிப்பிலான 158 கிலோ தங்கக் காணிக்கைகள் இந்தக் […]

தேவை நிவாரணமல்ல! நியாயம்!

தேவை நிவாரணமல்ல! நியாயம்! அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகியவை ஹஜ் மாதங்களாகும். அதன் முதல் மாதமான ஷவ்வால் மாதம் துவங்கி விட்டது. ஹஜ்ஜுக்கான முஸ்லிம்களின் பயணங்களும் துவங்கி விட்டன. மனிதர்களின் ஒற்றுமையை உணர்த்துவதற்காக, ஓங்கச் செய்வதற்காக மக்காவில் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நடத்தப்படுகின்ற ஓர் ஒற்றுமை மாநாடு தான் ஹஜ் என்று சொல்லலாம். நிறம், நாடு, மொழி, இனம், குலம், கோத்திரம் ஆகியவை மனித சமுதாயத்தை அடையாளம் காட்டுகின்ற அளவுகோல் தானே தவிர […]

முஸ்லிமாக மதம் மாறியோருக்கு இட ஒதுக்கீடு இல்லையா?

முஸ்லிமாக மதம் மாறியோருக்கு இட ஒதுக்கீடு இல்லையா? இந்து மதத்திலிருந்து முஸ்லிமாக மதம் மாறியோரை இதர பிற்படுத்தப்பட்டோராக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த அக்பர் அலி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அதில் தானும் தனது குடும்பமும் 2008ம் ஆண்டு எங்களது சுய விருப்பத்தின் பேரில் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறினோம். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுத பிசி பிரிவில் விண்ணப்பித்தேன். […]

பாடப் புத்தகங்களில் முகாலாயர்களின் வரலாற்றை என்.சி.இ.ஆர்.டி நீக்கம் செய்துள்ளதே ?

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் என்சிஇஆர்டி எனும் அமைப்பு பாடப்புத்தகங்களை திருத்துகிறோம் எனும் பெயரில் பாஜக அரசின் கைப்பாவையாக மாறி வரலாற்றை மாற்றி எழுதும் வேலையைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. சமீபத்தில் 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில் சில பகுதிகளை நீக்கம் செய்துள்ளது. காந்தியின் இந்து – முஸ்லிம் ஒற்றுமை இந்து தீவிரவாதிகளை துண்டியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சில காலம் தடை செய்யப்பட்டிருந்தது. ஆகிய பகுதிகளை நீக்கம் செய்துள்ளது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 11 ம் […]

ஜனாஸாவை கொதிநீரால் குளிப்பாட்ட வேண்டுமா?

ஜனாஸாவை கொதிநீரால் குளிப்பாட்ட வேண்டுமா? நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும். ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளது. அதில் ஒன்றைப் பார்ப்போம். ஜனாஸாவை கொதிநீரால் குளிப்பாட்ட வேண்டுமா? ஜனாஸாவைக் குளிப்பாட்டுவது தொடர்பாக, இலந்தை இலை கலந்த […]

குழந்தை வளர்ப்பு அறிவியலும் இஸ்லாமும்

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த உலகத்தில் இறைவன் நமக்கு வழங்கிய எண்ணற்ற அருட்கொடைகளில் மிகப்பெரும் அருட்கொடைதான் “நம் குழந்தைச் செல்வங்கள்” ஒவ்வொரு சிறு குழந்தையும் நாளை இந்த உலகத்தை வழிநடத்தக் கூடியவர்கள் என்பதைத் தாண்டி, பெற்றோர்களாகிய நம்மை வழிநடத்தி, பாதுகாக்க இருப்பவர்களும் இந்தக் குழந்தைகள்தான். ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதற்கு முன்னர் ஒவ்வொரு தாய், தந்தையின் கனவுகள் என்பது எண்ணிலடங்காதவை ஆகும். “என் பிள்ளை என்னைவிடச் சிறந்தவனாக இருப்பான்” “என் பிள்ளை நான் சாதிக்காததையெல்லாம் சாதித்துக் காட்டுவான்” […]

தெரிந்த செய்திகள் தெரியாத உண்மைகள்

தெரிந்த செய்திகள் தெரியாத உண்மைகள்: பள்ளிவாசல்களில் அமர்ந்து உலக விஷயங்களை பேசக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பள்ளியில் பேசினால் நாற்பது ஆண்டு கால நன்மைகள் அல்லது தொழுகைகள் அழிந்து விடும் என நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாக ஒரு செய்தியை பல பள்ளிவாசல்களில் எழுதி வைத்திருக்கின்றார்கள். அதிகமான மக்களும் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாகவே இன்றளவும் நம்பியுள்ளனர். உண்மையில் இவ்வாறு ஹதீஸ் உள்ளதா? இதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொள்வோம். الحديث في المسجد […]

இம்மாமனிதர் இருக்கும்போதும் ஏதுமில்லை! இறக்கும்போதும் ஏதுமில்லை

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! உணவில் நிறைவில்லாமல் வாழ்ந்த ஒரு தலைவர், ஒருவேளை உணவு போக அடுத்த வேளை உணவுக்குப் போதிய இருப்பில்லாத ஒரு தலைவர், உடையிலாவது ஏகபோகமாகப் பெற்றிருந்தார்களா? என்றால் இல்லை என்பதைத் தான் அன்னாரது ஏழ்மை வாழ்வு எடுத்துரைக்கின்றது. ஒட்டுப் போட்ட ஆடையணிந்த உலகத்தலைவர் ஆயிஷா (ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, “இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபுர்தா (ரஹ்) […]

அருள்மிகு ரமளானுக்கு ஆயத்தமாவோம்

அருள்மிகு ரமளானுக்கு ஆயத்தமாவோம் வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். (அல்குர்ஆன்: 9:36)➚ மாதங்கள் பன்னிரண்டு என்று சொல்கின்ற வல்ல நாயன் அந்த மாதங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. ஒரேயொரு மாதத்தைத் தவிர! அந்த மாதம் புனிதமிக்க ரமளான் மாதம் தான். ரமளான் மாதத்தின் பெயரை மட்டும் அல்லாஹ் குறிப்பிடுவது ஏன்? அந்த மாதத்தில் தான் புனிதமிகு திருக்குர்ஆனை அல்லாஹ் அருளினான். இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் […]

ரமலான் மாத செய்தி சொன்னால் நரகத்திலிருந்து விடுதலையா?

ரமலான் மாத செய்தி சொன்னால் நரகத்திலிருந்து விடுதலையா? ரமலான் மாதம் வந்துவிட்டால் பல பொய்யான செய்திகள் மக்களிடம் உலா வரத் தொடங்கின்றன. உண்மையான செய்திகளை விட பொய்யான செய்திகள் மிக விரைவாக மக்களிடம் போய் சேர்ந்துவிடுகின்றன. அவற்றில் ஒன்றுதான் பின்வரும் செய்தி. من بلغ الناس بشهر رمضان حرمه على النار யார் ரமலான் பற்றிய செய்தியை பிறருக்கு அறிவிக்கிறாரோ அவர் மீது நரகம் ஹராமாக்கப்படும். இந்த செய்தி எந்த ஆதாரப்பூர்வமான நூல்களிலும் இடம்பெறவில்லை. பலவீனமான, […]

வித்ரு குனூத் தொடர்பாக வரும் ஹதீஸ்கள் பலவீனமானதா?

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! நாம் செய்கிற எந்த ஒரு வணக்கமாக இருந்தாலும், அது குர்ஆனிலோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ வழிகாட்டப்பட்டிருக்க வேண்டும் என்கிற அடிப்படையை மார்க்கம் நமக்கு வழியுறுத்துகிறது. அதிலும் குறிப்பாக, நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அமைத்து கொள்ள வேண்டும். ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி)(புகாரி: 631) ➚ […]

கோள் சொல்லுதல் கூடாது

கோள் சொல்வது தடைசெய்யப்பட்டதாகும் (கோள் சொல்லுதல் என்பது குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ரீதியில் ஒருவரின் பேச்சை மக்களுக்கு மத்தியில் பரப்புவதாகும்.) قال اللَّه تعالى:﴿هَمَّازٍ مَشَّاءٍ بِنَمِيمٍ﴾ அல்லாஹ் கூறுகிறான்: அவன் குறைபேசித் திரிபவன், கோள் சொல்லிக்கொண்டு நடப்பவன்.(அல்குர்ஆன்: 68:11)➚ وقال تعالى: ﴿مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ﴾. அல்லாஹ் கூறுகிறான்: (பதிவு செய்வதற்குத்) தயாராக உள்ள கண்காணிப்பாளர் அவனிடம் இருக்கும் நிலையிலேயே தவிர அவன் எந்த வார்த்தையையும் பேசுவதில்லை.(அல்குர்ஆன்: […]

பிரார்த்தனை பற்றிய சில மார்க்கச் சட்டங்கள்

கண்ணெதிரே இல்லாத சகோதரருக்காக பிரார்த்திப்பதின் சிறப்பு قال اللَّه تعالى: ﴿وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ﴾ அல்லாஹ் கூறுகிறான்: அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள் “எங்கள் இறைவா! எங்களையும், இறைநம்பிக்கை கொள்வதில் எங்களை முந்தி விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னித்தருள்வாயாக! என்று கூறுகின்றனர்..(அல்குர்ஆன்: 59:10)➚ وقال تعالى: ﴿اسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ﴾ அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) உமது பாவத்திற்காகவும், இறை நம்பிக்கை […]

இறைமன்னிப்பைப் பெற்றிட இறைத்தூதரை மட்டுமே பின்பற்றுவோம்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! இவ்வுலகில் நாம் செய்த பாவங்களுக்கெல்லாம் படைத்தவனிடம் எவ்வாறு பாவமன்னிப்பு பெறுவது, அதற்காக நாம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இந்த உரையில் காண்போம். ஓரிறைக் கொள்கையை ஓங்கி ஒலிக்கும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஏகத்துவ உறுதிமொழியில் ஒருவர் உறுதியாக இருப்பதே அவரது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக அது அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட இந்தக் கொள்கை இவ்வுலகில் வாழும் ஏராளமான மனிதர்களுக்குக் கிடைக்காமல் நமக்குக் கிடைத்திருப்பது இறைவனின் மகத்தான […]

மரணம் பற்றிய மார்க்க நினைவூட்டல்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! மரணம் என்பது சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய விசயம் அல்ல. அதில் அநேகமான பாடங்களும் படிப்பினைகளும் பொதிந்துள்ளன. மரணத்தை மையப்புள்ளியாகக் கொண்டு மார்க்கத்தில் நிறைய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம். மரணம் எனும் மகத்தான சான்று! ஏக இறைவனை அறிந்து கொள்வதற்கு அவனது ஆற்றலைப் புரிந்து கொள்வதற்கு எண்ணற்ற விசயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அந்த வகையில் மரணம் என்பது மகத்தான சான்றாகத் திகழ்கின்றது. உடலில் இருந்து […]

ரமளான் – கூலி தரும் குர்ஆன் மாதம்

ரமளான்: கூலி தரும் குர்ஆன் மாதம் அல்லாஹ்வின் வேதத்தில் எந்தவொரு மாதத்தின் பெயரும் பதிவாகவில்லை. ஒரு மாதத்தைத் தவிர! அது தான் புனித மிக்க ரமளான் மாதமாகும். இந்த மாதத்தின் மாண்பையும் மகிமையையும் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். இந்த ரமளான் மாதத்தின் பெயரை அல்லாஹ் குறிப்பிடும் அளவுக்கு இதன் சிறப்பு தான் என்ன? அதையும் அல்லாஹ்வே சொல்கிறான். இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் […]

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஒரு நாட்டை அல்லது ஒரு சமுதாயத்தை ஆளுகின்ற சட்டம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த புனிதச் சட்டமாக இருக்கலாம்; அல்லது மக்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்ட மனிதச் சட்டமாக இருக்கலாம். அதே போன்று ஒரு சங்கத்தை, கழகத்தை, அமைப்பை ஆளுகின்ற துணைச் சட்டமாக இருக்கலாம். எந்தச் சட்டமாக இருந்தாலும் அந்தச் சட்டத்திற்கு முன் அனைவரும், ஏழை – பணக்காரன், ஆள்பவர் – ஆளப்படுவோர், ஆண் – பெண், நிர்வாகி – உறுப்பினர் […]

பெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா?

பெண்கள் தங்க நகைகள் அணிவதை மார்க்கம் தடை செய்கிறதா? ஆண்கள் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது. பெண்கள் அணிந்து கொள்ளலாம் என்பதே மார்க்கச் சட்டம் என்று பரவலாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தக் கருத்தையே கொண்டிருக்கிறார்கள். பல வருடங்களாக நாமும் இதே கருத்தையே சொல்லிக் கொண்டு வருகின்றோம். இந்த நமது நிலைப்பாட்டிற்கு எதிராகச் சில அறிஞர்கள், பெண்களும் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்று கூறியுள்ளனர். இந்தக் கருத்து வேறுபாடு, நமக்கு முந்தைய […]

காலாடை கரண்டையைத் தாண்டலாமா? -2

காலாடை கரண்டையைத் தாண்டலாமா? ஆடை தரையில் படாமல் கணுக்கால் வரை உடுத்திக் கொள்வதற்குத் தடையில்லை என்பதற்கான ஆதாரங்களைக் கடந்த இதழில் கண்டோம். இதற்கு மாற்றமாக, கணுக்காலில் ஆடை படவே கூடாது என்று வாதிடுவோர் சில ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். அவற்றைப் பார்ப்போம். முதல் ஆதாரம் ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார்: நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். “நான் கீழாடையை எதுவரைக்கும் அணியலாம்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை […]

இன்னொரு மகிழ்ச்சி இறைவனின் காட்சியே!

இன்னொரு மகிழ்ச்சி இறைவனின் காட்சியே! அதிகாலை கிழக்கு வெளுத்ததிலிருந்து வாய்க்கும் வயிற்றுக்கும் பூட்டு! உணர்ச்சிகளுக்குக் கடிவாளம்! அந்தி சாய்ந்து சூரியன் அஸ்தமனமாகும் அந்தப் பொன்னிற மாலை நேரத்தை ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பிறந்த குழந்தை முகம் பார்த்ததும் பிரசவித்த தாய்க்கு அத்தனை வேதனைகளும் பறந்து விடுவது போல், பட்ட வலிகள் அத்தனையும் அவள் மறந்திடுவது போல், ஒரு நோன்பாளி தான் பட்ட தாகம், பசி அனைத்தையும் நோன்பு துறந்ததும் மறந்து விடுகின்றார். சூடேறிய […]

மலையின்றி மழையில்லை

மலையின்றி மழையில்லை தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழைகளின் பயன்களையும் அதற்காக அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்ற மதில் சுவர்கள் போன்ற பாதுகாப்புகளையும் கடந்த தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக மலைகளின் இன்னபிற பயன்களைப் பார்ப்போம். இந்த மலைகள் உண்மையில் வானிலிருந்து பொழிகின்ற மழைக்கு மட்டுமல்ல! பனிப்பொழிவின் வங்கிகளாகவும் திகழ்கின்றன. தென்மேற்குப் பருவமழை, நிலப்பகுதிகளில் இடைவிடாத அடைமழையை அள்ளிப் பொழியும் அதேவேளையில் மலைகளின் உச்சிகளில் பனிமழையைப் பொழிகின்றது. அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம். (அல்குர்ஆன்: 77:27)➚ மலையையும் […]

காலாடை கரண்டையைத் தாண்டலாமா? -1

காலாடை கரண்டையைத் தாண்டலாமா? கரண்டைக்குக் கீழாக ஆடை அணிவது தொடர்பாக இன்றளவும் மக்களிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. இப்பிரச்சனை தொடர்பாகப் பல கோணங்களில் சிந்திப்பதற்கு ஏற்ற வகையில் ஆதாரங்கள் அமைந்திருப்பதால் இதில் பலத்த சர்ச்சை நீடித்து வருகின்றது. ஒருவர் பெருமையின்றி ஆடை தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அது தவறில்லை என்ற கருத்தை நாம் கூறி வருகிறோம். நம்மைப் போல் சில அறிஞர்களும் இக்கருத்தை கொண்டிருக்கின்றனர். இதற்கு மாற்றமாக கரண்டையில் ஆடை படவே கூடாது […]

தவ்ஹீதுக்கு முன் தானம், தர்மம் தவ்ஹீதுக்குப் பின் கஞ்சத்தனமா?

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்னால் நம்மில் பலர் லோக்கல் (கிராம, நகர, மாவட்ட அளவிலான) தர்ஹாக்களுக்கு விஜயம் செய்திருக்கின்றார்கள். தர்ஹாக்களுக்குச் சந்தனம் பூசுதல், விளக்கேற்றுதல், போர்வை போர்த்துதல், உண்டியல் காணிக்கை போன்ற வகைகளுக்கு தாராளமாகச் செலவு செய்தார்கள். ரீஜினல் அவ்லியா – அதாவது நாகூர், ஏர்வாடி போன்ற மாநில அளவிலான தர்ஹாக்களுக்குப் பயணம் செய்து சென்று தங்கள் கைகளிலிருந்து காசு பணத்தைக் காலி செய்தனர். இந்திய அளவில் அஜ்மீர் போன்ற நேஷனல் அவ்லியா, இன்டர்நேஷனல் […]

இலக்கணமும் தலைக்கனமும்

இலக்கணமும் தலைக்கனமும் அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! (அல்குர்ஆன்: 19:30-32)➚வசனங்களில், “நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று ஈஸா (அலை) அவர்கள் கூறும் வாசகத்திற்கு விளக்கத்தைச் சுட்டிக் காட்டி, இந்த விளக்கம் தான் ஈஸா மரணித்து விட்டார் என்ற காதியானிகளின் வாதத்திற்குப் பேரிடியாக அமைந்தது. அந்த விளக்கம் இதோ: ஈஸா நபி மரணிக்கவில்லை (அல்குர்ஆன்: 19:30-32)➚ஆகிய வசனங்களுக்கு பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி […]

பாஜக ஆட்சியும் படைத்தவனின் சூழ்ச்சியும்

முன்னேற்ற குஜராத்! முன்மாதிரி மோடி! பொருளாதார வளர்ச்சி! பொன்னான ஆட்சி! ஊழலற்ற அரசு! உன்னத நாடு! இதுபோன்ற பொய்யான கோஷங்களைப் போட்டு, போலி வேஷங்கள் போட்டு பாஜக இன்று ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. 2004, 2009 ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக செய்த சூழ்ச்சிகள் பலிக்காமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதனால் இந்தமுறை அதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி, தனது ஆசான் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சேர்ந்து களத்தில் இறங்கியது. மோடியின் உயிருக்கு ஆபத்து, இந்தியன் […]

6) அறியாமைக் கடல் கஸ்ஸாலி

அறியாமைக் கடல் கஸ்ஸாலி கஸ்ஸாலியின் ஆக்கங்களில் மண்டிக் கிடக்கின்ற வழிகேடுகள், அசத்தியக் கருத்துக்களை ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் வண்டி வண்டியாக எடுத்து, அவற்றை அலசி ஆய்வு செய்திருக்கின்றார்கள். அவற்றின் சாராம்சக் கருத்துக்களை உங்களின் பார்வைக்குத் தருகின்றோம். தர்உ தஆருலில் அக்ல் வந்நக்ல் – அறிவுக்கும் இறைச்செய்திக்கும் இடையிலான மோதலைக் களைதல் என்ற தனது நூலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கஸ்ஸாலியின் மிஷ்காத்துல் அன்வார் என்ற நூலை விமர்சனம் செய்கின்றார்கள். மிஷ்காத்துல் அன்வார் […]

5) சூபிஸத்தின் சுய வரலாறு

சூபிஸத்தின் சுய வரலாறு சூபிஸத்தின் காலம் எப்போது துவங்கியது? முதல் மூன்று நூற்றாண்டுகளில் சூபிஸம் என்ற வார்த்தை பிரபலமாகவே இல்லை என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் கூறுகின்றார்கள். இப்னு தைமிய்யாவிற்கு முன்பு இதே கருத்தை இப்னுல் ஜவ்ஸி, இப்னுல் கல்தான் ஆகியோரும் கூறியுள்ளனர். உலக வாழ்க்கையில் நாட்டம் கொள்ளாமல் மறுமை வாழ்க்கையை மையமாகக் கொண்டு வணக்கத்தில் திளைத்த ஏழை எளியவர்களாக நபித்தோழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். ஆனால் சூபிகள் என்று அவர்களில் யாருக்கும் பட்டம் சூட்டப்படவில்லை. எனவே […]

4) சூபிஸம் – ஓர் ஆய்வு

சூபிஸம் – ஓர் ஆய்வு முன்னுரை சூபிஸம்… இது இஸ்லாத்தில் புகுந்துவிட்ட ஒரு புதிய கலாச்சாரமாகும். அதன் அடிப்படை நோக்கமே இஸ்லாமிய அமைப்பைத் தாக்கி, தகர்க்க வேண்டும்; அதன் ஒருங்கிணைப்பையும் ஒன்றிணைப்பையும் உருக்குலைக்க வேண்டும்; இஸ்லாமிய அமைப்பின் ஆளுமையை அடித்து நொறுக்க வேண்டும். முஸ்லிம்களை என்றும் எழ முடியாத ஏமாற்றுப் பேர்வழிகளாக்க வேண்டும். படைப்பு மற்றும் படைப்பினத்தின் இயற்கைத் தன்மைகளைத் தலைகீழாக மாற்றி விடவேண்டும். மனித அறிவு, சிந்தனைகளை முற்றிலும் மழுங்கடிக்க வேண்டும். நீண்ட நெடிய காலமாக, […]

3) இஹ்யா உலூமித்தீனை ஏன் எரிக்க வேண்டும்

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்: 29:48)➚ ஹாபிழ் இப்னு கஸீர் அவர்கள் தமது விரிவுரையில் இந்த வசனத்திற்கு ஓர் அழகான விளக்கத்தை வழங்குகின்றார்கள். முஹம்மதே! இந்தக் குர்ஆனை உங்களுடைய சமுதாயத்திடம் சமர்ப்பிப்பதற்கு முன்னால் நீண்ட காலம் அவர்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருந்தீர்கள். அப்போது எந்தவொரு நூலைப் படிக்கவும் எழுதவும் உங்களுக்குத் தெரியாது. இன்னும் […]

2) இஹ்யா உலூமித்தீனை எரிப்பதற்கு உண்மையான காரணங்கள்

“அமீருல் முஃமினீன் இப்னு தாஷிஃபீன் உத்தரவின் பேரில் இஹ்யா உலூமித்தீனை எரிக்க வேண்டிய உண்மைக் காரணங்கள்” என்ற தலைப்பில் ஒரு நூல் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி ஆவார். இவர் மொராக்கோ என்ற (மக்ரிப்) நாட்டைச் சேர்ந்த நவீன கால மார்க்க அறிஞராவார். அவர் எழுதிய இந்த நூலின் தமிழாக்கத்தைத் தான் ஏகத்துவத்தில் தந்துள்ளோம். இஹ்யா உலூமித்தீனை எரிப்பதற்கு உண்மையான காரணங்கள் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனை […]

1) முன்னுரை

முன்னுரை: இமாம் கஸ்ஸாலி என்று அழைக்கப்படுகின்ற கஸ்ஸாலிக்கு உலக அளவில் ஒரு தாக்கமிருக்கின்றது. அது இந்திய அளவில் எதிரொலிப்பதில் ஆச்சரியமில்லை. தமிழகத்தில் அவரது தாக்கம் எல்லை தாண்டி ஊடுறுவியிருக்கின்றது. “வானத்தின் ரட்சகனே! மக்களின் தலைவர் கஸ்ஸாலியின் உள்ளத்தை ஒளிரச் செய்தது போன்று இந்த அற்பனின் உள்ளத்தை ஒளிரச் செய்வாயாக!” என்று இங்குள்ள ஆலிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். காலை, மாலை நேரங்களில் பள்ளிவாசல்களில் நடைபெறுகின்ற பாடசாலைகளில், மழலையர் பள்ளிக்கூடங்களில் பயில வருகின்ற பிஞ்சுகளின் நெஞ்சுகளில் இந்த நஞ்சை ஊற்றியும் […]

புனித பூமியில் புனிதம் நிறைந்த மஸ்ஜிதுல் அக்ஸா

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! விசாலமான சிரியா – ஜெருசலம் பகுதியில் அமைந்திருக்கின்ற பகுதிகளுக்கும், அங்கு அமையப் பெற்றிருக்கின்ற புனிதம் பொருந்திய மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் குறித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏராளமான செய்திகளை நமக்குப் பாடமாகவும் – படிப்பினையாகவும் கற்றுத் தருகின்றார்கள். புனிதம் நிறைந்த பூமியின் சிறப்புக்கள் குறித்து தொடர்ச்சியாக அறிந்து கொள்வோம். நேர்ச்சையை நிறைவேற்ற சொன்ன நபிகளார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மக்காவை அல்லாஹ் வெற்றியளித்தால் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இரண்டு ரக்அத்கள் […]

சிறந்த நற்பண்புகளும், சுவனத்து மாளிகையும்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகின் மோகத்திற்கும், தாகத்திற்கும் இரையாகுபவர்கள் மனித இனத்தவர்களே! அதன் அலங்காரத்தின் மீது அலாதி ஆர்வம் கொண்டு அதை அடைந்திட படாதபாடுபடுகின்றனர். அந்தப் பேராசைகளுள் பெரும்பங்கு வகிப்பது “சொந்த வீட்டில் சொகுசாக வசிக்கவேண்டும்” என்பதே! இயற்கை வளத்தில், தமக்கான நிலத்தில், உயர் தரத்தில் இல்லம் அமைத்திட வேண்டும் என்பது பலரின் உள்ளத்தில் உலாவும் கற்பனையாக உள்ளது. எனினும், இவ்வுலகில் கட்டப்படும் கோட்டை கொத்தளங்களும், மாட மாளிகைகளும் மண்ணாய் போகும் என்பதில் அங்குலம் […]

சூனியத்திற்கு அற்புதங்கள் ஆதாரமாகுமா?

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை ஏகத்துவமாகும். அல்லாஹ்விற்கு எந்த வகையிலும் அணுவளவு கூட இணை கற்பிக்காதவரே வெற்றி பெற முடியும். ஆனால், இஸ்லாத்தின் அடிப்படை கலிமாவிற்கு எதிரான இணைவைப்பு நம்பிக்கையை இஸ்லாத்தின் பெயராலே இன்று இஸ்லாமிய சமுதாயம் கொண்டிருக்கிறது. அதிலும் தர்கா வழிபாடும் தாயத்தும் இணைவைப்பு என்று ஏற்றுக் கொண்டவர்கள் கூட சூனியம் விஷயத்தில் சூனியம் ஆகியிருப்பதே வேதனைக்குரிய விஷயம். தர்கா வழிபாடு எப்படி இணைவைப்போ அதே அடிப்படைதான் சற்றும் குறையாமல் சூனிய நம்பிக்கையிலும் […]

இணை வைத்தல் – மாபெரும் அநியாயம்

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! லுக்மான் (அலை) அவர்கள் தம் மகனுக்குக் கூறிய அறிவுரைகளை அறிந்து வருகின்றோம். அவைகளில் முதலாவதாக அவர்கள் தம் மகனுக்கு முன்வைத்த அறிவுரை என்ன என்பதை அல்லாஹ் நமக்கு நினைவூட்டுகிறான். லுக்மான், தனது மகனுக்கு நற்போதனை செய்யும்போது, “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு (எதையும்) இணைவைக்காதே! இணைவைத்தல் மாபெரும் அநியாயமாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன்: 31:13)➚ முதலாவதாக, இணைவைத்தல் என்ற மகத்தான அநியாயத்தைக் குறித்தே தமது பிள்ளைக்கு லுக்மான் (அலை) அவர்கள் […]

மார்க்க உரைகள் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! திருமறைக் குர்ஆனை அலசி ஆராய்ந்து, மக்களுக்கு மார்க்கத்தை அறிவுரைக்கும் ஆலிம்கள், முதலில் தங்களின் வாழ்வை வான்மறை அடிப்படையில் வடிவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சென்ற இதழில் கண்டோம். அதனைத் தொடர்ந்து, அந்த ஆலிம்களால் நிகழ்த்தப்படும் மார்க்க உரைகள் மனிதர்கள் வாழ்வில் எத்தகைய திருத்தத்தைத் தரவேண்டும் என்பதை இத்தொடரில் பார்ப்போம். எழுத்துக்கள் மூலம் ஏற்ப்படுத்திட முடியாத எழுச்சியைக் கூட பேச்சின் மூலம் பாய்ச்சிட முடியும். அரியனையைப் பிடிக்க அரசியல் பேசுபவர்களும், மதபோதகர்களும், […]

பரேலவிகளின் பச்சைப் பொய்கள்..!

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! இஸ்லாமிய மார்க்கம் பரிசுத்தமானது. இந்த மார்க்கத்தில் எந்தவிதமான கோணல்களும், குறைகளும் இல்லாத வகையில் மிகச் சிறப்பான முறையில் இந்த மார்க்கத்தை இறைவன் மனித குலத்துக்கு வழங்கியிருக்கின்றான். இந்தப் பரிசுத்தமான இஸ்லாத்தைக் களங்கப்படுத்தும் வகையில் பல்லாண்டு காலமாக இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு அவதூறுப் பிரச்சாரங்கள், கட்டுக்கதைகள், இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்று மார்க்கத்தைக் கற்றறிந்த நபர்களால் மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தின் பெயரால் புனையப்பட்ட கட்டுக்கதைகள் மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் சமகாலத்தில் சமூக வலைத்தளங்களின் […]

ஆன்மீகத்தின் பெயரால் மோசடிகளை அறவே ஒழித்த அருள்மறை!

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ், அல்குர்ஆன் வழியாகப் பல வசனங்களில் ஒட்டுமொத்த மனிதர்களையும் நோக்கிப் பேசுகிறான்; இறைநம்பிக்கை கொண்டவர்களை நோக்கிப் பேசுகிறான்; இறைநம்பிக்கை கொள்ளாத மக்களை நோக்கிப் பேசுகிறான்; முழுமையாக நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கிப் பேசுகிறான். குறிப்பாக, பல இடங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி விளித்துப் பேசுகிறான். அந்த வசனங்களில் மக்களுக்கு அறிவிக்குமாறு பல்வேறு செய்திகளை அல்லாஹ் நபிகளாருக்கு அறிவுறுத்துகிறான். காலங்காலமாக எந்த விசயத்தில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களோ அதற்கு […]

புறம் பேசுவதை செவியேற்பது தடை & புறம் விளக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு… புறம் பேசுவதைச் செவியேற்பது தடைசெய்யப்பட்டதாகும். யார் தடைசெய்யப்பட்ட புறம் பேசுதலை செவியேற்கிறாரோ அவர் அதனை மறுத்து, புறம் பேசியவரை நிராகரிக்க வேண்டும். அவருக்கு இயலாவிட்டால், அல்லது அவர் கூறுவதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்த சபையை விட்டும் அவருக்கு வெளியேறுவது சாத்தியமானால் வெளியேறிவிடவேண்டும். قال اللَّه تعالى: ﴿وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ ﴾ அல்லாஹ் கூறுகிறான்: இன்னும் அவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதனைப் புறக்கணிப்பார்கள்.(அல்குர்ஆன்: 28:55)➚ وقال تعالى: ﴿ […]

Next Page » « Previous Page