Author: Trichy Farook

மவ்லிதும் ஷஃபாஅத்தும்

மவ்லிதும் ஷஃபாஅத்தும் மவ்லிது ஒரு வணக்கம்! அதை ஓதினால் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் பரிந்துரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இந்த மவ்லிது ஓதுவதற்காக காசு பணத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்தின் முக்கியக் கடமையான ஜகாத்தை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய பொருளாதாரம் என்ற நீர்வளத்தை மவ்லிது என்ற வயல்களை நோக்கிப் பாய்ச்சுகின்றனர். இதற்கென்று தனி மரியாதைகளையும், மதிப்புகளையும் வழங்கி வருகின்றனர். இத்தகைய மவ்லிது என்பது ஓர் இபாதத் கிடையாது. கடைந்தெடுக்கப்பட்ட பித்அத் ஆகும். […]

தப்லீக்கில் செல்லலாமா?

தப்லீக் செல்லலாமா? சில பேர் மாதக்கணக்கில் தப்லீக் செல்வது சரியா? – விளக்கம் தேவை. மார்க்கத்தைப் பிற மக்களுக்கு எடுத்துரைப்பது அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும். நாமும் பல்வேறு வழிமுறைகளில் மக்களுக்கு தூய இஸ்லாத்தைப் பிரச்சாரம் (தப்லீக்) செய்து கொண்டு தான் இருக்கிறோம். பிரச்சாரம் செய்வது ஓர் இறை வணக்கம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதைக் காரணம் காட்டி பெற்றோர்களுக்கும், மனைவிக்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்துவிட முடியாது. அவ்வாறு ஒருவர் செய்வாரானால் குற்றவாளியாகவே கருதப்படுவார். […]

பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்?

பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்? கேள்வி : சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என்று சொல்கிறோம். அதே போல் பிற காரியங்களைச் செய்யும் போது பிஸ்மில்லாஹ்வைக் கூற மறந்தால் விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என்று சொல்லலாமா? பதில்: حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ الْعُقَيْلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ […]

03) ஃபித்ராவின் சட்ட சுருக்கம்

பெருநாள் தொழுகைக்கு முன், ஃபித்ரா கட்டாயம் தரவேண்டும். நோன்பில் குறைகள், ஏழைகளுக்கு பரிகாரமாக ஃபித்ரா உள்ளது வேலையாள் தவிர, குழந்தை உட்பட வீட்டில் உள்ள முஸ்லிம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என தரவேண்டும் ஒரு ஸாவு என்பது 4 முகத்தல் அளவை. இரு கைகள் இணைக்கும் போது எவ்வளவு கொள்ளுமோ, அதுவே ஒரு முகத்தல். அரிசி, கோதுமை என தரலாம் உணவாக அல்லது பணமாக தரலாம் மட்டரகமானதை தரக்கூடாது (ஹாகிம்) கூட்டாக பெற்று விநியோகிப்பதே சிறந்தது.

நலம் விசாரித்தால் அல்ஹம்துலில்லாஹ் கூறுவது ஏன்?

நலம் விசாரித்தால் அல்ஹம்துலில்லாஹ் கூறுவது ஏன்? பதில் நம் நலனைப் பற்றி யாராவது விசாரித்தால் அவருக்கு அல்ஹம்து லில்லாஹ் என்று பதிலளிக்கும் நடைமுறை பலரிடம் உள்ளது. இவ்வாறு தான் பதிலளிக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடவில்லை. இது நாமாக ஏற்படுத்திக்கொண்ட சொல் வழக்காகும். நம்மிடம் நலம் விசாரிக்கும் போது இவ்வாறு தான் கூற வேண்டும்; அது தான் சுன்னத் என்று நினைத்தால் அவ்வாறு சொல்லாதவர்களை சுன்னத்தை விட்டவர்கள் போல் கருதும் நிலை இருந்தால் அது பித்அத்தாக ஆகி […]

786 கூடாது என்றால் பீஜெ என்பது மட்டும் கூடுமா?

786 கூடாது என்றால் பீஜெ என்பது மட்டும் கூடுமா? 786 குறித்த உங்களின் விளக்கத்தை நான் அறிவேன். ஆனால் பீ.ஜைனுல் ஆபிதீன் என்ற பெயரை பீஜே என்று சுருக்கிச் சொல்வது போல் இதை எடுத்துக் கொள்ள் முடியாதா? பதில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குப் பதிலாக 786 என்று குறிப்பிடும் முறை நம் சமுதாயத்தில் பலரிடம் உள்ளது. ஒருவரின் பெயரில் உள்ள ஆரம்ப எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அழைக்கும் வழக்கமும் உள்ளது. இந்த இரண்டும் ஒன்று தானே […]

குர்ஆன் ஓதி சபையை ஆரம்பிப்பது ஸூன்னத்தா?

குர்ஆன் ஓதி சபையை ஆரம்பிப்பது ஸூன்னத்தா? பதில் சபையில் பேணப்பட வேண்டிய ஒழுங்கு முறைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். குர்ஆன் ஓதி சபையைத் துவக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த ஒழுங்கு முறைகளில் ஒன்றாககாட்டித் தரவில்லை. எனவே எந்த சபையையும் குர்ஆன் ஓதி துவக்க வேண்டும் என்பது சுன்னத் அல்ல. இது மக்களாக ஏற்படுத்திக் கொண்ட வழக்கமே தவிர அல்லாஹ்வின் தூதர் காட்டித் தந்த வழிமுறையில் உள்ளதல்ல.

பித்அத்துக்கும் நஃபிலுக்கும் வேறுபாடு என்ன?

பித்அத்துக்கும் நஃபிலுக்கும் வேறுபாடு என்ன? மேலோட்டமாகப் பார்க்கும் போது பித்அத்தும், நஃபிலும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த வணக்கம் தான் நஃபிலாக இருக்க முடியும். நாமாக ஒரு வணக்கத்தை உருவாக்கி அதை நஃபில் என்று சொல்லிக் கொள்ள முடியாது. மார்க்கத்தில் உள்ள ஒரு வணக்கத்தை ஒவ்வொரு மனிதனும் தனது வசதிக்கும், வாய்ப்புக்கும், விருப்பத்துக்கும் ஏற்ப செய்வது நஃபிலாகும். யாரோ ஒருவர் நிர்ணயம் செய்த நேரத்திலும், அளவிலும் […]

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா?

தினசரி வாகிஆ அத்தியாயம் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். அது சரியா? சரி இல்லை என்றால் இரவில் எதை ஓதுவது? பதில் : شعب الإيمان للبيهقي – تخصيص سور منها بالذكر أخبرنا أبو طاهر الفقيه ، أخبرنا أبو حامد بن بلال ، حدثنا أبو الأحوص إسماعيل بن إبراهيم الإسفراييني ، حدثنا العباس بن الفضل البصري ، حدثنا السري بن يحيى ، […]

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா?

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா? பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்கு காரணம் கூறுகிறார்கள். இது சரியா? அப்துல் அலீம் அய்யம்பேட்டை முஸ்லிம்களைப் பொருத்த வரை தங்களின் அனைத்து காரியங்களையும் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் தான் நடத்த வேண்டும். சில காரணங்களை நாமாகக் கற்பனை செய்து கொண்டு சடங்குகளை […]

மார்க்க முரணான காரியங்கள் நடக்கும் சபைகளில் பங்கேற்கலாமா?

மார்க்க முரணான காரியங்கள் நடக்கும் சபைகளில் பங்கேற்கலாமா? மார்க்க முரணான சபைகளில் பங்கேற்பது பிறமத சகோதரர்களின் திருமணம் மற்றும் இதர விசேஷங்களிலும், விருந்துகளிலும் கலந்து கொள்வது மார்க்கத்திற்கு முரணான காரியமா? அவர்கள் வரதட்சணை வாங்கித் திருமணம் முடித்தாலும் கலந்து கொள்ளலாமா? பொதுவாக பிற மதத்தவர்களின் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் மற்றும் விருந்துகளில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறாவிட்டால் அதில் கலந்து கொள்வதில் தவறில்லை. மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும் இடத்துக்குச் சென்றால் அதைத் தடுக்கும் கடமை நமக்கு […]

786 என்றால் என்ன?

786 என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா? பதில்: நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவ‌ர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சில‌ர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயி‌னர். أبجد هوز حطي كلمن سعفص قرشت ثخذ ض ظ غ ا – 1 ب – 2 ج – 3 د – 4 ه – 5 و – 6 ز […]

சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்யலாமா?

சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததானம் செய்யலாமா? சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத வணக்கத்தையும், வழிபாடுகளையும் நன்மை என்று கருதி செய்வது தான் பித்அத்தாகும். ‘நம்முடைய இந்த (மார்க்க) விஷயத்தில் அதில் இல்லாததைப் புதிதாக யார் உண்டாக்குகின்றானோ அது நிராகரிக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) […]

ஈத் முபாரக் சொல்லலாமா?

ஈத் முபாரக் சொல்லலாமா? பெருநாள் தினத்தில் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் என்று சொல்லும் வழக்கம் சமுதாயத்தில் பரவி வருகிறது. இது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு நபிவழி என்பது போல் மக்களால் கருதப்படுகிறது. ஒருவர் தனது தாய்மொழியில் குர்ஆன் ஹதீஸுக்கு முரணில்லாத தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி துஆச் செய்யும் வகையில் வாழ்த்துவது தவறில்லை. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்; மகிழ்ச்சியைத் தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் தவறு இல்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் […]

ஹிஜ்ரி ஆண்டு எப்போது ஆரம்பம் ஆனது?

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தார்களா? ஷாஹுல் ஹிஜ்ரி ஆண்டை இஸ்லாமிய ஆண்டு என்று கூறப்பட்டாலும் திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ இதற்கு ஆதாரம் இல்லை. இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன்: 5:3)➚ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் கூறுகின்றான். மார்க்கம் […]

புர்தா ஓதலாமா?

புர்தா ஓதலாமா? மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல். இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்கள் நம்புகின்றனர். வாழ்க்கையில் வளம் பெறவும், மனநோய் விலகவும், காணாமல் போன பெருட்கள் கிடைக்கவும் இன்ன பிற நோக்கங்கள் நிறைவேறவும் வீடுகளில் இதைப் பாடி வருகின்றனர். அதுவும் கூலிக்கு ஆள் பிடித்துப் பாடச் செய்து வருகின்றனர். ஒரு மனிதனுடைய வார்த்தைகளைப் பாடுவதால் இத்தகைய பயன்கள் கிடைக்கும் என […]

வீட்டின் முன் அல்லாஹு அக்பர் என்று எழுதலாமா?

வீட்டின் முன் அல்லது வீட்டின் உள்ளே அல்லாஹு அக்பர் என்று அல்லது லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று எழுதலாமா? பிரேம் போட்டு தொங்க விடலாமா? விளக்கம் தேவை. பதில் : அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார்கள்) ஆகிய வாசகங்களை வீட்டில் தொங்கவிடுவது தவறல்ல. வீட்டுக்கு வருபவர்கள் இதைப் படிக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு […]

02) நோன்பின் சட்ட சுருக்கம்

ரமளான் நோன்பு ஆண், பெண் இருபாலருக்கும் கட்டாய கடமை இறையச்சத்தை அதிகமாக்குவதும், பொய்யான செயல்களை விட்டுஒதுங்குவதுமே நோன்பின் நோக்கங்கள் நோன்பிற்குரிய கூலி முன் பாவங்கள் மன்னிக்கப்படுதல் நோன்பிலிருந்து நிரந்தர விலக்கு பெற்றவர்கள் – தள்ளாத வயதினர், நிரந்தர நோயாளிகள் தற்காலிக விலக்கு பெற்றவர்கள் – 1)பிரயாணிகள் 2)தற்காலிக நோயாளிகள், 3)கர்ப்பிணிகள், 4)பாலூட்டும் தாய்மார்கள், 5)மாதவிடாய் பெண்கள் பிரயாணிகள் நோன்பை விடுவது கட்டாயம் அல்ல. விடுபட்ட நோன்பை வைப்பதற்கு காலக்கெடு எதுவுமில்லை. பிறையை கண்ணால் பார்த்த பின்பே நோன்பு […]

கலாலா – சந்ததி இல்லாதவர்

சந்ததி இல்லாதவர் கலாலா எனப்படுவர். இத்தகையோர் சகோதர, சகோதரிகளை விட்டுச் சென்றால் சொத்துக்களை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று இவ்வசனம் (4:12➚) கூறுகிறது. இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள் என்று இவ்வசனம் கூறுகிறது. ஆனால் இதே அத்தியாயத்தின் 176வது வசனத்தில் சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் பாகம் வேறு […]

இரு சாரார் சண்டையிட்டால் சமாதானம் செய்து வையுங்கள்

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபி(ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவன், ‘தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது’ என்று கூறினான். அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! […]

ஹிஜாப் பற்றிய சட்டம் இறங்குதல்

‘நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், ‘உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்’ என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) […]

அனஸ் பின் நள்ர் பற்றிய இறைவசனம்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அவர் (திரும்பி வந்தவுடன்) அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் இணை வைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின் போது முஸ்லிம்கள் தோல்வி யுற்ற நேரத்தில் அவர், […]

உஹதுப் போரில் நபி காயம்பட்ட போது

சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போரில் காயப்படுத்தப்பட்ட போது எதிரிகளான) ஸஃப்வான் பின் உமய்யா, சுஹைல் பின் அம்ர், ஹாரிஸ் பின் ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (என்ற 3:128➚-வது வசனம்) அருளப்பட்டது. (புகாரி: 4070) […]

கிப்லா மற்றப்படுதல்

”நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும்வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புங்கள். இது உங்கள் இறைவனிட மிருந்து வந்த உண்மை(யான கட்டளை) யாகும். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவை பற்றிக் கவனமற்றவன் அல்லன்” (எனும் 2:149➚ஆவது இறைவசனம்). இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகையிலிருந்த போது, ஒரு மனிதர் வந்து, சென்ற இரவு•ளநபி (ஸல்) அவர்களுக்குன குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ […]

வள்ளுஹா வல்லைலி இதா சஜா…

ஜுன்துப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது இரண்டு இரவுகள் அல்லது மூன்று இரவுகள் (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டு விட்டான் என நினைக்கிறேன். (அதனால் தான்) இரண்டு இரவுகளாக அல்லது மூன்று இரவுகளாக உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை என்று கூறினாள்.2 அப்போது மாண்பும் […]

மனனம் செய்ய நாவை அசைக்காதீர்!

மூசா பின் அபீ ஆயிஷா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், (நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16➚ஆவது) இறை வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: தம் மீது வஹீ (வேத அறிவிப்பு) அருளப்படும் போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு உதடுகளையும் அசைத்துக் கொண்டி ருந்தார்கள். ஆகவே, […]

போர்த்திக் கொண்டிருப்பவரே, எச்சரிக்கை செய்யுங்கள்!

யஹ்யா பின் அபீ கஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசலமா (ரஹ்) அவர்களிடம் முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது? என்று கேட்டேன். அதற்கு அன்னார், போர்த்தியிருப்பவரே! (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1➚ஆவது) வசனம் என்றார்கள். அப்போது நான் (நபியே!) படைத்த உங்களுடைய இறைவனின் பெயரால் ஓதுக! (இக்ரஃ பிஸ்மி ரப்பிக் கல்லஃதீ கலக்) எனும் (96:1➚ஆவது) வசனம் என்றல்லவா எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது! என்றேன். அதற்கு அபூ சலமா (ரஹ்) அவர்கள், நான் […]

ஜின்கள் குர்ஆனை செவியேற்றபோது

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தன. அப்போது தலைவர்கள், உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். […]

நபியே ஏன் ஹராமாக்கினீர்?

நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன். (அத்தஹ்ரீம், வசனம் 1) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம், (அவர்களது அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிக நேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்து […]

அத்தியாயம் முனாஃபிகூன்

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன்.2 அப்போது, (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை என்பவன் அல்லாஹ்வின் தூதருடன் இருப்ப வர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள் என்று கூறி விட்டுத் தொடர்ந்து, நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள் என்று கூறினான். அவன் கூறியதை (நான்) […]

ஜும்மா அத்தியாயத்தின் சில வசனங்கள்

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்த போது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றுவிட்டனர். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போது தான் அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடு கின்றனர் எனும் (62:11➚ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (புகாரி: 4899) ➚

அபூதல்ஹா விருந்தினரை கண்ணியப்படுத்திய போது

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான் என்று […]

நபியின் முன் சப்தத்தை உயர்த்திய போது

இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள். அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தவரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி […]

தெளிவான வெற்றி அத்தியாயம் இறக்கப்படல்

அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் நபி அவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர் களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) உமர் கேட்டார்கள். […]

குறைஷிகள் இரகசியம் பேசிய போது

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) குறைஷியரில் இருவரும் அவர்களுடைய துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும் அல்லது ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களுடைய மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும் (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் நமது பேச்சை அல்லாஹ் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்று கேட்டார். அவர்களில் ஒருவர், (நமது பேச்சுகளில்) சிலவற்றை […]

பாவங்களுக்கு பரிகாரம் உண்டா? என்று கேட்ட போது

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிக மாகச் செய்திருந்தனர். (ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற(போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே) என்று கூறினர். அப்போது, (ரஹ்மானின் உண்மை யான அடியார்களான) அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. […]

பர்தா எனும் திரை சம்பந்தமான சட்டம்

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். ளநபி (ஸல்) அவர்களின் துணைவியாரானன ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (வலீமா விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டு விட்டு) பேசிக் கொண்டே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரவும் […]

அபுதாலிஃபிற்கு பாவமன்னிப்பு கேட்டபோது

முஸய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தைன அபூ தா-ப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா பின் முஃகீராவையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என் பெரிய தந்தையே! லா இலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரு மில்லை) என்று சொல்லுங்கள்! இந்த […]

அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள் எனும் (26:214➚ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றின் மீது ஏறிக் கொண்டு, பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே! என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை […]

மிஸ்தஹுக்கு உதவ மாட்டேன் என்ற போது

(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், (அன்னை ஆயிஷா அவர்களை பற்றிய அவதூறு சம்பவந்தில் பெரும் பங்கு வகித்த) மிஸ்தஹுக்கு எந்தப் பயன்தரும் உதவியும் இனி ஒரு போதும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்க ளுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழை […]

அன்னை ஆயிஷா பற்றிய அவதூறு சம்பந்தமாக

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு செல்வார்கள். இவ்வாறே அவர்கள் தாம் மேற் கொண்ட (பனூ முஸ்த-க் என்ற) ஒரு போரின் போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட் டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் […]

மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டால்? – ஹிலால் பின் உமய்யா

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் (கர்ப்பவதியான) தம் மனைவியை ஷரீக் பின் சஹ்மா என்பவருடன் இணைத்து (இருவருக் குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி வழங்கப்படும் என்று சொன்னார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவியுடன் ஓர் அன்னிய ஆடவன் இருப்பதைக் கண்டாலுமா ஆதாரம் தேடிக் […]

விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்றனர் என்ற வசனம்

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்ற சிலரும் மக்களிடையே உள்ளனர் எனும் (22:11➚ ஆவது) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்வர்.) அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர் களின் குதிரைகள் குட்டி ஈன்றால் அப்போது, இது (-இஸ்லாம்-) நல்ல மார்க்கம் என்று கூறுவார்கள். அவர்களுடைய மனைவியர் ஆண் குழந்தைகள் பெறவில்லையென்றால், அவர்களின் குதிரைகள் […]

மறுமையிலும் தனக்கே செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறிய போது

கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறயதாவது : நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்து கொண்டு) இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. ஆகவே, அதைத் திருப்பித் தரும்படி கேட்டு நான் அவரிடம் சென்றேன். அவர் என்னிடம் நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உனது கடனைச் செலுத்தமாட்டேன் என்று சொன்னார். நான், நீர் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் அவரை ஒரு போதும் நிராகரிக்க மாட்டேன் என்று சொன்னேன். […]

ஜிப்ரீலிடம் நபியவர்கள் கேட்ட போது…

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்: நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன? என்று கேட்டார்கள்.2 அப்போது தான் (நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன் எனும் (19:64➚ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. (புகாரி: 4731) ➚

ரூஹ் பற்றிய இறைவசனம் இறங்குதல்

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண்பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள் என்றார். மற்றவர், உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது? என்று அவரிடம் கேட்டார். இன்னொருவர் நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக் கூடாது. (எனவே, அவரிடம் நீங்கள் […]

உண்மைக்குப் பரிசாக இறைவசனங்கள்

4678 அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் பாட்டனார்) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் (இறுதிக் காலத்தில் கண் பார்வையற்ற அவர்களுக்கு) வழிகாட்டியாக இருந்த (என் தந்தை) அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தாம் தபூக் போரில் கலந்து கொள்ளாமலிருந்து விட்ட செய்தியை அறிவித்த போது நான் அவர்களிடமிருந்து (பின்வருமாறு) செவியுற்றேன்: அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை […]

நயவஞ்சகர்கள் தபூக்கில் கலந்து கொள்ளாத போது

4677 அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப் பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்உஸ்ரா (எனும் தபூக்) போர், பத்ருப் போர் ஆகிய இரு போர்களைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட எந்த அறப்போரிலும் ஒரு போதும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. மேலும் (தபூக் போரில் கலந்து கொள்ளாதது […]

முனாஃபிக்கிற்கு நபி தொழ வைக்க முயன்ற போது

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்து விட்ட போது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடு வதற்காக நபி (ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தமது சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர் […]

முனாஃபிக்குகள் முஸ்லிம்களை குறைகூறிய போது

(புகாரி: 4668) ➚அபூ மஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்ட போது நாங்கள் கூலிவேலை செய்யலானோம். அபூஅகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு ஸாவு (பேரீச்சம் பழம்) கொண்டு வந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டுவந்தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், (அரை ஸாவு கொண்டு வந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக் கொண்டு வந்திருக்கிறார் […]

Next Page » « Previous Page