
4528 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே, உங்கள் பெண்கள் உங்களுக்குரிய விளை நிலம் ஆவர். ஆகவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள் எனும் (அல்குர்ஆன்: 2:223)➚ஆவது) இறைவசனம் இறங்கியது. (புகாரி: 4528) ➚