Tamil Bayan Points

07) முரண்கள்

நூல்கள்: இது தான் பைபிள்

Last Updated on February 24, 2022 by

முரண்கள்

இது வரை நாம் எடுத்து வைத்த எந்த அளவுகோலின்படி பார்த்தாலும் பைபிள் இறை வேதமாக இருக்கச் சிறிதளவும் சாத்தியமில்லை. என்றாலும் இவற்றையெல்லாம் விட முக்கியமான தகுதி இறைவேதத்திற்கு இருந்தாக வேண்டும். இறை வேதம் என்பது எந்த விதமான முரண்பட்ட செய்திகளையும் கூறக் கூடாது என்பது தான் அந்தத் தகுதி.

மனிதனிடம் கூட முரண்பாடு ஏற்படும் போது நம்மால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. கடவுளின் வார்த்தையில் முரண்பாடு இருந்தால் எப்படிச் சகிக்க முடியும்? பைபிளில் முரண்பாடுகளுக்குப் பஞ்சமேயில்லை. சான்றாக:

யு) தலைமுறைத் தடுமாற்றம்

புதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயு, லூக்கா ஆகிய சுவிசேஷங்கள் இயேசுவின் வம்சாவளியை மிகவும் விரிவாக எடுத்துரைக்கின்றன. சாதாரண மனிதர்கள் வம்சாவளிப் பட்டியலைக் கூறும் போது தவறி விடுவது இயற்கையே. பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவர்கள் தவறலாமா? தவறியிருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட இரண்டு சுவிசேஷங்களும் நிரூபிக்கின்றன.

இயேசுவின் தந்தை  யோசேப்பு என்று இரண்டு சுவிசேஷங்களும் கூறுகின்றன. அந்த யோசேப்பு என்பவரின் தந்தை  யாக்கோப்பு என்று மத்தேயுவும்(மத்தேயு 1:16)  ஏலி என்று லூக்காவும் (லூக் 3:23) கூறுகின்றனர்)

தாவீது என்பவரின் மகன் சாலொமோன் வழியில் இயேசு ஜனனமானார் என்று மத்தேயு கூறுகின்றார்.

(மத்தேயு 1:7)

லூக்காவோ தாவீத் என்பவரின் மகன் நாத்தாம் வழியில் இயேசு பிறந்தார் என்கிறார்.

(லூக்கா 3:31)

எகொனியா மகன் சலாத்தியேல் வழியில் இயேசு தோன்றினார் என்று மத்தேயுவும், நேரி என்பவரின் மகன் தோன்றினார் என்று வழியில் இயேசு பிறந்தார் என்று பிறந்தார் என்று கூறுகின்றார்.

 (மத்தேயு 1:12, லூக் 3:27)

செருபாபேல் என்பவரின் மகன் அபியூத் வழியில் இயேசு பிறந்ததாக மத்தேயுவும் (1:13) செருபாபேல் என்பவரின் மகன் ரேசா வழியில் இயேசு பிறந்ததாக லூக்காவும் (13:27) கூறுகிறார்கள்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இந்த செருபாபேல் என்பவனுக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள் இருந்ததாகப் பெயர்களுடன் முதலாம் நாளாகமம் 3:19 கூறுகின்றது. அந்த ஏழு பெயர்களில் அபியூத் என்ற பெயரும் இல்லை; ரேசா என்ற பெயரும் இல்லை.

தாவீதிலிருந்து துவங்கி இயேசு வரை இருபத்தி ஆறு தலைமுறை என்கிறார் மத்தேயு. நாற்பத்தியொரு தலைமுறை என்கிறார் லூக்கா.

இயேசுவின் பரம்பரைப் பட்டியலைக் கூறும் போது இத்தனை தடுமாற்றம் கர்த்தருக்கோ, பரிசுத்த ஆவியின் உந்து சக்தியினால் எழுதியவருக்கோ ஏற்பட முடியுமா? இந்தத் தடுமாற்றம்  ஆதாரமற்ற மனிதக் கற்பனையே பைபிள் என்பதை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றது.

 டீ) விபச்சார சந்ததி

இதில் வேதனைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த வம்சவழிப் பட்டியலை வெளியிட்டதன் மூலம் இயேசுவை மத்தேயுவும், லூக்காவும் இழிவுபடுத்தியுள்ளனர். எவ்வாறெனில் இந்தப் பட்டியலில் இடம்பெறும் சிலர்  அவ்வளவு பரிசுத்தமானவர்கள்! அதை விளக்குவதற்கு முன்னால் பின்வரும் போதனையை நினைவில் கொள்க!

விபச்சாரத்தில் பிறந்தவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது; அவனுக்கு பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக் கூட்டத்திற்கு வரலாகாது.

உபாகமம் 23:22,3

எத்தகையோர் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது என்று பைபிள் கூறுகின்றதோ அத்தகையோர் வழியிலேயே இயேசு பிறந்தார்எனவும் அதே பைபிள் கூறுகின்றது.

யூதா, பேரேஸையும் சேராவையும் தாமாரினிடத்தில் பெற்றான். பேரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்.

மத்தேயு 1:3

இயேசுவின் பரம்பரைப் பட்டியலில்  தாமார் என்பவள் இடம் பெறுகிறாள். இதில் கூறப்படும்.

தாமார் என்பவள் யார்?

யூதா என்பவன் யார்?

பேரேஸ் என்பவன் யார்?

இந்தத் தாமார் என்பவள் யூதா என்பவரின் மருமகள். (மகனுடைய மனைவி) அவளுடன் அவர் கள்ளத் தனமாக உறவு கொள்கிறார். இந்த விபச்சாரத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரே பேரேஸ் என்பவர். இதனை நாம் சொல்லவில்லை; பைபிள் சொல்கிறது.

(ஆதியாகமம் 38:6 முதல் 38:29 வரை பார்க்க:)

விபச்சாரத்தில் ஈடுபட்ட இந்த மாமனார், மருமகள் சந்ததியில் – அந்த விபச்சாரத்தில் பிறந்த பேரேஸ் என்பவருடைய பரம்பரையில் – இயேசு பிறந்ததாக மத்தேயு கூறுகிறார்.

மேலே நாம் நினைவூட்டிய போதனையின்படி விபச்சாரச் சந்ததியில் தோன்றியவர் கர்த்தரின் சபைக்கு வரலாகாது. அப்படியானால் இயேசுவும் கர்த்தருடைய சபைக்கு வரலாகாது. அவர் இறைவனின் குமாரர் என்பதும், மற்றவரின் பாவங்களை அவர் சுமந்து கொண்டார் என்பதும் இந்த வம்சாவழிப் பட்டியலின் படி அடிபட்டுப்போய் விடும். கர்த்தர் தனது சபைக்கு இத்தகையவரை நிச்சயம் தேர்வு செய்ய மாட்டார். (நாம் இயேசுவைப் பற்றி அப்படிக் கூறவில்லை. பைபிள் அப்படிச் சொல்கின்றது என்பதையே எடுத்துக் காட்டுகின்றோம்)

தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்.

மத்தேயு 1:6

இவர்களும் இயேசுவின் முன்னோர்களாகக் கூறப்படுகின்றனர். தாவீது ராஜா இன்னொருவரின் மனைவியிடத்தில் சாலொமோனைப் பெற்றதாகப் பச்சையாக மத்தேயு ஒப்புக் கொள்கிறார். இயேசுவுக்கு இதை விட அநியாயம் வேறு என்ன இருக்க முடியும்?

இது ஆபாசம் என்ற தலைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

சாலொமோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்.

மத்தேயு 1:5

என்று வம்சாவழிப் பட்டியல் கூறுகின்றது.

இந்த ராகாப் யார்?

அவள் ஒரு விபச்சாரி என்று பைபிள் (யோசுவா 2:2) கூறுகின்றது. இந்த வம்சாவழியில் பிறந்ததாகக் கூறுவது ஏசுவுக்குப் பெருமை சேர்க்குமா?

ஊ) சூழ்நிலைத் தடுமாற்றம்

கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குத் தோன்றி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத் தேடுவான். ஆதலால் நீ எழுந்து பிள்ளையையும், அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிப் போய் நான் உனக்குச் சொல்லும் வரைக்கும் அங்கே இரு என்றான். அவன் எழுந்து இரவில் பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குப் போய் ஏரோதுவின் மரண பரியந்தம் அங்கே இருந்தான்.

மத்தேயு 2:13,14

இயேசு பிறந்த போது ஏரோது என்னும் கொடிய அரசன் ஆட்சி புரிந்ததாகவும், அவன் குழந்தை இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் அதற்குப் பயந்து இயேசுவின் பெற்றோர் இயேசுவையும் தூக்கிக் கொண்டு எகிப்துக்குச் சென்றதாகவும் மேற்கண்ட வசனத்தில் மத்தேயு கூறுகிறார்.

ஏரோது இறந்த பிறகு கூட அவனது மகன் அரகெலாவு என்பவர் ஆட்சிக்கு வந்ததால் அதற்குப் பயந்து கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்கு வராமல் நாசரேத்து எனும் ஊருக்குச் சென்றதாகவும் மத்தேயு (2:19-23) கூறுகிறார்.

ஆனால் லூக்காவோ இயேசு பிறந்த போது சர்வ சாதாரணமான நிலை நிலவியதாகக் கூறுகிறார்.

அவர்கள் பெத்லகேமிலேயே இருந்ததாகவும், அங்கிருந்து எருசலேமுக்கு வந்து போனதாகவும் அவரது பெற்றோர் வருஷம் தோறும் பஸ்கா பண்டிகைக்கு எருசலேமுக்குப் போவார்கள் எனவும் லூக்கா கூறுகிறார்.

லூக்கா 2:15-52

ஏரோது அரசன் இயேசுவைக் கொலை செய்யத் தேடியதையும், அவர்கள் எகிப்துக்கு ஓடிப் போனதையும் அதன் பின் ஏரோதுவின் மகன் ஆட்சிக்கு வந்ததையும் எருசலேமுக்குப் போகாமல் அவர்கள் மறைந்து வாழ்ந்ததையும் லூக்கா கூறவில்லை. மாறாக அந்தச் சமயத்தில் சர்வ சாதாரணமான நிலைமை நிலவியதாகவும் ஆண்டு தோறும் எருசலேமுக்கு அவர்கள் வந்து போய்க் கொண்டிருந்ததாகவும் சர்வ சாதாரணமாக அவர்கள் அந்த நாட்டில் நடமாடியதாகவும் கூறுகிறார்.

பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டவற்றில் ஏன் இந்த முரண்பாடு?

லூக்கா கூறுவது போல் சாதாரணமான நிலைமை இருந்ததா?

மத்தேயு கூறுவது போல் பயங்கரமான நிலை நிலவியதா?

ஆண்டுதோறும் எருசலேமுக்கு வந்து போவார்கள் என்பது உண்மையா?

அல்லது கர்த்தரின் கனவுக் கட்டளைப்படி எகிப்திலேயே இருந்தது உண்மையா?

ஒவ்வொரு சுவிசேஷக்காரரும் அவருக்குத் தோன்றியதையும் கேள்விப்பட்டதையும் எழுதியிருக்கிறார்களேயல்லாமல் கர்த்தரின் தூண்டுதலால் எழுதவில்லை என்பதற்கு இது போதுமான சான்று அல்லவா? இனியும் இதை இறைவேதம் என்று சொல்ல முடியுமா?

னு) பொய்யான முன்னறிவிப்பு

இயேசுவின் வருகை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளதாக கிறித்தவர்கள் நம்புகின்றனர். புதிய ஏற்பாடும் இதைக் குறிப்பிடுகின்றது. இயேசு வருவதற்கு முன் எலியா என்பவர் வந்தாக வேண்டும் எனவும் பைபிள் கூறுகிறது.

அப்பொழுது சீஷர் அவரை நோக்கி, எலியா முந்தி வர வேண்டுமென்று வேதபாரகர் சொல்கிறார்களே அதெப்படி என்று கேட்க, அவர், எலியா வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான். ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படியே அவனுக்குச் செய்தார்கள். மனுஷ குமாரனும் அவர்களால் இவ்விதமாயப் பாடுபடப் போகிறார் என்றார். அவர் யோவான் ஸ்நானகனைக் குறித்து தங்களிடம் பேசினார்என்று சீஷர் அப்போது அறிந்து கொண்டார்கள்.

மத்தேயு 17:10-13

நீங்கள் ஏற்றுக் கொள்ள மனமாயிருந்தால் வரப் போகிறவனாகிய எலியா இவன் தான். காதுள்ளவன், கேட்கக் கடவன்.

மத்தேயு 11:14

வாக்களிக்கப்பட்ட கிறிஸ்துவின் வருகைக்கு முன் எலியா என்பவர் வர வேண்டும். அவர் வந்து விட்டார். அவர் தாம் யோவான் என்று இயேசு கூறியதாக மேற்கண்ட வசனங்கள் குறிப்பிடுகின்றன. இயேசுவின் காலத்திலேயே யோவான் (அதாவது எலியா) வந்து விட்டதால் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிவிட்டது என்று கொள்ளலாம். ஆனால் புதிய ஏற்பாட்டின் இன்னொரு அதிகாரம் இதை மறுக்கிறது.

நீர் யார் என்று கேட்டதற்கு யூதர்கள் ஆசாரியரையும், லேவியரையும் எருசலேமிலிருந்து யோவானிடம் அனுப்பின பொழுது அவன் கூறிய சாட்சியம், நான் கிறிஸ்துவல்ல என்று அறிக்கையிட்டான். மறுக்காமலே அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்  பின்னே என்ன? நீர் எலியாவோ என்று கேட்க, அவன் நான் அவனல்ல என்றான்.

 யோவான் 1:19-22

இங்கே உள்ள முரண்பாடுகளையும் குழப்பங்களையும் கவனியுங்கள்! தாமே வரப்போகிற கிறிஸ்து என்பதற்குச் சான்றாக  யோவான் தான் எலியா என்று இயேசு கூறுகிறார். இயேசுவால் எலியா என்ற அடையாளம் காட்டப்பட்ட யோவான்  நான் எலியா அல்லவென்று மறுக்கிறார். இரண்டு செய்திகளுமே கர்த்தரால் அருளப்பட்ட(?) புதிய ஏற்பாட்டிலேயே உள்ளன.

இயேசு கூறுவது போல் யோவான் தான் எலியா என்றால் யோவான் அதை ஏன் மறுக்கிறார்? எலியா ஏன் வர வேண்டுமென்றால் எல்லாவற்றையும் சீர்படுத்தி கிறிஸ்து வரும் போது அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான். மேற்கண்ட இயேசுவின் கூற்றிலிருந்தே இதை அறியலாம்.

யோவான் தான் எலியா என்றால் அதை யோவான் மறுக்க எந்த நியாயமுமில்லை. இயேசுவை அன்றைய மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு எலியா வரவில்லை என்பது தான் தடையாக இருந்தது. யோவான் எலியாவாக இருந்திருந்தால், அவர் தம்மை எலியா என்று பிரகடனம் செய்து, இயேசுவை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு ஏற்றுக் கொள்ள வழியேற்படுத்தியிருக்க வேண்டும். அவரோ தாம் எலியா அல்லர் என்று மறுக்கிறார்.

யோவான் கூறியது பொய் என்ற வைத்துக் கொண்டால் யோவான் பற்றி

அவர் எனக்கு முதல்வர், என்னிலும் பெரியவராயினார்.

யோவான் 1:30

என்றும்  ஸ்திரீகளிடம் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் தோன்றியதில்லை.

மத்தேயு 11:11

என்றும் இயேசு எவ்வாறு புகழ்ந்துரைப்பார்? ஸ்திரீகளிடம் பிறந்தவர்களிடையே சிறந்தவரும் இயேசுவை விடப் பெரியவருமான யோவான் நிச்சயம் பொய் சொல்லியிருக்க முடியாது என்பதை இயேசுவின் வாக்கு மூலத்திலிருந்தே அறிகிறோம். யோவான் கூறியது உண்மை என்றால் இயேசு பொய் சொல்லியிருக்கிறார். அவர் கிறிஸ்துவாக இல்லாமலிருந்தும் தன்னைக் கிறிஸ்து என்று நிரூபணம் செய்வதற்காக எலியா வந்ததாகக் கூறியிருக்கிறார்.

கிறித்தவர்களால் யோவானையும் பொய்யரென்று கூற முடியாது; இயேசுவையும் பொய்யர் என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் கிறித்தவமே ஆட்டம் கண்டுவிடும். கிறித்தவர்கள் இவ்வாறு கூறத் துணியாவிட்டாலும் அவர்களின் புதிய ஏற்பாடு இவ்வாறு கூறுவதை அவர்களால் மறுக்க முடியாது.

இந்த முரண்பட்ட இரண்டில் எது உண்மை என்றாலும் பைபிளில் மனிதக் கரங்கள் விளையாடியுள்ளன என்பது உறுதியாகிவிடும்.

நு) ஆள்மாறாட்டம்

இதோ, நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே போய் உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவனே!

மத்தேயு 11:10

இதே விஷயம் மாற்கு, லூக்கா ஆகிய சுவிசேஷங்களிலும் காணப்படுகின்றது.

எலியாவின் வருகை பற்றி இயேசு குறிப்பிடும் போதே இவ்வாறு கூறியிருக்கிறார். முந்தைய வேதங்களில் எழுதப்பட்டதை அப்படியே இயேசு எடுத்துச் சொல்கிறார்.

இந்த வாசகத்தை நன்றாகக் கவனியுங்கள்! கடவுள் இயேசுவை நோக்கி இவ்வாறு கூறுவதாக இது அமைந்துள்ளது. நாம் கேட்கிறோம்: இயேசுவை நோக்கிக் கடவுள் கூறிய வாசகம் இயேசுவுக்கு முந்தைய வேதங்களில் எப்படி எழுதப்பட்டிருக்க முடியும்?. கர்த்தர் கூறியிருக்க முடியாத ஒரு வாசகத்தைக் கர்த்தரின் பெயரால் இயேசு கூறுகிறார் என்றே இதை நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

  …எழுதிய வாசகத்தால் என்று இயேசு கூறுவதிலிருந்து இந்த வாசகம் முந்தைய வேதங்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகின்றது. முந்தைய வேதமாகிய பழைய ஏற்பாட்டில் கர்த்தர் கூறியது என்ன என்ற விபரம் கிடைக்கின்றது. அந்த விபரத்துக்கும் இயேசு கூறுவதற்கும் பெரிய முரண்பாடு இருக்கிறது.

இதோ, என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான்.

 மலாக்கி 3:1

இது இயேசுவை நோக்கியோ இயேசுவைக் குறித்தோ சொல்லப்பட்டதன்று. கர்த்தர் எனக்கு முன்பாக என்று கூறுகிறார். இயேசுவோ  உமக்கு என்று அதைத் திருத்தி தம்மைப் பற்றியே கர்த்தர் கூறியதாகத் திசை திருப்புகிறார்.

இரண்டுக்குமிடையே எவ்வளவு பெரிய முரண்பாடு என்பதைச் சிந்தியுங்கள்!

மிகப்பெரிய ஆள் மாறாட்டம் இங்கே நடக்கின்றது. கர்த்தர்  எனக்கு என்று தன்னைப் பற்றிக் கூறும் விஷயத்தில்,  உமக்கு என்று திருத்தி, தம்மைப் பற்றியே கர்த்தர் கூறுவதாக இயேசு சொல்வது ஆள் மாறாட்டம் இல்லையா?

இரண்டில் எது உண்மை? ஏதோ ஒன்று உண்மையில்லை என்று நியாயமான பதிலைக் கூறினால் உண்மையில்லாத ஒன்று கர்த்தரின் வேதத்தில் எப்படி இடம்பெற முடியும்? அல்லது எப்படி வேதமாக இருக்க முடியும்?

 கு) எண்ணில் தடுமாற்றம்

அவர்கள் எரிகோவை விட்டுப் போகையில் பெரிய ஜனக்கூட்டம் அவருக்குப் பின் சென்றது. வழியோரம் உட்கார்ந்திருந்த இரண்டு குருடர் இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு ஆண்டவரே! தாவீதின் குமாரரே! எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.

மத்தேயு 20:29,30

இயேசு தம் சீடர்களுடன் சென்று கொண்டிருந்த போது இரண்டு குருடர்கள் இயேசுவிடம் கண்பார்வை வேண்டியதாக மத்தேயு கூறுகிறார்.

மாற்கோ ஒரு குருடன் என்கிறார்:

அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷரும் பெரிய ஜனக்கூட்டமும் எரிகோவை விட்டுப் போகும் போது திமேயுவின் மகன் பர்திமேயு என்னும் கண் தெரியாத பிச்சைக்காரன் ஒருவன் வழியோரம் உட்கார்ந்திருந்தான்.

மாற்கு 10:46

இரண்டு குருடர்களா? ஒரு குருடரா? கர்த்தரின் வார்த்தையில் இந்தச் சின்ன எண்ணிக்கையில் ஏனிந்தத் தடுமாற்றம்? இது வேறு சம்பவம்! அது வேறு சம்பவம் என்றும் கருத முடியாது. இரண்டும் வேறு வேறு நிகழ்ச்சிகள் என்றால் ஒரு குருடர் பார்வை பெற்றதைச் சொன்ன மாற்கு அதை விடப் பெரிய அற்புதமான இரு குருடர்கள் பார்வை பெற்றதை வேறு இடத்தில் சொல்லியிருக்க வேண்டும். இந்த முக்கியமான அற்புதத்தை அவ்வளவு அலட்சியமாக அவர் விட்டிருக்க மாட்டார்.

மத்தேயு, மாற்கு என்ற இரண்டு மனிதர்கள் அவர்கள் கூற்றுப்படியே தாங்கள் கேள்விப்பட்டதை எழுதியுள்ளார்கள். கர்த்தருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பதே உண்மையாகும்.

பு) உண்டும் உண்ணாதவர்

யோவான் போஜன பானம் பண்ணாதவனாய் வந்தான். அவன் பேய் பிடித்திருக்கிறவன் என்கிறார்கள். மனுஷ குமாரன் போஜன பானம் பண்ணுகிறவராய் வந்தார்.

மத்தேயு 11:18

இயேசு இவ்வாறு கூறுவதாக மத்தேயு தெரிவிக்கிறார். யோவான் போஜனம், பானம் எதையுமே அருந்தாதவராக இருந்ததாகவும், மனுஷ குமாரனுமாகிய தாம் போஜனம் பண்ணக் கூடியவர் என்றும் இயேசு கூறுகிறார்.

இதே யோவான் பற்றி மாற்கு முரண்பட்டுக் கூறுவது என்ன தெரியுமா?

யோவான் ஒட்டக மயிர் உடை தரித்து தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக் கொண்டிருந்தான். வெட்டுக்கிளியையும் காட்டுத் தேனையும் புசித்து வந்தான்.

மாற்கு 1:6

ஒரு வேளை வெட்டுக் கிளியையும் தேனையும் போஜன பானமாக மாற்கு கருதவில்லையா?

ர்) தடி எடுப்பதில் தகராறு

இயேசு தமது பன்னிரு சீடர்களையும் பிரச்சாரத்துக்கு அனுப்பிய விஷயத்தை மத்தேயுவும், மாற்கும் வழக்கம் போல் முரண்பட்டே கூறுகின்றனர்.

…வழிக்குத் தடியைத் தவிர, ஆகாரம், பை, கச்சையில் காசு இவைகளைக் கொண்டு போக வேண்டாமென்றும் பாதரட்சைகளைப் போட்டுக் கொண்டு போவதன்றி இரண்டு அங்கிகளைத் தரித்துக் கொண்டு போக வேண்டாமென்றும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

மாற்கு 6:8

…வழிக்குப் பையாவது, இரண்டு அங்கி, பாதரட்சை, தடியாவது வேண்டாம்….

மத்தேயு 10:10

சீடர்கள் கைத்தடியை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்று இயேசு கட்டளையிட்டதாக மாற்கு கூறுகிறார்.

தடியைக் கூட எடுத்துச் செல்லக் கூடாது என்று இயேசு கூறியதாக மத்தேயு கூறுகிறார்.

செருப்பு போட்டுக்கொண்டு போக வேண்டாம் என்று இயேசு கூறியதாக மத்தேயு கூறுகிறார்.

செருப்பு போட்டுக் கொண்டு போகச் சொன்னதாக மாற்கு கூறுகிறார்.

கிறித்தவ நண்பர்களே! கர்த்தரின் வார்த்தையில் இத்தகைய முரண்பாடுகள் இருக்கலாகாது என்பது புரியவில்லையா?

ஐ) அறிந்தும் அறியாதவர்

இயேசுவின் வருகை பற்றியும், அவரின் தகுதி பற்றியும் யோவான் அறிந்து வைத்திருந்தார் என்பதைப் பல இடங்களில் பைபிள் கூறுகின்றது.

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கருகே அவனிடம் வந்தார். அவனோ நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியிருக்க நீர் என்னிடம் வருகிறீரே என்று சொல்லி அவரைத் தடுத்துப் பார்த்தான்.

மத்தேயு 3:13

இயேசுவைப் பற்றி யோவானுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது என்பதை இந்த வசனம் கூறுகின்றது.

மத்தேயு மற்றோர் இடத்தில் தம்மைத் தாமே மறுத்து முரண்படுகின்ற காட்சியை நாம் காண்கின்றோம்.

கிறிஸ்துவின் செயல்களைச் சிறைச் சாலையில் கேள்விப்பட்ட யோவான் தன் சீஷரை அனுப்பி, வருகிறவர் நீ தானோ அல்லது வேறொருவரை நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா என்று கேட்டான்.

மத்தேயு 11:2

யோவான் இவ்வாறு கேட்டது இயேசு ஞானஸ்நானம் பெற்றதற்குப் பிறகு நடந்ததாகும். இதை பைபிளிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

இயேசு ஞானஸ்நானம் பெற வரும் போதே அவரைப் பற்றி அறிந்திருந்த யோவானுக்கு, பிறகு எப்படி அவரைப் பற்றி தெரியாமல் போய்விடும்? வரப் போகிறவர் நீதானோ என்று ஏன் கேட்டு அனுப்ப வேண்டும்? அதுவும் ஒரு சுவிசேஷத்துக்குள்ளேயே இந்த முரண்பாடு அமைந்திருப்பது கவனிக்கத்தக்கதாகும். இது போல் ஒரு ஆகமத்துக்குள்ளேயே முரண்பட்டவைகள் பரவலாகப் பைபிளில் காணப்படுகின்றன.

 து) சாட்சித் தள்ளாட்டம்

என்னைக் குறித்து நானே சாட்சி சொன்னால் என் சாட்சி மெய்யாயிராது என்று இயேசு கூறியதாக யோவான் 5:31ல் கூறுகிறார்.

என்னைக் குறித்து நானே சாட்சி சொன்னாலும் என் சாட்சியம் உண்மையே என்று இயேசு கூறியதாக யோவான் 8:14ல் கூறுகிறார்.

இரண்டில் இயேசு கூறியது எது? இயேசுவின் பெயரால் உண்டுபண்ணிச் சொல்லப்பட்டது எது? கிறித்தவ உலகம் விளக்குமா?

இயேசுவின் கடைசிக் காலத்து நிகழ்ச்சிகளைக் கூறும் போது சுவிசேஷங்களிடையே அனேக முரண்பாடுகள் காணப்படுகின்றன.

மு) முத்தத்தில் முரண்பாடு

இயேசுவை யூதாஸ் என்ற சீடன் காட்டிக் கொடுத்தது கிறித்தவர்கள் நன்கு அறிந்த ஒன்றாகும். அவன் எப்படிக் காட்டிக் கொடுத்தான்?

அவரைக் காட்டிக் கொடுக்கிறவன், நான் எவனை முத்தமிடுவேனோ அவன் தான். அவனைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே அவன் இயேசுவிடம் போய் ரபீ வாழ்க என்று சொல்லி அவரை முத்தமிட்டான். இயேசு அவனை நோக்கி, சினேகிதனே எதற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து இயேசுவின் மேல் கை போட்டு அவரைப் பிடித்தார்கள்.

மத்தேயு 26:48-50

இயேசுவின் சீடர்களில் ஒருவன் இயேசுவை முத்தமிடுவதன் மூலம் எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்தான் என்று மத்தேயு கூறுவதற்கு முரணாக மற்றொரு சுவிசேஷக்காரராகிய யோவான், இயேசு தாமாகத் தம்மைக் காட்டிக் கொடுத்து விட்டதாகக் கூறுகிறார். யூதாஸ் முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்ததாக அவர் கூறவில்லை.

இயேசு தமக்கு நேரிடப் போகிற யாவற்றையும் அறிந்து எதிரே வந்து அவர்களைப் பார்த்து யாரைத் தேடுகிறீர்கள் என்றார். அவர்கள் அவரிடம் நசரேயனாகிய இயேசுவை என்று சொல்ல நான்தான் என்றார்.

யோவான் 18:4

இயேசு பிடிக்கப்பட்டதும் அவரது சீடர்களில் ஒருவனாகிய பேதுரு என்பவன் இயேசுவைத் தனக்குத் தெரியாது என்ற மறுத்த விபரம் நான்கு சுவிசேஷங்களிலும் கூறப்படுகின்றது. அவற்றில் ஏராளமான முரண்பாடுகள்.

இரண்டு வேலைக்காரிகள் மற்றும் குடியிருந்தவர்கள் மத்தியில் இவ்வாறு அவன் மறுத்ததாக மத்தேயு (26:69,75) கூறுகிறார்.

ஒரு வேலைக்காரி, மற்றும் இரண்டு ஆண்கள் மத்தியில் அவன் மறுத்துரைத்ததாக லூக்கா (22:54,60) கூறுகிறார்.

பேதுரு சம்பந்தப்பட்ட இந்த விஷயம் குறித்து பைபிள் கூறுவதை வாசித்தால் இன்னும் பல முரண்பாடுகள் இருப்பதைக் காணமுடியும். விரிவஞ்சி அவற்றை இங்கே விட்டுவிடுகிறோம்.

டு) ஆட்டம் காணும் சிலுவை

கிறித்தவத்தின் அஸ்திவாரமே சிலுவை தான். சிலுவையைச் சுமந்து சென்றது யார் என்பதிலேயே இரண்டு சுவிசேஷங்களும் மோதிக் கொள்கின்றன.

அவர்கள் இயேசுவைக் கொண்டு போனார்கள். அவர் சிலுவையைத் தாமே சுமந்து கொண்டு வெளியே கபாலஸ்தலம் என்ற இடத்திற்குப் போனார்.

யோவான் 19:17

அவர்கள் அவரைக் கொண்டு போகையில் வயல் வெளியிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோனைப் பிடித்து, சிலுவையை இயேசுவின் பின் சுமந்து கொண்டு வரும்படி அதை அவன் மேல் வைத்தார்கள்.

 லூக்கா 23:26

இயேசு தாமே சிலுவையைச் சுமந்து சென்றாரா? சீமோன் சுமந்து சென்றாரா?

இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஆறாம் மணிநேரம் என்று மத்தேயு (27:45), மாற்கு (15:33), லூக்கா (23:44) ஆகியோர் கூறுகின்றனர்.

ஆனால் யோவான் தமது சுவிசேஷத்தில் (19:14) ஆறாம் மணிநேரத்தில் இயேசு பிலாத்துவினால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.

இப்படி, சிலுவை பற்றிய நிகழ்ச்சிகளில் எண்ணற்ற முரண்பாடுகள்!

இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவருடன் இரண்டு திருடர்களும் சிலுவையில் அறையப்பட்டதாக மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் கூறுகின்றனர். இதிலும் வழக்கம் போலவே முரண்பாடுகள் காணப்படுகின்றன.

அவரோடு கூடச் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரரும் அப்படியே அவரை நிந்தித்தார்கள்.

 மத்தேயு 27:47, மாற்கு 15:32

சிலுவையில் தொங்கின குற்றவாளிகளில் ஒருவன் நீ கிறிஸ்து தானே? உன்னையும், எங்களையும் இரட்சித்துக் கொள் என்று அவரை தூஷித்தான். மற்றவனோ அவனை நோக்கி நீயும் இதை ஆக்கினைக்குட்பட்டவனாய் இருக்கிறாயே, கடவுளுக்குப் பயப்படுகிறதில்லையா? நாம் நியாயமாகத் தண்டிக்கப்படுகிறோம்.

நாம் செய்தவைகளுக்கு தக்க பலனை அடைகிறோம். இவரோ தகாத ஒன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கண்டித்து, பின்னும் இயேசுவே! நீர் உமது இராட்சியத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும்? என்று சொல்ல அவர் அன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதேசியிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கின்றேன் என்றார்.

லூக்கா 23:39-43

ஒரு கொள்ளைக்காரன் மட்டுமே இயேசுவைக் குறை கூறியதாகவும் மற்றவன் அவனைக் கண்டித்ததோடு இயேசுவை விசுவாசித்ததாகவும் லூக்கா கூறுகிறார்.

மத்தேயும், மாற்கும் இரண்டு கொள்ளைக்காரர்களுமே அவரை நிந்தித்தாகக் கூறுகிறார்கள்.

கர்த்தரின் வார்த்தையில் இந்தத் தடுமாற்றம் இருக்கலாமோ?

 ஆ) உயிர்த்தெழுதலிலும் குழப்பம்

இயேசு அடக்கம் செய்யப்பட்ட பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதே கிறித்தவத்தின் அடிப்படைக் கோட்பாடு. அவர் உயிர்த்தெழுந்த(?) நிகழ்ச்சியாவது முரண்பாடில்லாமல் பைபிளில் கூறப்பட்டிருக்கிறதா? அதிலுள்ள முரண்பாடுகள் தான் எத்தனையெத்தனை?

ஓய்வு நாள் முடிந்தது. வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் மகதேலேனா மரியாளும், மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். இதோ பெரிய பூமி அதிர்ச்சியுண்டாயிற்று! கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்து வாசலில் இருந்த கல்லை உருட்டித் தள்ளி அதன் மேல் உட்கார்ந்தான். அவன் ரூபம் மின்னல் போலவும் அவன் வஸ்திரம் குறைந்த மழை போல் வெண்மையாகவும் இருந்தது.

மத்தேயு 28:1-3

ஓய்வு நாள் முடிந்த பின் மகதேலேனா மரியாளும், யாகோபின் தாயாகிய மரியாளும், சலாமே என்பவளும் அவருக்குப் பூச வேண்டும் என்று சுகந்த வர்க்கங்களை வாங்கினார்கள். வாரத்தின் முதல் நாள் அதிகாலையில் சூரியோதயத்திலேயே அவர்கள் கல்லறைக்கு வந்தார்கள். கல்லறையின் வாசலில் இருந்த கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான் என்று ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள்.

அவர்கள் வந்து ஏறிட்டுப் பார்த்த போது அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள். அந்தக் கல் மிகவும் பெரிது. அவர்கள் கல்லறைக்குச் சென்று வெள்ளையங்கி தரித்திருந்த ஒரு வாலிபன் வலது பக்கம் உட்கார்ந்திருந்ததைக் கண்டு திகைத்தார்கள்.

மாற்கு 16:1-5

வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையில் தாங்கள் ஆயத்தம் செய்த சுகந்த வர்க்கங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு கல்லறைக்கு வந்த போது கல்லறையிலிருந்து கல் புறப்பட்டிருப்பதைக் கண்டார்கள். உள்ளே சென்ற போதோ ஆண்டவராகிய இயேசுவின் சரீரத்தைக் காணவில்லை. அதைப் பற்றி அவர்கள் கலங்கிக் கொண்டிருக்கையில் பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு பேர் அவர்கள் அருகே வந்து நின்றார்கள்.

 லூக்கா 24:15

வாரத்தின் முதல் நாள் காலையில் இருட்டோடே மகதேலேனா மரியாள் கல்லறைக்கு வந்தாள். கல்லறையை அடைத்திருந்த கல் எடுக்கப்பட்டிருக்கக் கண்டு-

யோவான் 20:1

  • இயேசுவின் கல்லறைக்கு ஒரு மரியாள் மட்டும் வந்ததாக யோவான் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
  • இரண்டு மரியாள்கள் வந்ததாக லூக்காவும், மத்தேயுவும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
  • இரண்டு மரியாள்களும், சலாமே என்பவளுமாக மூவர் வந்தார்கள் என்று மாற்கு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
  • அவர்கள் வந்த போது அவர்கள் இரண்டு தேவ தூதர்களைச் சந்தித்ததாக லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
  • ஒரு தேவ தூதன் என்று மத்தேயுவும், மாற்கும் கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
  • அந்தத் தேவ தூதனை கல்லறைக்குள் உட்கார்ந்திருக்கக் கண்டார்கள் என்று மாற்கு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
  • அல்லது வானத்திலிருந்து அவன் இறங்கி வந்ததாக மத்தேயு கூறுவது கர்த்தரின் வார்த்தையா?
  • அல்லது இரண்டு பேர் அருகே வந்து நின்றார்கள் என்று லூக்கா கூறுவது கர்த்தரின் வார்த்தையா?

உயிர்த்தெழுதலைப் பற்றி பைபிள் கூறும் தகவலில் ஏன் இத்தனை குழப்பங்கள்? உயிர்த்தெழுதல் நடந்திருந்தால் அதில் இவ்வளவு குழப்பங்களுக்கும் இடமிருக்குமா? கிறித்தவ நண்பர்களே நடுநிலையோடு சிந்திப்பீர்!

 N) கத்திமுனையில் சமாதானம்

சமாதானம் பண்ணுவோர் பாக்கியவான்கள். அவர்கள் கடவுளின் புத்திரர் எனப்படுவார்கள்.

 மத்தேயு 5:9

பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்! சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்ப வந்தேன். மகனைத் தகப்பனுக்கும் மகளைத் தாய்க்கும், மருமகளை மாமிக்கும் விரோதமாய்ப் பிரித்துவிட வந்தேன்.

 மத்தேயு 10:34

சமாதானத்தை இயேசு வலியுறுத்தியதாகக் கூறிய மத்தேயு இயேசு சமாதானத்துக்கு எதிராக வந்ததாகவும் கூறுகிறாரே; இரண்டில் கர்த்தரின் வார்த்தை எது விளக்க முடியுமா?

ழு) மரணக் குழப்பம்

அப்பொழுது அவன் அந்த வெள்ளிக் காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டுப் போய் நான்று கொண்டான். பிரதான ஆசாரியார் அந்த வெள்ளிக் காசை எடுத்து இது இரத்தக் கிரயமானதாக உள்ளதால் காணிக்கைப் பெட்டியிலே போடலாகாது என்று சொல்லி ஆலோசனை பண்ணின பின்பு அந்நியரை அடக்கம் பண்ணும் இடமாக குயவனுடைய நிலத்தை அதனாலே கொண்டார்கள்.

மத்தேயு 27:5,6

அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்தான் அவன் முகங்குப்புற விழவே அவன் வயிறு வெடித்துக் குடல்களெல்லாம் சரிந்து போயின. இது எருசலேமிலுள்ள யாவருக்கும் தெரியலாயிற்று.

அப்போஸ்தலர் 1:18

இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் கயிற்றில் தொங்கிக் கொண்டு செத்தான் என்று மத்தேயு கூறுகிறார்.

ஆனால் பவுல் அவன் முகங்குப்புற விழுந்து செத்ததாகக் கூறுகிறார்.

இரண்டில் கர்த்தர் சொன்னது எது?

குடிமக்கள் யாவருக்கும் தெரிந்த செய்தி மத்தேயுவுக்குத் தெரியாமல் போனது எப்படி?

யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்து விட்டு அதற்குக் கூலியாக நிலத்தைப் பெற்றதாகப் பவுல் கூறுகிறார். ஆனால் மத்தேயுவோ அவன் வெள்ளிக் காசைப் பெற்றதாகவும் அதைத் தூக்கி எறிந்து விட்டதாகவும் கூறுகிறார். இரண்டில் கர்த்தர் சொன்னது எது? கற்பனை செய்து கூறப்பட்டது எது? கயிற்றில் தொங்கும் அதே நேரத்தில் முகங்குப்புற விழும் வித்தையைக் கிறித்தவ உலகம் விளக்குமா?

P) தரிசனத் தடுமாற்றம்

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்தார்; மூன்றாம் நாள் மறுபடியும் உயிர்பெற்றெழுந்தார்; சீடர்களுக்குக் காட்சி தந்தார் என்று மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷக்காரர்களும் சுறுகின்றனர். இந்த விஷயத்தை விபரிக்கும் நான்கு சுவிசேஷக்காரர்களும் முரண்பட்ட பல விஷயங்களைக் கூறுகின்றனர்.

மகதேலேனா மரியாளிடமும் மற்ற மரியாளிடமும் தேவ தூதன் காட்சி தந்து இயேசு உயிர்த்தெழுந்ததைக் கூறி சீஷருக்கு இதைக் கூறுமாறும் தெரிவிக்கிறார். அவ்விருவரும் சீஷர்களிடம் கூறுவதற்காகச் செல்லும் போது இயேசுவே அவர்களுக்குக் காட்சி தந்து,

நீங்கள் போய் கலிலேயாவுக்குப் போகும்படி என் சகோதரருக்குச் சொல்லுங்கள்! அங்கே என்னைக் காண்பார்கள் என்றார்.

மத்தேயு 28:10

பதினொரு சீஷருமோ இயேசு தங்களுக்குக் குறித்திருந்தபடி கலிலேயாவிலுள்ள மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்து கொண்டார்கள்.

மத்தேயு 28:16

இயேசுவின் கட்டளைப்படி பதினொரு சீஷரும் கலிலேயா எனுமிடம் சென்று இயேசுவைத் தரிசித்ததாக மத்தேயு இங்கே கூறுகிறார்.

ஆனால் மாற்கு,

அவர் உயிரோடு இருக்கிறார் என்றும், அவள் அவரை கண்டாள் என்றும் அவர்கள் கேள்விப்பட்ட போது நம்பவில்லை. அதன் பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு வழிநடந்து போகிற பொழுது அவர்களுக்கு வேறு ரூபமாய்த் தரிசனமானார். அவர்களும் போய் மற்றவர்களுக்கு அறிவித்தார்கள். அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.

பதினொருவரும் போஜன பந்தியில் இருக்கும் போது அவர்களுக்கு அவர் தரிசனமாகி உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமல் போனதினிமித்தம் அவர்கள் விசுவாசத்தைப் பற்றியும் இருதயக் கடினத்தைப் பற்றியும் அவர்களைக் கடிந்து கொண்டார்.

மாற்கு 16:11-14

பதினொரு சீடர்களும் இரண்டு மரியாள்களின் கூற்றை ஏற்று இயேசுவைத் தரிசிக்க கலிலேயா என்ற இடத்திற்குச் சென்றதாக மத்தேயு கூறுகிறார். சென்றது ஒரு மரியாள் என்றும் அவளது கூற்றை சீடர்கள் நம்பவில்லை என்றும் மாற்குக் கூறுகிறார்.

வழியில் இரண்டு சீடர்களுக்கு இயேசு தரிசனமானதாக மாற்கு கூறுகிறார்.

 மத்தேயு இது பற்றி எதையுமே கூறவில்லை.

கலிலேயா என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று அங்கே இயேசுவைத் தரிசனம் செய்ததாக மத்தேயுவும் இயேசுவை அவர்கள் போஜனம் பண்ணும் இடத்துக்கு வலிய வந்து காட்சி தந்ததாக மாற்கும் கூறுகிறார்கள்.

கிறித்தவத்தின் முக்கியமான கோட்பாட்டை விளக்கும் விஷயத்தில் கூட இவ்வளவு முரண்படுவானேன்? இரண்டுமே கர்த்தரின் தூண்டுதலால் எழுதப்பட்டிருந்தால் இத்தகைய முரண்பாடுகள் இருக்க முடியுமா? இதே விஷயத்தை லூக்கா கூறும் போது முரண்பட்ட இந்த இரண்டுக்கும் முரணாகக் கூறுகிறார்.

அந்நேரமே எழுந்திருந்து எருசலேமுக்குத் திரும்பிப் போய் பதினொருவர்களும், அவர்களோடிருந்தவர்களும் கூடியிருந்த இடத்தில் அவர்களைக் கண்டார்கள். அவர்கள் இவைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் அவர் தாமே அவர்கள் நடுவிலே வந்து நின்று அவர்களைப் பார்த்து உங்களுக்குச் சமாதானம் என்றார்.

லூக்கா 24:33,37

கலிலேயாவிலும் இயேசுவைச் சந்திக்கவில்லை; அவர்கள் போஜனம் பண்ணும் போதும் சந்திக்கவில்லை. மாறாக அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் எருசலேமில் தரிசனம் தந்ததாக லூக்கா கூறுகிறார்.

மரணித்த பிறகு உயிர்த்தெழுதல் என்பது சாதாரணமான ஒன்றல்ல. அப்படி நடந்திருந்தால் அவ்விஷயத்தில் இவ்வளவு முரண்பாடுகள் இருக்க வழியில்லை. உயிர்த்தெழுதல் என்பது பொய்யாக இருக்க வேண்டும் அல்லது இவ்வளவு முரண்பாடுகள் உள்ள பைபிள் இறை வேதம் அல்ல என்பதைக் கிறித்தவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைத் தவிர உங்களுக்கு வேறு வழியிருக்கிறதா நண்பர்களே!

ஞ) கேட்டும் கேட்காதவர்

இயேசுவின் உயிர்த்தெழுதலை கிறித்தவ மதத்தில் திட்டமிட்டு நுழைத்தவர் பவுல் என்னும் சவுல் ஆவார். நியாய உணர்வும், சிந்தனைத் தெளிவும் உள்ள கிறித்தவர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர். கிறித்தவர்களுக்கு ஆரம்பத்தில் எதிரியாக இருந்து பின்னர் கிறித்தவ மார்க்கத்தில் இணைந்தது பற்றி பவுல் விளக்கும் போது அனேக இடங்களில் முரண்படுகிறார். பின்வரும் வசனங்களிலிருந்து அவற்றை அறியலாம். இங்கே அவன் என்று தம்மைப் பற்றியே பவுல் கூறுகிறார் என்பதைக் கவனத்தில் கொள்க!

அவன் பிரயாணம் செய்து தமஸ்குவைச் சமீபித்த போது சடுதியில் வானத்திலிருந்து ஒரு வெளிச்சம் அவனைச் சுற்றி பிரகாசித்தது. அவன் தரையிலே விழுந்தான். விழவே சவுலே சவுலே நீ என்னை ஏன் துன்பப் படுத்துகிறாய் என்று தன்னிடம் சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு அவர் ஆண்டவரே! நீர் யாரென்று கேட்க அவர் நீ துன்பப்படுத்துகிற இயேசுவே நான். இப்பொழுது நீ எழுந்து பட்ணத்துக்குள்ளே போ! நீ செய்ய வேண்டியது இன்னதென்று அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனோடு பிரயாணம் செய்த மனுஷர் அந்தச் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பேச்சற்று நின்றுவிட்டார்.

அப்போஸ்தலர் 9:3-8

அப்படியே நான் போகையில் தமஸ்குவைச் சமீபித்த போது மத்தியான வேளையில் சடுதியாய் வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் என்னைச் சுற்றி பிரகாசித்தது. நான் தரையில் விழுந்தேன். விழவே சவுலே! சவுலே! என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னிடம் சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான் நீர் யார் ஆண்டவரே என்றேன். அவர், நீ துன்பப் படுத்துகின்ற நசரேயன் இயேசுவே நான் என்றார்.

என்னோடிருந்தவர்கள் என்னிடம் பேசினவர் சத்தத்தைக் கேட்கவில்லை. அப்பொழுது நான் ஆண்டவரே! நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்க, ஆண்டவர் என்னிடம் நீ எழுந்து தமஸ்குவுக்குப் போ!. நீ செய்யும்படி நியமிக்கப்பட்டவைகள் எல்லாவற்றையும் குறித்து அங்கே உனக்கு சொல்லப்படும் என்றார்.

அப்போஸ்தலர் 22:6-10

தமஸ்குவுக்குப் போகும் போது மத்தியான வேளையில் ராஜாவே வழியில் வானத்திலிருந்து ஒரு வெளிச்சம் என்னையும், என்னோடு பிரயாணம் பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன். அதன் பிரகாசம் சூரிய பிரகாசத்திலும் அதிகம். நாங்களெல்லோரும் தரையில் விழுந்த போது சவுலே! சவுலே! நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?

தாற்றுக்கோலுக்கு எதிர்த்து உதைப்பது உனக்கு கஷ்டமாம் என்று எபிரேயு பாஷையில் என்னிடம் சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான் நீர் யார் ஆண்டவரே! என்றேன். அதற்கு ஆண்டவர் நீ துன்பப்படுத்துகிற இயேசுவே நான். இப்பொழுது எழுந்து காலூன்றி நில்… (தொடர்ந்து சவுல் செய்ய வேண்டியவைகளை எல்லாம் கூறுகிறார்)

அப்போஸ்தலர் 27:13-16

அந்த சத்தத்தை தன்னோடு பிரயாணம் செய்தவர்களும் கேட்டதாக ஆரம்பத்தில் கூறுகிறார். அடுத்த இடத்தில் யாரும் சத்தத்தைக் கேட்கவில்லை என்கிறார். ஒரே நபர் கூறுகிற ஒரே விஷயத்தில் ஏன் தடுமாற்றம்?

பவுல் செய்ய வேண்டியவை தமஸ்கு நகரத்தில் கூறப்படும் என்று முதல் இரண்டு இடங்களில் கூறுகின்றார். மூன்றாவது இடத்தில் அங்கேயே அவை விளக்கப்பட்டதாகக் கூறுகிறார். ஒரு நபர் எழுதிய அப்போஸ்தலர் நடபடிகளில் ஏன் இந்த முரண்பாடு? இரண்டில் எது உண்மை? கிறித்தவ உலகம் அறியுமா?

சு) சாத்தானின் கையில் பரலோக ராஜ்ஜியம்

இயேசுவியின் சிலுவை மரணத்தில் மடடுமின்றி அதையொட்டி நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களிலும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. இயேசுவுடைய பன்னிரண்டு சீடர்களில் ஒருவன் காட்டிக் கொடுத்த தகவலில் முரண்பாடு உள்ளது போல் மற்றொரு சீடர் கூறும் போதும் பைபிள் முரண்படுகிறது. இயேசுவின் சீடர்களில் சீமோன் பேதுரு என்பவனும் ஒருவன்.

யோனாவின் குமாரன் சீமோனே! நீ பாக்கியவான். மாமிசமும், இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார். நான் உனக்குச் சொல்லுகிறதைக் கேள்! நீ பேதுரு (கற்பாறை என்று பொருள்) இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்.

பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோக ராஜ்ஜியத்தின் திறவு கோல்களை உனக்குத் தருவேன். பூலோகத்தில் நீ கட்டுவது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டதாகும். பூலோகத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டதாகும் என்றார்.

மத்தேயு 16:17-19

இயேசுவுக்கு அடுத்த இடத்தைப் பேதுரு பெற்றிருக்கிறார். இயேசுவின் சீடர்களில் அவரே சிறந்தவர் என்பதெல்லாம் இதிலிருந்து தெரிய வருகின்றது.

இவ்வாறு இயேசுவால் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்கள் வழங்கப்பட்ட பேதுரு பற்றி இயேசு கூறியதாக மத்தேயு கூறுவதைக் கேளுங்கள்!

அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து எனக்குப் பின்னாகப் போ சாத்தானே, நான் இடற ஏதுவாயிருக்கிறாய்; கடவுளுக்குரியவைகளைச் சிந்தியாமல் மனுஷனுக் குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

மத்தேயு 16:22,23

இயேசு பேதுருவிடம் பரலோக ராஜ்ஜியத்தின் சாவியைக் கையில் கொடுத்து அடுத்த வினாடியே அவரைச் சாத்தான் என்று அழைக்கிறார்; நான் இடற ஏதுவாய் இருக்கிறாய் என்றும் கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு?

இயேசு அவனிடம் (பேதுருவிடம்) இந்த இரவிலேயே சேவல் கூவுகிறதற்கு முன் நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன் என்றார்.

மத்தேயு 26:34

இயேசு கூறியவாறு பேதுரு மூன்று தடவை இயேசுவை மறுதலித்ததாக மத்தேயுவும், மற்ற சுவிசேஷக்காரர்களும் கூறுகின்றனர். இவ்வளவு உயர்வான அந்தஸ்துடையவர் அவர் நினைத்தபடியே பரலோகத்திலும் நடக்கும் என்றெல்லாம் உயர்வாகச் சொல்லப்பட்ட பேதுரு சாத்தான் என்றும் இயேசுவை மறுதலிப்பவர் என்றும் கூறப்படுவது ஏன்? கடவுளின் வார்த்தையில் இந்தத் தடுமாற்றம் இருக்கலாமா? சிந்தியுங்கள்!

ளு) தலை, கால் புரியவில்லை

இயேசுவின் மீது ஒரு பெண் நறுமணத்தை ஊற்றிய சம்பவத்தை எல்லா சுவிசேஷக்காரர்களும் கூறுகின்றனர். இதிலும் ஏராளமான முரண்பாடுகள்!

இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியான சீமோன் வீட்டில் இருக்கையில் ஒரு ஸ்திரீ விலையுயர்ந்த பரிமளத் தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டு வந்து அவர் போஜனப் பந்தியிலிருக்கும் போது அந்தத் தைலத்தை அவர் சிரசின் மேல் ஊற்றினாள்.

மத்தேயு 26:6,7

பரிசேயரில் ஒருவன் தன்னோடு போஜனம் பண்ண வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டான். அவர் அந்தப் பரிசேயன் வீட்டுக்குப் போய் பந்தியிருந்தார். அந்த ஊரிலிருந்த பாவியான ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து வெள்ளைக்கல் பரணியில் பரிமளத் தைலம் கொண்டு வந்து அவர் பாதத்தருகே பின்னாக நின்று அழுது அவருடைய பாதங்களை தன் கண்ணீரினால் நனைக்கத் தொடங்கி தன் தலை மயிரினால் தொடைத்து அவர் பாதங்களைத் திரும்பத் திரும்ப முத்தமிட்டுப் பரிமளத்தைலத்தைப் பூசினாள்.

லூக்கா 7:36

இவ்வாறு நறுமணத் தைலத்தைப் பூசிய நிகழ்ச்சி சீமோன் என்வரின் வீட்டில் நடந்ததாக மத்தேயுவும், மாற்கும் (14:3) கூறுகிறார்கள்.

ஆனால் லூக்காவோ பரிசேயரின் வீட்டில் அது நடந்ததாகக் கூறுகிறார்.

நறுமணத் தைலத்தை தலையில் ஊற்றியதாக மத்தேயுவும், மாற்கும் (14:3) கூறுகிறார்கள்.

ஆனால் லூக்கா காலில் ஊற்றியதாகக் கூறுகிறார்.

அடக்கத்தைப் போதித்த இயேசு, காலில் தலை வைப்பதையும் தலைமயிரால் அவரது கால்களைத் துடைப்பதையும் அங்கீகரித்திருப்பாரா? என்பது ஒரு புறமிருந்தாலும் கடவுளின் வார்த்தையில் முரண்பாடு இருத்தலாகாது என்பதற்கே இதைச் சுட்டிக் காட்டுகிறோம்.