01) முன்னுரை
01) முன்னுரை
இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பெண்மணிகளில் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் ஒருவராவார். ஈமானிய உணர்வும், உறுதியும், அறிவும், ஆற்றலும், வீரமும், ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அன்னையவர்கள், ஒரு தாயாகவும், மார்க்கப் பிரச்சாரகராகவும் (தாயி) மட்டுமின்றி, இஸ்லாத்திற்காகப் போராடும் வீராங்கனையாகவும் திகழ்ந்தார்கள்.
“எளியோர்க்கும் வழிப்போக்கர்களுக்கும் விருந்தளித்து உபசரியுங்கள்” என்ற நபிமொழிக்கேற்ப நபித்தோழர்கள் அனைவரும் அத்தகைய பண்பில் சிறந்து விளங்கினார்கள். அவர்களுள், அபூதல்ஹா (ரலி) மற்றும் உம்மு சுலைம் (ரலி) தம்பதியரின் வாழ்வு இப்பண்பாட்டிற்கு ஒரு சிறந்த வியக்கத்தக்க முன்மாதிரியாகத் திகழ்கிறது.
மேலும், இவ்வுலகில் வாழும்போதே நபி (ஸல்) அவர்களால் “சொர்க்கத்திற்குரியவர்” என்று நற்செய்தி சொல்லப்பட்ட இப்பெருமதிப்பிற்குரிய பெண்மணியின் ஈமானிய உறுதி, அவர் சந்தித்த வாழ்வியல் போராட்டங்கள் மற்றும் மார்க்கத்திற்காக அவர் செய்த அளப்பரிய தியாகங்கள் குறித்து இந்த நூலில் விரிவாகக் காண்போம்.
தொகுப்பு: P நவீத் அஹ்மத் MISC