திருக்குர்ஆன் கையேடு

நூல்கள்: திருக்குர்ஆன் கையேடு (பொருள் அட்டவணை)

வேதங்களை நம்புதல்

முந்தைய வேதங்கள் வேதங்கள் எத்தனை? வேதங்கள் நான்கு மட்டும் அல்ல. எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் – 2:136➚, 2:213➚, 3:81➚, 3:84➚, 3:184➚, 7:35➚, 14:4➚, 19:12➚, 35:25➚, 57:25➚, 87:18➚

ஸுஹுஃப் என்பதும் கிதாப் என்பதும் ஒன்று தான் – 20:133➚, 53:36➚, 80:13➚, 87:18➚, 87:19➚, 98:2➚

முன்னர் அருளப்பட்ட வேதங்கள் அருளப்பட்ட வடிவில் பாதுகாக்கப்படவில்லை

2:75➚, 2:79➚, 3:78➚, 4:46➚, 5:13➚, 5:41➚, 6:91➚

வேதங்களை வியாபாரமாக்குதல் வேதங்களை வியாபாரமாக்கக் கூடாது – 2:41➚, 2:174➚, 3:187➚, 3:199➚, 5:44➚, 9:9➚

வேதங்களை மறைக்கக் கூடாது – 2:146➚, 2:159➚, 2:174➚, 3:187➚

வேதங்களை நிராகரித்தல் வேதங்களுக்கு முரண்படக் கூடாது – 2:176➚, 3:105➚, 11:110➚, 41:45➚

வேதங்களைக் கேலி செய்யக் கூடாது – 2:231➚, 4:140➚, 9:65➚, 18:56➚, 18:106➚, 30:10➚, 45:9➚, 45:35➚

வேதங்களை மறுப்பது கடும் குற்றம்

3:4➚, 3:19➚, 4:136➚, 5:10➚, 5:86➚, 6:49➚, 6:89➚, 6:157➚, 7:9➚, 7:36➚, 7:40➚, 7:177➚, 7:182➚, 10:17➚, 10:95➚, 21:50➚, 23:66➚, 23:105➚, 25:30➚, 30:10➚, 31:7➚, 39:59➚, 40:70➚, 45:8➚, 45:31➚, 47:9➚, 62:5➚, 68:44➚

பெருமையடிப்பவர்களுக்கு வேதங்கள் விளங்காது – 7:146➚

தவ்ராத் மூஸா நபிக்கும், ஏராளமான நபிமார்களுக்கும் வழங்கப்பட்ட வேதம் தவ்ராத் – 3:48➚, 5:44➚, 5:110➚

இஞ்சீல் ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட வேதம் இஞ்சீல் – 3:48➚, 3:50➚, 5:46➚, 5:110➚

ஸபூர் தாவூது நபிக்கு வழங்கப்பட்ட வேதம் ஸபூர் – 4:163➚, 17:55➚, 21:105➚

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள் பக்கம் 16-ல் ‘இது இறைவேதம்’ என்ற தலைப்பில் விபரம் காண்க! எப்போது அருளப்பட்டது? ரமளானில் அருளப்பட்டது – 2:185➚

லைலத்துல் கத்ரில் அருளப்பட்டது – 44:3➚, 97:1-3➚

திருக்குர்ஆனின் தனித் தன்மை திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியதல்ல. மனித குலத்துக்கு உரியது – 2:159➚, 2:168➚, 2:185➚, 2:221➚, 3:138➚, 4:170➚, 4:174➚, 7:158➚, 10:2➚, 10:57➚, 10:104➚, 10:108➚, 14:1➚, 14:52➚, 16:44➚, 17:89➚, 17:106➚, 18:54➚, 22:49➚, 29:43➚, 30:58➚, 34:28➚, 39:27➚, 39:41➚

திருக்குர்ஆன் விளங்கிட எளிதானது – 2:99➚, 2:159➚, 2:185➚, 2:219➚, 2:221➚, 2:242➚, 2:266➚, 3:103➚, 3:118➚, 3:138➚, 4:26➚, 4:82➚, 4:174➚, 5:15➚, 5:89➚, 6:105➚, 6:114➚, 7:52➚, 10:15➚, 10:37➚, 11:1➚, 16:89➚, 17:41➚, 17:89➚, 18:54➚, 20:2➚, 22:16➚, 22:72➚, 24:1➚, 24:18➚, 24:34➚, 24:46➚, 24:58➚, 24:59➚, 26:2➚, 27:1➚, 28:2➚, 29:49➚, 39:27➚, 41:3➚, 46:7➚, 54:17➚, 54:22➚, 54:32➚, 54:40➚, 55:2➚, 58:5➚, 65:11➚

திருக்குர்ஆனுக்குப் பிறகு வேதம் இல்லை – 2:185➚, 6:19➚, 25:1➚, 38:87➚, 39:41➚, 68:52➚, 81:27➚

திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதம் – 15:9➚, 18:1➚, 39:28➚, 41:42➚, 75:17➚

திருக்குர்ஆன் சிந்திக்கத் தூண்டும் வேதம் – 4:82➚, 17:41➚, 21:10➚, 23:68➚, 25:73➚, 38:29➚, 47:24➚

திருக்குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்த வேண்டும் – 5:83➚, 7:204➚, 8:2➚, 53:60➚, 57:16➚

திருக்குர்ஆன் நோய் நிவாரணம் – 10:57➚, 16:69➚, 17:82➚, 41:44➚

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை –

2:97➚, 4:153➚, 6:7➚, 7:157➚, 20:114➚, 25:4➚,5, 26:194➚, 29:48➚, 75:16➚, 75:18➚, 87:6➚,7

ஜிப்ரீல் எனும் வானவர் வழியாக திருக்குர்ஆன் அருளப்பட்டது – 2:97➚, 16:102➚, 26:193➚,194, 53:5-8➚, 81:19-24➚

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்தது – 56:77➚,78, 85:21➚,22

திருக்குர்ஆனை ஓதும் முன் ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேட வேண்டும் – 16:98➚

திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டது – 17:106➚, 20:114➚, 25:32➚, 75:16➚

மறுமையை நம்பாதவருக்கு திருக்குர்ஆனின் அறிவுரை பயன் தராது – 17:45➚,46

பெருமையடிப்பவர்களுக்கு திருக்குர்ஆனை விளங்க இயலாது – 7:146➚

திருக்குர்ஆனில் சில வசனங்கள் மாற்றப்படுதல் – 2:106➚, 13:39➚, 16:101➚

திருக்குர்ஆனை முஹம்மது நபிக்கு யாரும் கற்றுத் தரவில்லை – 16:103➚, 25:5➚,6

திருக்குர்ஆனில் விளங்க முடியாதவை உண்டா? – 3:7➚

திருக்குர்ஆன் வசனங்கள் நம்பிக்கையை அதிகமாக்கும் 8:2➚, 9:124➚

திருக்குர்ஆனைக் குறை கூறும் சபையில் அமரக் கூடாது – 6:68➚

திருக்குர்ஆனில் உதாரணங்கள் தீய வழியில் செல்வது நட்டம் தரும் வியாபாரம் – 2:16➚

நயவஞ்சகர்களுக்கு உதாரணம் – 2:17-20➚

யூதர்களின் கடின உள்ளத்திற்கு உதாரணம் – 2:74➚

நிராகரிப்பவர்களுக்குச் செய்யப்படும் போதனை கால்நடைகளுடன் பேசுவதற்குச் சமம் – 2:171➚

அதிகாலைப் பொழுதை வெள்ளைக் கயிறுக்கு ஒப்பிடுதல் – 2:187➚

தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை – 2:187➚

நல்வழியில் செலவிடுவதை ஒன்றுக்கு 700

ஆக முளைக்கச் செய்யும் தானியத்திற்கு ஒப்பிடுதல் – 2:261➚

பிறர் மெச்சுவதற்காக தர்மம் செய்பவனுக்கு உதாரணம், வழுக்குப் பாறையில் பெய்த மழை – 2:264➚

செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவனுக்கு உதாரணம் வழுக்குப் பாறையில் பெய்த மழை (2:264➚.)

இறை திருப்தியை நாடி உதவிடுவோரின் உதாரணம் உயரமான இடத்தில் அமைந்த தோட்டம் (2:265➚.)

பிறர் மெச்ச செலவிடுபவனுக்கு மற்றொரு உதாரணம் நெருப்புக் காற்றால் எரிக்கப்பட்ட தோட்டம் (2:266➚.)

இறை நம்பிக்கையில்லாதவர்கள் செய்யும் தர்மங்களுக்கு உதாரணம் குளிர் காற்றால் அழிக்கப்பட்ட பயிர்கள் -(3:117➚.)

சத்தியத்தை ஏற்க மறுப்போரை செத்த பிணத்துக்கு ஒப்பிடுதல் – 6:36➚, 6:122➚, 27:80➚, 30:52➚, 35:22➚

நேர்வழிக்கு ஒளியையும், வழிகேட்டுக்கு இருளையும் உதாரணமாகக் கூறல் –

5:16➚, 6:122➚, 13:16➚, 24:35➚, 35:20➚, 39:22➚, 57:9➚, 65:11➚

இறைவசனங்களை நிராகப்பவர்களை செவிடர்களுக்கும், ஊமைகளுக்கும் ஒப்பிடுதல் – 6:39➚, 10:42➚, 10:43➚, 11:24➚, 13:16➚, 13:19➚, 21:45➚, 30:52➚, 43:40➚

நேர்வழியில் இருப்பவனை பார்வையுள்ளவனுக்கும், வழிகெட்டவனை குருடனுக்கும் ஒப்பிடுதல்

6:50➚, 35:19➚, 40:58➚, 41:17➚

மழை மேகத்தை கருவுற்ற பெண்ணுக்கும், மழை பொழிவதை பிரசவிப்பதற்கும் ஒப்பிடுதல் – 7:57➚

மனோ இச்சையைப் பின்பற்றி இறை வசனங்களை மறுப்போரை நாக்கைத் தொங்க விடும் நாய்க்கு ஒப்பிடுதல் – 7:176➚

சத்தியத்தை ஏற்க மறுப்போரை கால்நடைகளுக்கு ஒப்பிடுதல் – 7:179➚, 25:44➚, 47:12➚

தவறான கொள்கையில் இருப்பவனை ஆற்றோரத்தில் இடிந்து விழும் கட்டடத்தைக் கட்டியவனுக்கு ஒப்பிடுதல் – 9:109➚

அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களைப் பிரார்த்திப்பவர்களுக்கு உதாரணம் தானாக தண்ணீர் வாய்க்குள் செல்ல வேண்டும் என்று நினைத்து கைகளை விரித்தவன் – 13:14➚

நிராகரிப்பவர்களின் செயல்களை காற்றால் பரப்பப்பட்ட சாம்பலுக்கு ஒப்பிடுதல் – 14:18➚

ஆழப் பதிந்து கிளை விடும் மரத்தை நல்ல கொள்கைக்கு உதாரணமாகக் கூறல் – 14:24➚,25

திடீரென்று அழிந்துவிட்ட செழிப்பான தோட்டத்திற்கு உலக வாழ்க்கையை ஒப்பிடுதல் – 10:24➚, 18:45➚, 57:20➚

அசத்தியத்தை நீர்க்குமிழிக்கும், சத்தியத்தை பயனுள்ள பொருளுக்கும் ஒப்பிடுதல் – 13:17➚

பிடுங்கி எறியப்பட்ட மரத்துக்கு தீய கொள்கையை ஒப்பிடுதல் – 14:26➚

போலி தெய்வங்களை எதற்கும் இயலாத அடிமைக்கு ஒப்பிடுதல் – 16:75➚

சத்தியத்தை எடுத்துச் சொல்ல மறுப்பவனை எதற்கும் இயலாத ஊமை அடிமைக்கு ஒப்பிடுதல் – 16:76➚

சத்தியம் செய்து அதை மீறுபவனை உறுதியாக நூல்நூற்று அதை அறுத்தவனுக்கு ஒப்பிடுதல் – 16:92➚

அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவனுக்கு ஆகாயத்திலிருந்து கீழே விழுபவனை உதாரணமாகக் கூறுதல் – 22:31➚

இணைகற்பிப்போருக்கு மற்றொரு உதாரணம் – 22:73➚

நிராகரிப்பவர்களின் செயல்களை கானல் நீருக்கு ஒப்பிடுதல் – 24:39➚

நிராகரிப்பவர்களின் செயல்களை ஆழ்கடலின் இருட்டில் தன் கையையே காண முடியாத நிலையில் இருப்பவனுக்கு ஒப்பிடுதல் – 24:40➚

இறைவனுக்கு இணைகற்பிப்போரை சிலந்திப் பூச்சிக்கு ஒப்பிடுதல் – 29:41➚

இணைகற்பிப்பவனுக்கு அவனையே உதாரணமாக எடுத்துக் காட்டுவது – 30:28➚

நேர்வழிக்கு நிழலையும், வழிகேட்டுக்கு வெயிலையும் உதாரணமாகக் கூறுதல் – 35:21➚

நல்லறம் செய்வோரை லாபம் தரும் வியாபாரம் செய்பவனுக்கு ஒப்பிடுதல் – 35:29➚

பலருக்கு உடமையான அடிமையை பல தெய்வங்கள் இருப்பதாக நம்புவோருக்கு உதாரணமாகக் கூறுதல் (39:29➚

வறண்ட பூமியை செத்த மனிதனுக்கு ஒப்பிடுதல் – 43:11➚

நபித்தோழர்களை செழிப்பான தோட்டத்துக்கு ஒப்பிடுதல் – 48:29➚

புறம் பேசுவதை மனித இறைச்சியைச் சாப்பிடுவதற்கு ஒப்பிடுதல் – 49:12➚

நல்வழியில் செலவிடுவதை அல்லாஹ்வுக்கு கொடுக்கும் கடனாகச் சித்தரித்தல்

2:245➚, 5:12➚, 57:11➚, 57:18➚, 64:17➚, 73:20➚

கற்றபடி செயல்படாதவர்களை ஏட்டைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பிடுதல் – 62:5➚

வழிகெட்டவனை தலைகுப்புற விழுந்தவனுக்கு ஒப்பிடுதல் – 67:22➚

ஈஸா நபியை ஆதம் நபிக்கு ஒப்பிடுதல் – 3:59➚