Category: பிற கொள்கைகள்

z135

அனைவரும் ஒன்று பட முடியாதா?

உங்கள் கேள்வியில் உங்கள் நல்ல எண்ணம் தெரிகிறது. நாம் எதை ஆசைப்பட்டாலும் அது சத்தியமாகுமா என்பதை அடிப்படையாக வைத்துத் தான் ஆசைப்பட வேண்டும். அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்துத் தான் ஆசைப்பட வேண்டும். இது பற்றி நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள சில விபரங்களை முன் வைக்கிறோம். நாங்கள் ஒற்றுமைக்கு எதிராக உள்ளதாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒற்றுமை ஏற்படுத்தப் போகிறோம் என்று கூட்டப்படும் கூட்டங்களில் நாம் கலந்து கொள்வதில்லை என்பதால் இந்தப் பெயரை நாம் எடுத்துள்ளோம். நம்மை […]

பரேலவிகளுக்குப் பயன்தராத பல்வேறு கடவுளர்கள்

பரேலவிகள் இன்று பல கடவுள்களை வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்; அல்லாஹ் அல்லாதவர்களை, அவனது அடியார்களை அழைத்துத் தங்கள் தேவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாகுல் ஹமீது, ஏர்வாடி இப்ராஹீம் ஷா, தக்கலை பீரப்பா, திருவனந்தபுரம் பீமா, ஆத்தங்கரை செய்யதலி பாத்திமா என வகை வகையாக ஆண், பெண்களை கடவுளாக எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தக் கடவுளர்கள் (இவர்களது பாஷையில் அவ்லியாக்கள் அல்லது மகான்கள்) மறுமையில் வந்து கை கொடுப்பார்கள்; காப்பாற்றிக் கரை சேர்ப்பார்கள் என்று […]

தமிழகத்தில் பரேலவிஸ எதிர்ப்புப் போர் தொடங்கிய வரலாறு

மனாருல் ஹுதா இப்போது தான் பகிரங்கமாக பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்தொடுக்கத் துவங்கியுள்ளது. கடந்த காலத்தில் இவர்கள் அதைக் கண்டித்ததே கிடையாதுஎன்று ஒரேயடியாகக் குற்றம் சாட்டவில்லை. ஆனால், உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்து உரைப்பீராக! இணைகற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன்: 15:94) ➚ என்ற வசனத்திற்கேற்ப அதைப் போட்டு உடைக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். 1. பரேலவிகள் தூக்கிப் பிடிக்கும் தரீக்கத்தையும், சூபிஸத்தையும் இவர்களும் தூக்கிப்பிடிப்பது. 2. இது போன்ற பிரச்சனைகளை முன் வைக்கும் போது […]

மார்க்கம் மாறாது

புனித மிக்க ரமளான் மாதத்தில் அல்லாஹ் திருக்குர்ஆன் வேதத்தை அருளி அதன் மூலம் இந்த மார்க்கத்தை நிறைவடையச் செய்து விட்டான். நிறைவான மார்க்கத்தில் யாரும் இனி எதையும் எப்போதும் சேர்க்கவும் முடியாது; நீக்கவும் முடியாது. மாற்றவோ, திருத்தவோ, திணிக்கவோ முடியாது. இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.(அல்குர்ஆன்: 5:3) ➚ […]