Category: மாற்றுமதத்தோரின் கேள்விகள்

q116

வணக்கங்களால் கடவுளுக்கு என்ன லாபம்?

நான் இந்து சகோதரரிடம் பிரச்சாரம் செய்யும் போது கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும், நம்மைப் படைப்பதால் கடவுளுக்கு என்ன லாபம்? அவரை வணங்க படைத்தாரென்றால் அவருக்கு அந்த வணக்கம் தேவையா? நன்மை செய்தால் சொர்க்கம் என்றும், தீமை செய்தால் நரகம் என்றும் கொடுத்து எதற்கு இந்த வேண்டாத வேலை? நம்மைப் படைத்ததே வேஸ்ட் தானே என்று கேட்கிறார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆகவே நீங்கள் பதில் கூறவும். – பாரூக், மைலாப்பூர் அல்லாஹ் எந்த […]

உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்?

இந்தக் கேள்விக்கு விடை சொல்லாவிட்டால் அதன் மூலம் இறைவன் இல்லை என்று வாதிடுவதற்காக இக்கேள்வியை அவர் கேட்டிருந்தால் அது பொருத்தமற்றதாகும். முதலில் இறைவன் இருக்கிறானா? இல்லையா என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும். இறைவன் இருக்கிறான் என்று முடிவுக்கு வந்துவிட்டால் மாபெரும் சூப்பர் பவராக இருப்பவனிடம் அவனது நடவடிக்கை பற்றிக் கேட்க முடியாது. நமக்குச் சமமானவர்களின் நடவடிக்கைளையும், நமக்குக் கீழே உள்ளவர்களின் நடவடிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்த முடியும். நம்மைப் படைத்த சர்வ ஆற்றலும் உடையவனைக் […]

பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்?

சுனாமி போன்ற பேரழிவுகளில் முஸ்லிம்களும் மூழ்கி இறந்துவிட்டார்களே? முஸ்லிம்களுக்கு இத்தகைய கொடூரமான மரணத்தை இறைவன் தருவதேன்? பதில்: மக்களுக்கு அல்லாஹ் இரு வகைகளில் அழிவை ஏற்படுத்துகிறான். ஒன்று நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடு இல்லாமல் அழித்தல். மற்றொன்று கெட்டவர்களைத் தனியாகப் பிரித்தெடுத்து அவர்களை மட்டும் அழித்தல். இறைத்தூதர்களை அனுப்பி அந்தத் தூதரை மக்கள் ஏற்காவிட்டால் அப்போது அல்லாஹ் பேரழிவுகளை ஏற்படுத்துவான். அவ்வாறு அழிக்கும் போது இறைத்தூதரையும், அவருடன் இருந்த நல்லோரையும் தனியாகப் பிரித்து கெட்டவர்களை மட்டும் அழிப்பான். […]

குடல்வால் எனும் பயனற்ற உறுப்பு ஏன்?

கடவுள் என்று ஒருவன் இருந்தால் ஒரு பயனும் இல்லாத குடல்வால் எனும் உறுப்பை ஏன் படைக்க வேண்டும்? இதற்கு முஸ்லிம்கள் யாராவது பதில் சொல்ல முடியுமா என்று சில பகுத்தறிவாளர்கள் கேட்கிறார்களே? இதற்கு என்ன பதில்? இறைவன் செய்யும் எதுவும் தக்க காரணத்துடன் தான் இருக்கும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. தக்க காரணம் இருக்கும் என்பதால் அந்தக் காரணங்கள் அனைத்தும் மனிதனுக்குத் தெரியும் என்பது அர்த்தமல்ல. இப்போது குடல்வால் பற்றி கேட்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் […]

முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா?

முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா? பதில் : பிரார்த்தனைகள் இரு வகைகளில் உள்ளன. சாதாரண நேரத்தில் பல்வேறு தேவைகளுக்காகக் கேட்கும் பிரார்த்தனை முதல் வகை. உயிர் போய்விடும் என்ற நெருக்கடியான நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை மற்றொரு வகை. முதல் வகையான பிரார்த்தனையைப் பொருத்தவரை அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படாது. இணை கற்பிப்பவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தாலும் அவர்களின் உள்ளத்தில் இன்னும் பலர் கடவுள் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களின் துஆக்கள் ஏற்கப்படாது. அப்துல்காதிர் ஜீலானியையும் ஷாஹுல் ஹமீதையும் […]

பரிசுத்த ஆவி மூலம் பேச முடியுமா?

பரிசுத்த ஆவி மூலம் பேச முடியுமா? வி.பாஸ்கர் பதில் : இயேசு சீடர்களுக்குக் காட்சி தந்த போது அவர் கூறியதாக மாற்கு எழுதியதை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ போதகர்கள் பிசாசுகளை விரட்டுவதாகவும், நோய்களைப் போக்குவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் இது தான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துர்த்துவார்கள்;. நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; மாற்கு 16:17 இதை ஆதாரமாக்க் கொண்டு மனித இயல்புக்கு அப்பாற்பட்ட தொனியிலும், தோரணையிலும் […]

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா?

கேள்வி: நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா? அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “துல் கலஸாவி(ன் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அது “கஸ்அம்’ குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. […]

இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது முஸ்லிமல்லாதவர் எப்படி அறிய முடியும்?

பெற்றோர் முஸ்லிமாக இருப்பதால் குழந்தையும் முஸ்லிமாகவே வளருகிறது. ஆனால் முஸ்லிமல்லாத பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் அந்தப் பெற்றோரின் மார்க்கத்தைத் தானே பின்பற்றும்? அப்படியிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்பது எப்படித் தெரியும்? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி விளக்கம் தருவது? ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தைப் பின்பற்றுவதற்குப் பெற்றோர் முக்கியக் காரணமாக அமைந்தாலும் மனிதனுக்கு பகுத்தறிவை இறைவன் வழங்கியுள்ளான். எல்லா விஷயங்களிலும் அவன் பெற்றோர் சொன்னதை மட்டுமே மனிதன் […]

சகோதரி மகளைத் திருமணம் செய்தவர் இஸ்லாத்தில் சேர முடியுமா?

சகோதரியின் மகளைத் திருமணம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. சட்டம் தெரியாமல் யாரேனும் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் சட்டத்தை அறிந்த பிறகு அவ்விருவரும் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டு பிரிந்துவிட வேண்டும் என்பதே மார்க்கச் சட்டம். வேறு கொள்கையில் இருப்பவர் இவ்வாறு திருமணம் செய்திருந்தால் இந்தச் சட்டத்தை செயல்படுத்தி விட்டுத்தான் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. வேறு கொள்கையில் இருக்கும் ஒருவர் இஸ்லாத்தில் இணைய நினைத்தால் அவர் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. […]

தொழுகையை விட்டவன் காஃபிரா?

தொழுகையை விட்டவன் காஃபிரா? தொழுகையை விட்டவன் காஃபிர் என்று சில அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளனர். அஹ்மத், இப்னு ஹஸ்ம் மற்றும் தற்கால சவூதி அறிஞரான பின்பாஸ் ஆகியோர் தொழுகையை விட்டவன் காஃபிர் என்று தீர்ப்பு அளித்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். இவர்கள் இவ்வாறு தீர்ப்பளிப்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கொள்கின்றனர். 256 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِىُّ وَعُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ كِلاَهُمَا عَنْ جَرِيرٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا جَرِيرٌ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى […]

நோன்பும் துறவறமும் ஒன்றா?

துறவறம் இயற்கைக்கு மாறானது என்றால் நோன்பும் இயற்கைக்கு மாறானது தானே? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி பதில் சொல்வது? பதில் இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் துறவறம் என்பது மனிதர்கள் யாரும் கடைபிடிக்க முடியாத பொய்யான கொள்கையாகும். இதனால் மனித சமுதாயத்துக்கு பாதிப்புகளைத் தவிர நன்மைகள் ஏற்படுவதில்லை. ஒரு மனிதன் தனக்கு வாழ்க்கைத் துணையில்லாமல் ஒழுக்கமாக வாழ முடியாது. ஒருவன் திருமணம் செய்யாமல் வாழ்கிறான் என்றால் ஒன்று அவன் ஆண்மையற்றவனாக இருப்பான். அல்லது தவறான […]