திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாகத் திகழ்கிறதோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மற்றொரு மூலாதாரமாக அமைந்துள்ளன. திருக்குர்ஆன் எப்படி இறைவன் புறத்திலிருந்து வஹீயாக அருளப்பட்டதோ அது போலவே ஹதீஸ்களும் இறைவன் புறத்திலிருந்து வந்த வஹீ தான் என்பதைக் கடந்த மூன்று தொடர்களாக விளக்கி வருகிறோம். இதற்கு குர்ஆன் வசனங்களையே ஆதாரமாக எடுத்துக் காட்டி நிரூபித்து வருகிறோம். திருக்குர்ஆன் எவ்வாறு வஹீயாக இறைவன் புறத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த செய்தியாக […]
Category: ஹதீஸ் மறுப்பாளர்களின் தவறான வாதங்களும் தக்க பதில்களும்
u582
03) ஹதீஸ்களும் வஹீ தான்
திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாக அமைந்துள்ளதோ அது போலவே ஆதராரப்பூர்வமான ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மூலாதாரங்களாக அமைந்துள்ளன. இந்த உண்மையை திருக்குர்ஆனிலிருந்தே நாம் அறிந்து கொள்ள இயலும். கடந்த இரண்டு தலைப்புகளில் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருக்கிறது என்பதையும், அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதையும் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொண்டோம். அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ் வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை. இன்னொன்றையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான். நபிகள் நாயகம் […]
02) வஹீ வரும் வழிமுறைகள்
(அல்குர்ஆன்: 53:2-4) ➚வசனங்கள் நபிகள் நாயகம் பேசுவது யாவுமே வஹீ என்று திட்டவட்டமாக அறிவிப்பதை சென்ற தலைப்பில் நாம் விளக்கினோம். இறைவன் தனது அடியார்களுக்குக் கூற விரும்பும் செய்திகளை ஜிப்ரீல் எனும் வானவரை அனுப்பி அவர் வழியாக மட்டுமே கூறுவான் என்று சிலர் நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். ஜிப்ரீல் மூலம் செய்திகளைக் கூறி அனுப்புவது போலவே வேறு இரண்டு வழிகளிலும் அல்லாஹ் தனது வழிகாட்டலை மக்களுக்குத் தெரிவிப்பான் என்று திருக்குர்ஆனே கூறுகிறது. வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் […]
01) முன்னுரை
இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம். ஆயினும் சமீபகாலமாக சிலர் விசித்திரமான வினோதமான கேள்விகளை எழுப்பி இரண்டு மூல ஆதாரங்கள் கிடையாது. திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதுமானதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று கூற ஆரம்பித்துள்ளனர். ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன […]