ஆண்டுகள் உருண்டோடின. இரு மனைவிகள் இருந்தும் அவருக்கு பிள்ளைப் பேறு கிட்டாமலே இருந்தது . வயதோ முதிர்ந்து கொண்டு வந்தது. பிள்ளைக்கு ஆசைப்படாத மனிதரும் இந்த பூமியில் உண்டா என்ன?? அவரும் ஒரு பிள்ளைக்கு ஆசைப்பட்டார். “இறைவா! எனக்கு சாலிஹான நல்ல பிள்ளையைத் தா…” என்று பிரார்த்தனை செய்தார். இப்ராஹிமின் பிரார்த்தனைகளை இறைவன் தட்டியதில்லை. அவர் தந்தைக்கு பாவமன்னிப்பு கேட்டபோது தவிர . அனைவருக்கும் ஒரே நீதி தான் இறைவனிடம். தனக்கு மிகப் பிரியமான மனிதரான இப்ராஹிம் […]