ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்ற கீழ்க்காணும் கவிதைகளைக் காணுங்கள்! هذا محبا على الأيام مدحكما ولو غبيا جهولا عاصيا حكما عصيانه طول دهر لا يضركما فالسفن تنجي غريقا حينما عثرا கடுமையாக மாறு செய்பவனாக இருந்தால் கூட, அறிவு கெட்ட மடையனாக இருந்தால் கூட உங்கள் இருவரின் இந்த அடிமையை இழிவென்னும் தீங்குகளிலிருந்து நீங்கள் காப்பாற்றுங்கள்! நாட்கள் பூராவும் உங்களைப் புகழ்வதையே நேசிப்பவன் நான்! இவன் செய்த துரோகம், காலம் முழுதும் […]
Category: ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு
u573
10) ஐங்கடவுள்களை ஆராதிக்கும் ஐந்தடிக் கவிதை மாலை
ஹுஸைன் மவ்லிதில் ஒன்பதாவது ஹிகாயத்… இதில் இந்தக் கவிஞர் உரை நடையில் உளறியிருக்கும் ஓர் ஆதாரமற்ற அபத்தம் இதோ: தலைவர் ஹுசைன் ஹிஜிரி 61, முஹர்ரம் மாதம் ஆஷூரா (பத்தாம் நாள்) வெள்ளியன்று கொல்லப்படுகின்றார். அப்போது அவருக்கு வயது 65. இப்ராஹீம் (அலை) அவர்கள் நம்ரூத் என்பவனால் நெருப்பில் தூக்கி எறியப்பட்ட நாளில் கிரகணம் ஏற்பட்டது போன்று ஹுசைன் மரணம் அடைந்த நாளில் சூரியன் கிரகணம் ஏற்பட்டது. இது வழக்கத்திற்கு மாற்றமான நிகழ்வு என்று வான சாஸ்திர […]
09) அஹ்லு பைத்தின் பொருட்டால் அனைத்தும் நடந்து விடுமா?
“வேண்டுதல் முன் வைக்கப் படுபவரான அவரிடம் தான் இப்னு அஹ்மத் (என்ற இந்தக் கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது’ என்ற இந்தக் கவிஞனின் உளறல்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சென்ற இதழில் வெளுத்துக் காட்டினோம். இந்த இதழில், இந்தக் கவிஞன் எடுத்திருக்கின்ற வஸீலா என்ற அஸ்திரத்தைத் தோலுரித்துக் காட்டுவோம். தங்களுக்கு ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்றால் “இறைவா! இன்ன நல்லடியார் பொருட்டால் எனக்கு இன்ன தேவையை நிறைவேற்று’ என்று இவர்கள் பிரார்த்தனை செய்வதை வணக்கமாகவும், வழக்கமாகவும் […]
08) நோய் நிவாரணம் தருவது யார்?
உயர் நாயனின் அருள், தூதர், குடும்பத்தார், தோழர்கள், ஃபாத்திமாவின் பிள்ளைகள் மீது உண்டாகட்டுமாக! நான் அவர் களுக்கு ஸலாம் சொல்கின்றேன். ஹுசைனின் ஆன்மாவைப் போற்றுகின்றேன். வேண்டுதல் முன் வைக்கப்படுபவரான அவரிடம் தான் இப்னு அஹமத் (என்ற இந்த கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது. இவை ஹுஸைன் மவ்லிதில் இடம்பெறும் வரிகளாகும். பொதுவாக எந்த ஒரு மவ்லிதாக இருந்தாலும் அந்த மவ்லிதின் ஆரம்ப வரிகள் அல்லாஹ்வை புகழ்ந்து போற்றி அவனைப் பாராட்டியும் அதன் பின் முஹம்மது (ஸல்) அவர்கள் […]
07) ஆடுவதும் பாடுவதும் அற்பக் காசுக்கு!
என் கண் குளிர்ச்சியே! இரு பேணுதல் மிக்கவர்களின் சந்ததியே! அலீயின் குமாரர் ஹுஸைனே! உதவி தாருங்கள்! என் கண்களின் தீங்கை என்னை விட்டும் தடுத்து விடுங்கள் இந்தக் கவிதை வரிகள் ஹுஸைன் மவ்லிதில் பொதிந்து கிடக்கும் நரக நெருப்புப் பொறிகளாகும். காசுக்காக கூவிப் பிழைக்கும் கூட்டம், “ஆடுவதும் பாடுவதும் காசுக்கு! பல ஆளை குல்லா போடுவதும் காசுக்கு!’ என்பதற்கு ஏற்ப ஆடி, ஆடி மவ்லிதுப் பாடலைப் பாடி சம்பாதிக்கிறார்கள். தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப […]
06) அனைத்தையும் தீர்க்கும் ஐந்து கடவுள்கள்
புனித மிக்க ஐவர் மூலம் அனைத்து தீங்குகளையும், பழிவாங்கல் களையும் எங்களை விட்டும் நான் தடுத்துக் கொள்வேன். இந்தக் கவிதை வரிகளைப் படியுங்கள். மீண்டும் ஒரு தடவை படியுங்கள். இது உண்மையில் நாளை நரகில் நம்மைக் கரிக்கும் நெருப்புப் பொறிகள் என்று புரிந்து கொள்ளலாம். புனித மிக்க ஐவர் யார்? இதை இன்னொரு கவிதை வரிகள் உங்களுக்குத் தெளிவைத் தரும். எனக்கு ஐவர் இருக்கின்றனர். அவர்களை வைத்து தகர்த்தெறியும் எரி நெருப்பின் வெப்பத்தை விட்டும் என்னை நான் […]
05) செருப்பை முத்தமிடும் சுவனத்துப் பேரழகிகள்
இதுவரை ஹுஸைன் மவ்லிதில் வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை, நபி (ஸல்) அவர்களின் வீட்டுக் காவலாளி போல் சித்தரித்து மட்டம் தட்டியதைப் பார்த்தோம். இப்போது சுவனத்தில் உள்ள ஹூருல் ஈன்களை எப்படி மட்டம் தட்டுகின்றார்கள் என்று பார்ப்போம். பெரும் பெரும் அரசர்கள், மன்னர்கள், கிரீடங்கள் யாவும் ஹுஸைனின் கோட்டையிலுள்ள புழுதிக்குக் கூட ஈடாகாது. அது எப்படி ஈடாக முடியும்? சுவனக் கோட்டையில் உள்ள ஹூருல் ஈன்கள், ஹுஸைனின் செருப்பை முத்தமிட ஆவலாக உள்ளனர். ஹுஸைன் (ரலி) […]
04) ஜிப்ரயீலை இழிவுபடுத்தும் ஹுசைன் மவ்லிது
ஹுஸைன் மவ்லிது என்ற கிதாபு, பொய்யான ஹதீஸ்கள் மண்டிக் கிடக்கும் – ஷியாக்களின் போலிச் சரக்குகள் நிரம்பி வழியும் சவக்கிடங்கு என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு ஷியாக்களின் மறுபதிப்பாக இந்த மவ்லிதுக் கிதாபு அமைந்திருக்கின்றது. ஹதீஸ்கள் என்ற பெயரில் ஷியாக்களின் கதைகளை அளந்து விட்டிருக்கின்றாôர்கள். அவற்றை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் இவ்விதழில் ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள்ள மேலும் சில பொய்யான ஹதீஸ்களைப் பார்ப்போம். இமாம் ஸஃபவிய்யி அறிவிக்கின்றார்: (இமாம் என்று அடைமொழியிட்டிருக்கும் இவர் […]
03) ஆதம் நபியை அவமதிக்கும் மவ்லிது
ஹுஸைன் மவ்லிது ஜிப்ரயீல் (அலை) அவர்களை அவமதிப்பதையும், அலட்சியமாக ஆக்கியதையும் பார்த்தோம். இந்தத் தொடரில் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை இந்த மவ்லிது அவமரியாதை செய்வதைப் பார்ப்போம். தமிழக முஸ்லிம்கள் வேதமாக நினைக்கும் சுப்ஹான மவ்லிதின் துவக்கத்தில் ஆதம் நபி அவர்களின் படைப்பு சம்பவம் இடம்பெறுகின்றது. ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டு, கண்களைத் திறந்ததும் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் “லாயிலாஹ இல்லல்லாஹூ” என்பதுடன் “முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்றும் எழுதப்பட்டிருந்ததாம். “இறைவா உன் பெயருடன் முஹம்மது […]
02) ஆதம் நபி கண்ட ஐந்து பெயர்கள்
மவ்லிதுகள் அனைத்தும் ஷியாக்களின் வழியில் அமைந்தவையாகும். காரணம், ஷியாக்கள் தங்கள் இமாம்களை அல்லாஹ்வின் இடத்தில் கொண்டு போய் வைப்பார்கள். அத்துடன் அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும் துணிந்து பொய் சொல்பவர்கள். அந்த வேலையை ஹுஸைன் மவ்லிதை ஆக்கியவர் நன்கு, தங்கு தடையின்றி செய்திருக்கின்றார். அதற்கு எடுத்துக்காட்டாக ஹுஸைன் மவ்லிதில் ஆறாவது ஹிகாயத்தாக (சம்பவமாக) இடம்பெற்றுள்ள ஒரு செய்தியைப் பார்ப்போம். (அல்குர்ஆன்: 2:37) ➚ வசனம் தொடர்பாக சிறப்புமிகு தலைவர் ஜாஃபர் சாதிக் அறிவிக்கின்றார். […]
01) முன்னுரை
இந்தியாவில் வாழும் அதிகமான முஸ்லிம்களைப் போலவே தமிழக முஸ்லிம்களிடமும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது ஷியா கொள்கை தான் என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நீண்ட காலமாக அடையாளம் காட்டி வருகின்றது. சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் செயல்படுகின்ற இங்குள்ள முஸ்லிம்களில் அதிகமானோர் ஷியாக் கொள்கையுடையவர்கள் என்று அடித்துச் சொல்லிவிடலாம். இவர்களே ஷியாக்களாக இருந்து கொண்டு மற்ற ஷியாக்களை இவர்கள் விமர்சிப்பது வேடிக்கையும் வினோதமும் ஆகும். தமிழக முஸ்லிம்கள் ஷியாக்களா? என்று இதைப் படிப்பவர்கள் ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் வினவலாம். சுன்னத் […]