Category: நபி (ஸல்) வரலாறு (பிறப்பு முதல் இறப்பு வரை)

u553

09) அல்‌அகபா உடன்படிக்கை

நபி (ஸல்‌) அவர்கள்‌ மக்காவில்‌ இஸ்லாத்தை எடுத்துச்‌ சொன்ன போது அவர்களுக்கு மிகவும்‌ உதவியாக இருந்தவர்‌ அவர்களது பெரிய தந்தையான அபூதாலிப்‌. இவர்‌ தனது இறுதிக்‌ காலம்‌ வரை இஸ்லாத்தை ஏற்றுக்‌ கொள்ளவில்லை. அபூதாலிபின்‌ மரணத்திற்கு பிறகு நபி (ஸல்‌) அவர்கள்‌ தாயிப்‌ நகரம்‌ சென்று பிரச்சாரப்‌ பணிக்கு ஆதரவு கோரினார்கள்‌. ஆனால்‌ அங்கு ஆதரவு கிடைக்கவில்லை. இருப்பினும்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மனம்‌ தளர்ந்து விடவில்லை. வெளியூர்களிலிருந்து மக்காவிற்கு வரும்‌ பயணக்‌ குழுக்களைச்‌ சந்தித்துப்‌ பிரச்சாரம்‌ […]

12) சகோதரத்துவம்‌ ஏற்படுத்துதல்‌

நபி (ஸல்‌) அவர்கள்‌ மதீனாவிற்கு வந்தவுடன்‌ சொத்து, சுகம்‌ அனைத்தையும்‌ இழந்து ஹிஜ்ரத்‌ செய்த முஹாஜிர்களுக்கும்‌ , அவர்களுக்கு அடைக்கலம்‌ கொடுத்த அன்சாரிகளுக்கும்‌ மத்தியில்‌ சகோதரத்துவம்‌ ஏற்படுத்தினார்கள்‌. அன்சாரிகளில்‌ ஒருவர்‌ மரணித்து விட்டால்‌ முஹாஜிர்களில்‌ ஒருவரே அவருடைய சொத்திற்கு வாரிசாகும்‌ அளவிற்கு இந்தச்‌ சகோதரத்துவ ஒப்பந்தம்‌ வலிமையாக இருந்தது. பிறகு அல்லாஹ்‌ இந்தச்‌ சட்டத்தை மாற்றினான்‌. இரத்த பந்தமுடையோர்‌ ஒருவர்‌ மற்றவருக்கு அல்லாஹ்வின்‌ வேதத்தில்‌ உள்ளபடி நெருக்கமானவர்கள்‌. அல்லாஹ்‌ ஒவ்வொரு பொருளையும்‌ அறிந்தவன்‌. (அல்குர்‌ஆன்‌ 8 : […]

07) பகிரங்க பிரச்சாரம்

அதை தொடர்ந்து தம் சமுதாய மக்கள் அனைவர்களையும் அழைத்து பகிரங்க பிரச்சாரத்தில் ஈடுபடலானார்கள். இது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்” எனும்                       (அல்குர்ஆன்: 26:214) ➚ இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் “ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, “பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!” என்று […]

05) பிறப்பு மற்றும் வளர்ப்பு

பிறப்பு நபி(ஸல்) அவர்கள் ரபீவுல் அவ்வல் மாதம் திங்கட்கிழமை கி.பி 571 ல் சவூதி அரேபியா நாட்டில், மக்கா என்ற ஊரில் பிறந்தார்கள். (நூல் பிதாயா வன்நிகாயா,(முஸ்லிம்: 2153) நபி(ஸல்) அவர்கள் பிறந்த தேதி எதுவென்று குறிப்பிட்டு சொல்வதில் பல தகவல்கள் உள்ளன. அவற்றில் 12 ஆம் தேதியில் பிறந்தார்கள் என்பதே வரலாற்று ஆசிரியர்களிடம் பிரபல்யமான கருத்தாகும். பெயர் : நபி(ஸல்) அவர்களின் இயற்பெயர், முஹம்மத். இத்துடன் மேலும் நான்கு பெயர்களும் அவர்களுக்கு உண்டு. அவை : […]

01) முன்னுரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால். அகில உலகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள் அண்ணல் நபி அவர்கள், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை திருமறைக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் தொகுக்க வேண்டும் என்ற இலட்சியத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் உலகில் நபி புலவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு தொடர்பாக பல நூற்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பொய்யான தகவ ல்களும் கலந்திருக்கின்றன. ஆதாரமில்லாத பல செய்திகள் ஊடுருவி உள்ளன. எனவே இது போன்ற […]

14) உஹுத்‌ யுத்தம்‌

பத்ரு யுத்தத்தில்‌ மிகப்‌ பெரும்‌ பாதிப்பிற்கு உள்‌ளாகியிருந்த குரைஷிகள் முஸ்லிம்களை எப்படியாவது பழிக்குப் பழிவாங்க வேண்டும்‌ என்று வெறிகொண்டிருந்தனர்‌. முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய போரை  நடத்த வேண்டும்‌ என்று ஆலோசனை செய்து அதற்கான முயற்சியில்‌ இறங்கினர்‌. உஹதுப்‌ போர்‌ தொடர்பாக நபி கண்ட கனவு உஹதுப்‌ போருக்கு முன்பாக நபியவர்கள்‌ ஒரு கனவினைக்‌ கண்டார்கள்‌. அதில்‌ வாள்‌ ஒன்றை அசைக்க அதன்‌ முனை உடைவது போன்றும்‌, மற்றொரு முறை அசைக்கும்‌ போது அது முன்பிருந்தபடியே ஒட்டிக்‌ கொள்வது […]

13) பத்ருப்‌ போர்‌

பத்ர்‌ என்பது மக்காவுக்கும்‌ மதினாவிற்க்கும்‌ இடையே உள்ள ஒரு இடமாகும்‌ முஸ்லிம்களுக்கும்‌ காபிர்களுக்கும்‌ இடையே போர்‌ நடந்தது எனவே இப்போருக்கு பத்ரு போர்‌ என்று பெயர்‌ வந்தது இப்போர்‌ ஹிஜிரி இரண்டாம்‌ ஆம்‌ ஆண்டில்‌ ரமலான்‌ மாதம்‌ 17 ம்‌ நாள்‌ நடந்தது. போருக்குரிய காரணம்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ மக்காவாசிகளின்‌ வியாபாரக்‌ கூட்டத்தை பிடிப்பதற்காக பல்வேறு வகையான படைப்பிரிவுகளை அனுப்பினார்கள்‌ என்பதை நாம்‌ முன்னர்‌ கண்டோம்‌. இந்நிலையில்‌ மக்காவாசிகளின்‌ வியாபாரக்‌ கூட்டம்‌ அபூ சுஃப்யான்‌ என்பவரின்‌ […]

11) மதீனா பிரவேசம்‌

உறவினர்களுக்குத்‌ தகவல்‌ கொடுத்தல்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ குபாவில்‌ பதினான்கு நாட்கள்‌ தங்கிய பிறகு மதீனாவிலிருந்த தனது உறவினர்களான பனூ நஜ்ஜார்‌ கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள்‌. அவர்கள்‌ வாட்களைத்‌ தொங்கவிட்டபடி வந்து நபி (ஸல்‌) அவர்களிடமும்‌ அபூபக்ர்‌ ரலி) அவர்களிடமும்‌ ஸலாம்‌ கூறினார்கள்‌. பிறகு, “நீங்கள்‌ இருவரும்‌ அச்சம்‌ தீர்ந்தவர்‌ வும்‌ அதிகாரம்‌ படைத்தவர்‌ வும்‌ பயணம்‌ செய்யலாம்‌” என்று பனூ நஜ்ஜார்‌ கூட்டத்தினர்‌ கூறினார்கள்‌. அதன்‌ பிறகு அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ தமது வாகனத்தில்‌ […]

10) ஹிஜ்ரத் பயணம்

மக்காவில்‌ இணைவைப்பாளர்களால்‌ எண்ணற்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நபிகள்‌ நாயகம்‌ (ஸல்‌) அவர்கள்‌ அங்கிருந்து, தனது சொந்த ஊரை விட்டு, மதீனாவிற்கு நாடூ துறந்து சென்ற நிகழ்ச்சியான ஹிஜ்ரத்‌ தான்‌ இஸ்லாமிய வரலாற்றில்‌ ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று கூறலாம்‌. வரலாற்று முக்கியத்துவம்‌ வாய்ந்த அந்த ஹிஜ்ரத்தைப்‌ பற்றி இங்கு சுருக்கமாகக்‌ காண்போம்‌. அபீசீனிய ஹிஜ்ரத்‌ மக்கத்து முஷ்ரிக்குகளின்‌ தொல்லைகளால்‌ நபித்‌ தோழர்கள்‌ மக்காவைத்‌ துறந்து வேறு நாடுகளுக்குச்‌ செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நபி (ஸல்‌) […]

08) மிஃராஜ்‌ எனும்‌ விண்ணுலகம்‌ பயணம்‌

நபியவர்களின்‌ அழைப்பு பணி ஒருபுறம்‌, எதிரிகளால்‌ முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள்‌, தொல்லைகள்‌ மறுபுறம்‌. இந்நிலையில்தான்‌ நபியவர்கள்‌ மிஃரான்‌ எனும்‌ விண்ணுலகப்‌ பயணம்‌ மேற்கொண்டார்கள்‌. மஸ்ஜிதுல்‌ ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப்‌ பாக்கியம்‌ மிக்கதாக நாம்‌ ஆக்கிய மஸ்ஜிதுல்‌ அக்ஸா வரை தனது சான்றுகளைக்‌ காட்டுவதற்காக ஓர்‌ இரவில்‌ தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச்‌ சென்றவன்‌ தூயவன்‌. அவன்‌ செவியுறுபவன்‌; பார்ப்பவன்‌. (அல்குர்‌ஆன்‌ 17:1) ஜிப்ரீல்‌ வருகை – வீட்டு முகடு திறக்கப்படுதல்‌ அல்லாஹ்வின்‌ தூதர்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: “நான்‌ […]

06) நபித்துவத்தின் துவக்கம்

நபி(ஸல்) அவர்கள் இறைச்செய்தி வருவதற்கு முன்பே ஏகத்துவ அடிப்படையிலேயே தம் வாழ்வை அமைத்திருந்தார்கள். சிலை வணக்கம் செய்பவர்களாக இருந்ததில்லை. அல்லாஹ்வின் பெயர் கூறப்படாத பிராணிகளை சாப்பிடமாட்டாட்டார்கள் (புகாரி: 3826) நபி (ஸல்) அவர்கள் நாற்பது வயதை அடைந்த போது இறைவனின் புறத்திலிருந்து செய்திகள் வருவதற்குரிய அறிகுறிகள் தென்பட்டன. சில அற்புத நிகழ்ச்சிகளும் வெளிப்பட்டது. ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவிக்கிறார்கள் : நான் மக்காவில் ஓரு கல்லை பார்க்கிறேன். அது என் மீது […]

04) நபி (ஸல்) அவர்களுக்குள்ள சிறப்பு

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே. (முஸ்லிம்: 4575) நபி (ஸல்) அவர்களின் பரம்பரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் “கினானா’வைத் தேர்ந்தெடுத்தான்; “கினானா’வின் வழித்தோன்றல்களில் குறைஷியைரத் தேர்ந்தெடுத்தான்; குறைஷியலிருந்து […]

03) அரபியர்களின் அறியாமை பழக்கங்கள் மற்றும் வழிபாடுகள்

அரபியர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றி வந்தார்கள். பின்பு காலம் செல்ல செல்ல இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தை மறக்க ஆரம்பித்தார்கள். நபியவர்கள் பிறப்பதற்கு முன் அரபியர்களிடத்தில் பல்வேறு மூடப்பழக்க வழக்கங்கள் நிறைந்து காணப்பட்டன. சிலைகளை வழிபட்டனர் அல்லாஹ் உற்பத்தி செய்த பயிர்கள் மற்றும் கால்நைடகளில் அவனுக்கு ஒரு பங்கை ஏற்படுத்துகின்றனர். “இது அல்லாஹ்வுக்கு உரியது; இது எங்கள் தெய்வங்களுக்கு உரியது” என்று அவர்களாகக் கற்பனை செய்து கூறுகின்றனர். அவர்களின் தெய்வங்களுக்கு உரியது, அல்லாஹ்வைச் சேராதாம். […]

02) முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு

முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு தவ்ராத், இன்ஜீல் உள்ளிட்ட முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை பற்றி முன்னரே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முஹம்மது என்றொரு தூதர் வருவார் என்றும் அவர் மகத்தான சில நற்குணம் கொண்டவராக இருப்பார் என்றும் அதிலே குறிப்பிடப்பட்டுள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையே […]