
திருமணம் திருமணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். அந்நிலையை அடையும் ஆண்மகன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக (வலீமா) விருந்தளிப்பது சுன்னத்தாகும். அது பற்றிய நபி (ஸல்) அவர்களின் கூற்றை நபித் தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்கள் கூறுகிறார்கள். எனது ஆடையில் நறுமணப் பொருளின் கறையைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நீ மணமுடித்து விட்டாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். யாரை? என்றார்கள். ஓர் அன்சாரிப் பெண்ணை என்றேன். […]