
தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ இல்லாமல் தொழுகை நிறைவேறாது. (அல்குர்ஆன்: 5:6) தண்ணீர் ஆறு, குளம், கண்மாய், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றிலும் மழை நீர், நிலத்தடி நீர் போன்றவற்றாலும் உளூச் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் கடல் தண்ணீரில் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர். (இப்னு மாஜா: 388) பயன்படுத்திய தண்ணீரில் உளூ செய்து கொள்ளலாம்.(புகாரி: 160) பெண்கள் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் […]