
11) காத்துக்கொள்ளும் வழிமுறைகள் ஷைத்தான்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள அனைவரும் விரும்புகிறோம். இதற்கான வழிமுறைகள் குர்ஆனும் ஹதீஸ்களும் நமக்கு தெளிவாக கற்றுத்தருகிறது. இவற்றை அறியாத காரணத்தால் இஸ்லாமிய சமூகத்தில் வாழும் பலர் தகடு தாயத்து போன்ற இணைவைப்புக் காரியங்களிலும் சூடமேற்றுதல் திருஷ்டி கழித்தல் முட்டையை உடைத்தல் குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்து குடித்தல் போன்ற மூடநம்பிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மாற்று மதத்தினரைப் பார்த்து காப்பியடிக்கப்பட்ட இந்த அனாச்சரங்கள் ஷைத்தானின் செயல்பாடுகளாகும். இவற்றை செய்தால் ஷைத்தானின் வலையில் விழுமுடியுமே தவிர […]