பல்லியைச் சாப்பிடலாமா? நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு “தீங்கிழைக்கக்கூடிய பிராணி’ (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள் அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)(முஸ்லிம்: 4507) மனிதர்களுக்கு கேடு விளைவிப்பதால் பல்லியைக் கொல்வதற்கு மார்க்கம் அதிகம் ஆர்வமூட்டுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படுகின்றன. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும், மூன்றாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும் எழுதப்படும். அறிவிப்பவர் […]
Category: உணவு
q123
நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா?
நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா? நின்று கொண்டு நீர் அருந்தலாம் என்றும், கூடாது என்றும் இரண்டு விதமான ஹதீஸ்கள் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. இரண்டுமே ஆதாரப்பூர்வமான செய்திகளாக இருப்பதால் இரண்டையும் இணைத்தே முடிவுக்கு வர வேண்டும். صحيح مسلم5393 – حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- زَجَرَ عَنِ الشُّرْبِ قَائِمً அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் […]
பிற மதத்தவரின் ஹோட்டலில் சாப்பிடலாமா?
பிற மதத்தவரின் ஹோட்டலில் சாப்பிடலாமா? அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத எந்த மாமிசத்தையும் உண்ணக் கூடாது. அப்படியானால் மாற்று மதத்தவர்களின் ஹோட்டலில் சாப்பிடுவது கூடுமா? அல்லாஹ்வின் பெயர் கூறப் படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். (அல்குர்ஆன்: 6:121) ➚ “அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத உணவுகளை உண்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே மாற்று மத ஹோட்டலில் மட்டுமல்ல; முஸ்லிம் ஹோட்டலாக இருந்தாலும் அங்கு அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத இறைச்சி பயன்படுத்தப் படுமானால் […]
நின்று கொண்டு குடிக்கலாமா?
நின்று கொண்டு தண்ணீர் குடிக்கலாமா? பதில் அமர இயலாவிடில் குடிக்கலாம் அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்த போது அவர்களிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள். பிறகு, “மக்களில் சிலர் நின்று கொண்டு அருந்துவதை வெறுக்கிறார்கள். ஆனால் (இப்போது) நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: நஸ்ஸால் நூல்: புகாரீ (5615) நபி […]
மவ்வலிது ஓதாத உணவு ஏன் ஹராம்?
பூஜை செய்தவைகளும் மவ்லிது பாத்திஹா சாப்பாடும் ஓன்றா? ? ஆகஸ்ட் 2004 இதழில், தீபாவளியன்று பூஜை செய்யாத பொருட்களை மாற்று மதத்தினர் தந்தால் சாப்பிடலாம் என்று கூறியிருக்கின்றீர்கள். அப்படியானால் மவ்லிது, ஃபாத்திஹா, கந்தூரி போன்றவற்றில் வழங்கப்படும் உணவுகளையும் சாப்பிடலாமா? இரண்டு தரப்பினரின் நோக்கமும் ஒன்று தானே? என்று என் நண்பர் வினவுகின்றார். விளக்கவும். பதில் மாற்று மதத்தினர் பண்டிகையின் போது படைப்பதற்கும், நம்மவர்கள் மவ்லிதுக்குப் படைப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மாற்று மதத்தினர் உணவைத் தயாரிக்கும் போதே […]
பாம்பு, முதலை, ஆமை சாப்பிடலாமா?
கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி? சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் பாம்பு, முதலை, ஆமை போன்றவை எப்படி? விளக்கவும். பதில் விலங்கினங்களைப் பொறுத்த வரை பன்றி பற்றி குர்ஆனில் (2:173, 5:3, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது. வீட்டுக் கழுதை ஹராம் என்று(புகாரி: 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, […]
பன்றி இனத்தைச் சேர்ந்த டால்பின் ஹலாலா?
டால்பின் பன்றி இனத்தைச் சேர்ந்தது. எனவே அது ஹலாலா? பதில் ஹலால் தான் டால்பின் என்பது பன்றி வகையைச் சேர்ந்தது அல்ல. அதுவும் மீன் வகையைச் சேர்ந்தது தான். குர்ஆனில் தடை செய்யப்பட்டுள்ளது பன்றி என்ற விலங்கின் இறைச்சி தானே தவிர பார்ப்பதற்கு பன்றியின் தோற்றத்தில் உள்ளது எல்லாம் ஹராம் என்று கூறப்படவில்லை. கடல் வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டது இருந்திருந்தால் அதை அல்லாஹ்வும் அவனது தூதரும் தான் கூறவேண்டும். வேறு எவருக்கும் ஹராமாக்கும் […]
பாத்திஹா உணவு கூடுமா?
வரதட்சணை, பித்அத்தான திருமணங்களுக்குச் செல்லக் கூடாது என்றும், ஆனால் அவர்கள் நம் வீட்டுக்குக் கொடுத்து அனுப்பும் உணவைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை என்றும் கூறியுள்ளீர்கள். அவர்கள் நேர்ச்சை உணவை அனுப்பினால் அதையும் பெற்றுக் கொள்ளலாமா? பதில் கூடாது வரதட்சணைத் திருமணங்களைப் பொறுத்த வரை அங்கு வழங்கப்படும் உணவு ஹராம் என்ற அடிப்படையில் நாம் அதைப் புறக்கணிப்பதில்லை. உணவு ஹலால் என்றாலும் தீமை நடப்பதால் அங்கு செல்லாமல் புறக்கணிக்கின்றோம். அந்த உணவைக் கொடுத்து விடும் போது அன்பளிப்பு என்ற […]
தீபவாளி நேரத்தில் படைக்காதவற்றை தந்தால் சாப்பிடலாமா?
மாற்று மதத்தவர்கள் பொங்கல், தீபவாளி போன்ற பண்டிகைகளில் அவர்களின் சிலைகளுக்குப் படைக்காதவற்றைத் தந்தால் அவற்றைச் சாப்பிடலாமா? பதில் சாப்பிடலாம் மாற்று மதத்தவர்கள் தரும் பொருட்களை முழுமையாக இஸ்லாம் தடை செய்யவில்லை. நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்கள் தரும் பொருட்களைச் சாப்பிட்டுள்ளார்கள். அவர்களிடம் கேட்டும் வாங்கி உள்ளார்கள். தண்ணீர், உணவு, ஆடை என்று பல பொருட்களை மாற்று மதத்தவர்களிடமிருந்து பெற்றுள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்திகள் சான்றளிக்கின்றன. யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் […]
பூஜை உணவை நம்பாமல் சாப்பிடலாமா?
எங்கள் (அரசு) அலுவலகத்தில் மாதந்தோறும் ஆளுக்குப் பத்து ரூபாய் வசூலித்து, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சாமி போட்டோ வைத்து, பூஜை என்ற பெயரில் பொரி கடலை தருவார்கள். இதைச் சாப்பிடலாமா? வேண்டாம் என்று கூறினால், “நீங்கள் தான் இந்தச் சாமிகளை நம்பவில்லையே! அப்படியானால் வெறும் பொரி கடலை என்று நினைத்துச் சாப்பிட வேண்டியது தானே!’ என்று கேட்கிறார்கள். நம்மைப் பொறுத்த வரை வெறும் சடங்கு தானே! இதைச் சாப்பிடுவதில் என்ன தவறு? மேலும் இதற்காகப் பத்து ரூபாய் […]
நமக்கு உணவளிக்கும் பிற மதத்தவருக்கு துஆ செய்வது எப்படி?
பிற மதத்தவர்கள் நமக்கு உணவளித்தால் அவர்களுக்காக நாம் எப்படி துஆச் செய்ய வேண்டும்? பதில் உணவளித்தவர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஸக்தஹும் வஃக்ஃபிர் லஹும் வர்ஹம்ஹும். (பொருள்: இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்குக் கருணை காட்டுவாயாக. (முஸ்லிம்: 3805) இது அனைவருக்கும் பொதுவான துஆ என்றாலும் முஸ்லிமல்லாத மற்றவர்களுக்குப் பாவ மன்னிப்புத் […]
அஜினா மோட்டாவை உணவில் சேர்க்கலாமா?
அஜினா மோட்டா என்ற ஒரு பொருள் குழம்பின் சுவை சேர்ப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. அதைக் குழம்பில் சேர்த்துச் சாப்பிடலாமா? அதன் மூலப் பொருள் என்ன? பதில் அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும். இதை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலத்திற்குக் கேடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவில் 3 கிராமுக்கு அதிகமாக அஜினாமோட்டா சேர்த்தால் தலைவலி, […]
மாற்று மதத்தினருடன் சேர்ந்து சாப்பிடுடலாமா?
நான் சவூதி அரேபியாவில் பணி புரிந்து வருகிறேன். இங்கு பல முஸ்லிம் நண்பர்களுடனும், முஸ்லி மல்லாத நண்பர்களுடனும் ஒரே அறையில் தங்கி, ஒன்றாக இணைந்து சாப்பிடும் சூழ்நிலை இருக்கிறது. நான் இந்து நண்பருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதைக் கண்ட சிலர் இதை ஹராம் என்று சொல்கிறார்கள். வேதக்காரர்களுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்பதற்குக் குர்ஆனில் ஆதாரம் இருப்பதாகவும், மற்றவர் களுடன் சேர்ந்து சாப்பிடுவது ஹராம் என்றும் கூறுகிறார்கள். இது சரியா? பதில் சாப்பிடலாம் வேதக்காரர்களுடனோ, அல்லது மற்ற மதத்தினருடனோ […]
பித்அத் திருமண உணவை சாப்பிடலாமா?
வரதட்சணை மற்றும் பித்அத்தான திருமணங்கள் நடைபெறும் வீடுகளிலிருந்து நமது வீட்டிற்கு உணவு வந்தால் சாப்பிடலாம் என்கிறீர்கள்! இதே அடிப்படையில் பெண் பிள்ளை சடங்கு, கத்னா, திருமண நாள், வளை காப்பு என பித்அத் செய்யும் வீடுகளிலிருந்து நமது வீட்டுக்கு வரும் உணவை (பூஜிக்கப்படாத நிலையில்) சாப்பிடலாமா? விருந்தில் கலந்து கொள்ளக் கூடாது எனும் போது அந்த உணவு வீட்டுக்கு வந்தாலும் சாப்பிடக் கூடாது என்று தானே கூற வேண்டும்? பதில் உணவு ஹராமில்லை. சபை தான் ஹராம். […]
ஹராமான இறைச்சியை பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிடலாமா?
ஹராமான இறைச்சியை பிஸ்மில்லாஹ் கூறி சாப்பிடலாமா? கூடாது. அமெரிக்கா, ஐரோப்பாவில் ஹலால் இறைச்சி கிடைப்பது கடினம். எனவே இறைச்சியை வாங்கி பிஸ்மில்லாஹ் கூறினால் அது ஹலால் ஆகிவிடுமா? பதில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தவற்றையே ஒரு முஸ்லிம் உண்ண வேண்டும். இதற்கு மாற்றமான முறையில் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று குர்ஆனும் நபிமொழியும் கூறுகின்றன. وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرْ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى […]
பூஜிக்கபட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?
பூஜிக்கபட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா? உண்ணலாம் பூஜிக்கப்பட்ட பொருள் நமக்கு ஹராம், நாம் வாழும் நாட்டில் கதிர் விதைக்கும் போதும், அறுக்கும் போதும் பூஜை செய்து தான் நமக்கு அரிசியாகக் கிடைக்கிறது. இதைத் தான் நாம் உண்கிறோம், இது சரியா? இதற்கு வேறு வழி இருக்கிறதா? பதில் முஸ்லிமல்லாதவர்கள் குறிப்பாக இந்து மதத்தவர்கள் விவசாயம் செய்தாலும் கட்டடம் கட்டினாலும் ஒரு கடை திறந்தாலும் பூஜை செய்யாமல் துவக்க மாட்டார்கள். அல்லாஹ் அல்லாதவர்களுக்கு படையல் செய்யப்பட்ட்தை நாம் […]
உணவுகளில் ஹலால் ஹராமை எப்படி பிரித்தறிவது?
? கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது எப்படி? சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? டால்பின் பன்றி இனத்தைச் சேர்ந்தது. எனவே அது ஹலாலா? கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் பாம்பு, முதலை, ஆமை போன்றவை எப்படி? விளக்கவும். பதில் விலங்கினங்களைப் பொறுத்த வரை பன்றி பற்றி குர்ஆனில் (2:173, 5:3, 6:145, 16:115)கூறப்பட்டுள்ளது. வீட்டுக் கழுதை ஹராம் என்று(புகாரி: 4217, […]
யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா?
யானை, காண்டா மிருகம் ஆகியவற்றை உண்ணலாமா? கூடாது யானை உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணியா என்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது. யானையின் இறைச்சியை உண்ணக்கூடாது என்று அதிகமானோர் கூறுகின்றனர். யானையின் இறைச்சியை உண்ணக்கூடாது என்று கூறுவோர் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாக கூறுகிறார்கள். கோரைப் பற்கள் உள்ள பிராணிகளை உண்ணக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். صحيح البخاري (7/ 96) 5530 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا […]
சூடான உணவு சாப்பிடலாமா?
சூடான உணவு சாப்பிடலாமா? சாப்பிடலாம் உணவுப் பொருட்களை சூடான நிலையில் உண்ணக்கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்திகளும் பலவீனமாகவே இருக்கின்றன. 1958 حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا كَانَتْ إِذَا أُتِيَتْ بِثَرِيدٍ أَمَرَتْ بِهِ فَغُطِّيَ حَتَّى يَذْهَبَ […]
ஒருவர் வாய் வைத்ததை மற்றவர் பருகலாமா?
ஒருவர் வாய் வைத்ததை மற்றவர் பருகலாமா? பருகலாம் ஒருவர் குடித்து விட்டு அல்லது சாப்பிட்டு விட்டு மீதம் வைத்ததை மற்றவர்கள் சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. நபியவர்கள் தாம் சாப்பிட்டு விட்டு மீதமானதைப் பிற நபித்தோழர்களுக்கு வழங்கியுள்ளார்கள். حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ […]
இரவில் பறவையை வேட்டையாடலாமா?
இரவில் பறவையை வேட்டையாடலாமா? வேட்டையாடலாம் வேட்டையாடுவது மார்க்கத்தில் பொதுவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான விதி முறைகளும் மார்க்கத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரவில் வேட்டையாடுவது கூடாது என்று எந்தத் தடையையும் குர்ஆனிலோ நபி மொழிகளிலோ நாம் காண முடியவில்லை. எனவே இரவிலோ பகலிலோ வேட்டையாடலாம்.
பிறந்த நாள் அன்பளிப்பை ஏற்கலாமா?
பிறந்த நாள் அன்பளிப்பை ஏற்கலாமா? நிழ்ச்சி தான் ஹராம். உணவு அல்ல. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் இருந்தாலே இவற்றைப் புறக்கணித்த நிலை ஏற்பட்டுவிடுகின்றது. அதே நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் நமது வீடுகளுக்கு உணவு பதார்த்தங்களைக் கொடுத்தனுப்பினால் இவற்றை உண்ணுவது தவறல்ல. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் […]
வினிகர் பயன்படுத்தலாமா?
வினிகர் பயன்படுத்தலாமா? பயன்படுத்தலாம் வினிகர் என்று கூறப்படும் காடியைப் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை உணவாக உட்கொண்டுள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது. 3824 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَ أَهْلَهُ الْأُدُمَ فَقَالُوا مَا عِنْدَنَا إِلَّا خَلٌّ […]
துபையில் விற்கப்படும் சிக்கன் ஹலாலா?
துபையில் விற்கப்படும் சிக்கன் ஹலாலா? ஒரு முஸ்லிம் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினத்தை பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அறுத்தால் அந்த உயிரினம் ஹலலானதாகி விடுகின்றது. அதாவது அதை உண்பது ஆகுமானது. இந்த ஒழுங்கு முறைகள் பேணப்படாமல் அறுக்கப்பட்ட உயிரினங்களை உண்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. வேறு நாடுகளில் அறுக்கப்பட்ட கோழிகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு துபாய் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தக் கோழிகள் ஹலாலானவை என்று இந்த பாக்கெட்டுகளின் மீதே போடப்பட்டிருக்கும். துபாய் அரசின் அங்கீகாரம் […]
கந்தூரிக்காக அறுக்கப்பட்டதை காசு கொடுத்து வாங்கலாமா?
கந்தூரிக்காக அறுக்கப்பட்டதை காசு கொடுத்து வாங்கலாமா? இறைவன் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 16:115) ➚ அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் “உஹில்ல”என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு […]