Category: நவீன பிரச்சனைகள்

q121

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா?

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் இந்த வழிகாட்டலைக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக அன்றைய காலத்தில் அவர்களுக்கு இருந்த உலக அறிவை அடிப்படையாக வைத்தே இவ்வாறு கூறியுள்ளார்கள். ஒட்டகத்தின் பாலிலும் சிறுநீரிலும் மருத்துவ குணம் இருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதைவிடச் சிறந்த மருத்துவ முறை கண்டறியப்பட்டால் அதைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இதனால் நபிவழியை நாம் மீறியவர்களாக மாட்டோம். மருத்துவத்துக்காக ஒட்டகத்தின் பாலையும் […]

நபிகள் நாயகம் பற்றி சினிமா எடுக்கலாமா?

நபிகள் நாயகம் பற்றி சினிமா எடுக்கலாமா? சரி வராது. திரைப்படங்கள் எடுத்து தங்கள் மதத்தைக் கொண்டு செல்ல முயன்றவர்களால் அதில் முழு வெற்றி பெற முடியவில்லை. இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை செய்து தங்கள் ஒரிஜினாலிட்டியை தாங்களே அழித்து விட்டனர். ஆனால் 1400 ஆண்டுகளாக உருவப்படம் இல்லாமல் சிலை இல்லாமல் நாடகம் சினிமா இல்லாமல் நபிகள் நாயகம் குறித்த செய்திகள் சரியான முறையில் மக்களைச் சென்றடைந்து கொண்டு தான் உள்ளது. தனது சமரசம் செய்து கொள்ளாத கொள்கை மூலம் […]

இறந்த பிறகு கண்தானம் உடல்தானம் செய்யலாமா?

இறந்த பிறகு கண்தானம் உடல்தானம் செய்யலாமா? கண் தானம் செய்யலாம். ஒருவர் தன்னுடைய கண்களை தானம் செய்கின்றார் என்றால் இதன் மூலம் கண் தெரியாத இரண்டு பேருக்குப் பார்வை அளிக்கின்றார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்: 5:32) ➚ என்ற வசனத்தின் அடிப்படையில் கண் தானம் என்பது நன்மையைப் பெற்றுத் தரக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. உடல் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் […]

காது குத்த அனுமதி உள்ளதா? பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாமா?

காது குத்த அனுமதி உள்ளதா?  பிளாஸ்டிக் சர்ஜரி செய்யலாமா? காது குத்தக் கூடாது. காதுகளைக் குத்தி ஓட்டை போடுவது அல்லாஹ்வின் படைப்பில் மாறு செய்வது என்பதை யாரும் மறுக்க முடியாது. பெண்களைப் படைக்கும் போது காதுகளில் ஓட்டை போட அல்லாஹ் மறந்து விட்டது போன்ற ஒரு நிலையை இது ஏற்படுத்தி விடுகின்றது. எனவே இதை அல்லாஹ் கடுமையாகக் கண்டிக்கின்றான். “அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். […]

தற்கொலைத் தாக்குதல் பற்றி இஸ்லாம் கூறும் பதில் என்ன?

தற்கொலைத் தாக்குதல் பற்றி இஸ்லாம் கூறும் பதில் என்ன? தற்கொலைக்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத அளவுக்குச் சான்றுகள் உள்ளன. ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்து கொண்டார். உடனே அல்லாஹ், எனது அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்தி விட்டான். எனவே அவனுக்குச் சொர்க்த்தை ஹராமாக்கி விட்டேன் என்று கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி). (புகாரி: 1364) […]

மனித உடலில் ஜின்கள் மேலாடுமா?

மனித உடலில் ஜின்கள் மேலாடுமா? இல்லை. குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் “ஜின் என்ற படைப்பினம் உள்ளது; அது மனிதர்களைப் போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்டது; மனிதர்களை விட சக்தி வாய்ந்தது” என்றெல்லாம் ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். ஆனால் அந்த ஜின்கள் மனிதர்கள் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, மனிதனை ஆட்டுவிக்கும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. ஒரு மனிதனின் உடம்பில் ஜின் இருக்கின்றது என்றால் அந்த மனிதனுக்கு மனித உள்ளம், ஜின் உள்ளம் என்று இரண்டு […]

சந்தோஷமான வார்த்தைகளை கேட்கும் பொழுது அல்லாஹு அக்பர் என்று சொல்லலாமா?

திக்ரு ஆக சொல்லும்போது சப்தமில்லாமலும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சொல்லும்போது தேவைக்கேற்ப விரும்பியவாரும் சொல்லலாம். “என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மேல் ஆணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நாங்கள் “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்று கூறினோம். உடனே அவர்கள், “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்கள். நாங்கள், “அல்லாஹு […]

தனித்து பயணம் செய்யலாமா?

தனித்து பயணம் செய்யலாமா? -பாத்திமா ஜவாஹிரா, காயல்பட்டிணம் ஒரு முஸ்லிம் யாருடைய துணையுமின்றி வெளியூர்ப் பயணம் செல்லக் கூடாது. இரண்டு நபர்களாகவும் பிரயாணம் செய்யக் கூடாது. குறைந்த பட்சம் மூன்று நபர்கள் இருந்தால் தான் பிரயாணம் செய்ய அனுமதி உண்டு என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர். سنن الترمذي ت شاكر (4/ 193) 1674 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ […]

« Previous Page