Tamil Bayan Points

தனித்து பயணம் செய்யலாமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

Last Updated on September 26, 2020 by

தனித்து பயணம் செய்யலாமா?

-பாத்திமா ஜவாஹிரா, காயல்பட்டிணம்

ஒரு முஸ்லிம் யாருடைய துணையுமின்றி வெளியூர்ப் பயணம் செல்லக் கூடாது. இரண்டு நபர்களாகவும் பிரயாணம் செய்யக் கூடாது. குறைந்த பட்சம் மூன்று நபர்கள் இருந்தால் தான் பிரயாணம் செய்ய அனுமதி உண்டு என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

سنن الترمذي ت شاكر (4/ 193)
1674 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الرَّاكِبُ شَيْطَانٌ، وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ، وَالثَّلَاثَةُ رَكْبٌ»: حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ عَاصِمٍ، وَهُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: مُحَمَّدٌ: هُوَ ثِقَةٌ صَدُوقٌ، وَعَاصِمُ بْنُ عُمَرَ العُمَرِيُّ ضَعِيفٌ فِي الحَدِيثِ لَا أَرْوِي عَنْهُ شَيْئًا، وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حَدِيثٌ حَسَنٌ

“வாகனத்தில் தனியாகப் பயணம் செய்யும் ஒரு வாகனப் பயணி ஷைத்தான் ஆவார். இரு வாகனப் பயணிகள் இரு ஷைத்தான்களாவர். மூன்று பயணிகளே பயணிகள் ஆவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷுஐப் (ரலி)

ஆதாரம்:  திர்மிதி 1595, அபூதாவூத் 2243, முஸ்னத் அஹ்மத் 6572, 6831, ஹாகிம் 2426, அஸ்ஸுனனுல் குப்ரா (நஸஈ) 8527, அஸ்ஸுனனுல் குப்ரா (பைஹகி) 9590.

இதன் அறிவிப்பாளர் தொடரில் குறைபாடு உள்ளதாலும், இதன் கருத்து ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களுக்கு முரணாக இருப்பதாலும் இது ஏற்கத் தகாத ஹதீஸாகும்.

மேற்கண்ட அனைத்து நூல்களிலும் உள்ள அறிவிப்பாளர் தொடரில் அப்துர்ரஹ்மான் இப்னு ஹர்மலா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

تهذيب التهذيب (6/ 161)
330 – “م 4 عبد الرحمن” بن حرملة بن عمرو بن سنة1 الأسلمي أبو حرملة روى عن سعيد ابن المسيب وحنظلة بن علي الأسلمي وعمرو بن شعيب وعبد الله بن نيار بن مكرم الأسلمي وثمامة ابن شفى أبي علي الهمداني وثمامة بن وائل أبي ثفال المري وأم حبيبة بنت ذويب المزنية وغيرهم وعنه الثوري والأوزاعي ومالك وسليمان بن بلال وابن أبي الزناد والداروردي وإسماعيل بن جعفر وحاتم بن إسماعيل وبشر أبن المفضل وابن علية والقطان وعلي بن عاصم وجماعة قال يحيى ابن سعيد عنه كنت سيء الحفظ فرخص لي سعيد في الكتابة قال يحيى بن سعيد محمد بن عمر وأحب إلي من بن حرملة وكان ابن حرملة يلقن وقال ابن خلاد الباهلي سألت القطان عنه فضعفه ولم يدفعه وقال إسحاق عن ابن معين صالح وقال أبو حاتم يكتب حديثه ولا يحتج به قال النسائي ليس به بأس وذكره ابن حبان في الثقات وقال يخطىء وقال ابن سعد توفي سنة خمس وأربعين ومائة قال محمد بن عمرو كان ثقة كثير الحديث روى له مسلم حديثا واحدا متابعة في القنوت قلت وقال الساجي صدوق يهم في الحديث وقال ابن عدي لم أر في حديثه حديثا منكرا ونقل بن خلفون عن ابن نمير أنه وثقه وقال الطحاوي لا يعرف له سماع من أبي علي الهمداني.

 

இவரைப் பற்றி  இப்னு அதீ அவர்கள், “இவர் உறுதியானவர் அல்ல” என்றும், அபூ ஜஅஃபர் மற்றும் யஹ்யா பின் ஸஈத் அல்கத்தான் ஆகியோர் இவரை ‘பலவீனமானவர்’ என்றும், அபூ ஹாத்தம் அர்ராஸி அவர்கள், ‘இவர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படத் தக்கவர் அல்ல’ என்றும் விமர்சித்துள்ளனர். எனவே இந்த ஹதீஸ் ஏற்கத் தக்கது அல்ல. (தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 6, பக்கம்: 146

மேலும் இந்த ஹதீஸ் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களுக்கும், வலுவான ஹதீஸ்களுக்கும்  முரணாக உள்ளது.

தனியாகப் பயணம் செய்யலாம் என்பதற்கான ஆதாரங்கள்:

…..ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. ‘இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?’ என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து ”எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். ”ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார்…..

(அல்குர்ஆன் 2:259)

ஒரு நல்லடியார் தன்னந்தனியாகப் பயணம் செய்ததாக இவ்வசனம் கூறுகிறது. அவருடன் யாரும் இருக்கவில்லை என்பது இவ்வசனத்தில் தெளிவாகத் தெரிகிறது.

மதீனாவில் திடுக்கம் ஏற்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னந்தனியாகப் புறப்பட்டுப் போய் நிலவரத்தை அறிந்து திரும்பியதாக ஹதீஸ் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்து விட்டு அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், “பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு, “நாம் இந்தக் குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டோம்” என்று கூறினார்கள். அல்லது, “இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 2908

நபி (ஸல்) அவர்கள் கிஸ்ரா மன்னருக்கு எழுதிய கடிதத்தை அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) என்ற நபித்தோழரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (பாரசீக மன்னர் ‘குஸ்ரூ’ எனும்) கிஸ்ராவுக்குத் தாம் எழுதிய கடிதத்தை அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, (அதைக் கிஸ்ராவிடம் கொடுத்துவிடச் சொல்லி) பஹ்ரைனின் ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டு அனுப்பினார்கள். பஹ்ரைன் ஆளுநர் அக்கடிதத்தை கிஸ்ராவிடம் ஒப்படைத்தார். கிஸ்ரா அதைப் படித்ததும் அதை(த் துண்டு துண்டாக)க் கிழித்துப் போட்டுவிட்டார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 4424, முஸ்னத் அஹ்மத் 2185

ஹீராவிலிருந்து தன்னந்தனியாகப் பிரயாணம் மேற்கொண்டு, கஃபாவை தவாஃப் செய்ய வந்த பெண்ணை நபி (ஸல்) அவர்கள், ‘இறையச்சமுடைய பெண்’ எனச்   சிலாகித்துச் சொல்லியுள்ளார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அதீயே! நீ ‘ஹீரா’வைப் பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். “நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது” என்று  பதிலளித்தேன். அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். நான் என் மனதிற்குள், “அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட “தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்தம் (ரலி),

நூல்: புகாரி 3595

இருவர் சேர்ந்து பயணம் செய்யலாம் என்பதற்கான ஆதாரங்கள்:

”இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும்வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது என் பயணத்தை நீண்ட காலம் தொடர்வேன்” என்று மூஸா தமது ஊழியரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

இரண்டு கடல்கள் சங்கமம் ஆகும் இடத்தை அவ்விருவரும் அடைந்தபோது தமது மீனை மறந்தனர். அது கடலைப் பிளந்து தனது பாதையை அமைத்துக் கொண்டது.

அவ்விருவரும் கடந்து சென்ற போது ”காலை உணவைக் கொண்டு வாரும்! இந்தப் பயணத்தில் பெரும் சிரமத்தை அடைந்து விட்டோம்” என்று தமது ஊழியரிடம் (மூஸா) கூறினார்.

”நாம் அப்பாறையில் இளைப்பாறிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது” என்று (ஊழியர்) கூறினார்.

”அதுவே நாம் தேடிய இடம்” என்று (மூஸா) கூறினார். இருவரும் பேசிக் கொண்டே வந்த வழியே திரும்பினார்கள்.

(அல்குர்ஆன் 18:60-64)

உமர் (ரலி) அவர்களும், அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களும் சேர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளார்கள். அப்போது தமக்கு ஏற்பட்ட சூழ்நிலையைக் குறித்து நபிகளாரிடமும் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ”எனக்கு குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை” என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் இப்னு  யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, ”உங்களுக்கு நினைவிருக்கின்றதா? நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, தமது உள்ளங்கைகளால் தரையில் அடித்து வாயால் அதில் ஊதி விட்டு, இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி, “இப்படிச் செய்வது உமக்குப் போதுமே” எனக் கூறினார்கள்” என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு  அப்ஸா (ரலி)

நூல்கள்: புகாரி 338,  முஸ்லிம் 603

எனவே, தனியாகப் பயணம் செய்வது சம்பந்தமாக  அம்ரு இப்னு ஷுஐப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல. விரும்பினால் தனித்தும், பலருடன் சேர்ந்தும் பயணிக்கலாம்.