Category: 10 நிமிட உரைகள்

b110

மென்மையாக எடுத்துரைப்போம்!

அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும். சக கொள்கைவாதிக்கு, மனிதனுக்கு நன்மையைக் கருத வேண்டும். அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆனால், இன்றைக்கு தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம் என்ற பெயரில், தவறு செய்தவரை கடித்துக் குதறி விடும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. தவறுகளை […]

தொழுகையை சரிப்படுத்துவோம்!

தொழுகையை சரிப்படுத்துவோம்! கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! ஸலாத்தும், ஸலாமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், உத்தம சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!  முதல் கேள்வியே தொழுகை தான். இறைவன் நம் மீது கடமையாக்கி இருக்கிற அமல்களில் மிகமிக முக்கியமான ஒரு அமல் தொழுகை. இந்த கடமையில் நாம் அனைவரும் நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இந்த நேரம். ஏனெனில், அல்லாஹ், இறந்தவர்கள் அனைவரையும் […]

சத்தியத்தை சொல்ல முனைந்தால்….

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! சத்திய இஸ்லாமை நாம் பிறருக்கு எடுத்துச் சொல்ல முனைந்தால், பல்வேறு சோதனைகளை சந்திக்க நேரிடும். சமுதாயத்தில் தலைவர்களாக இருப்பவர்கள், செல்வாக்கு படைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள் தான் முதலில் நம்மை எதிர்ப்பார்கள். وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا […]

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் இஸ்லாம் மிகவும் எளிமையான மார்க்கமாகும். அகில உலக அருள்பாலிப்பவன், படைப்பினங்களின் இரட்சகன் அல்லாஹ்வால் அருளப்பட்ட மார்க்கமாகும். அது அல்குர்ஆனையும் அதன் விளக்கவுரையாக அமைந்த அல்லாஹ்வின் திருத்தூதர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றையும் நெறிமுறையாகக் கொண்டு செயல்படுத்தும் மார்க்கமாகும். “நான் கடவுளை வழிபாடு செய்கிறேன்; ஆராதனை செய்கிறேன்” என்று ஒரு மனிதன் தன் விருப்பப்படி எதையும் செய்திட முடியாது. அதைப் போன்றே மார்க்கம் சொல்லும் காரியத்தையே ஒரு மனிதன் […]

இஸ்லாத்தை அழிக்க இயலாது

இஸ்லாத்தை அழிக்க இயலாது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! இன்றைக்கு உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராக மட்டுமே ஏராளமான சூழ்ச்சிகள் செய்யப்படுகின்றன. முஸ்லிம்கள் மட்டுமே குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். எனினும், அல்லாஹ் இஸ்லாம் எனும் இந்த ஜோதியை ஒருக்காலும் யாராலும் அழிக்க முடியாது என்று சூளுரைக்கிறான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்கு பூமியைச் சுருட்டிக் காண்பித்தான். அதில் சூரியன் உதிக்குமிடங்களையும் அது மறையுமிடங்களையும் கண்டேன். என்னிடம் சுருட்டிக் காட்டப்பட்ட அந்தப் பகுதிகளை எனது சமுதாயத்தின் […]

« Previous Page