கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! உலகின் மோகத்திற்கும், தாகத்திற்கும் இரையாகுபவர்கள் மனித இனத்தவர்களே! அதன் அலங்காரத்தின் மீது அலாதி ஆர்வம் கொண்டு அதை அடைந்திட படாதபாடுபடுகின்றனர். அந்தப் பேராசைகளுள் பெரும்பங்கு வகிப்பது “சொந்த வீட்டில் சொகுசாக வசிக்கவேண்டும்” என்பதே! இயற்கை வளத்தில், தமக்கான நிலத்தில், உயர் தரத்தில் இல்லம் அமைத்திட வேண்டும் என்பது பலரின் உள்ளத்தில் உலாவும் கற்பனையாக உள்ளது. எனினும், இவ்வுலகில் கட்டப்படும் கோட்டை கொத்தளங்களும், மாட மாளிகைகளும் மண்ணாய் போகும் என்பதில் அங்குலம் […]