Category: பொதுவான தலைப்புகள் – 1

b103

கெட்ட எண்ணங்கள்

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கெட்ட எண்ணங்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளதை இந்த உரையில் வரிசையாக காண இருக்கிறோம்! கெட்ட எண்ணங்கள் يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنْ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ(12) سورة الحجرات நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு […]

நன்மையான காரியங்களில் போட்டி போடுவோம்!

அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இஸ்லாமிய மார்க்கம் நன்மையான காரியங்களை அதிகமாக ஏவினாலும், அந்த நன்மையான காரியங்களை  போட்டி போட்டுக் கொண்டு செய்யவும் வலியுறுத்துகிறது. அப்படி வலியுறுத்துகின்ற நன்மையான காரியங்களை இந்த உரையில் காணுவோம்…  நன்மையான காரியங்களில் போட்டி போடுவோம்! 328 – حَدَّثَنِى يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ – قَالَ أَخْبَرَنِى الْعَلاَءُ عَنْ أَبِيهِ عَنْ […]

பேச்சின் ஒழுங்குகள்

முன்னுரை  நாம் பேசும் வார்த்தைகள் யாவும் நல்வார்த்தைகளாக இருக்க வேண்டும். அதிலும், மற்றவர்களை காயப்படுத்தாமல் பேச வேண்டும். நல்ல வார்த்தைகள் பேசுவது கூட தர்மமாகும் என நபி (ஸல்) கூறியுள்ள செய்திகளை பார்ப்போம்.  நல்ல வார்த்தைகளை நவில வேண்டும் يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏ நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! (அல்குர்ஆன்: 33:70) مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًا ؕ اِلَيْهِ […]

 அதிகம் நன்மை தரக்கூடிய சின்ன அமல்கள்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ் அவனது தூதரையும் ஈமான் கொண்ட பிறகு நல்ல அமல்கள் செய்ய வேண்டுமென்று இஸ்லாம் கூறுகிறது. ஈமான்கொண்டால் மட்டும் முஸ்லிம் என்று சொல்ல முடியாது, நம்பிக்கை கொண்ட பிறகு தன்னால் முடிந்தளவு நல்ல அமல்கள் செய்ய வேண்டும், நல்ல அமல் செய்தால் தான் முஸ்லிம் […]

பொய் பேசுவதன் தீமைகள்!

முன்னுரை அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் உண்மை அடியாரும் ஆவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன். பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை […]

பொய் பேசுபவனின் மறுமை நிலை

முன்னுரை உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் பொய்பேசுவதைக் குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அச்சமூட்டும் மறுமை நிகழ்வு சமுரா இப்னு ஜுன்துப் (ரலி) அறிவித்தார்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம் அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் […]

நபிகளார் மகிழ்ந்து சிரித்த சம்பவங்கள்

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் அவர்களை சிரிக்க வைத்துள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்த நிகழ்வுகள் பிறர் மனதைத் துன்புறுத்தும் வண்ணம் ஒருபோதும் அமைந்ததில்லை. சிரிப்பிற்குரிய சரியான காரணமுள்ள சந்தர்ப்பங்களில் தான் சிரித்திருக்கிறார்கள். அவர்கள் சிரிப்பில் சில சமயங்களில் […]

நரகில் தள்ளும் நச்சு வார்த்தைகள்

முன்னுரை இன்றைய முஸ்லிம் பெண்கள் தாம் என்ன பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் பேசுவதைப் பார்க்கலாம். அப்படி பேசக்கூடிய பேச்சுக்களில் பல வார்த்தைகள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் வார்த்தைகளாக இருப்பதையும் காணலாம். சில காரியங்களைச் செய்தால் அதனால் தீங்கு ஏற்படும் என்றும் நம்புகின்றனா். குறிப்பிட்ட நேரங்களில் தர்மமோ, அல்லது இரவலாக பொருளோ தந்தால் வறுமை ஏற்படும் என்றும் நம்புகின்றனர். இவை சரியா என்று பார்ப்போம். இருட்டு வந்து விட்டால் இரவல் கிடையாது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் […]

வரம்பு மீறுதல்

முன்னுரை அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித்தராத விஷயங்களைச் செய்வதும், சொல்லித்தந்த விஷயங்களில் அவர்கள் கூறாத செயல்களை அதிகப்படியாக செய்வதும், அவர்கள் சொன்ன விஷயங்களுக்கு மாற்றமாக செய்வதும் வரம்பு மீறுதலாகும். இதைப்பற்றி அல்லாஹ் தான் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான். وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏ அல்லாஹ்வும், அவனது தூதரும் […]

மனிதர்களில் சிறந்தவர்கள்

முன்னுரை மனிதர்கள் தங்களுக்கு இருக்கும் வாழ்க்கை நிலையில் மட்டுமல்ல, பண்புகளிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபட்டும் வித்தியாசப்பட்டும் இருக்கிறார்கள். ஆகையால், ஒருவரை சிறந்தவர் என்று முடிவு செய்வதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள். வேறுபாடான வித்தியாசமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். ஒருவருடைய காரியத்தையோ பண்பையோ காரணமாக வைத்து அவரைச் சிறந்தவர் என்று சொல்வது ஒருவருடைய பார்வையில், கண்ணோட்டத்தில் சரியாக இருக்கும். அதேசமயம், மற்றவர்களின் பார்வையில் தவறாக இருக்கும். காரணம், ஒருவரிடம் தாங்கள் விரும்பும் எதிர்பார்க்கும் பண்பு இருப்பதைப் பொறுத்து […]

பார்வையைப் பாதுகாப்போம்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். உண்மையான இறைநம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய பல்வேறு பண்புகளை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் விவரித்துள்ளான். அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் நம்முடைய பார்வையைப் பாதுகாப்பதாகும். இந்த மனித சமுதாயம், ஒழுக்க வீழ்ச்சியடைவதற்கு மிக முக்கியமான ஒரு காரணி பார்வையை தவறான முறையில் பயன்படுத்துவதாகும். இதன் காரணமாகத்தான் […]

ஸகாத் வழங்காதோரின் மறுமை நிலை!

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமை ஸகாத் ஆகும். கடவுளை மற மனிதனை நினை என்பர் சிலர். இஸ்லாத்தைப் பொறுத்த வரை இவ்வாறு யாரும் கூற முடியாது. ஏனெனில் மனிதனுக்கு உதவுவதை ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த உரையில் 1. ஸகாத் கட்டாயக் […]

நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இறைவனின் தூதர் தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நபிகளாரின் வார்த்தைகளில் ஏராளமான அறிவியல் முன்னறிவிப்புகளை இறைவன் செய்துள்ளான். இதனை கேள்விப்படும் போது இது இறைதூதரின் சொல் தான் என்று நம்மால் உறுதியாக நம்ம முடியும். இதன் மூலம் நம் ஈமான் அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் […]

பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதர்களில் யாரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. இதில் நபிமார்களும் அடங்குவார்கள். இப்படித்தான் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இரண்டு வகையான தவறுகள் தவறுகளை செய்பவர்கள் இரண்டு வகையாக இருக்கின்றார்கள். சிலர் தவறுகள் பகிரங்கமாக செய்வார்கள். இன்னும் சிலர், சில தவறுகளை யாருக்கும் தெரியாமல், மறைமுகமாக செய்வார்கள். […]

நரகத்திற்கு கொண்டு செல்லும் பொய்

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதர்களில் சிலரிடம் தவறைச் செய்யாதே! என்று கூறினால் நான் அப்படித்தான் செய்வேன் என்று கூறுவர். இதைச் செய் என்று கூறினால் அதைச் செய்ய மாட்டேன் என்று கூறக்கூடியவர்களும் உண்டு. நல்லதை ஏற்பதைவிட தீயதை ஏற்று நடக்கூடியவர்கள்தான் மனிதர்களில் அதிகம். அந்த தீயதிலே மிக மோசமானது பொய் […]

கேள்விகள் ஒருவிதம் பதில்கள் பலவிதம்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்களும், ஏனைய கொள்கையைச் சார்ந்தவர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அத்தனை கேள்விகளுக்கும் நபி (ஸல்) அவர்கள் அழகான முறையில் பதிலளித்துள்ளர்கள். கேள்விகள் எப்படி அமைந்தனவோ அதற்கு ஏற்றாற்போல் பதிலும் அமைந்திருந்தன. கேள்விக்குரிய பதிலும் கூடுதல் விளக்கமும் கேள்விக்கான பதிலைச் […]

உலக ஆசையா? சொர்க்க ஆசையா?

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ் சிறந்த படைப்பாக மனிதப் படைப்பைப் படைத்து, மனிதனுடைய உள்ளங்கள் விரும்புகின்ற அளவிற்கு இவ்வுலக வாழ்க்கையில் (இன்பமாக இருப்பதற்கு) எண்ணற்ற அருட்கொடைகளை ஏற்படுத்தியுள்ளான். உலக இன்பங்களின் பல வகைகளை அல்லாஹ் பட்டியலிடுகிறான். உலகத்தின் நிலை زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ […]

இறைநம்பிக்கையாளனின் தன்மைகள்!

முன்னுரை எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள், இறைநம்பிக்கையாளர்கள்; முஃமின்கள் எனப்படுகிறார்கள். இவர்களின் பண்புகளைப் பற்றி திருமறை குர்ஆனும், ஹதீஸ்களும் நமக்கு பல செய்திகளை சொல்லித் தருகின்றன. அவற்றைத் தான் இன்றைய உரையிலே பார்க்க இருக்கிறோம்! ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் عَنْ أَبِي مُوسَى عَنْ […]

தன்னம்பிக்கை ஊட்டும் விதி

முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்திலும் பலமான உயிரினங்கள் உண்டு. பலவீனமான உயிரினங்களும் உண்டு. இதில் குறிப்பாக மனிதன் உடல் உறுப்புகள் இழந்தோ அல்லது பிறக்கும் போதே ஊனமுள்ளவனாகவோ பிறந்தால் மனவேதனைப்படுகிறான். தீராத நோய்கள் ஏற்பட்டு அதனால் மனவேதனை படுகிறான். சிந்திக்கும் அறிவு குறைவால் தன்னால் பெரிய […]

மறுக்கப்படும் நன்மைகள்

முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கம், ”நன்மை செய்தவருக்கு பத்துமடங்கு கூலி” என்று நமக்கு சொல்லித் தருகிறது. مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌ ۚ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏ நன்மை செய்தவருக்கு அது போன்ற […]

குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்

முன்னுரை அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவன் இந்த உலகத்தை படைத்து இந்த உலகத்திலே சிறந்த படைப்பாக மனித சமுதாயத்தை உருவாக்கினான். இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகு மறுமைநாளில் வெற்றி பெறுவதற்காக அந்த இறைவனுக்கு விருப்பமான வழிகாட்டுதல், வாழ்கை முறை என்ன என்பதை அவனுடைய திருமறை குர்ஆன் மூலமும் அவன் தூதர் மூலமும் விளக்கியுள்ளான். يَاأَيُّهَا […]

ரியா என்னும் சிறிய இணைவைப்பு

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஒரு மனிதன் செய்கின்ற எந்த நல்ல அமல்களாக இருந்தாலும் இறைவனுக்காக செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமலும் இதற்காக மறுமையில் நன்மை கிடைக்கும் என்ற எண்ணம் இல்லாமலும் பிறருடைய பாராட்டுதலையும் புகழையும் எதிர்பார்த்து செய்கின்ற செயலுக்கு தான் அரபியில் ரியா என்று சொல்லப்படுகிறது. ரியா என்ற பாரதூரமான […]

தீய நண்பன் அமைந்தால்…

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நல்ல நண்பனைத் தேர்வு செய்யாமல் தீய நண்பனை நாம் தேர்வு செய்துவிட்டால் நம்முடைய நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். தீயதை ஏவுதல், பகைமையை ஊட்டுதல், ஒழுக்கங்கெட்ட செயல்பாடுகளுக்கு அழைத்துச்செல்லுதல் இன்னும் மார்க்கத்திற்கு முரணான பிற விஷயங்களில் கொண்டு சென்று அழிவின் விளிம்புக்கே கொண்டு […]

குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள்

முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்றைய உலகில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல வகையான தவறுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தவறு செய்வதைத் தூண்டக் கூடிய […]

முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள்.

முன்னுரை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். ஆதராப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள சில சூராக்களின் சிறப்புகளையும், வசனங்களின் சிறப்புகளையும் குறிப்பிட்டுள்ளோம். ஹதீஸ்களில் உள்ளபடி நாம் அவற்றை ஓதி வரும்போது ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக குர்ஆனில் உள்ள எல்லா வசனங்களையும் ஓதுவதற்கு நன்மை உள்ளது. ஆனால் யாஸீன், தபாரகல்லதீ போன்ற சூராக்களை […]

வானை விஷமாக்கும் வதந்திகள்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். விண்வெளியில் நீந்திச் செல்லும் செயற்கைக் கோள்கள் மனித வரலாற்றில், செய்தித் துறைகளில் பெரும் புரட்சியை வெடிக்கச் செய்திருக்கின்றன. தொலைக்காட்சிகளில் வெளிச்ச மிடும் வண்ணக் காட்சிகள் ஆகட்டும்; செவிகளில் செய்தி சொல்லும் செல்போன்களாகட்டும்; அதில் கண் சிமிட்டி வந்திறங்கும் குறுஞ் செய்திகள் (எஸ்.எம்.எஸ்) ஆகட்டும்; மின் […]

அறிவியல் பார்வையில் இஸ்லாமும் தூய்மையும்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்றைய உலகம் அறிவியல் முன்னேற்றத்திற்கு பஞ்சமில்லாமலும், அதே நேரத்தில் பலவிதமான நோய்களுக்கும் பஞ்சமில்லாமல் மாறிவிட்டது. வருடத்திற்கு ஒரு நோய் பிரபலமாகி கொண்டே வருகிறது. ஒரு வருடத்தில் சார்ஸ் இன்னொரு வருடத்தில் பறவைக் காய்ச்சல் இப்பொழுது பன்றிக் காய்ச்சல் என்று அச்சுறுத்திவருகிறது… அதிலும் குறிப்பாக உலக […]

இஸ்லாமும் மருத்துவமும்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். செல்வங்களிலே மிகப்பெரும் செல்வமாக மக்களால் கருதப்படுவது நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு. நிழலின் அருமை வெயிலில் அவதியுறுபவனுக்குத்தான் தெரியும் என்பார்கள். அதுபோல் நோயாளிகளிடம் கேட்டால்தான் நோயற்ற வாழ்வின் அருமை பெருமை புரியும். பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருந்தும் தங்களைப் பீடித்துள்ள நோய்களின் காரணத்தால் தாங்கள் விரும்பியதை உண்டு […]

பயிரிடப்பட வேண்டிய காலம்

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனித வாழ்வு, ஏற்றத் தாழ்வுகளை கொண்டது. வாழ்க்கையில் சில நேரங்களில் சிலவற்றை இழப்போம், சிலவற்றை பெறுவோம். ஆனால், ஒரே ஒரு இறைவனின் அருள் மட்டுமே இழந்தால், மீண்டும் பெற முடியாமல் போய் விடுகிறது. அது தான் காலம் என்பதை நாமெல்லாம் மிகவும் நன்றாக அறிந்து […]

பொதி சுமக்கும் கழுதைகள்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மறுமையில் நமது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் பல விஷயங்களில் திருமறை குர்ஆனும் ஒன்று. திருமறைக் குர்ஆன் மறுமையில் அதனை ஓதியவர்களுக்காக சாட்சி சொல்லும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருமறை குர்ஆன் என்றும், நபியவர்கள் கூறியுள்ளார்கள்.   அத்தகைய திருமறைக்குர்ஆனுடைய சட்டங்களை நடைமுறையில் […]

பயணிகளின் கவனத்திற்கு!

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் ஒரு நிறைவான, முழுமையான மார்க்கம். இது ஏதோ பூமிக்கு கீழே உள்ளதைப்பற்றியும், வானத்திற்கு மேலே உள்ளதைப்பற்றியும் மட்டுமே பேசக் கூடிய மார்க்கம் என்று இஸ்லாமியர்களில் பலர் தவறாக நினைக்கின்றார்கள். மாறாக நமது வாழ்க்கை முறையைப்பற்றி வேறெந்த மார்க்கமோ, மதமோ, சொல்லாத அளவிற்கு முழுமையான […]

செவியேற்போம்! கட்டுப்படுவோம்!

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். காலத்தால் முரண்படவில்லை. கருத்து மோதல் இல்லை. கற்பனைக் கலவை இல்லை. பொய்யின் சாயல் இல்லை. ஆபாசத்தின் அடையாளம் இல்லை. அறிவியலுக்கு அப்பாற்படவில்லை. மிகையான வர்ணனைகள் இல்லை. இதுமட்டுமின்றி இறைவேதமாக இருப்பதற்கு அவசியமான அனைத்து தகுதிகளையும் பொதிந்துள்ள வேதம், திருக்குர்ஆன் மட்டுமே. மிக உயர்ந்த தரம், இனிய […]

முயற்சி கூலி தரும்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இன்பங்களும் துன்பங்களும் இரண்டறக்கலந்த கலவைதான் இவ்வுலக வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் பருவ மாற்றங்களைப்போல இடையிடையே எட்டிப்பார்க்கின்ற எதிர்ப்புகள், பிரச்சனைகள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொள்ள இயலாமல் மக்களில் பலர், தங்களுடைய இலட்சிய இலக்கை விட்டும் பாதியிலேயே புறமுதுகிட்டு ஓடிவிடுகின்றார்கள். அரிதாக சிலர் பல்வேறான மாற்று முயற்சிகள், கடும் உழைப்புகள் […]

இளைஞர்களும் இயக்கங்களும்

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நபித்தோழர்களில் ஏராளமான இளைஞர்கள் இருந்தனர்.  இன்னும் சொல்வதென்றால், ஆறு, ஏழு வயதுடைய சிறுவர்கள் கூட, போர்க்களங்களில் இருபது, முப்பது வயதுடையவர்களுக்கு நிகராக ஏராளமாக சாதனை புரிந்திருக்கிறார்கள்.  அவர்கள் தங்கள் காலத்தில் மிகப்பெரிய சோதனைகளை எல்லாம் கடந்து உறுதியாக திகழ்ந்தார்கள் என்றால், அவர்கள் குர்ஆனில் ஆழ்ந்த அறிவுடையவர்களாக […]

குற்றப்பரிகாரம்

மதிப்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவன் செய்யச் சொன்ன காரியங்களில் சில காரியங்களைச் செய்யாமல் விட்டுவிட்டால் அதற்கு குறிப்பிட்ட பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. அந்தச் செயல்களை விரிவாக காண்போம். தொழுகை குறித்த நேரத்தில் தவறவிட்டவரின் பரிகாரம் ஒரு தொழுகையை அதன் நேரத்தில் நிறைவேற்றாமல், ஒருவர் ஒரு தொழுகையை மறந்துவிட்டாலோ, […]

நபிகள் நாயகம் மீது நமக்குள்ள கடமைகள்

முன்னுரை கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். மனிதனைப் படைத்தப் பிறகு, அவன் மனம்போனப் போக்கிலே வாழ்ந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடாமல் அவனுக்கு முழுமையான வாழ்க்கைக் கலையைக் கற்றுத்தருவதற்காக, அல்லாஹ் தொடர்ச்சியாகப் பல தூதர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினான். அவர்களின் வரிசையில் அல்லாஹ்வின் கிருபையால் நம்மை நிராகரிப்பெனும் காரிருள் பாதையிலிருந்து மீட்டெடுத்து, ஒளி மிக்க நேர்வழியில் […]

இறை மறுப்பைத் தூண்டும் பெருமை!

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். அனைத்துவிதமான மோசமான தன்மைகள், தீய செயல்பாடுகள் மற்றும் வழிகேடுகளை விட்டும் விலகியிருக்குமாறும், அவற்றிலிருந்து மீண்டுவருமாறும், மனித சமுதாயத்திற்கு இஸ்லாமிய மார்க்கம் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வகையிலே இன்று சர்வசாதாரணமாக சகமனிதர்களிடத்தில் தென்படுகின்ற பெருமையடிக்கின்ற பண்பைப் பற்றியும் குர்ஆன் ஹதீஸிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுவாகவே பெருமையடிப்பவர்கள் தங்களுடைய […]

தவறுகளை ஒப்புக் கொள்வோம்

முன்னுரை உலகில் உள்ள படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பு மனிதன் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இப்போது காணப்படுகின்ற, மெய்சிலிர்க்கச் செய்கிறபல அரிய கண்டுபிடிப்புகள் யாவும் மனிதர்கள் கண்டுபிடித்தவையே. இறைவன் அவர்களுக்கு வழங்கிய அறிவு எனும் பொக்கிஷத்தை பயன்படுத்தியே இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். என்னதான் அறிவில் சிறந்தவனாக மனிதன் இருந்தாலும், அவனிடம் தவறுகள் நிகழத்தான் செய்யும். நம்மைப்படைத்த இறைவனிடம் மட்டுமே எந்த தவறும் நிகழாது.. மனிதர்கள் தவறு செய்பவர்களே! மனிதன் என்ற வட்டத்திற்குள் யார் நுழைந்தாலும், அவர்கள் […]

மனித உரிமைகளை மதிப்போம்! சொர்க்கம் பெறுவோம்!

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறந்த பிறகு இறைவனிடத்தில் சுவனம் பெறவேண்டும் என்பதற்காக வாழ்க்கை முழுவதும் தொழுகையை நிறைவேற்றுகிறோம். பெரும் பொருளாதாரத்தை செலவு செய்து ஹஜ் செய்கிறோம். ரமலான் மாதம் வந்துவிட்டாலே மாதம் முழுவதும் பட்டினி கிடக்கிறோம். இப்படி நாம் பசி பட்டினியுடன் நோற்கும் நோன்பு, கஷ்டப்பட்டு செய்யும் வணக்கங்களின் […]

நன்மைகள் தரும் மென்மை

முன்னுரை கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இயந்திர மயமாகிவிட்ட நவீன உலகம் அறிவியல் பூர்வமாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. மேலும் முன்னேற்றங்களை, அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடுகின்றது. ஒரு பக்கம் இந்த முன்னேற்றங்கள் மனித சமுதயாத்திற்கு நன்மை பயப்பவையாக இருந்தாலும் மறுபக்கம் இவைகளால் மனித குலத்திற்கு சில […]

மலக்குகளின் துஆவைப் பெறுவோர்கள்

முன்னுரை மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைவனின் படைப்புகளில் மிக அற்புதமான படைப்பு மலக்குகள் ஆவார்கள். என்னதான் மனிதன் சிறந்த படைப்பாக இருந்தாலும், சிந்திக்கும் திறன் இருந்தாலும் இறைவனுக்கு மாறுசெய்யும் குணம் அவனிடம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் மலக்குமார்கள் இறைவனின் கட்டளையை அப்படியே பின்பற்றி நடப்பவர்கள். இறைவனுக்கு மாறு செய்யவே தெரியாதவர்கள். […]

சொர்க்கத்தில் ஒரு வசந்த மாளிகை

சொர்க்கத்தில் ஒரு வசந்த மாளிகை அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாமியர்களின் பார்வையில் இவ்வுலகம் விரைவில் அழியக்கூடியதும், நிலையில்லாததுமாகும். ஒவ்வொரு இஸ்லாமியர்களும் இந்த உலகை, உலக வாழ்க்கையை இவ்வாறே மதிப்பீடு செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதரும் நமக்கு கற்றுத்தருகிறார்கள். நிலையில்லா இவ்வுலகில் மனிதர்கள் பல்வேறு ஆசைகளுடனும், கனவுகளுடனும் வாழ்கிறார்கள். பலர் […]

அருள் வளம் (பரக்கத்) பெறுவது எப்படி?

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் என்பது இறைவனால் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட மார்க்கம். இந்த மார்க்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களாகிய நமக்கு இறைவன் வழங்கி இருக்கிற அருட்கொடைகளில் ஒன்றான பரக்கத்தைப் பற்றியும், அதனை பெறுவதைப் பற்றியும் இந்த உரையிலே பார்க்க இருக்கிறோம். அபிவிருத்தியின் அவசியம் இவ்வுலுகில் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதில் […]

தொழுகையைப் பேணுவோம்

அன்பிற்குரிய சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. உள்ளத்தின் அசுத்தத்தை நீக்கும்  أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، […]

தடை செய்யப்பட்ட சம்பாத்தியமும் அதனால் ஏற்படும் தீங்குகளும்!

கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாமிய மார்க்கம் மனிதர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக பொருளாதாரத்தை திரட்டும்படி கட்டளையிடுகின்றது. பிறரிடம் கையேந்தி தனது சுயமரியாதையை இழக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளது. இஸ்லாம் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லையை வைத்திருப்பதுபோல பொருளாதாரத்தை திரட்டுவதிலும் ஒரு எல்லையை வைத்திருக்கின்றது. தடை ஏன்? எல்லையை மீறும்போது அதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நன்மைக்காகவே இதுபோன்ற எல்லைகளையும் […]

அபயம் பெற்ற அற்புத பூமி

இறைத்தூதரின் பிரார்த்தனை மக்கள் விரும்பிச் செல்கின்ற இடங்கள் உலகில் எத்தனையோ இருக்கின்றன. ஆனால் எங்குமே பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் கூட்டத்தை மக்காவில் உள்ள இறையில்லமான கஃபாவில் நம்மால் காண முடிகிறது. மக்கள் உள்ளங்களை ஈர்க்கும் புனிதத் தலமாகவும் பாதுகாப்பு மையமாகவும் இதை ஆக்குமாறு இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்ததின் விளைவால் பல லட்சக்கணக்கான மக்கள் வந்து போகக் கூடிய இடமாக இன்றைக்கு கஃபதுல்லாஹ் இருந்து கொண்டிருக்கிறது. وَاِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اجْعَلْ هٰذَا […]

இறைவனின் மன்னிப்பு வேண்டுமா? (ரமளான்)

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நாம் கேட்கும் துஆக்களில் மிகவும் முக்கியமானது இறைவா! என்னை மன்னித்துவிடு!” என்பதுதான். இதை சிறியவர் முதல் பெரியவர் வரை ஏழை முதல் பண்காரன் வரை எந்த பாகுபாடுமின்றி அனைவரும் கேட்டாக வேண்டும். முதல் நபி ஆதம் (அலை) முதல் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) வரை அனைவருமே இவ்வாறு கேட்டவர்கள் […]

தவிர்ந்து கொள்ள வேண்டிய தீயபண்புகள்

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இறைநம்பிக்கை கொண்ட மக்களிடையே இருக்கக் கூடாத பல்வேறு தீய பண்புகளை இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது. இந்த தீய பண்புகளின் காரணமாக மனிதன், தன்னை சுற்றி வாழும் மக்களுக்கு இடையூறு அளிப்பதோடு, தன்னுடைய மறுமை வாழ்விற்கும் வேட்டு வைக்கிறான். அதில் குறிப்பாக, கஞ்சத்தனம் இறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் […]

நபிகளாரின் நற்குணங்கள்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். நான்கு எழுத்து படித்து, பணமும் அதிகாரமும் வந்து விட்டால் அவர்களிடம் இருக்கும் பெருமையும் ஆணவமும் கேட்க வேண்டியதில்லை. ஆனால் இவ்வுலகத்தில் சிறப்புமிக்க இறைத்தூதராக இருந்த நபிகளார் எந்தக் கட்டத்திலும் பெருமை கொண்டதில்லை. பணிவும் தன்னடக்கமுமே அவர்களிடம் வெளிப்பட்டது. தன்னடக்கம் اسْتَبَّ رَجُلاَنِ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ وَرَجُلٌ مِنَ الْيَهُودِ قَالَ […]

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன். இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக […]

Next Page »